தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

1 hour before
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ரூ.15 கோடி மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள் திருட்டு

சேலம், அக்.12-சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சின்னேரி வயக்காடு பகுதியில், வெள்ளிப் பட்டறையில் காவலாளியை தாக்கி, சுமார் 700 கிலோ வெள்ளிக் கொலுசுகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.15 கோடி எனக் கூறப்படுகிறது.

பட்டறை உரிமையாளர் பாலசுப்பிரமணியம், தீபாவளி விற்பனைக்காகப் பல்வேறு கடைகளில் இருந்து ஆர்டர்கள்பெற்று, கடந்த ஒரு மாதமாக வெள்ளிப் பொருட்களைத் தயாரித்து வந்தார். இந்நிலையில், ஞாயிறன்று நள்ளிரவில் பட்டறைக்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் காவலாளியை தாக்கி, அவரது கைகளை கட்டிவிட்டு உள்ளே புகுந்து வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பட்டறை உரிமையாளர் அளித்த புகாரின்பேரில், பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாநகர காவல் ஆணையர் பாபு சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தார். தாக்குதலில் காயமடைந்த காவலாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், திருடர்களைப் பிடிக்கத்தனிப்படை அமைத்துள்ளனர்.

போலி தங்கக் கட்டி கொடுத்து மோசடி

கோவை, செப்.12-பொள்ளாச்சி அருகே குறைந்த விலைக்கு தங்கம் தருவதாகக் கூறி, பழைய இரும்பு வியாபாரியிடம் போலி தங்கக் கட்டியை காட்டி ரூ.12 லட்சம் பறித்துச் சென்ற 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அரக்கோணத்தை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி ஜான் பாஷாவிடம், தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த வேல்முருகன், தங்கக் கட்டி குறைந்த விலைக்கு கிடைக்கும் எனக் கூறியுள்ளார். இதை நம்பி ஜான் பாஷா, பணத்துடன் ராமபட்டினம் வந்தபோது, போலி தங்கக் கட்டியை காட்டி ரூ.12 லட்சத்தைப் பெற்ற கும்பல், அவரையும் வேல்முருகனையும் கீழே தள்ளிவிட்டு தப்பினர்.இதுகுறித்த புகாரின்பேரில், தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, வேல்முருகன் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனர். மோசடிக்குப் பயன்படுத்திய 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

விபத்தில் சிக்கியவர் மீது வழக்குப்பதிவுஆட்சியர் அலுவலகத்தில் சாலை மறியல்

சேலம், அக்.12-சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே சாலை விபத்தில் சிக்கிய பெரியசாமி (39) என்பவர் மீது போலீசார்வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து, அவரது மனைவி மற்றும் உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிணறு வெட்டும் தொழிலாளியான பெரியசாமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவு திடீரென திறந்ததால் கீழே விழுந்து உள்ளார். பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகன ஓட்டியும் மோதி விழுந்ததில் இருவரும் காயமடைந்தனர்.இதுகுறித்து கார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெரியசாமி தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், தன் மீதே வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.இதைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர். இப்பிரச்சினை குறித்து விசாரிக்க காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மாதர் சங்க கிளை துவக்கம்

கோவை, அக்.12-கோவை மாவட்டம், மதுக்கரை ஒன்றியம், மலுமிச்சம்பட்டியில் அனைத்திந்திய ஜனநாயக மாதச் சங்கத்தின் புதிய கிளை தொடக்க விழா மற்றும் அமைப்புக்குழு கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். அமுதா, செயலாளர் ஜெ. உஷா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதனை தொடர்ந்து தலைவராக எஸ்.சரஸ்வதி, செயலாளராகதேவி, பொருளாளராக சங்கீதா தேவி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மின் இணைப்பு வழங்க மறுப்பு

கோவை, அக்.12-கோவை மாவட்டம், கண்ணப்ப நகர் பகுதியில் ரயில்வே லைன் அருகே 2 வீடுகளுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்கப்படாததால் சிரமப்பட்டு வரும் குடும்பத்தினர் குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்தனர். அப்போது பள்ளிக் குழந்தைகள் மின்விளக்கு, பெட்ரோமாக்ஸ் லைட் எடுத்து வந்தனர்.இதுகுறித்து அம்மனுவில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் 20-க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களில் 18 குடும்பங்களுக்கு மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ரம்யா மற்றும் பிரியா ஆகிய இரண்டு குடும்பங்களுக்கு மட்டும் இதுவரை மின்னிணைப்பு வழங்கப்படவில்லை.

இந்த குடியிருப்பில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கூட்டத்திற்கு சென்று படிக்கவும், மழைக் காலங்களில் சிரமமின்றி கல்வி கற்கவும் மின் இணைப்பு இல்லாதது பெரும் தடையாக உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு முறை மனு அளிக்கப்பட்டும் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மின்வாரியத்தில் தாசில்தார் கடிதம் கொடுக்க வேண்டும் என கூறுவதாகவும், மனிதாபிமான அடிப்படையிலான ஏழைக் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செயலி மூலம் பணம் பறிப்பு - 4 பேர் கைது

நாமக்கல், அக்.12-நாமக்கல்லில் செல்போன் செயலி மூலம் இளைஞர்களை வரவழைத்து தாக்கி பணம் பறித்ததாக, சிறுவன் உட்பட4 பேரை போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, பெரியப்பட்டியை சேர்ந்த நவாஸ் (19) என்பவர் செயலி மூலம் அறிமுகமானார். அவர் அழைத்ததின் பேரில் நாமக்கல் வந்த இளைஞரிடம், நவாஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் தாக்குதல் நடத்தி, ஜி-பே மூலம் ரூ.7,000 பறித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதேபோல், கடந்த 9 ஆம் தேதி மற்றொரு இளைஞரை வரவழைத்து தாக்கி, ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் பறித்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய நாமக்கல் போலீசார், பெரியப்பட்டியைச் சேர்ந்த ஜீவபாரதி (20), விஜய் (20), நவாஸ் (19) மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.

பட்டா பெயர் மாற்றத்துக்கு லஞ்சம்: இருவர் கைது

சேலம், அக்.12-சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.4,000 லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்த. அவர்களிடமிருந்து லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

செக்கடிப்பட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி (45), தனது தந்தையின் பெயரில் உள்ள 6

சென்ட் நிலத்துக்குப் பட்டா பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். இதற்காக கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ரூ.4,000 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து ராமமூர்த்தி சேலம் லஞ்ச ஒழிப்புப் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுறுத்தலின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிராமநிர்வாக அலுவலகத்தில் இருந்த தற்காலிக ஒப்பந்த கிராம உதவியாளர் மாதவனிடம் அவர் கொடுத்தார். மாதவன் அந்த பணத்தை சரவணனிடம் வழங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் இருவரையும் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து ரூ.4,000 பறிமுதல் செய்யப்பட்டதுடன், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பேருந்துகளில் பெண்களை இழிவுபடுத்துவதாக புகார் ஆட்சியரிடம் ஜனநாயக மாதர் சங்கம் மனு!

ஈரோடு, அக். 12-பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டு தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில்பெண் பயணிகள் இழிவுபடுத்தப்படுவதாகவும், உரிய நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து ஆட்சியரிடம் மாதர் சங்கத்தினர் திங்களன்று அளித்த மனுவில், பெருந்துறை - பவானி இடையே இயக்கப்படும் ’பி 12’ நகரப்பேருந்துகள் (காலை 6 மணி முதல் இரவு 10.15 மணி வரை) உரிய நேரத்தில் வருவதில்லை. வெகுநேரம் தாமதமாக வரும் பேருந்துகள், அதன் பின்னால் வரிசையாக ஒன்றிரண்டு வருவதால் பொதுமக்கள், வேலைக்குச் செல்வோா் மற்றும் மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

பெண் பயணிகள் கை காட்டினாலும் பேருந்துகள் நிற்பதில்லை என்றும், இறங்கும் இடங்களில் நிறுத்தாமல் வெகுதூரம் சென்று இறக்கி விடுவது தொடர்கதையாகிவிட்டது. இதுகுறித்து பயணிகள் தட்டிக்கேட்டால், ”ஓசி பயணம் செய்வோர்” எனப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பேசுகின்றனர். இதனால் அரசின் திட்டம் அதன் உண்மையான பலனை இழந்துவிட்டது.

மேலும், பெருந்துறை, திருவாச்சி, நசியனூர், ஆட்டையாம்பாளையம், சித்தோடு மற்றும் டெக்ஸ்வேலி உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிறுத்தங்களில் பொதுமக்கள் படும் சிரமங்களை போக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.முன்னதாக, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தாலுகா செயலாளர் எஸ்.தனலட்சுமி தலைமையில், பெண்கள் திரானோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த நிகழ்வின்போது மாதர் சங்க மாவட்ட உதவித் தலைவர் பி.லலிதாஉடனிருந்தார்.

அனுமதி இல்லாத வழித்தடத்தில் மினி பேருந்துகள் இயங்குவதற்கு எதிர்ப்பு

உதகை, அக். 12-அனுமதி இல்லாத வழித்தடத்தில் மினி பேருந்துகள் இயங்குவதை தடை செய்து, ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் திங்களன்று ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மினி பேருந்து அனுமதி வழங்கும் போது ஒரு நபருக்கு ஒரு பர்மிட் மட்டுமே வழங்க வேண்டும். குத்தகை முதலாளிகளுக்கு பர்மிட் வழங்குவதையும், அனுமதியில்லாத வழித்தடங்களில் மினி பேருந்துகள் அத்துமீறி இயக்கப்படுவதையும் உடனடியாக தடை செய்ய வேண்டும். மினி பேருந்துகள் உரிய நேர அட்டவணையின்படிதான் இயக்கப்படுகின்றனவா என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும். ஆட்டோக்களின் ஆண்டு வாகன புதுப்பித்தல் செலவிற்காக அரசு ரூ. 20,000 மானியமாக வழங்க வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள ஆட்டோக்களுக்கு வழங்கப்படுவதைப் போல, நீலகிரி மாவட்டத்திற்கும் 30 கி.மீ தூரத்திற்கு பர்மிட்டை நீட்டித்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில்திரளான ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.