தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

6 Jul 2026, 1:01 am
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

நாளை ரயில் சேவைகளில் மாற்றம்

சேலம், ஜூலை 5- கரூர் ரயில்வே யார்டில் தண்டவாள புதுப்பிப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், செவ்வா யன்று (நாளை) சில ரயில் சேவைகளில் மாற்றம் செய் யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள் ளது. அதன்படி, திருச்சியிலிருந்து காலை 07.25 மணிக்கு ஈரோட்டிற்கு புறப்படும் திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் (வண்டி எண். 56809) செவ்வாயன்று கரூருடன் நிறுத்தப் படும். அன்றைய தினம், இந்த ரயில் ஈரோடு வரை இயக்கப் படாது. ஈரோட்டிலிருந்து மதியம் 14.00 மணிக்கு (மதியம் 2.00) செங்கோட்டை புறப்பட வேண்டிய ஈரோடு - செங் கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண். 16845) ஈரோட் டிற்குப் பதிலாக கரூரிலிருந்து மதியம் 15.05 மணிக்கு (மதியம் 3.05) புறப்படும். இந்த ரயில் ஈரோடு மற்றும் கரூர் இடையே செயல்படாது. ஈரோட்டிலிருந்து காலை 08.05 மணிக்கு திருச்சி புறப்படும் ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில் (வண்டி எண். 56106) மூர்த்திபாளையத்துடன் நிறுத்தப்படும். மூர்த்திபாளையம் முதல் திருச்சி வரை இந்த ரயில் அன்றைய தினம் இயக்கப்படாது. திருச்சியி லிருந்து மதியம் 13.00 மணிக்கு (மதியம் 1.00) பாலக் காடு டவுன் செல்ல வேண்டிய திருச்சி - பாலக்காடு டவுன் விரைவு ரயில் (வண்டி எண். 16843) திருச்சியிலி ருந்து புறப்படுவதற்கு பதிலாக கரூரிலிருந்து மதியம் 14.20 மணிக்கு (மதியம் 2.20) புறப்பட்டு பாலக்காடு டவுன் சென்றடையும். திருச்சி மற்றும் கரூர் இடையே இந்த ரயில் இயக்கப்படாது. செங்கோட்டையிலிருந்து காலை 05.20 மணிக்கு ஈரோடு புறப்படும் செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண். 16846) கரூருடன் நிறுத்தப்படும். கரூர் யார்டில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், அந்த ரயில் கரூரிலிருந்து ஈரோட்டிற்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும். செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வழக்கமாக உள்ள அதே நிறுத்தங் களில் இந்த சிறப்பு ரயிலும் நின்று செல்லும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

காரின் இடுக்கில் சிக்கி காட்டெருமை உயிரிழப்பு

உதகை, ஜூலை 5- கோத்தகிரி அருகே இரண்டு காட்டெருமைகள் சண்டையிட்டு கொண்டதில், தடுப்புச்சுவரை ஒட்டி நிறுத் தப்பட்டிருந்த காரின் இடுக்கில் சிக்கிய, காட்டெருமை ஒன்று வெளியே வர முடியாமல் பரிதாபமாக உயிரிழந் தது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட் டார பகுதிகளில் காட்டெருமைகளின் நடமாட்டம் கணிச மாக அதிகரித்து வருகிறது. வனப்பகுதியிலிருந்து உணவு தேடி காட்டெருமைகள் கூட்டமாக, சாலையோரங்கள் மற் றும் குடியிருப்புப் பகுதிகளில் மேய்ச்சலுக்காக வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், வெள்ளியன்று கோத்தகிரி பகுதியில் பலத்த மழை பெய்துக் கொண் டிருக்கும் போது, பாண்டியன் பூங்காவிலிருந்து தாந்த நாடு செல்லும் சாலையில் உள்ள தனியார் வீட்டின் பாது காப்பு சுவரை ஒட்டி, கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தது. இரவு நேரத்தில் பலத்த மழை பெய்துக் கொண்டிருக்கும் போது, காட்டெருமைகள் கூட்டமாக மேய்ச்சலுக்காக சாலையில் சென்றுக் கொண்டிருந் தன. அந்த கூட்டத்தில் இருந்த 2 காட்டெருமைகள் திடீரென ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்ட போது, தவறுதலாக அதில் ஒரு காட்டெருமை அங்கு நிறுத்தப்பட்டிருந்த காருக்கும், சுற்றுச்சுவருக் கும் இடையே தவறி விழுந்தது. இடுக்கில் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் உயிருக்கு போராடி தவித்தது. இதைக்கண்ட மற்ற காட்டெருமைகள் அதை மீட்க முடியாமல் சுற்றி வந்தவாறு இருந்தன. இரவு நேரமாக இருந்ததாலும், மழை பெய்துக் கொண்டிருந்ததாலும் காட்டெருமை சிக்கியது யாருக் கும் தெரியவில்லை. இதையடுத்து சனியன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் காரின் இடுக்கில் காட் டெருமை சிக்கி இறந்து கிடப்பதைக் கண்டு வனத்துறையி னருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத் திற்கு வந்த வனத்துறையினர் காட்டெருமையின் உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளிகளுக்கு அனுப்பப்படும் முட்டைகளில் எடை குறைவு: கோழிப்பண்ணையாளர்கள்

விளக்கம் நாமக்கல், ஜூலை 5- அரசுப்பள்ளிகளுக்கு அனுப்பப்படும் முட்டைகளில் எடை குறைவு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பண்ணைகளில் இருந்து வாகனங்களில் ஏற் றும் போது ஒரு சில முட்டைகள் பாதிப்பு ஏற்படுகிறது என கோழிப்பண்ணையாளர்கள் விளக்கமளித்துள்ளனர். நாமக்கல் தனியார் ஹோட்டலில் கோழிப்பண்ணை தொழிலை அடுத்து ஒரு 10 ஆண்டுகளுக்கு எப்படி கொண்டு செல்வது குறித்தும், ஏற்றுமதி மற்றும் பாது காப்பு குறித்து இந்தியாவில் உள்ள கோழிப் பண்ணை வல்லுநர் மற்றும் கோழிப் பண்ணையாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் சனியன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் சிங்கராஜ், தற்போது அரசுப்பள்ளிகளுக்கு சுமார் 55 லட்சம் முட்டைகள் விநி யோகம் செய்யப்படுகிறது. மேலும், அரசு பள்ளிக ளுக்கு அனுப்பப்படும். முட்டைகளில் தமிழக அரசின் விதி களின்படி 45 கிராம் இல்லாமல் மிக குறைவான புரதச் சத்துடன் கூடிய முட்டைகள் குழந்தைகளுக்கு விநியோ கம் செய்யப்படுவதாக கேள்வி எழுந்துள்ளது. பண்ணை களில் இருந்து வாகனங்களில் ஏற்றும் போது ஒரு சில முட்டைகள் பாதிப்பு ஏற்படுகிறது. ஆகையினால் கோழிப் பண்ணை சங்கம் சார்பில் பள்ளிகளுக்கு செல்லும் சத் துணவு முட்டையில் சேதம் ஏற்பட்டிருந்தால் 24 மணி நேரத் திற்குள் கோழிப் பண்ணை சங்கத்திற்கு தகவல் தெரி வித்து முட்டைகளை மாற்றிக் கொள்ளலாம். அதே போன்று 45 கிராமுக்கு குறைவாக உள்ள முட்டைகளை யும் கொண்டு வந்து மாற்றிக் கொள்ளலாம், என்றார்.

பாக்கு மரங்களை சேதப்படுத்திய யானை

ஈரோடு, ஜூலை 5- தாளவாடி அருகே பாக்கு மரங்களை சேதப்படுத்திய யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், தாளவாடி, நெய்தாளபுரம் பகுதி யில் உள்ள தோட்டத்திற்குள் யானைகள் புகுந்து தென்னை மற்றும் பாக்கு மரங்களை முறித்து சேதப்படுத்தின. தொடர்ந்து தோட்டத்து முள்வேலி கம்பிகளையும் உடைத்து சேதப்படுத்தின. ஊருக்குள் புகுந்து பயிர் களை சேதப்படுத்தி வரும் யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்றும், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன அழுத்தத்தால் காவல் அதிகாரி உயிரிழப்பு

கோவை, ஜூலை 5- மன அழுத்தத்தால் நீலாம்பூர் காவல் நிலையத்தில் பணி யாற்றி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. கேரளம் மாநிலம், பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த மனோஜ், 1997 ஆம் ஆண்டு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். பதவி உயர்வு பெற்று, 2025 டிசம்பர் முதல் நீலாம்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக மனைவி மற்றும் இரண்டு மகன்கள் கேரளாவில் வசித்து வந்த நிலையில், மனோஜ் காங்கேயம் பாளையம் அருகே வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார். நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவு மற்றும் மன அழுத்தத் தால் பாதிக்கப்பட்டிருந்த மனோஜ், ஞாயிறன்று அதிகாலை தனது மூத்த மகனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், உடல் நிலை மற்றும் மனநிலை குறித்து குறிப்பிட்டிருந்ததாக போலீ சார் தெரிவித்தனர். காலை நீண்ட நேரமாக வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அவர் உயிரிழந்த நிலை யில் இருந்தது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த சூலூர் போலீசார், அவரது உடலை மீட்டு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தலைமையாசிரியர் கைது

திருப்பூர், ஜூலை 5- காங்கயம் அருகே அரசுப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்பட்ட புகாரில், போக்சோ சட்டத்தின் கீழ் தலைமையாசிரியர் கைது செய்யப் பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (58). இவர், திருப்பூர் மாவட்டம், காங்கயம் பகுதியிலுள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் தலைமையாசி ரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர், பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மாணவிகளின் பெற் றோர் காங்கயத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத் தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற் கொண்டு, தலைமையாசிரியர் வெங்கடேஸ்வரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ஆபாச வீடியோ கால் பேச வைத்து போலீஸ் என மிரட்டியதால் இளைஞர் தற்கொலை

திருப்பூர், ஜூலை 5- முகநூல் (பேஸ்புக்) மூலம் பெண்களிடம் ஆபாச வீடியோ கால் பேச வைத்து, பின்னர் போலீஸ் என மிரட்டி பணம் பறிக்கும் கும்பலால் பயந்து போன பீகார் மாநில இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர், பூங்கா சாலை மற்றும் குமரன் சாலை இணைப்பு பகுதியில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வரு கிறது. இதற்காக குழி தோண்டப்பட்டதில் தண்ணீர் ஊற்று ஏற் பட்டு, நீர் நிறைந்து காணப்படுகிறது. இதில், சனி யன்று இளைஞர் ஒருவர் சடலமாக மிதந்தார். இதைக் கண்ட பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில், திருப்பூர் தெற்கு போலீசார், அவர் உடலை மீட்டு விசாரணை மேற் கொண்டனர். அதில், உயிரிழந்தது பீகார் மாநிலம், பெகுசராய் பகுதியை சேர்ந்த முகமது சல்மான் (24) என்பது தெரிய வந்தது. மேலும், திருப்பூர் லட்சுமி நகரில் தங்கி ராயபுரம் பகுதி யிலுள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அந்த பனியன் நிறுவனத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில், அவர் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவருக்கு வந்த செல்போன் அழைப்பில் இந்தியில் ஒருவர் பேசியிருக்கிறார். பெண்களி டம் அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக பேசியதாகவும், அதற்காக இவரை கைது செய்யப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர். முதலில் முகமது சல்மான் மறுத்த நிலை யில், அவர்கள் முகமது சல்மான் அரைகுறை ஆடைகளு டன் பெண் ஒருவருடன் பேசுவது போன்ற வீடியோவை அனுப் பியுள்ளனர். அதனை கண்ட பிறகு பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்ட பெண்னிடம் முகமது சல்மான் பேசியதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்கிறார். ஆனால், அந்த கும்பல் அவரை தோப்புக்கரணம் போட வைத்தும், தான் சொல்லும் எண்ணுக்கு பணம் அனுப்பினால் விட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலடைந்த முகமது சல்மான், தனது செல்போனை அணைத்துவிட்டு, தண் ணீரில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந் தது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சோலையார் அணை நீர்மட்டம்

:86.25/160 அடி நீர்வரத்து:2701கனஅடி நீர்திறப்பு:723.55கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:16.18/72 அடி நீர்வரத்து:1194கனஅடி நீர்திறப்பு:510கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:53.90/120அடி நீர்வரத்து:193கனஅடி நீர்திறப்பு:164கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:38.23/60அடி நீர்வரத்து:398கனஅடி நீர்திறப்பு:1002கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:43.44/90அடி நீர்வரத்து:1279கனஅடி நீர்திறப்பு:30கனஅடி

பிஎச்டி சேர்க்கை: அவகாசம் நீட்டிப்பு

கோவை, ஜூலை 5- பிஎச்டி (Ph.D.) (பகுதி/முழு நேரம்) ஜூலை 2026 சேர்க் கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பாரதி யார் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறை களிலும் கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங் களில் உள்ள பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளிலும் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் (Research Institutions) பிஎச்.டி (Ph.D.) ஆராய்ச்சி பட்டப்படிப்பிற் கான (Part-time & Full-time Regular Stream only) சேர்க்கை விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக இணை யவழி (www.b-u.ac.in) வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.