முந்தய பக்கம்

விளையாட்டு மைதானம் தனியார் வசமா

17 Jun 2026, 12:26 am
விளையாட்டு மைதானம் தனியார் வசமா
<p><strong>விளையாட்டு மைதானம் தனியார் வசமா</strong></p><p>கோவை, ஜூன் 16- ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி விளையாட்டு அரங்கத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட்டு, மாநகராட்சியே அதனை இலவசமாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செவ்வாயன்று மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா-வை நேரில் சந்திந்து மனு அளித்தனர். இதுகுறித்து அம்மனுவில், கோவை ஆர். எஸ்.புரத்தில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான செயற்கை புல்வெளி (Turf) விளையாட்டு அரங்கத்தை ஏலம் மூலம் தனி யார் வசம் ஒப்படைக்க ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றன. இதன் மூலம் விளை யாட்டு வீரர்களிடம் ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 1000 முதல் 2000 வரை கட்டணம் வசூ லிக்கும் நிலை ஏற்படும். இந்த வணிகமய மாக்கல் நடவடிக்கையை உடனடியாகக் கைவிட்டு, ஏழை, எளிய மாணவர்களும் பயன் பெறும் வகையில் மாநகராட்சியே இந்த மைதானத்தை இலவசமாக பராமரித்து நடத்த வேண்டும், இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வாலிபர் சங்க எஸ்.எஸ். குளம் மேற்கு ஒன்றியக் குழு சார்பில் அளிக் கப்பட்ட மற்றொரு மனுவில், கோவை மாநக ராட்சி 13 ஆவது வார்டுக்குட்பட்ட உடையாம் பாளையம் திருமலை நகர் உள்விளை யாட்டு அரங்கின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். போதிய பராமரிப் பின்றி இருக்கும் அந்த அரங்கத்தை உடனடி யாக சீரமைத்து, மீண்டும் இளைஞர்களின் செயல்பாட்டிற்கு கொண்டு வர தேவை யான துரித நடவடிக்கைகளை மாநகராட்சி நிர் வாகம் மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை மனுக்களை அளிக்கும் நிகழ்வில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா, மாவட்ட துணைத் தலைவர் முத்துமுருகன், குருசாரதி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் மனோஜ், சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram