ரம் விழுந்து சரக்கு வாகனம் விபத்து
7 May 2026, 1:57 am
<p><strong>மரம் விழுந்து சரக்கு வாகனம் விபத்து</strong></p><p>கோவை, மே 6– ஆர்.எஸ்.புரம் அருகே சரக்கு வாகனத்தின் மீது மரம் விழுந்து விபத்தில், ஒருவர் பலத்த காயமடைந்தார். கோவை, ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் புத னன்று பலத்த காற்று மற்றும் மழை காரணமாக சாலை யோரம் இருந்த மரம் ஒன்று திடீரென அங்கே சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது வேரோடு சாய்ந்து விழுந்தது. இந்த விபத்தில் வாகனத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில், அதனுள் பயணித்த நபர் இடி பாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.எஸ். புரம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையி னர், மரத்தை அப்புறப்படுத்தி இடிபாடுகளில் சிக்கிய வரை மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட் டது.</p>
