கோவை அருகே லாரி - கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
11 May 2026, 9:29 pm

கோவை அருகே லாரி - கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

கோவை, மே 11- கோவை மாவட்டம் நெகமம் அருகே பொள்ளாச்சி - பல்லடம் பிரதான சாலையில் திங்களன்று மதியம் நிகழ்ந்த கோர விபத்தில், சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதிவேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியதே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிகிறது.

சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழப்பு சேலம் மாவட்டம் காடையாம்பட்டி யைச் சேர்ந்த தனபால் (37), தனது மனைவி மேனகா (35), மகள் கனிஷ்கா (17), மகன் சுர்ஜித் (12) மற்றும் உறவினர் சினேகா (23) ஆகியோருடன் குரூஸர் காரில் பொள்ளாச்சியிலிருந்து பல்லடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

கார் பொள்ளாச்சி - பல்லடம் சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் அருகே வந்தபோது, எதிரே பல்லடத்திலிருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக காரின் மீது பலமாக மோதியது.

இந்த பயங்கர விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கி யது.

இதில் காரில் பயணம் செய்த தனபால், மேனகா மற்றும் சினேகா ஆகிய மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாய மடைந்த கனிஷ்கா மற்றும் சிறுவன் சுர்ஜித் ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், கனிஷ்கா மருத்துவ மனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

ஓட்டுநரின் அஜாக்கிரதையால் நேர்ந்த துயரம் விபத்து குறித்துத் தகவலறிந்த பொள்ளாச்சி டிஎஸ்பி மற்றும் நெகமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் சரவணன் (39) என்பவர் லாரியை அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்து, கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த காரின் மீது மோதியது தெரியவந்தது.

லாரி ஓட்டுநரைப் பிடித்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

படுகாயமடைந்த சிறுவன் சுர்ஜித்க்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

உயிரிழந்த நான்கு பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கோடை விடு முறைக்காகப் பயணம் மேற்கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.