முந்தய பக்கம்

தேசிய அளவிலான போட்டியில் கோவை பள்ளி மாணவி அசத்தல்

2 Feb 2026, 4:51 pm
தேசிய அளவிலான போட்டியில் கோவை பள்ளி மாணவி அசத்தல்
<p><strong>தேசிய அளவிலான போட்டியில் கோவை பள்ளி மாணவி அசத்தல்</strong></p> <p>கோவை, பிப்.2- புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில், வெள்ளிப் பதக்கம் பெற்று கோவை திரும்பிய பள்ளி மாணவிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் தேசிய பள்ளிக்கல்வி குழுமம் (SGFI) சார்பில், 69 ஆவது தேசிய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. 14, 17, 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் தமிழ்நாடு, தில்லி, கேரளம், ஆந்திரா, கர்நாடகா, அருணாசல பிரதேசம் &nbsp;உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவி கள் பங்கேற்றனர். இதில் தமிழக அணியின் சார்பில் கோவை &nbsp;சிங்கின் ஸ்போர்ட்ஸ் கராத்தே அகடாமி மற்றும் கீதாஞ்சலி &nbsp;பள்ளியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி வினுமித்ரா, 17 &nbsp;வயதுக்குட்பட்ட குமித்தே பிரிவில் போட்டியிட்டு வெள்ளிப் &nbsp;பதக்கம் பெற்றார். இந்நிலையில், பதக்கத்துடன் திங்களன்று &nbsp; கோவை திரும்பிய மாணவிக்கு விமான நிலையத்தில் உற் சாக வரவேற்பளிக்கப்பட்டது. கராத்தேவில் தேசிய அளவில் &nbsp;வென்றதற்காக தமிழக அரசு சார்பில், கல்வி ஊக்கத்தொகை யாக ரூ.1.5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வகை &nbsp;கராத்தே போட்டிகளை முதலமைச்சர் கோப்பை போட்டிக ளில் சேர்க்க வேண்டும் என பயிற்சியாளர் கணேஷ்மூர்த்தி வலியுறுத்தினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram