தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோவையில் முடங்கியது ஷார்ஜா சரக்கு போக்குவரத்து தேங்கும் காய்கறிகள், சிறு, குறு தொழில்கள் முடங்கும் அபாயம்!

11 Jun 2026, 11:25 pm
கோவையில் முடங்கியது ஷார்ஜா சரக்கு போக்குவரத்து தேங்கும் காய்கறிகள்,  சிறு, குறு தொழில்கள் முடங்கும் அபாயம்!

கோவையில் முடங்கியது ஷார்ஜா சரக்கு போக்குவரத்து தேங்கும் காய்கறிகள், சிறு, குறு தொழில்கள் முடங்கும் அபாயம்!

உலக அளவில் ஏகாதிபத்திய நாடுகளின் சுயநலத்தால் உந் தப்பட்டு நடந்து வரும் போர்களும், அதன் விளைவாக எழுந்துள்ள சர்வதேச பதற்றமும், எங்கோ நடக்கும் நிகழ்வுகளாக இல்லா மல், உள்ளூர் உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதையே தற் போதைய சூழல் காட்டுகிறது. மத் திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக, கோவை சர்வதேச விமான நிலை யத்திலிருந்து ஷார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் செல்லும் சரக்கு போக்குவரத்து வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள் ளது. இதன் நேரடிப்பாதிப்பை கோவையை சுற்றியுள்ள மேற்கு மண்டல விவசாயிகளும், சிறு மற் றும் குறு தொழில் முனைவோரும், ஆயிரக்கணக்கான உழைக்கும் தொழிலாளர்களும் அனுபவித்து வருகின்றனர்.

பல மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

வழக்கமாக கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களிலி ருந்து நாள்தோறும் டன் கணக்கில் தக்காளி, கத்தரி, முருங்கை உள் ளிட்ட காய்கறிகள், கறிவேப்பிலை, பழங்கள், மல்லிகை போன்ற மலர்கள் மற்றும் திருப்பூரின் பின் னலாடைகள், கோவையின் மோட்டார் உதிரிபாகங்கள் ஆகி யவை ஷார்ஜாவுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுவது வழக் கம். ஆனால், போர் பதற்றத்தால் வான்வழிப் பாதைகளில் ஏற்பட் டுள்ள தடைகள் மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றைக் கார ணம் காட்டி, விமான சரக்குக் கட்ட ணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள் ளது. இத்துடன், சர்வதேசச் சந்தை யில் புதிய கொள்முதல் ஆர்டர்க ளும் கணிசமாக குறைந்துவிட் டன. விமானக் கட்டண உயர்வு மற் றும் ஆர்டர் குறைவு காரணமாக, தினமும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய டன் கணக்கி லான காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் அனுப்ப முடியாமல் தேக்க மடைந்துள்ளன. அழுகும் தன்மை யுடைய இப்பொருட்களை உள்ளூர் சந்தையில் மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டா யத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட் டுள்ளனர். இதனால், போட்ட முத லீட்டைக் கூட எடுக்க முடியாமல் மேற்கு மண்டல விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து, கடன்பாறையில் சிக்கித் தவிக்கின்ற னர்.

முடங்கும் சிறு தொழில்கள்

ஏற்றுமதி முடங்கியுள்ளதால், கோவையின் பவுண்டரி, மோட்டார் மற்றும் திருப்பூரின் ஜவுளி சார்ந்த சிறு, குறு தொழில் நிறுவனங்கள் புதிய ஆர்டர்களின்றி உற்பத்தியை பாதியாகக் குறைத்துள்ளன. இதன் விளைவாக, இந்நிறுவனங் களை மட்டுமே நம்பி வாழும் தினக் கூலி மற்றும் ஒப்பந்தத் தொழிலா ளர்களின் வேலைவாய்ப்பு பறி போய், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. ஏகாதி பத்திய நாடுகளின் போர் வெறிக்கு, எந்த பாவமும் அறியாத உள்ளூர் உழைக்கும் மக்களே பலியாகி வரு வது இதன் மூலம் தெளிவாகிறது. இத்தகைய இக்கட்டான சூழ லில் இருந்து நஷ்டத்தில் தவிக்கும் சிறு தொழில் நிறுவனங்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க ஒன் றிய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த பல்வேறு தொழில் மற்றும் விவசாய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக, தற்காலிகமாக விமான சரக்கு கட்டணத்தை குறைக்க ஒன்றிய அரசு சிறப்பு மானி யங்களை வழங்க வேண்டும். போரி னால் வாழ்வாதாரம் மற்றும் ஆர்டர் களை இழந்த விவசாயிகளுக்கும், குறுந்தொழில் நிறுவனங்களுக்கும் உரிய நிவாரண உதவித்தொகை வழங்கப்பட வேண்டும். தேக்க மடைந்துள்ள விளைபொருட்களை உள்நாட்டுச் சந்தையில் அரசே கொள்முதல் செய்ய போதிய உள் கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. எங்கோ நடக்கும் போரின் பாதிப்புகள், உள்ளூர் மக்களின் அடுப்பங்கரையை முடக்குவதற்கு முன், ஆட்சியாளர்கள் போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். (ந.நி)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.