தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

21 May 2026, 11:28 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

பார்கிங் வசதி ஏற்படுத்தித்தர சிபிஎம் கோரிக்கை பொள்ளாச்சி, மே 21- பொள்ளாச்சி ராஜா மில் ரோட்டில், வாகனம் நிறுத்துவதில் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிற நிலையில், இதனை தடுக்க சார் ஆட்சி யர் தலையிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி யினர் மனு அளித்தனர். சிபிஎம் பொள்ளாச்சி நகர கிளைச் செயலாளர் ஸ்டாலின் பழனிச்சாமி அளித்துள்ள மனுவில், பொள் ளாச்சி நகரத்தின் மிக முக்கியமான வர்த்தகப் பகுதி யாக விளங்கும் ராஜா மில் ரோடு சாலையில், 500-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சாலைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். இப் பகுதியில் சாலையோரங்களில் பொதுமக்கள் தங்க ளது இருசக்கர வாகனங்களை நிறுத்தும்போது, அங்குள்ள ஒரு சில செல்போன் சர்வீஸ் கடை உரிமை யாளர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்து வருகின்ற னர். வாகனங்களை நிறுத்த அனுமதி மறுப்பதுடன், அங்கு நிறுத்தப்படும் வாகனங்களை வலுக்கட்டாய மாக இழுத்து நடுரோட்டில் தள்ளிவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகளுக்கும் கடை உரிமையாளர்களுக்கும் இடையே தினசரி கடு மையான வாக்குவாதங்கள் ஏற்பட்டு, தேவையற்ற சட்டம்-ஒழுங்கு பிரச்சனை உருவாகும் சூழல் நிலவு கிறது. சார் ஆட்சியர் இந்த விவகாரத்தில் உடனடி யாக தலையிட வேண்டும். ராஜா மில் ரோடு பகுதி யில் பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை எவ்வித இடையூறுமின்றி முறையாக பார்க்கிங் செய்வதற்குரிய உரிய ஏற்பாடுகளைச் செய்து தந்து, அமைதியான சூழலை உருவாக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

கணவன், மனைவி தற்கொலை திருப்பூர், மே 21- பல்லடம் அருகே புத்தரச்சலில் காரில் இருந்த படியே, கணவன் - மனைவி இருவரும் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், சிங்காநல்லூர் உப்பிலி பாளையம் என்.ஜி.ஆர். காலனி, கே.பி.ஆறுமுகம் வீதியை சேர்ந்தவர் கணேசன் (62). இவரது மனைவி வசந்தாமணி (57). கோவையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் கண்காணிப்பாளராக கணேசன் பணியாற்றி வந்தார். இவர் நரம்பு பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலை யில், தாராபுரத்தில் உள்ள உறவினர் இல்லத்துக்கு சென்றுவிட்டு கோவை திரும்பும் வழியில் தாராபுரம் - பல்லடம் சாலையில் உள்ள புத்தரச்சல் கிராமத்தில் காரிலேயே இருவரும் சாணிபவுடர் குடித்து தற் கொலை செய்து கொண்டனர். நீண்ட நேரமாக ஒரே இடத்தில் கார் நிற்பதை பார்த்த அப்பகுதி மக்கள் பொங்கலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது சடலங்களையும் மீட்டு, உடற் கூறாய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொங்கலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

பாதை வசதி கேட்டு விவசாயி போராட்டம்

தருமபுரி, மே 21- பாப்பிரெட்டிப்பட்டி அருகே பாதை வசதி கேட்டு கண்களில் கருப்புத்துணி கட்டி, கிராம நிர்வாக அலுவலகம் முன்பு குடும்பத்துடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி அருகே தாளநத்தம் வருவாய் கிராமத்திற்குட்பட்ட கேத்துரெட்டிப் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவ ரது மகன் சின்னத்தம்பி (40). இவருக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு செல்ல முறையான வழிப் பாதை இல்லாததால், ஓடை புறம் போக்கு நிலம் வழியாக சென்று விவசா யம் செய்து வந்தார். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, யாரும் செல்ல முடியாதபடி வழியை அடைத்து விட்டதாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தை அளவீடு செய்து மீட்க வேண் டும். வழிப்பாதை ஏற்படுத்தித்தர வேண் டும் என சின்னத்தம்பி, மாவட்ட ஆட்சி யர், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வருவாய்த் துறை அலுவலகங்களுக்கு பலமுறை மனு அளித்தும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. இத னால் மிகுந்த மன உளைச்சலுக்குள் ளான சின்னத்தம்பி, வியாழனன்று காலை தனது குழந்தைகள், வயதான தந்தை மற்றும் உறவினர்களான செல் வம், கௌதம் ஆகியோருடன் தாள நத்தம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கண்களில் கருப்புத்துணி கட்டிக் கொண்டு தர்ணாவில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையி னர், காவல் துறையினர் போராட்டக் காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது, கோரிக்கை மீது உரிய விசாரணை நடத்தி, ஆக்கிரமிப்பை அகற்றி வழிப்பாதை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகா ரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

மார்க்கெட்டை சூழ்ந்துள்ள கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

உதகை, மே 22- உதகை மார்க்கெட்டை சுற்றி தேங்கி நிற்கும் கழிவுநீரால், நோய் பரவும் அபாயம் உள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை மார்க்கெட் சுமார் 150 வரு டங்களுக்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் கட்டமைக்கப் பட்டது. உதகை நகராட்சி சந்தை இந்தியாவின் முன்னோடி மாதிரி சந்தையாக கருதப்பட்டது. இங்கு 1500 நிரந்தர கடை களும் மற்றும் 500 தற்காலிக கடைகளும் உள்ளன. இந்த சந்தைக்கு தினமும் 3500 முதல் 4000 வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். மேலும், வாரயிறுதி நாட்களில் சுமார் 5000 வாடிக்கையாளர்கள் வருவார்கள். மளிகை, துணி காய் கறி, மீன் வகைகள் விற்பனைக்கு என தனித்தனியாக திட்ட மிடப்பட்டு ஆங்கிலேயர்களால் சிறப்பான கட்டமைப்புடன் உதகை மார்க்கெட் கட்டப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இங்கு 15 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டன. உதகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காய்கறிகளை அறு வடை செய்த பின்னர் சிறு, குறு விவசாயிகள் உதகை நக ராட்சி மார்க்கெட்டில் உள்ள மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். அங்கு மொத்த வியாபாரிகள் ஏலம் எடுத்து வெளியிடங்களுக்கு சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கின்றனர். நூற்றாண்டு பழமை வாய்ந்த நிலையில் இருந்ததால் மழைக்காலங்களில் மக்கள் வர முடியாத அள வுக்கு சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக மார்க்கெட்டை முழுவதும் இடித்துவிட்டு இரண்டு கட்டங்களாக புதிதாக கடைகள் கட்ட திட்டமிடப்பட்டது. இதன்படி புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் தரைதளத்தில் 126 கார்கள் மற்றும் 163 இருசக்கர வாகனம் நிறுத்தம் செய்யும் வகையிலும், மார்க்கெட் பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்த தினசரி மார்கெட் அங்காடி பணிகளுக்கான புதிய கட்டுமானப் பணிகள் இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டு 689 கடைகள் கட்டுவதற்காக பணிகள் நடைபெற்று வருகின்றன. பகுதி ஒன் றில் ரூ.20 கோடி மதிப்பில் 239 கடைகளும், பகுதி இரண்டில் ரூ.39.78 கோடி மதிப்பில் 450 கடைகள் என மொத்தம் 689 கடை கள் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.59.78 கோடி மதிப்பில் கட்டட திட்டமிடப்பட்டு டெண்டர் வெளியிடப் பட்டு தற்போது கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் பகுதி 1ல் நடைபெற்று வரும் கடைகள் பல்வேறு கார ணங்களால் தாமதமாகி வருகிறது. இந்நிலையில், மார்க்கெட்டை சுற்றி மணிக்கூண்டு பகுதி யில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது இதனால் அந்த வழியாக நடந்து கூட செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து அப் பகுதி மக்கள் கூறுகையில், உதகை நகரின் முக்கிய பகுதியில் நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. ஏற்கனவே கட்டு மானப் பணிகள் காரணமாக பொதுமக்கள் மார்க்கெட்-க்கு வர முடியவில்லை, தற்போது கழிவு நீர் பிரச்சனையும் சேர்ந்திருப் பதால் இங்கு வந்தால் சுகாதார சீர்கேட்டால் நோய் பரவும் அபாயம் உள்ளது, என்றனர்.

வாலிபருக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியம்?

உறவினர்கள் தர்ணா! சேலம், மே 21- சேலம் அருகே விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்ட வாலிபருக்கு சரிவரச் சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியதாக அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், ஓமலூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் சுபாஷ் (22), தனியார் நிறு வனக் கணினி ஆப்பரேட்டர். இவர் புதனன்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஓம லூர் மகளிர் காவல் நிலையம் அருகே கழிவு நீர் லாரி மோதி விபத்துக்குள்ளானார். இதில் கால் முறிவு ஏற்பட்ட சுபாஷை மீட்டு, சேலம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சரிவர சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் காலம் தாழ்த் தியதாக கூறப்படுகிறது. இதனால் வேதனை யடைந்த அவரது தாய் பரிமளா, மகனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்து நிர்வாகத்திடம் கூறியுள் ளார். ஆனால், அதற்கு மருத்துவமனை ஊழி யர்கள் முறையான பதிலளிக்காமல் அலட்சி யமாக செயல்பட்டுள்ளனர். மேலும், நோயா ளியை வெளியே அழைத்துச் செல்ல சக்கர நாற்காலி கேட்டபோதும் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள், வியாழ னன்று அவசரச் சிகிச்சை பிரிவு வளாகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், போராட் டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். வாலிபரை தனியார் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல சக்கர நாற்காலி மற்றும் உரிய ஏற்பாடுகளைச் செய்து தருவ தாக போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, வாலிபர் சுபாஷ் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ஒருவழிப்பாதையில் இயக்கப்படும் வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடி: விபத்துகள் அதிகரிப்பு

தருமபுரி, மே 21- தருமபுரி நகரில் விதிகளை மீறி ஒருவழிப்பாதையில் இயக் கப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடியும், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. தருமபுரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் விதிகளை மீறி ஒரு வழிப்பாதையிலேயே வாகனங்களை இயக்குகின்றனர். தருமபுரி நகர்பகுதியில் இந்த விதிமீறல் அதிகளவில் நடை பெற்று வருகின்றன. தற்போது, தமிழகத்தில் புதிய அரசு ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள நிலையில், காவல் துறையினர் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோலவே நகர் பகுதிகளில் வணிக நிறுவனங்கள், குடியிருப்புப் பகுதிக ளில் வீடுகளின் முன் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை (கார்களை) நிறுத்துகின்றனர். இத னால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது மட்டுமின்றி, வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் அவதிக் குள்ளாகி வருகின்றனர். கடும் போக்குவரத்து நெருக்கடி நெசவாளர் காலனியில் உள்ளதாக அப்பகுதியை சேர்ந்த குடி யிருப்பு நலச்சங்கத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

சட்டவிரோத கருக்கலைப்பு; 3 பெண்கள் கைது

சேலம், மே 21- சேலத்தில் கர்ப்பிணிக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்ட சம்பவத்தில், 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே 25 வயதான பெண் ஒருவர் ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் சேலத் தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாலினம் கண்ட றிந்து சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் நந்தினி விசாரணை மேற்கொண்டார். அதில் தலைவாசல் பகுதியை சேர்ந்த மூன்று பெண்கள் மூலம் கருக்கலைப்பு செய்யப்பட்டதாக தெரியவந்தது. இதைய டுத்து தலைவாசல் போலீசார் மதுபாலா, புவனேஸ்வரி, கவுரி ஆகிய மூவரையும் வியாழனன்று கைது செய்தனர்.

நிலப்பிரச்சனையில் அதிகாரிகள் அலட்சியம்; தீக்குளித்த மாற்றுத்திறனாளி விவசாயி உயிரிழப்பு

சேலம், மே 21- கிருஷ்ணகிரி மாவட்டம், மாதர்சனப் பள்ளி பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி விவசாயி வெங்கடேஷ், நில அளவீட்டு பிரச்சினையில் அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வெங்கடேசிற்கு சொந்தமான நிலத்தில் நீண்ட காலமாக அளவீட்டு பிரச்சினையிருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வரு வாய் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. நில அளவீடு ஏற்கனவே முடிக்கப் பட்டு, அண்டை நில உரிமையாளரின் பெய ரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படு கிறது. மேலும், வெங்கடேஷின் கையெழுத்து டன் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், எழுதப் படிக்க தெரியாத அவரிடம் போலி ஆவணங் கள் மூலம் மோசடி செய்யப்பட்டதாக குடும் பத்தினர் குற்றம்சாட்டினர். இதனால் மன முடைந்த வெங்கடேஷ் தீக்குளித்து தற் கொலைக்கு முயன்றார். பலத்த தீக்காயங்க ளுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயி ரிழந்தார்.இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.