தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

29 Sept 2026, 1:01 am
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

பொய் வழக்கு - சிபிஎம், திமுக நிர்வாகிகள் விடுதலை

கோவை, செப்.28-நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திமுக நிர்வாகிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, திமுக கூட்டணி சார்பில் உரிய அனுமதி பெற்று தடாகம் பகுதியில்பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது, 100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களின் ஊதிய பாக்கியை வழங்கவேண்டும். வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பிரச்சாரத்தின்போது அப்பகுதி மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டு, அவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அப்போது அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறி சிபிஎம் மற்றும் திமுகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கில், கடந்த 15-09-2026 அன்று நீதிமன்றம் அனைவரையும் முழுமையாக விடுதலை செய்து வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது. விசாரணையின்போது சாட்சிகள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வழக்கில் சிபிஎம் முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.கேசவமணி, ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.பழனிசாமி, எஸ்.ராஜன், எம்.ரங்கராஜ், திமுக மாவட்ட துணை அமைப்பாளர், மாவட்ட இளைஞரணி கோவை வடக்கு நிர்வாகி வே.சூரியன்தம்பி, ஆர்.விஜயகுமார், சி.எம்.முருகேசன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.வழக்கில் சிறப்பாக வாதாடி நீதி பெற்றுத் தந்த அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க கோவை மாவட்டத் தலைவர்என். ராமர் மற்றும் திமுக வழக்கறிஞர் கே. விக்னேஷ் ஆகியோருக்கு வழக்கில் தொடர்புடையவர்கள் நன்றி தெரிவித்தனர்.

நீலகிரி – புதிய தொழில் முனைவோருக்கு மானியம்!

உதகை, செப். 28-நீலகிரி மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் நடப்பு 2026-27 நிதியாண்டில் 59 புதிய தொழில் முனைவோருக்கு மொத்தம் ரூ.1.69 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை சுயதொழில் தொடங்கும் ஆற்றல்மிக்க தொழில் முனைவோர்களாக உயர்த்தும் நோக்கில், தமிழக அரசு பயிற்சிகளுடன் மானியக் கடனுதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி, நடப்பு நிதியாண்டில் நீலகிரி மாவட்டத்தில்: புதிய தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், 3 பேருக்கு ரூ.8.1 லட்சமும், வேலையில்லா இளைஞர்களுக்கான திட்டத்தில், 9 பேருக்கு ரூ.5.93 லட்சம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில், 41 பேருக்கு ரூ.150.79 லட்சம், மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் 6 பேருக்கு ரூ.4.62 லட்சம் என 4 சுயவேலைவாய்ப்புத் திட்டங்களின் கீழ் 59 பயனாளிகளுக்கு ரூ.1.69 கோடி மானியத் தொகை அளிக்கப்பட் டுள்ளது எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுத்தப்பட்ட நகரப் பேருந்து மீண்டும் இயக்க சிபிஎம் மனு

ஈரோடு, செப். 28-சிவகிரி குலவிளக்கு பகுதியில் நிறுத்தப்பட்ட நகரப் பேருந்தினை மீண்டும் இயக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்களன்று ஆட்சியரிடம் மனு அளித்தனர்.மொடக்குறிச்சி வட்டம், குலவிளக்கு ஊராட்சியில் கூட்டு எல்லைகாட்டில் சுமார் 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வழித்தடம் எண் 30 ஏ என்ற நகரப் பேருந்தினால் அப்பகுதியினர் போக்குவரத்து வசதி பெற்று வந்தனர். கடந்த கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு உத்தரவு தளர்த்தப்பட்டது. அப்போது நிறுத்தப்பட்ட பேருந்து ஊரடங்குதளர்வுக்கு பிறகு இயக்கப்படவில்லை. அதனால் அப்பகுதியினர் பள்ளி, கல்லூரிக்கு செல்வது, வேலைக்கும்,மருத்துவமனைகள் உள்ளிட்ட பிற தேவைகளுக்காக செல்பவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே நிறுத்தப்பட்ட பேருந்தினை மீண்டும் இயக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மின்னப்பாளையம் கிளைச் செயலாளர் லோகநாதன் தலைமையில் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

பணியின் போது பனியன் தொழிலாளி உயிரிழப்பு

திருப்பூர், செப். 28 -திருப்பூர் ஜூபிடர் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த மூர்த்தி (வயது 57) என்ற அயரன் பிரிவு தொழிலாளி, திங்களன்று பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சிஐடியு பனியன் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.சம்பத் அங்கு சென்று தொழிலாளர்களிடம் விபரம் கேட்டறிந்தார். அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மரணமடைந்த மூர்த்தி திருமுருகன் பூண்டி அருகே பள்ளிபாளையத்தை சேர்ந்தவர். அவருக்கு மனைவி மற்றும் ஓரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

தொழிலாளி மூர்த்தி பணி செய்த காலத்திற்கு உரிய பணிக் கொடை, ஈ.எஸ்.ஐ., வருங்கால வைப்பு நிதி (பிஎப்) மூலம் கிடைக்க வேண்டிய குடும்ப ஓய்வூதியம், பி.எப். தொகையை அவரதுகுடும்பத்திற்கு பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக ஜி.சம்பத் தெரிவித்தார்.

காவிரி கூட்டுக் குடிநீர்: முறையாக விநியோகிக்க சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூர், செப்.28 -காங்கேயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கேயம் தாலுகா குழு கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஜெயபால், கே.ரங்கராஜ், தாலுகா குழு செயலாளர்

கணேசன் உள்ளிட்ட தாலுகா குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில், காங்கயம் ஒன்றியத்தில் 15 ஊராட்சிகளில் உள்ள 359 கிராமங்களுக்கும், வெள்ளக்கோவில் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கும் காவிரி கூட்டுக் குடிநீர் முறையாக விநியோகம் செய்வதற்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, காங்கேயம் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கொடுமுடியில் இருந்து காங்கேயம் குண்டடம் நோக்கி வருகிறது. ஒரு நிமிடத்திற்கு 16 ஆயிரம் லிட்டர் குடிநீர் முத்தூர் குடிநீர் வடிகால் வாரிய நீரேற்று நிலையத்தில் வீணாகி செல்கிறது. அதை வடிகால்வாரியம் உடனடியாக சரி செய்ய வேண்டும். குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும். முத்தூர்மேட்டுக்கடை குடிநீர் ஏறறு நிலையத்தை பராமரிப்பு செய்து, கட்டிடங்களை பழுது பார்க்க வேண்டும் எனமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

3 ஆடுகளை தாக்கிய சிறுத்தை

கோவை, செப்.28-கோவை மாவட்டம் மாவுத்தம்பதி ஊராட்சிக்குட்பட்ட ஆலமரம் ரோடு ரம்யா கார்டன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஞாயிறன்று வழக்கம் போல வீட்டின் வெளியே ஆடுகளை கட்டி வைத்திருந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை ஒன்று மூன்று ஆடுகளை கடித்து தாக்கியுள்ளது. அதில் ஒரு ஆட்டை வனப்பகுதிக்குள் தூக்கி சென்றுள்ளது. இது குறித்து மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த வனத்துறை ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இரண்டு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

கூடலூரில் தொடர் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

உதகை, செப். 28-கூடலுாரில் நிலவிய வறட்சியான காலநிலையால், நெல் விவசாயம் பாதிக்கும் சூழல் ஏற்பட்ட நிலையில், இரு நாட்களாக தொடரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியில் ஜூன் மாதம் தொடங்கும் பருவமழை, நவம்பர் மாதம் வரை தொடருவது வழக்கம்.

இந்த காலகட்டத்தில் நெல் விவசாயம் நடக்கிறது. நடப்பு ஆண்டு, ’எல் நினோ’ பாதிப்பு காரணமாக, எதிர்பார்த்த அளவில் பருவமழை பெய்யவில்லை. முக்கிய நீர் ஆதாரமான பாண்டியார் - புன்னம்புழா, மாயார் மற்றும் அதன்கிளை ஆறுகள் உட்பட்ட நீர்நிலைகளில் நீர் வரத்து குறைந்து, பல பகுதிகளில் நெல் விவசாயத்தை கைவிட்டனர். எனினும், குணில், புத்லுார்வயல் உட்பட்ட சில பகுதிகளில், மழையை நம்பி நெல் விவசாயம் நடந்தது. கடந்த சில வாரங்களாக, வெயிலின் தாக்கம் அதிகரித்தது. வறட்சியான காலநிலை ஏற்பட்டது. வயல்களின் வெடிப்பும் ஏற்பட்டது. நெற்பயிர்கள்பாதித்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்துவருவதால், வெப்பம் தணிந்து நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. திங்களன்றும் மழை தொடர்ந்ததால் நெல் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். விவசாயிகள் கூறும் போது, ‘கூடலுாரில் பருவமழையை நம்பி நெல் விவசாயம் செய்து வருகிறோம். நடப்பு ஆண்டு, பருவமழை ஏமாற்றியதால், நெற்பயிர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்யும் மழை நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. மழை தொடர்ந்தால் மகிழ்ச்சி அடைவோம்’ என்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.