கோவையில் நீட் மறுதேர்வால் 19 வயது மாணவி அனு கீர்த்தனா
17 Jun 2026, 10:19 pm
<p>கோவையில் நீட் மறுதேர்வால் 19 வயது மாணவி அனு கீர்த்தனாபலிகள் தொடராமல் இருக்க, ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்டத் தலைவர் பாவெல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் ரங்கசாமி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் பிரசாந்த் மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
