கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
12 May 2026, 1:21 am

போதைப்பொருள் ஒழிப்பு என்றால், மதுவும் சேர்ந்ததா? ஈஸ்வரன் கேள்வி

நாமக்கல், மே 11- போதைப்பொருள் ஒழிப்பு என்றால், அதில் மது வும் சேருமா?” என்று கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல்வராக பொறுப்பேற்ற உடனே போதைப்பொருள் ஒழிப்பிற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் அறிவித்திருப்பது வர வேற்கத்தக்கது. ஆனால், தமிழகத்தில் அதிகமான மக்கள் பயன்படுத்தும் போதைப்பொருள் மது வாகவே உள்ளது. மதுக்கடைகளின் மூலம் பிற போதைப்பொருட்களின் புழக்கமும் அதிகரித்துள் ளது. எனவே, போதைப்பொருள் ஒழிப்பு நடவ டிக்கையில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுமா? மேலும், சட்டமன்றத் தேர்தலில் பெண்கள் அதிகள வில் ஆளுங்கட்சிக்கு வாக்களித்ததாக கூறப்படும் நிலையில், அவர்கள் விரும்பும் மதுவிலக்கு அமல் படுத்தப்படுமா? மது கடைகள் மூடப்பட்டால் தமிழ கத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முழுமை யாக கட்டுப்படுத்த முடியும் என்றும், இதற்காக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரி விக்கப்பட்டுள்ளது.

ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம்

சேலம், மே 11- சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆயுள் தண்டனை கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த அதிராம்பட்டினம் மேல தெருவை சேர்ந்தவர் முகமது உசேன் (36). இவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக் கில் ஆயுள் சிறை தண்டனை விதிக்க பெற்றார். இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகமது உசேன், அடிக்கடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்த தால், கடந்த ஏப்.18 ஆம் தேதி சேலம் மத்திய சிறைக்கு மாற்றப் பட்டார். இந்நிலையில், தனக்கு மூலநோய் பாதிப்புள்ள தாக சிறை மருத்துவர்களிடம் முகமது உசேன் கூறினார். அதன்பேரில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஏப்.24 ஆம் தேதி முதல் முகமது உசேன் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தலைமை வார்டன் உள்பட 3 பேர் அடங்கிய குழுவினர் பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டு வந்தனர். இந்நிலையில், சனியன்று இரவு முகமது உசேன் கழிவறைக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர் கழிவறையில் இருந்து வெளியே வரவில்லை. தொடர்ந்து, செவிலியர் ஒருவர் அவருக்கு மருந்து கொடுக்க வந்தபோதும், அவர் இல்லை. இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த வார்டன்கள் கழிவறையின் கதவை உடைத்து பார்த்தபோது, அங்குள்ள ஜன்னலை உடைத்து, மாடியிலிருந்து குடிநீர் குழாய் வழியாக கீழே இறங்கி முகமது உசேன் தப்பிச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தண்டவாள பராமரிப்புப் பணி: ரயில் போக்குவரத்து மாற்றம்

சேலம், மே 11- ஈரோடு - திருப்பூர் ரயில்வே பிரிவில் உள்ள ஊத்துக்குளி ரயில் நிலைய யார்டு பகுதியில் தண்டவாள பராமரிப் புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள் ளன. இதன் காரணமாக, வரும் மே 14 ஆம் தேதியன்று அந்த வழியாக இயக் கப்படும் சில முக்கிய ரயில்களின் போக்குவரத்தில் நேரக் கட்டுப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மே 14 ஆம் தேதியன்று இயக்கப்படும் வண்டி எண் 18190 எர்ணா குளம் - டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் ரயில் வஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக் கப்படும். அதேபோல், வண்டி எண் 13352 ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பூர் ரயில் நிலையத்தில் 30 நிமி டங்கள் நிறுத்தி வைக்கப்படும். மேலும், வண்டி எண் 16378 எர்ணாகுளம் - பெங்க ளூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மே 14 அன்று பயண வழியில் ஏதேனும் ஒரு வசதியான இடத்தில் 1 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும். இந்தத் தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் இயக்கத்தில் செய் யப்படும் இந்த மாற்றங்களை பயணி கள் கவனத்தில் கொள்ளுமாறு சேலம் ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள் ளது.

தவெக-வினர் மீது தமிழ்புலிகள் கட்சி புகார்

ஈரோடு, மே 11- அருந்ததிய மக்களை கலங்கப்படுத்தும் வகையில் செயல்பட்ட தவெக-வினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்புலிகள் கட்சியினர் புகாரளித்துள்ளனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் தமிழ்புலிகள் கட்சியின் மத்திய மாவட்டச் செயலாளர் இரா.சிந்தனைச்செல்வன் மனு ஒன்றை அளித்தார். அதில், தமிழக வெற்றிக் கழகத்தினர், சட்டமன்ற தேர்தல் முடிவு வந்தவுடன் சாதி வாரியாக எம்எல்ஏ பதவிகளின் எண்ணிக்கை என்ற தலைப்பில் துண்டறிக் கையை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதில் ஒவ் வொரு சாதியின் பெயரை குறிப்பிட்டு அதற்கான படங்களை அடையாளங்களாக இணைத்துள்ளனர். அதில் அருந்ததியர் சமூகத்தை குறிப்பிட்டு, துடைப்பத்தை அடையாளமாக காண் பித்துள்ளனர். இது ஒட்டுமொத்த அருந்ததியர் மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளது. எனவே, அருந்ததியர் களை கலங்கப்படுத்தி துண்டறிக்கை தயார் செய்த தமிழக வெற்றிக் கழகத்தினரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நிழற்கூடம் கட்டித்தர வலியுறுத்தல்

தருமபுரி, மே 11- பாலக்கோடு அருகே புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஏர்ரனஹள்ளி கிராமத்தில் பயணிகள் நிழற்கூடம் கடந்த 2 வருடங்களாக சேதமடைந்திருந்தது. புதியதாக கட்டிதருவதாகக்கூறி அந்த நிழற்கூடத்தை இடித்துவிட்டனர். ஆனால், தற்போது வரை புதிய நிழற்கூடம் கட்டி தரப்படவில்லை. இதனால் பேருந் துக்கு செல்லும் பயணிகள் வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக, பள்ளி குழந்தைகள் மிகவும் சிர மத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் புதிய நிழற்கூடம் கட்டித்தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ள னர்.

நேபாளம் நாட்டை சேர்ந்த பெண்ணின் உடல் தருமபுரியில் அடக்கம்

தருமபுரி, மே 11- தருமபுரியில் உயிரிழந்த நேபாளம் நாட்டை சேர்ந்த பெண்ணின் குடும்ப ஏழ்மையைக் கருத்தில் கொண்டு, தன்னார்வ அமைப்பு சார்பில் அவரது உடல் தருமபுரி யிலேயே அடக்கம் செய்யப்பட்டது. நேபாளம் நாட்டின் டாங்க் மாவட்டம், கோரஹி பகு தியை சேர்ந்த பிரேம் சௌத்ரி - கல்பனா சௌத்ரி தம்பதி, தனது மகன், மகளுடன் செங்கல் சூளையில் கூலித் தொழிலாளியாக அப்பகுதியில் பணி செய்துள்ளனர், பின்னர், கேரளம் மாநிலம், திருச்சூர் பகுதியிலுள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்ய திட்டமிட்டனர். இதைய டுத்து குடும்பத்தினர் ரயில் மூலம் அண்மையில் கேரளம் புறப்பட்டனர். தருமபுரி மாவட்டம், புட்டிரெட்டிப்பட்டி, நொச்சிக் குடை பகுதி வழியாக சென்ற ரயிலில் இருந்து தவறி விழுந்த கல்பனா சௌத்ரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மொரப்பூர் ரயில்வே போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மிகவும் ஏழ்மை நிலையில் இருந்ததால், அவரது குடும்பத்தி னரால் உடலை பெற்று சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மை தருமபுரி தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் போலீசார் கல்பனா வின் உடலை தருமபுரியிலேயே இறுதிச்சடங்குகள் மற் றும் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். தருமபுரி பச் சியம்மன் கோயில் அருகே உள்ள மயானத்தில் கல் பனாவின் உடல் இறுதிச் சடங்குகளுடன் ஞாயிறன்று அடக்கம் செய்யப்பட்டது.

ரமான சாலையை பழுது செய்து, மீண்டும் சாலை அமைக்கும்

நகராட்சி! அவிநாசி, மே 11- அவிநாசி நகராட்சிக்குட்பட்ட கஸ்தூரிபாய் வீதியில் தரமான சாலையை பழுது செய்து, மீண்டும் சாலை அமைக்கும் பணியால் பொதுமக்கள் அதிருப்தியடைந் துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி நகராட்சி, 12 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் கஸ்தூரி பாய் வீதி யிலுள்ள சாலையானது மிகவும் தரமானதாக இருந்து வருகிறது. இச்சாலையை நகராட்சி நிர்வாகம் ஜேசிபி இயந்திரத்தின் மூலமாக சாலையை சுரண்டும் பணி நடைபெற்று வந்தது. இதைக்கண்ட அப்பகுதி பொது மக்கள், தரமான சாலையை எதற்கு சுரண்டுகிறீர்கள்? என கேட்டதற்கு, மீண்டும் சாலை போடுவதாக கூறியுள் ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவி நாசி வடக்கு கிளை நிர்வாகிகள் கூறுகையில், தரமான சாலையை சிதலப்படுத்தி, சாலைப்பணி செய்ய உத் தரவிட்டது யார்? என்பது குறித்து விசாரணை மேற் கொள்ள வேண்டும். இதில் ஊழல் முறைகேடு நடை பெறுவதாக தெரிய வருகிறது. மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஒரு விசாரணை ஆய்வுக்குழு அமைத்து, முறைகேடு நடை பெற்றால் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.

ஏமாற்றி திருமணம் செய்து மோசடி: 7 பேர் மீது வழக்கு

சேலம், மே 11- தலைவாசல் அருகே ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக 7 பேர் மீது அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள சார் வாய் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (37). இவர் திரு மணத்திற்காக தரகர்கள் மூலம் பெண் தேடி வந்துள்ளார். அப்போது கொத்தாம்பாடியை சேர்ந்த தரகர்கள் ஜோதி, பெரியசாமி, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியை சேர்ந்த பழனி, லதா ஆகியோர் மூலம் சிவகாசி வட்டம், திருத்தங்கல் பகுதியை சேர்ந்த செல்வம் மகள் கனகா என்பவரை திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்தனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஆனந்தனுக்கும், கனகா வுக்கும் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து சென்னையில் வேலை பார்த்த இடத்தில் அறையை காலி செய்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்ற கனகா மீண் டும் திரும்பவில்லை. இதுகுறித்து தரகர்களை தொடர்பு கொண்டு விசாரித்ததில் திருமணம் பிடிக்கவில்லை என கனகா கூறிவிட்டதாக தெரிவித்தனர். விசாரணையில், கனகாவை அவரது தாய் ஏற்கெனவே கேரளத்தில் திருமணம் செய்துவைத்துள்ளதாகவும், அதற்காக ரூ.2.50 லட்சம் ரொக்கம் பெற்றுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து ஆனந்தனின் சகோதரர் ரமேஷ் அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கனகா மற்றும் அவரது தாய் சுப்புலட்சுமி, உறவினர் முத்துமாரி, திருமண தரகர்கள் பழனி, லதா, ஜோதி, பெரியசாமி ஆகியோர் மீது ஞாயிறன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

மருத்துவமனை மின்தூக்கியில் சிக்கிய 9 பேர் மீட்பு

ஈரோடு, மே 11- ஈரோடு அரசு மருத்துவமனையிலுள்ள மின்தூக்கி யில் சிக்கிய 9 பேர் 15 நிமிடங்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். ஈரோடு அரசு மருத்துவமனை புதிய கட்டிடம் 7 தளங் களை கொண்டது. இதற்கு மின்தூக்கி வசதி உள்ளது. நோயாளிகள் மட்டுமின்றி நோயாளிகளை பார்க்க வரு பவர்கள், மருத்துவப்பணியாளர்கள் உள்ளிட்டோர் மின் தூக்கியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஞாயிறன்று மாலை 7 ஆவது தளத்திலிருந்து 9 பேர் மின் தூக்கி வழியாக கீழே இறங்க முற்பட்டனர். 6 ஆவது தளத்துக்கு வந்தபோது திடீரென மின்தூக்கி பழுதாகி நின்றது. மின்தூக்கியில் இருந்தவர்கள் முயற்சித்தும் சரி யாகவில்லை. 9 பேரும் சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து உள்ளே இருந்த சிலர் அவசர போலீஸ் உதவி 100 எண்ணுக்கும், ஈரோடு தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனர். மேலும், மின் தூக்கியில் சிக்கிக் கொண்டது குறித்து அரசு மருத்து வமனை எலெக்ட்ரீஷியன் தனுஷுக்கும் தகவல் அளிக் கப்பட்டது. உடனடியாக அவர் அங்கு வந்து பழுதை தற் காலிகமாக சரி செய்து, 15 நிமிடங்களாக தவித்த 9 பேரை பத்திரமாக மீட்டார்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

நாமக்கல், மே 11- ரெட்டிப்பட்டி பாரதி உயர்நிலைப்பள்ளி வெள்ளி விழாவில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், ரெட்டிப்பட்டியில் செயல்பட்டு வரும் பாரதி உயர்நிலைப்பள்ளி யின் 2001 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் சார்பில் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழா, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிறன்று பள்ளி வளாகத்தில் நடைபெற் றது. இதில் முன்னாள் மாணவர்கள் பலர் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு, பள்ளி நாட்களின் இனிய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்கள் மீண்டும் ஒன்றுகூடியதால் நிகழ்ச்சி மகிழ்ச்சியும் உணர்ச்சியும் கலந்த தாக அமைந்தது.

ஆவின் பால் அட்டை விநியோகத்தில் குளறுபடி; ஆட்சியரிடம் புகார்

கோவை, மே 11– கோவையில் ஆவின் பால் அட்டை விநியோகத்தில் நிலவும் புதிய நடை முறைகளால் வாடிக்கையாளர்கள் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகி வரு வதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், ராமநாதபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த மனோஜ் அருண் (64) என்பவர் மாவட்ட ஆட்சிய ருக்கு அனுப்பியுள்ள மனுவில், தான் நீண்டகாலமாக ஆவின் வாடிக்கையா ளராக இருந்து வருகிறேன். ஆனால், சமீ பகாலமாக ஆவின் நிர்வாகம் மேற் கொண்டு வரும் மாற்றங்கள் சிரமத்தை அளிக்கிறது. முன்பு ஆவின் கிளை அலு வலகங்களில் நேரடியாக பணம் செலுத்தி அட்டை பெற்று வந்த முறையை மாற்றி, தற்போது ஆன் லைன் மூலம் மட்டுமே பால் அட்டை வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட் டுள்ளது. இதனால் ஆண்ட்ராய்டு அலை பேசி வசதி இல்லாத எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த மூன்று மாதங்களாக ஆன்லைனில் பதிவு செய்யும் வாடிக்கையாளர்க ளுக்கு உரிய மாதாந்திர அட்டைகள் பூத் முகவர்கள் மூலமாகவோ அல்லது தலைமை அலுவலகத்திலோ வழங்கப் படுவதில்லை. அதற்கு பதிலாக வாடிக் கையாளர்களே தங்களது சொந்த முயற்சியில் அட்டைகளை உருவாக்கி பூத் ஏஜெண்டிடம் காண்பித்து பாலை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தப்ப டுகின்றனர். இந்த நடைமுறையால் பண விரயம் ஏற்படுவதுடன், முதியவர்கள் தேவையற்ற அலைக்கழிப்பிற்கு உள் ளாகின்றனர். இத்தகைய சிக்கல்களால் அதிருப்தியடைந்த பல வாடிக்கையா ளர்கள் தனியார் பால் நிறுவனங்களை தேடி செல்கின்றனர். இதனால் ஆவின் நிறுவனத்தின் விற்பனை பாதிக்கப்படு கிறது. எனவே, ஆவின் விற்பனைப் பிரி வினர் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, வாடிக்கையாளர்களுக்கு உரிய முறையில் பால் அட்டைகளை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியை திருமணம் செய்த சிறுவன் கைது

ஈரோடு, மே 11- பவானி அருகே சிறுமியை திருமணம் செய்த சிறுவனை காவல் துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியும், பவானி அருகே உள்ள அத்தாணி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும் உறவினர்கள் ஆவர். இதனால் 2 பேருக் கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்தனர். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் சிறுவனுடனான காத லுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், காதலை கைவிடு மாறு கூறி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மே 3 ஆம் தேதி சிறுவனும், சிறுமியும் வீட்டை விட்டு வெளியேறி அத் தாணி பகுதியிலுள்ள கோவிலில் திருமணம் செய்து கொண் டார். இதன்பின் சிறுமியை அவர் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்த னர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் சுமதி விசாரணை நடத்தி, சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்ததாக வழக்குப் பதிவு செய்து, சிறுவனை கைது செய்தார்.