முறையாக ஊதியம் இல்லை: செம்மொழி பூங்கா ஊழியர்கள் போராட்டம்
18 Aug 2026, 10:15 pm

முறையாக ஊதியம் இல்லை: செம்மொழி பூங்கா ஊழியர்கள் போராட்டம்

கோவை, ஆக.18-செம்மொழி பூங்காவில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து செவ்வாயன்று பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கவை, காந்திபுரம் பகுதியில்அமைந்துள்ள செம்மொழி பூங்காவில் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் மாதந்தோறும் 7 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

ஆனால், கடந்த இரு மாதங்களாகஊதியம் முறையாக வழங்கப்படவில்லை. கடந்த மாதம் தாமதமாக வழங்கப்பட்ட நிலையில், நடப்பு மாதத்திற்கான ஊதியம் 18 ஆம் தேதியாகியும் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், ஊதியம் குறித்து கேட்டால் பணிநீக்கம் செய்துவிடுவதாக ஒப்பந்ததாரர் மிரட்டுவதாகவும் பணியாளர்கள் குற்றம்சாட்டினர்.இதனை கண்டித்து 100-க்கும்மேற்பட்ட பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து பூங்கா வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ததகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள்சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ரத்தினகுமார், பஞ்சாலை சங்க மாவட்டப் பொருளாளர் ஆனந்தகுமார் மற்றும்13-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுமதி நாகராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை நேரில் சந்தித்துப் பேசினர்.

இதனையடுத்து, கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் சம்பத், காணொலிக் காட்சி (வீடியோ

கால்) வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சரின் தலையீட்டைத் தொடர்ந்து, உடனடியாக நிலுவைஊதியம் வழங்கப்படும் என ஒப்பந்ததாரர் உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், வங்கிக் கணக்கில் ஊதியம் செலுத்தப்பட்ட பின்னரே மீண்டும் பணிகளை தொடங்குவோம் என தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர்.