தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

9 Oct 2026, 1:44 am
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

பணமோசடி: போலீசில் புகார்

தருமபுரி, அக்.8-பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏலச்சீட்டு நடத்தி, ரூ.2 கோடிக்கு மேல் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தனர்.

அம்மனுவில், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பூதநத்தம் கிராமத்தை சேர்ந்தவர், கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம்200க்கும் மேற்பட்டோர் ஏலச்சீட்டு கட்டி வந்தனர். சீட்டு முடிந்தவுடன் பணம் திருப்பி கொடுத்து வந்தார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக முறையாக சீட்டு தொகையை வழங்காமல், காலம் தாழ்த்தி வந்தார். அவரிடம் பலமுறை கேட்டும் பணத்தை கொடுக்கவில்லை. தொடர்ந்து, பூதநத்தம் கிராமத்தில் இருந்து, அவரது மனைவி ஊரான கடலூர் மாவட்டம் புவனகிரிக்கு சென்றுவிட்டார். இதனிடையே, மக்களிடம் வசூலித்த பணத்தில் கடலூர் மாவட்டத்தில் வீடு, நிலம் மற்றும் கார் உள்ளிட்ட சொத்துகளை வாங்கியுள்ளார். பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள், ஏலச்சீட்டில் பணம் கட்டி ஏமாந்து போய் உள்ளோம். சுமார் ரூ.2 கோடிக்கும் மேல் பண மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து, புவனகிரியில் பைனான்ஸ் நிறுவனம் என பல்வேறு தொழில் செய்து கொண்டு, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருபவரிடம் பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் ஒத்திகை

கோவை, அக்.8–கோவை சர்வதேச விமான நிலையத்தில் அவசரகால பாதுகாப்பு தயார்நிலையை சோதிக்கும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் ஒத்திகை நிகழ்ச்சி வியாழனன்றுநடைபெற்றது.

விமான நிலையத்திற்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், பயணிகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துதல் மற்றும் வெடிகுண்டை கண்டறிந்து செயலிழக்கச் செய்தல் உள்ளிட்டவைகுறித்து இந்த ஒத்திகையின் போது செயல்விளக்கம் செய்து பார்க்கப்பட்டது.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் (CISF), உள்ளூர் காவல்துறையினர், வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் நிபுணர் குழு, மோப்ப நாய் பிரிவு, தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் இணைந்து இந்த ஒருங்கிணைந்த சோதனையில்ஈடுபட்டனர்.

மிரட்டல் தகவல் கிடைத்தவுடன் பாதுகாப்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு முனைய வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சோதனைகளை மேற்கொண்டனர்.

அவசர காலங்களில் பல்வேறு பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுக்களிடையே தகவல் தொடர்பை விரைவுபடுத்துவதற்கும், ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதை உடனடியாகக் கண்டறிந்து சரிசெய்வதற்கும் இந்த ஒத்திகை பெரிதும் உதவும் என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஒத்திகையின் போது பயணிகளின் வழக்கமான விமான போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ரோட்டோவேட்டர் வாங்க மானியம்

உடுமலை, அக்.8-உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் சார்பில் 60 பிளேடு கொண்ட ரோட்டோவேட்டர் வாங்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.இதன்படி, இன்சூரன்ஸ் மற்றும் முறையான லைசென்ஸ் பெற்ற 50 குதிரைத்திறன் (ஹெச்பி) கொண்ட டிராக்டர் வைத்துள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். சிறு, குறு விவசாயிகள் மற்றும் பெண்விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் வரையிலும், இதர விவசாயிகளுக்கு ரூ.48 ஆயிரம் வரையிலும் மானியம் வழங்கப்பட உள்ளது. வேளாண்மை விரிவாக்க அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

குடிநீர் பிரச்சனைபோராட்ட அறிவிப்பு

உடுமலை, அக்.8–திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம், தின்னப்பட்டி ஊராட்சி பகுதி முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும்மேலாக பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்

படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிபிஎம் நிர்வாகிகள் கூறுகையில், தாராபுரம் சட்டமன்றஇடைத்தேர்தல் நடைபெறுவதால் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள்அமலில்உள்ளதால், பணிகளை மேற்கொள்ள முடியவில்லை எனஅதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையிலும், தின்னப்பட்டி ஊராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு இல்லை. உரிய நடவடிக்கை இல்லையெனில், ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும், என்றனர்.

சேலம் திமுக மேயர் மீது தாக்குதல்?

சேலம், அக். 8-சேலம் மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரனை, அவரது அறையிலேயே திமுக கவுன்சிலர்கள் சட்டையைப் பிடித்து கீழே தள்ளி தாக்கிய சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூயஸ் குடிநீர் திட்டம் மற்றும் குப்பையிலிருந்து எரிவாயு தயாரிக்கும் திட்டத்திற்கு எதிராகவும் மேயர் தன்னிச்சையாக செயல்படுவதாகக்கூறி, திமுக கவுன்சிலர்கள் தமிழரசன், சாந்தமூர்த்தி ஆகியோர் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் ராமச்சந்திரன், “முன்னாள் அமைச்சரும், மத்திய மாவட்டச் செயலாளருமான ராஜேந்திரனின் தூண்டுதலாலேயே இத்தாக்குதல் நடந்துள்ளது. கட்சித் தலைமையின் கவனத்திற்கு சென்றே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகின்றன. தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்போவதில்லை” என்றார்.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

கோவை, அக்.8-ஆர்.எஸ்.புரத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மழைநீர்

சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தலைமை தாங்கிப்பேசினார். அப்போது அவர் பேசுகையில், ‘மழையைப் பிடிப்போம்’ (Catch the Rain) திட்டத்தின் கீழ் மழைநீரைவீணாக்காமல் சேமிப்பதன் முக்கியத்துவம் குறித்தும், நீர்நிலைகளை முறையாக பராமரித்து பாதுகாப்பதுகுறித்து விளக்கினார். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், வருங்கால தலைமுறையினரின் தேவையை கருத்தில் கொண்டும்பொதுமக்களும், அனைத்துத் துறையினரும் மழைநீர் சேகரிப்புப் பணிகளை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து, விரைவில் தொடங்கவுள்ள வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் கால்வாய்களை தூர்வாருதல், மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளை கண்காணித்தல், பேரிடர் மீட்புக் குழுக்களின் தயார்நிலை மற்றும் அவசரகால உதவிகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆட்சியர் உரிய ஆலோசனைகளையும் உத்தரவுகளையும் வழங்கினார்.இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் உயர் அதிகாரிகள், களப்பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ரயில்வேயில் பயணச்சீட்டு பரிசோதனை ரூ.14.38 கோடி அபராதம் வசூல்

சேலம், அக்.8–தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் நடத்தப்பட்ட தீவிர பயணச்சீட்டு பரிசோதனை மூலம் ரூ.14.38 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.ரயில் நிலையங்களுக்குள் நுழைவதற்கும், ரயில்களில் பயணிப்பதற்கும் முறையான பயணச்சீட்டு அவசியம் எனரயில்வே நிர்வாகம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், முறைகேடான பயணங்களை தடுக்கும் நோக்கில், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஒய்.சரவணகுமார் வழிகாட்டுதலின்படி, டிக்கெட் பரிசோதனைப் படையினர் ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் தொடர் சோதனைகளை மேற்கொண்டனர்.

நடப்பாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 30,064 சோதனைகள் நடத்தப்பட்டு, 1,70,322 முறைகேடு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் டிக்கெட் இன்றி பயணம் செய்த 81,461 நபர்களிடமிருந்து ரூ.8,54,53,459 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில்17.3 சதவீதம் அதிகமாகும். கடந்த 2025 ஏப்ரல் - செப்டம்பர் காலத்தில் டிக்கெட் இல்லாத பயணங்களுக்காக ரூ.7,28,41,216 வசூலிக்கப்பட்டிருந்தது.

அதேபோல், உரிய விதிகளுக்குப் புறம்பாக முறையற்ற வகையில் பயணம் மேற்கொண்ட 78,380 பயணிகளிடம் இருந்து ரூ.5,81,39,545 அபராதம் பெறப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 26.9 சதவீதம் கூடுதல் வளர்ச்சியாகும். பதிவு செய்யாமல் மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக லக்கேஜ் ஏற்றிச் சென்றது தொடர்பாக 481 வழக்குகள் பதியப்பட்டு, ரூ.2,20,866 அபராதம் வசூலிக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக ரூ.14,38,13,870 அபராதமாகவசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வசூலான ரூ.11,88,89,397 தொகையை விட இது 21 சதவீதம் அதிகமாகும்.மேலும், கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் நடத்தப்பட்ட சோதனைகளில் டிக்கெட் இல்லாத பயணம் மூலம் ரூ.1.41 கோடியும், முறையற்ற பயணம் மூலம் ரூ.1.17 கோடியும், பதிவு செய்யப்படாத லக்கேஜ் மூலம் ரூ.44 ஆயிரமும் என மொத்தம் ரூ.2.59 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஜி.மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.

பிரசவத்திற்கு வந்த பெண் உயிரிழப்பு தனியார் மருத்துவமனை முன்பு போராட்டம்

தருமபுரி, அக்.8-தருமபுரியில் பிரசவத்திற்கு வந்த பெண் உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள் தனியார் மருத்துமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே லிங்கநாயக்கனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கிய சவரிமுத்து. இவரது மனைவி விண்ணரசி (38). இத்தம்பதிக்கு ஏற்கெனவே 8 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், மீண்டும் கருவுற்ற விண்ணரசி பிரசவத்திற்காக தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதனன்று அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், விண்ணரசிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக தனியார் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையறிந்த அவரது உறவினர்கள், இதுகுறித்து விசாரணை நடத்தி தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வந்த தருமபுரி காவல் துணை கண்காணிப்பாளர் சிவராமன், காவல் ஆய்வாளர் அறிவழகன், வட்டாட்சியர் சுகுமார் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மோகனாம்பாள், தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டார்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு கல்லூரியில் சதுரங்கப் போட்டி

சேலம், அக்.8-எடப்பாடி அருகே கோணமோரி பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான 2 நாள் சதுரங்கப் போட்டி வியாழனன்ற தொடங்கியது.கல்லூரி உடற்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் தென்னரசு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பெரியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் வெங்கடாசலம் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி போட்டியை தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் பெரியார் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட 45-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று சதுரங்கம் விளையாடி வருகின்றனர். ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் முதல் 6 இடங்களை பெறும் வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுக்கோப்பையும், அதிக புள்ளிகளை பெறும் 3 கல்லூரிகளுக்கு சுழற்கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன.

மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது சதுரங்க திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். நிகழ்ச்சியில் விளையாட்டு ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் முனைவர் குணசேகரன், முனைவர் மோகன்குமார், முனைவர் வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.