தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

24 May 2026, 12:42 am
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு மாதர் சங்கம் அஞ்சலி

சேலம், மே 23– கோவை மாவட்டம், சூலூரில் பாலியல் வன்கொலைக்கு ஆளாகி 10 வயது சிறுமியின் உடல், அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டூர் - கொளத்தூர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பிலும் சிறுமியின் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தேவி, தாலுகா செயலாளர் சகுந்தலா, கமிட்டி உறுப்பினர்கள் முனியம்மாள், சாவித்திரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனர். பின்னர் சிறுமியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப் பட்டு, குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து உடல் எரி யூட்டப்பட்டது.

மாணவிக்கு தொல்லை: இருவர் கைது!

சேலம், மே 23- வீட்டில் குளித்து கொண்டிருந்த 16 வயது சிறுமியை எட்டிப்பார்த்த வாலிபரையும், அதைத் தட்டிக்கேட்ட சிறுமி யின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரது சித்தப்பாவையும் சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். இவர் தினமும் பள்ளிக்குச் சென்று வரும்போது, வேம்பனேரி பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (20) என்ற வாலிபர், சிறுமியை பின்தொடர்ந்து சென்று அடிக் கடி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந் நிலையில், கடந்த மே 19 ஆம் தேதி சிறுமி தனது வீட்டில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப் போது அங்கு வந்த தினேஷ்குமார், குளியலறை ஜன்னல் வழி யாக சிறுமியை அநாகரிகமான முறையில் எட்டிப்பார்த்துள் ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போடவே, தினேஷ்குமார் அங்கிருந்து தப்பியோடினார். நடந்த விப ரத்தை சிறுமி தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறி யுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர், தினேஷ்குமாரின் வீட்டிற்குச் சென்று அவரது செயலை கண்டித்துள்ளனர். அப்போது, தினேஷ்குமாருக்கு ஆதரவாக பேசிய அவரது சித்தப்பா சுந்தரராஜன் என்பவர், சிறுமியின் பெற்றோரை ஆபாசமாகத் திட்டியதுடன், கொலை மிரட்ட லும் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் கார்த்திகேயனி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து, வாலிபர் தினேஷ்குமார் மற்றும் அவரது சித்தப்பா சுந்தரராஜன் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டம், ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்த னர். தலைமறைவாக இருந்த இருவரையும் சனிக்கிழமை யன்று கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் நேர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யானை தாக்கி பழங்குடியினப்பெண் பலி

உதகை, மே 23- கூடலூரை அடுத்துள்ள புன்னம்புழா ஆற்றில் மீன் பிடிக்கச்சென்ற பழங்குடியின பெண், யானை தாக்கி உயிரி ழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள கீழ்நாடு காணி வனப்பகுதியில் உள்ள புன்னம்புழா ஆற்றில், கும்பிளி என்பவரது மனைவி மீனாட்சி (50), அவரது உறவினர் மணி ஆகியோர் மீன் பிடித்துவிட்டு வியாழனன்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ஆற்றங்கரையில் மறைந்திருந்த யானை தாக்கியதில் மீனாட்சி சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் மீனாட்சியின் உடலை மீட்டு உடற்கூறாய் வுக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். அதன்பின் மீனாட்சியின் உடல் உறவினர்களிடம் வெள்ளி யன்று ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தேவாலா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்

ஈரோடு, மே 23- ஈரோடு மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் விநியோகிக்கும் பணி துவங்கி யது. தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த புதனன்று வெளியானது. இதில் அரசுப்பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு அசல் மாற்றுச் சான்றிதழ் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வெள்ளியன்று முதல் வழங்க பள்ளிக்கல்வித்துறை அறிவு றுத்தியிருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு அசல் மாற்றுச் சான்றி தழ், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடங் கியது. மேலும், மேல்நிலைப்பள்ளிகளில் படித்த பெரும்பா லான மாணவ, மாணவிகள் அதேபள்ளியில் மேல்நிலை வகுப்பு தொடர விருப்பம் தெரிவித்தனர். இதனால் அதே பள்ளியிலேயே மேல்நிலை வகுப்பில் சேர்க்கை நடை பெற்றது.

நாளை மின்தடை

ஈரோடு, மே 23- ஈரோடு, சிப்காட் மற்றும் பெரியாண்டிபாளையம் ஆகிய துணை மின் நிலையங் களில் திங்களன்று (நாளை) மாதாந்திர பராமரிப்புப் பணி கள் நடைபெறவுள்ளது. இத னால் சிப்காட் வளாகம் தெற்கு பகுதி மட்டும், கம்பு ளியம்பட்டி, சரளை, வரப்பா ளையம், புளியம்பாளையம், காசிபில்லாம்பாளையம் மற்றும் மேலப்பாளையம், பி.கே.புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, மாடுகட்டி பாளையம், துளுக்கம்பா ளையம் உள்ளிட்ட பகுதிக ளில் திங்களன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

காலிபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்

ஈரோடு, மே 25- காலி மதுபாட்டில்களை கடை பணியாளர் களை வைத்து திரும்பப்பெறும் திட்டத்தை கைவிட வேண்டும் என தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார் பில் ஈரோடு மாவட்ட மேலாளருக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில், அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளில் காலி மதுபாட்டில் களை திரும்பப்பெறும் திட்டத்தில் அதிகப் படியான செலவினங்களாகிறது. அதிக பணிச் சுமையும், மன உளைச்சலும் ஏற்படுகிறது. மே 25 ஆம் தேதி (நாளை) முதல் காலி பாட் டில்களை கடை பணியாளர்கள் மூலம் திரும் பப்பெறும் திட்டத்தை கைவிட வேண்டும். மேலும், கடை பணியாளர்கள் காலி பாட்டில் களை திரும்பப் பெற மாட்டார்கள் என்றும் எல்பிஎப், சிஐடியு, ஏடிபி, பிடிஎஸ், எல்எல்எப், பிஎம்எஸ் மற்றும் டிஎன்டிஎஸ்டபிள்யுஏ உள் ளிட்ட சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிறுமியிடம் அத்துமீறல்: விஏஓ மீது வழக்குப்பதிவு

சேலம், மே 23- சாலையில் நடந்து சென்ற 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தாக கிராம நிர்வாக அலுவலரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம், எருமாபாளையம் தேசிய நெடுஞ் சாலை சர்வீஸ் சாலையில், 17 வயது சிறுமி தனது தாய்க்கு மாத்திரை வாங்கி விட்டு இரவு வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டி ருந்தார். அப்போது மது போதையில் வந்த ஒருவர் சிறுமியை உதைத்து கீழே தள்ளி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன் றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து சிறு மியை மீட்டதுடன், அந்த நபருக்கு தர்மஅடி கொடுத்து அம்மாபேட்டை மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், அவர் எரு மாபாளையம் பகுதியை சேர்ந்த பால கிருஷ்ணன் என்பதும், வாழப்பாடி அருகே பெரிய கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து பாலகிருஷ் ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பொதுமக்கள் தாக்கி யதில் காயமடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்ததும் அவரை கைது செய்து சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வரு கின்றனர்.

கால்நடைகளை பாதுகாக்க அறிவுரை

நாமக்கல், மே 23– கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை மற்றும் கோழி வளர்ப்போர் முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடை பிடிக்க வேண்டும் என கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அறிவு றுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, அடுத்த 5 நாட்களுக்கு மாவட்டத்தில் மேகமூட்டத்து டன் வானிலை நிலவும் என்றும், சில பகுதி களில் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. பகல் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும், இரவு வெப்ப நிலை 27 டிகிரி வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிக வெப்பம் காரணமாக கறவை மாடுகளில் பால் உற்பத்தி மற்றும் உடல் எடை குறையும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, மாடு களுக்கு போதிய பசுந்தீவனம், அடர்தீவ னம் மற்றும் நாளொன்றுக்கு 70 லிட்டருக்கு மேல் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். மேலும், வெப்ப அயற்சி காரணமாக கோழிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதி கரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோழிப் பண்ணைகளில் போதிய காற்றோட் டம், சுத்தமான குடிநீர் மற்றும் தடுப்பூசி நடவ டிக்கைகள் அவசியம் என கால்நடை மருத் துவத்துறை வலியுறுத்தியுள்ளது.

தொப்பூர்: விபத்தில் சிக்கிய லாரி

தருமபுரி, மே 23- பெங்களூருவிலிருந்து திருச்சிக்கு சென்று கொண்டி ருந்த லாரி, தொப்பூர் இரட்டைப்பாலத்தில் விபத்தில் சிக்கி, 100 அடி பள்ளத்தில் விழாமல் தப்பியது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து குளிர் பானம் ஏற்றிய லாரி ஒன்று, திருச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்துள்ள தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில், வெள்ளியன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடியது. திடீரென தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலை யில் உள்ள இரட்டை பாலத்தின் மீது மோதியது. அப்போது, பாலத்தின் தடுப்புச்சுவர் அரணாக தடுத்ததால் 100 அடி பள்ளத்தில் விழாமல் லாரி தப்பித்தது. லாரி ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். இவ்விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தொப்பூர் காவல் துறையினர் மற்றும் சுங்கச்சாவடி பணி யாளர்கள் விபத்துக்குள்ளான லாரியை மீட்டு போக்கு வரத்தை சீர் செய்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.