110 ஏக்கருக்கு விரிவடைகிறது செம்மொழி பூங்கா! தீம் பார்க், பிரம்மாண்ட பொருட்காட்சி திடலுடன் மாஸ்டர் பிளான் தயார்!
29 May 2026, 11:15 pm

110 ஏக்கருக்கு விரிவடைகிறது செம்மொழி பூங்கா! தீம் பார்க், பிரம்மாண்ட பொருட்காட்சி திடலுடன் மாஸ்டர் பிளான் தயார்!

கோவை, மே 29- கோவை மாநகரின் பிரதான அடை யாளமாக விளங்கும் ’செம்மொழி பூங்காவை’ மேலும் 110 ஏக்கர் பரப்ப ளவிற்குப் பிரம்மாண்டமாக விஸ்தரிக் கும் நோக்கில், தனியார் ஆலோசனை நிறுவனம் மூலமாக ’மாஸ்டர் பிளான்’ தயார் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

இந்த அதிநவீன விரிவாக்கத் திட்டத்திற்கு உத்தேசமாக ரூ.450 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பீடு செய் யப்பட்டுள்ளது.

கோவை காந்திபுரத்தின் இதயப் பகுதியில், மத்திய சிறைச்சாலைக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தில் முதற் கட்டமாக செம்மொழி பூங்கா மாநக ராட்சியால் உருவாக்கப்பட்டு அண்மை யில் திறக்கப்பட்டது.

உலகத் தரத்தி லான கட்டமைப்புடன் அமைக்கப்பட்ட இந்த பூங்காவிற்கு பொதுமக்கள் மற் றும் சுற்றுலாப் பயணிகள் இடையே மிக அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து, கோவை மத்திய சிறைச்சாலையை காரமடை அருகே உள்ள ’பிளிச்சி’ பகுதிக்கு முழுமையாக இடமாற்றம் செய்த பின்னர், சிறைச்சாலைக்கு சொந்தமான மீதமுள்ள இடத்திலும் பூங்கா விரிவாக்கம் செய்யப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி, தற்போது சிறை வளாகத்தில் மீதமுள்ள 110 ஏக்கர் நிலத்தில் பூங் காவை விஸ்தரிப்பு செய்யும் போது, அங்கு பொதுமக்கள் மற்றும் குழந்தை களை கவரும் வகையில் என்னென்ன உலகத் தரம் வாய்ந்த நவீன வசதிகளை ஏற்படுத்தலாம் என்பது குறித்து விரி வான திட்ட அறிக்கை தயாரிக்கப் பட்டுள்ளது.

இந்த மாஸ்டர் பிளானின்படி, சிறு வர்-சிறுமிகளை பெருமளவில் ஈர்க் கும் வகையில் பல்வேறு நவீன விளை யாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பிரம்மாண்ட ’தீம் பார்க்’ (Theme Park) உருவாக்கப் பட உள்ளது.

மேலும், வர்த்தக ரீதி யாகப் பெரிய தனியார் நிறுவனங்கள், அரசுத் துறையினர் மற்றும் சுய உதவிக் குழுக்கள் தங்களது பிரம்மாண்ட பொருட்காட்சிகளை (Trade Fairs & Exhibitions) நடத்துவதற்கேற்ப அதி நவீன உள்கட்டமைப்புடன் கூடிய பிரத் யேக பொருட்காட்சி திடலும் இந்த 110 ஏக்கர் நிலப்பரப்பில் திட்டமிடப்பட் டுள்ளது.

தனியார் நிறுவனத்தின் இந்த மாஸ் டர் பிளான் அறிக்கை, தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, நிதி ஒதுக்கீடு பெறப்பட்டவுடன் இதற்கான பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங் கும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரி விக்கின்றன

. இந்த 110 ஏக்கர் விரி வாக்கப் பணிகள் முழுமையாக நிறை வடையும் பட்சத்தில், தென்னிந்தியா விலேயே மிகச்சிறந்த மற்றும் பிரம் மாண்டமான நகர்ப்புற பொழுது போக்கு மையமாக செம்மொழி பூங்கா உருவெடுக்கும் என்பதால் கோவை மக்கள் மிகுந்த உற்சாகமும் எதிர் பார்ப்பும் அடைந்துள்ளனர்.