தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நேபாளத்தில் தங்கம் வென்ற சிறுவர்களுக்கு வரவேற்பு

22 May 2026, 11:40 pm
நேபாளத்தில் தங்கம் வென்ற சிறுவர்களுக்கு வரவேற்பு

நேபாளத்தில் தங்கம் வென்ற சிறுவர்களுக்கு வரவேற்பு

​​​​​​​கோவை, மே 22– நேபாளத்தில் நடைபெற்ற சிலம் பப் போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் உற் சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டம், சூலூர் தாலுகா, நடுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆதித்தமிழன் வீர சிலம் பாட்ட கலைக்கூடம் பயிற்சி மையத் தின் மாணவர்கள் 16 பேர், அண்மை யில் நேபாளத்தில் நடைபெற்ற சர்வ தேச அளவிலான கராத்தே மற்றும் சிலம்பப் போட்டிகளில் பங்கேற்ற னர்.

பயிற்சியாளர் வி.நாகசுந்த ரம் தலைமையில் சென்ற இந்த 16 சிறுவர்களும் தங்களின் அபார திற மையை வெளிப்படுத்தி, அனைவ ருமே தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இத்த கைய சிறப்பான வெற்றியை ஈட்டிய வீரர்களுக்கு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நடுப்பாளை யம் கிளை மற்றும் கோவை மாவட்ட விளையாட்டு உபக்குழு சார்பில் பாராட்டு விழா வியாழனன்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சூலூர் தாலுகா பொருளாளர் ஜி.உதயபாரதி தலைமை வகித்தார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.தினேஷ் ராஜா மற்றும் சூலூர் தாலுகா செயலாளர் எஸ்.குரு சாரதி ஆகியோர் வாழ்த் திப் பேசினர்.

இந்நிகழ்வில், தாலுகா குழு உறுப்பினர் எஸ்.சஞ்சய் பிர தாப், கிளைத் தலைவர் வி.சுகாசினி, முன்னாள் தாலுகா செயலாளர் எம்.ஆறுமுகம், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே. பாவேல் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டி பேசினர்.

இந்நிகழ்வில் வாலிபர், மாணவர், மாதர் சங்கத்தினர் திர ளானோர் பங்கேற்று, வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு தங்களின் வாழ்த்து களை தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.