தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

13 May 2026, 11:02 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம்

சேலம், மே 13- வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள், பெற் றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திருமண செய்து கொண்டு, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். சேலம் மாவட்டம், கருமந்துறை பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன் (23), கிருஷ்ணகிரி மாவட்டம் பாக லூர் பகுதியை சேர்ந்த எஸ். உஷா (22). இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ள னர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்களின் காத லுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த மே 11 ஆம் தேதியன்று அரூர் பகுதியில் உள்ள தீர்த்தமலை சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு, புதனன்று சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் மாவட்ட காவல்துறை யினர் அறிவுறுத்தலின் பேரில் வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் காவல் நிலையத்திற்கு பாதுகாப்பு டன் அனுப்பி வைத்தனர்.

மூட ஆய்வறிக்கை சமர்பிப்பு

ஈரோடு, மே 13- ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, வழிபாட்டுத் தலங்க ளுக்கு அருகே 500 மீட்டருக்குள் உள்ள 39 மதுக்கடை களை மூட அரசிடம் ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட் டுள்ளது. தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதும் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே 500 மீட்டருக்குள் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை ஆய்வு செய்து 2 வாரங்களுக்குள் அவற்றை மூட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக ஆய்வுப் பணி யில் ஈடுபட்டிருந்த டாஸ்மாக் அதிகாரிகள், பணியா ளர்கள், ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ள னர். இதுதொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகை யில், தமிழக முதல்வர் உத்தரவுப்படி, ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை ஆய்வு மேற் கொண்டோம். கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டருக்குள் 39 மதுக் கடைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர் பான ஆய்வறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள் ளோம். அரசு உத்தரவுக்குப் பின் இந்த கடைகளை மூடுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

காவிரி ஆற்றில் கதவணை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

நாமக்கல், மே 13- பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் கதவணை பணி களை விரைந்து முடிக்க வேண்டும் என வலியு றுத்தி, முதலமைச்சருக்கு இளம் விவசாயிகள் சங் கம் கடிதம் அனுப்பியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள அனிச்சம்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து கரூர் - புகலூர் இடையே நடைபெற்று வரும் கத வணை திட்டத்தை விரைந்து முடிக்கக்கோரி தமிழ் நாடு முதலமைச்சருக்கு இளம் விவசாயிகள் சங்கத் தினர் செவ்வாயன்று மனு அனுப்பினர். அதில், இத் திட்டத்தில் 0.8 டிஎம்சி தண்ணீர் தேங்கும் வகையில் ரூ.406.50 கோடி மதிப்பில் 156 மீட்டர் நீளத்தில் 73 ஷட்டர்களுடன் கதவணை அமைக்கும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்து. கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணொலி காட்சி மூலம் சென்னையில் தொடங்கி வைத்தார். மூன்று ஆண்டு களில் கட்டுமானப் பணிகளை முடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது ஐந்து ஆண்டுகளை கடந்தும் பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் மந்தமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பணிகள் தாமதமாக நடைபெறுவ தால் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கதவணை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொது இடங்களில் உள்ள மதுக்கடையை மூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தருமபுரி, மே 13- தருமபுரி மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள மதுபானக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள 717 மதுபானக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. தருமபுரி மாவட்டத்தில் பேருந்து நிலையங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். பரவலாக உள்ள சந்துக்கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இவ்வாண்டு பருவமழை போதிய அளவுக்கு இல்லாததால் மாவட்டத்தில் ஏரி, குளங்கள், கிணறுகள் வறண்டு காணப்படுகின்றன. பல கிராமங்களில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பத்தை சமாளிக்கவும், குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னறிவிப்பின்றி டாஸ்மாக் கடைகள் மூடல் ஊழியர்களுக்கு விரும்பிய இடத்தில் பணி வழங்கிடுக

கோவை, மே 13- தமிழக அரசின் உத்தரவின்படி கோவையில் மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் பட்டியலை வெளியிட வேண்டும் மற்றும் பணியாளர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் இடமாற்றம் வழங்க வேண்டும் என டாஸ்மாக் ஊழி யர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கோயம்புத்தூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் மாவட்ட மேலாளர்க ளுக்கு (வடக்கு மற்றும் தெற்கு) அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறி யிருப்பதாவது, தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் மூடப்படும் கடைகளின் விவரங்களை நிர்வாகம் உடனடியாக வெளியிட வேண்டும். கடைகளை மூட 15 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீ ரென கடைகளை மூடுவதால் ஊழியர் கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளா கின்றனர். மூடப்படும் கடைகளில் உள்ள மது மற்றும் பீர் பாட்டில் பெட்டிகளை திரும்பப்பெற நிர்வாகமே வாகனங் களை அனுப்பி, கிடங்குகளில் இறக்கி வைக்க வேண்டும். இதற்கான வாகன வாடகை மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி கூலியை ஊழியர்களிடம் கேட்டு கட் டாயப்படுத்தக் கூடாது. மேலும், கடை களை மூடுவதற்கு முன்பு பழைய சரக்கு களை விற்றுத் தீர்க்க போதிய அவகா சம் வழங்கப்பட வேண்டும். கடைகள் மூடப்படுவதால் பணியிழக்கும் ஊழி யர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்க வேண்டும். அவர்களுக்கு வீட்டின் அரு கிலோ அல்லது அவர்கள் விரும்பும் இடங்களிலோ பணி வாய்ப்பு வழங்கு வதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

யானைகளால் தென்னை மரங்கள் சேதம்: விவசாயிகள் கவலை

கோவை, மே 13- ஆனைமலை அருகே யானைக்கூட் டத்தால் சேதமடைந்த தென்னை மரங்க ளுக்கு வனத்துறை உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், ஆனைமலை அடுத்த அங்கலக்குறிச்சி கோபால்பதி அருகே விவசாயிகள் தென்னை சாகு படி செய்துள்ளனர். இந்நிலையில், செவ்வாயன்று நள்ளிரவு வனப்பகுதி யில் இருந்து வந்த யானைக் கூட்டம் விவசாயி சிவலிங்கம் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக் குள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தி, தென்னந் குருத்துகளை சாப்பிட்டு விட்டு அங்கிருந்த சென்றுள் ளன. காலை தென்னந்தோப்புக்கு வந்த சிவலிங்கம் யானையின் கழிவு மற்றும் கால் தடம் இருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்து தோப்பில் சுற்றி பார்த்த போது சுமார் 25க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதப்படுத்தப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து வனத்து றைக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து அப்பகுதி விவசாயி கள் கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், இரவு நேரத்தில் விவசாய தோட்டங்க ளில் நுழைந்து பயிர்களை சேதப்ப டுத்துகிறது. மேலும் அப்பகுதியில் குடி யிருந்து வரும் தோட்ட பணியாளர்கள் இரவு நேரங்களில் மிகவும் அச்சத்துடன் வசிக்கின்றனர். வனத்துறையினர் யானைக்கூட்டங்கள் விவசாய நிலங்க ளுக்குள் வராமல் தடுக்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், என்றனர்.

பொது இடங்களை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை

கோவை, மே 13- பொது இடங்களை ஆக்கிரமித்தால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகராட்சி நிர்வா கம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிக ளில், நகர ஊரமைப்புத் துறையின் அனுமதி பெற்று அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் பூங்காக்கள், பொது ஒதுக்கிட்டு இடங்கள் மற்றும் சாலைகள் மாநக ராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த இடங் களை சில கட்டுமான நிறுவனங்கள் மற்றும் குடியி ருப்பு சங்கங்கள் கம்பிவேலி அமைத்து ஆக்கிரமித் துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இவ்வாறு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பொது இடங்களை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில், மாநகராட்சி நிர் வாகமே அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும். அதற் கான செலவுத் தொகை ஆக்கிரமிப்பு செய்த நபர்களிட மிருந்தே வசூலிக்கப்படும். மீட்கப்படும் அனைத்து பொது இடங்களும் உடனடியாகப் பொதுமக்கள் பயன் பாட்டிற்கு ஏதுவாக மாற்றப்படும். பொது சொத்துக் களை ஆக்கிரமிப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

சிஐடியு நன்றி

மேட்டுப்பாளையம், மே 13- கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் சுற்றுப்புற பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததற்கு சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் தாலுகா சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக் கையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த 1784, 1785, 1786 மற்றும் 1803 ஆகிய நான்கு டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், இதற்காக குரல் கொடுத்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் போராட்டங்க ளில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள் ளது. மேலும், மதுக்கடை அகற்றும் போராட்டம் என்பது வெறும் இடமாற்ற போராட்டம் அல்ல என்றும், மக்க ளின் நலன், பெண்கள் பாதுகாப்பு, பள்ளி மாணவர்கள் நலன், இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் சமூக அமைதிக்கான மக்கள் இயக்கம் என்றும் குறிப்பிட்டுள் ளது. மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என்றும், அரசுத்துறை மற் றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கும் மீண்டும் நன்றி தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.

நீலகிரியில் ஜப்பான் டீத்தூள் அறிமுகம்

உதகை, மே 13- நீலகிரியில் முதன்முறையாக அறிமுகம் செய்யப் பட்டுள்ள ஜப்பான் ‘மாச்சா’ டீத்தூள் கிலோ ரூ.25,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிர தான தொழிலாக உள்ளது. சுமார் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடி யில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபகாலமாக பசுந்தே யிலைக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயி கள் கவலையடைந்துள்ளனர். இந்நிலையில், தேயிலை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றப் பட்டு, சர்வதேச தரத்தில் விற்பனை செய்யப்படுவது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனிடையே, குன்னூர் அருகே உள்ள பெட்போர்டு பகுதியில் அமைந்துள்ள தனியார் தேயிலை விற்பனை நிலையத்தில், வாடிக் கையாளர்களை கவரும் வகையில் 300க்கும் மேற்பட்ட தேயிலை ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள் ளன. இங்கு ஒரு கப் தேநீர் குறைந்தபட்சம் ரூ.25 முதல் அதிகபட்சம் ரூ.700 வரை விற்பனை செய்யப்படுகி றது. இந்த விற்பனை நிலையத்தில் முதன்முறை யாக ஜப்பானின் புகழ்பெற்ற ‘மாச்சா டீ’ அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. ஜப்பான் மாச்சா டீத்தூள் ஒரு கிலோ ரூ.25 ஆயிரத்திற்கும், இந்திய மாச்சா டீத்தூள் கிலோ ரூ.19 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படு கிறது. ஜப்பானிய கலாச்சாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாச்சா தேயிலை, அறுவடைக்கு 3-4 வாரங்களுக்கு முன்பே நிழலில் வளர்க்கப்படுகிறது. இதனால் குளோரோபில் சத்து அதிகரித்து, அடர் பச்சை நிறத்தையும் தனித்துவமான சுவையையும் தரு கிறது.

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை ரூ.3,000-ஆக உயர்த்த கோரிக்கை

கோவை, மே 13- தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள தேசியப் பார்வையற் றோர் அமைப்பின் திட்ட இயக்குநர் மனோகரன், மாற் றுத்திறனாளிகளின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகை யில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கும் அறி விப்பை அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். அரசுப் பணிகளில் 4 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய சிறப்புத் தேர்வுகளை நடத்தி, காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும். பல ஆண்டுகளாக தற் காலிகமாகப் பணியாற்றி வரும் பார்வை மாற்றுத்திற னாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கோவை அரிசிபாளையத்தில் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள பார்வையற்ற முதி யோர் இல்லத்திற்கு வரி மற்றும் மின் கட்டண விலக்கு அளிக்க வேண்டும். இதனை முன்னுதாரணமாகக் கொண்டு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கெனத் தனித்துவ மான முதியோர் இல்லங்களை அரசு கட்டித் தர வேண் டும் என வலியுறுத்தினார்.

விவசாயிகள் புதிய சாகுபடியை தவிர்க்க ஆட்சியர் அறிவுறுத்தல்

கோவை, மே 13- கோவை மாவட்டத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரு வதால், பயிர்களை பாதுகாக்கவும் மக சூல் இழப்பை தவிர்க்கவும் விவசாயி கள் புதிய சாகுபடி மற்றும் நாற்று நடும் பணிகளை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, அதிக வெப்பத்தின் காரணமாக சோளம், நிலக்கடலை, மக்காச்சோளம் மற்றும் பருப்பு வகைகள் மட்டுமின்றி பூக்கள் மற்றும் பழப்பயிர்களிலும் பூக்கள் உதிர் தல் மற்றும் பிஞ்சுகள் கருகும் பாதிப்பு கள் ஏற்பட வாய்ப்புள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை விளைநிலங்களில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும் என் றும், பயிர்களுக்கு அதிகாலை அல்லது மாலை வேளைகளில் மட்டுமே நீர்ப்பாச னம் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நீரை சிக்கன மாகப் பயன்படுத்த சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன முறைகளை விவ சாயத் துறை பரிந்துரைத்துள்ளது. மேலும் மண்ணின் ஈரப்பதத்தை தக் கவைக்க தென்னை நார்க்கழிவு, காய்ந்த இலைகள் அல்லது பிளாஸ்டிக் தாள்களை கொண்டு மூடாக்கு இட வேண்டும் என்றும், நாற்றங்கால் களை பாதுகாக்க நிழல்வலைகளை பயன்படுத்தலாம் என்றும் அறிவுறுத் தப்பட்டுள்ளது. பயிர் வாரியான பாதுகாப்பு நடவடிக் கைகளாக நெல் பயிருக்கு 3 சதவீத காவோலின் கரைசலையும், கரும்புக்கு 25 சதவீத பொட்டாஷ் மற்றும் 2.5 சதவீத யூரியா கரைசலையும் தெளிக்க ஆட்சி யர் பரிந்துரைத்துள்ளார். மக்காச்சோ ளம் மற்றும் நிலக்கடலை பயிர்களுக் குத் தேவையான பயிர் ஊக்கிகளை தெளிப்பதன் மூலம் வெப்ப அலை பாதிப்பிலிருந்து பயிர்களைக் காத்து நிலையான மகசூலைப் பெற முடியும் என்று அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

வெள்ளியங்கிரி மலை ஏறத் தடை

கோவை, மே 13- கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பூண்டி வெள்ளியங் கிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு தற் காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளியங்கிரி மலைக்கு, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்களை அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோ சனைக் கூட்டம் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், விரைவில் தொடங்கவுள்ள தென்மேற்கு பருவமழை காலங்களில் மலைப்பகுதிகளில் அதிகப்படியான மழைப் பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவ தால், பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி மாவட்ட வன அலுவலர் சில முக்கிய அறிவு றுத்தல்களை வழங்கினார். அதன் அடிப்படையில், வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல புதனன்று முதல் பக்தர் களுக்கு அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பருவமழை காலங் களில் மலையேறுவது ஆபத்தானது என்ப தால் வனத்துறை இந்த முன்னெச்சரிக்கை நட வடிக்கையை மேற்கொண்டுள்ளது. எனவே, பக்தர்கள் வனத்துறையின் இந்த அறிவிப் பிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சேவை மையத்தில் வேலை வாய்ப்பு

திருப்பூர், மே 13 - திருப்பூர் ஒருங்கிணைந்த சேவை மையத் தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு வதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே கூறியுள்ளார். இதுகுறித்து ஆட்சியர் அலுவலக செய் திக்குறிப்பில், திருப்பூர் மாவட்ட சமூகநலத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் திருப்பூர் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு ஒரு காலிப் பணியிடமும், உடு மலைப்பேட்டை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள மூத்த ஆலோச கர் பதவிக்கு ஒரு காலிப் பணியிடமும், களப் பணியாளர் பதவிக்கு இரண்டு காலிப் பணி யிடமும் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பத விக்கு ஒரு காலிப் பணியிடமும் உள்ளது. மையங்களில் காலியாக உள்ள பணியிடங் களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்தவர்களிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கிறது. விண்ணப்பபடிவத்தினை

என்ற இணையதள முகவரி யில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலு வலகம், திருப்பூர் என்ற முகவரிக்கு வரும் மே 30 ஆம் தேதிக்குள் நேரில் வந்து சமர்ப் பிக்க வேண்டும், என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சீரான குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தல்

உதகை, மே 13- கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சி, கோத்தர் வயல் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த 13 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவதியடைந்து வரும் மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குடிநீருக்காக காலிக்குடங்களுடன் பொதுக்குழாய் அருகே காத்துக் கிடக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சீரான குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.