தேசிய அளவிலான சிலம்பப் போட்டி கோவை மாணவி அசத்தல்!
28 Dec 2025, 5:05 pm
<p><strong>தேசிய அளவிலான சிலம்பப் போட்டி கோவை மாணவி அசத்தல்!</strong></p>
<p>கோவை, டிச.28- காரைக்காலில் நடை பெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில், கோவையை சேர்ந்த மாணவி இரண்டாமிடம் பிடித்து அசத்தியுள்ளார். ஸ்கூல் கேம்ஸ் அண்ட் ஆக்டிவிட்டி டெவலப் மெண்ட் பவுண்டேசன் சார் பில், தேசிய தற்காப்பு கலை கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் புதுச்சேரி மாநி லம், காரைக்காலில் டிச.27,28 ஆகிய தேதிகளில் நடைபெற் றது. இதில் கோவை, ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த கார்த்தி கேயன் - தமிழ்ச்செல்வி தம்பதியரின் மகள் கா.தேவிபிரியா பங்கேற்றார். சென் ஜோசப் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் இவர், எஸ்ஜிஏடிஎப் (SGADF) நேஷனல் கேம்ஸ் 2025 தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 13 வயது பிரிவில் சிலம்பு போட்டியில் விளை யாடி தேசிய அளவில் இரண்டாமிடம் பிடித்து அசத்தியுள் ளார். இவர் சர்வதேச சிலம்ப போட்டிக்கும் தேர்வு பெற்றுள் ளது குறிப்பிடத்தக்கது.</p>
