சர்வதேச சிலம்ப போட்டியில் தங்கம் வென்று கோவை மாணவி அசத்தல்!
11 hours before

சர்வதேச சிலம்ப போட்டியில் தங்கம் வென்று கோவை மாணவி அசத்தல்!

கோவை, அக்.29-துபாயில் கடந்த அக்.25 ஆம் தேதி நடைபெற்ற ‘இந்தோ – துபாய் சர்வதேச கராத்தே மற்றும் சிலம்பப் போட்டி 2026’ தொடரில், கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி சிலம்ப போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

கார்த்திகேயன் – தமிழ்ச்செல்வி தம்பதியரின் மகளான தேவிபாரதி, ஒண்டிப்புதூர் சென் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சர்வதேச இளைஞர் விளையாட்டு மற்றும் கல்விக் கூட்டமைப்பு சார்பில், துபாயின் பர்துபாய் பகுதியில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சிலம்ப போட்டியின் 14 வயது மற்றும் 50 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற மாணவி தேவிபாரதி, தனது திறமையை வெளிப்படுத்தி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். கோவையை சேர்ந்த ஜேகேடிசி அகாடமி மாணவியான இவர், சர்வதேச அளவில் தங்கம் வென்று தனது பள்ளிக்கும், கோவை மாவட்டத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவிக்கு பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது

மக்கள் சர்வதேச விமான நிலையத்தில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.