தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

2 Nov 2026, 12:38 am
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கடும் பனிப்பொழிவு

சேலம், நவ.1-சேலம் மாவட்டம், கெங்கவல்லி, ஆனையம்பட்டி, கூடமலை, பள்ளக்காடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை நேரத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவியது. இதனால் மரங்கள் மற்றும் செடிகளின் இலைகளில் முத்துப்போல் பனித்துளிகள் படர்ந்து காணப்பட்டன. மேலும்,சாலைகள் முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்ததால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டது. அதிகாலை நேரத்தில் நடை பயிற்சி மற்றும் அன்றாடப் பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் பனிப்பொழிவு காரணமாக சிரமத்திற்கு உள்ளாகினர்.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு!

கோவை, நவ.1-இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் இரத்தினம் குளோபல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய 32 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, இரத்தினம் பல்கலைக்கழக வளாகத்தில் சனியன்று நடைபெற்றது. மாநாட்டை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் எ. பாலகுருசாமி தொடங்கி வைத்தார்.பதிவாளர்

முனைவர் ச. கிருஷ்ணராஜ் தலைமையில், மாவட்டத் தலைவர் முனைவர் பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்ற இம்மாநாட்டில் 125 பள்ளிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நிலைத்தன்மைக்கான அறிவியல் மற்றும் புதுமை என்ற கருப்பொருளில் கழிவு மேலாண்மை, ஆற்றல், நீர், உணவு மற்றும் விவசாயம், நல்வாழ்வு உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.

மாநாட்டில் 150 வழிகாட்டி ஆசிரியர்களுக்குத் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுச் செயலாளர் எம்.எஸ். முகமது பாதுஷா பயிற்சி அளித்தார். கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் நா. செண்பகலெட்சுமி, முதன்மைக் கல்வி அலுவலர் க. கிருஷ்ணப்பிரியா உள்ளிட்டோர் மாணவர்களின் படைப்புகளை ஆய்வு செய்தனர். துணை ஆட்சியர் சங்கீதா, விஞ்ஞானி முனைவர் பி. சசிகுமார் ஆகியோர் சிறந்த கண்டுபிடிப்புகளை படைத்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

தண்ணீர் இணைப்பு வழங்க கோரிக்கை

திருப்பூர், நவ.1 -திருப்பூர் மாவட்டம், முதலிபாளையம் ஊராட்சி செம்மாண்டம்பாளையத்தில் ஞாயிறன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், சிட்கோ வெள்ளக்கரடு மற்றும் எஸ்.வி.புதூர் பகுதி பொதுமக்கள் குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதிகள் கோரி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர்.அம்மனுவில், ”எங்கள் பகுதியில் கடுமையான குடிநீர்ப் பற்றாக்குறை நிலவுவதால், தெரு குழாய்களில் தண்ணீர் பிடிக்க பெண்களுக்கு இடையே தினமும் சண்டைகள் ஏற்படுகின்றன. மேலும், சாலையை கடந்து சென்று தண்ணீர் எடுக்கும்போது விபத்துகளும் நேரிடுகின்றன. எனவே, தெருக் குழாய் இணைப்புகளை வீட்டு குடிநீர் இணைப்புகளாக மாற்றி விநியோகிக்க வேண்டும். அத்துடன், எரியாததெருவிளக்குகளை சீரமைத்து புதிய விளக்குகளைப் பொருத்தித் தர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.முதலிபாளையம் ஊராட்சி சிட்கோ மாதர் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட இந்த மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

குரூப் 2 தேர்வு – தேர்வர்கள் உற்சாகம்

திருப்பூர், நவ.1 -தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 2 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுஞாயிறன்று நடைபெற்றது.திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மாவட்டத்தின் 32 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் இந்த தேர்வை 9,133 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். எழுத்துத் தேர்வு 9.30 மணிக்கு தொடங்கிய நிலையில், தேர்வு எழுத வந்தவர்களை காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் தேர்வு மையங்களுக்குள் இருக்க வேண்டும் என முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, தேர்வர்கள் காலை முதலே ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினர். தேர்வு மையங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

டாஸ்மாக்கில் புதிய காலி பாட்டில் சேகரிப்பு திட்டம் நடைமுறை சிக்கல்களை களைந்திட கோரிக்கை

கோவை, நவ. 1-டாஸ்மாக் கடைகளில் புதிய காலி பாட்டில் சேகரிப்பு முறை அவசரகதியில் அமல்படுத்தப்படுவதை எதிர்த்தும், அதனால் ஏற்படும் பணிச்சுமை மற்றும் நடைமுறை சிக்கல்களை உடனே சரிசெய்ய டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், புதிய நடைமுறையிலான காலி பாட்டில் சேகரிப்பு திட்டத்தை தாங்கள் வரவேற்கிறோம். அதேசமயம் இத்திட்டத்தை கடைகளில் முழுமையாக அமுல்படுத்துவதற்கு முன்பாக போதிய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன. குறிப்பாக, கடைகளில் போதிய அளவு டிவைஸ், பிரிண்டர், வாடிக்கையாளர் மற்றும் ஊழியர் பாதுகாப்பிற்கான தடுப்பு அரண்கள், சில்லறை மாற்றத்திற்காக பத்து ரூபாய் நோட்டுகள் மற்றும் கூடுதல் ஆட்களை நிரப்புவது போன்ற அடிப்படை வசதிகள் இதுவரையில் ஏற்பாடு செய்யப்படவில்லை. இந்நிலையில், ஏற்கனவே கோவை மாவட்டத்தில் பலடாஸ்மாக் கடைகள் விதிமுறைகளை காரணம் காட்டி மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாகதற்போது உள்ள கடைகளில் கூட்டம் எந்நேரமும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால்ஊழியர்கள் சிறுநீர் கழிக்க கூட செல்ல முடியாமல் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது. அடிப்படையான ஏற்பாடுகளை செய்த பின்னரே திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கிறோம். ஆனால், டாஸ்மாக் நிர்வாகம் சர்வாதிகரத்தனமாக எங்களிடம் பணிச்சுமையை திணிக்கிறது. மேலும், பண்டிகை காலத்தில் இதுபோன்ற திடீர் மாற்றங்களை கொண்டுவருவதை தவிர்க்க வேண்டும் என நிர்வாகத்திடம் கடிதம் வழங்கி பேசியபோதிலும், நிர்வாகத் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. எனவே ஒன்றுபட்டு போராடுவது என முடிவெடுத்துள்ளோம். இதனையறிந்து டாஸ்மாக் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இதில் நல்ல முடிவு எட்டப்படும் என நினைக்கிறோம் என்றனர்.இந்நிலையில், வழக்கமாக பகல் 12 மணிக்குத் திறக்கப்பட வேண்டிய கோவை மாவட்டத்தின் பெரும்பாலானடாஸ்மாக் கடைகள் பிற்பகல் 2 மணிக்கு மேலேயே திறக்கப்பட்டன. இதன்காரணமாக பல்வேறுஇடங்களில் வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற வாகனம் விபத்து

நாமக்கல், நவ.1-ராசிபுரம் அருகே 7 டன் ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற ஈச்சர் வாகனம் கவிழ்ந்து விபத்தில், ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூனுசாவடி பகுதியில், சனியன்று இரவு அதிக பாரத்துடன் ஈச்சர் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் தலைகுப்புறக் கவிழ்ந்துவிபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வாகனத்தை ஓட்டிச் சென்ற சேலம் மாவட்டம், மல்லூரை சேர்ந்த குமரவேல் (36) என்பவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்துக்குள்ளான வாகனத்தை ஆய்வு செய்தபோது, அதில் சுமார் 7 டன் ரேஷன் அரிசி ஏற்றிச் செல்லப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சேலம் மாவட்டம் மல்லூர் பகுதியில் இருந்து நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு ரேஷன் அரிசியை கடத்திச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பதை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கத் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.