தேசிய அளவிலான நீச்சல் போட்டி கோவை மாணவி சாதனை
22 Dec 2025, 4:02 am
<p>கோவை, டிச.22– இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் கழகம் (SGFI) சார்பில் தில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டி யில், கோவையைச் சேர்ந்த மாணவி எம். சுஹிதா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் கழகம் நடத்தும் 69-ஆவது தேசிய பள்ளி விளையாட்டு விழா தில்லியில் அண்மையில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான நீச் சல் மற்றும் டைவிங் போட்டிகள் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டன. இப் போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிறந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற னர். இதில், 14 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் (Backstroke) பிரிவில் கோவை இந் துஸ்தான் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவி எம். சுஹிதா பங்கேற்றார். நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த கடுமை யான போட்டியாளர்களுக்கு ஈடுகொடுத்து, இலக்கை எட்டி மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென் றார். தேசிய அளவில் பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவி சுஹிதாவை, அவரது பயிற்சியாளர் ஜெயராஜ் மற் றும் சக நீச்சல் வீரர்கள் பாராட்டி கௌரவித்தனர். மாணவியின் இந்த வெற்றிக்கு பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற் றோர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.</p>
