தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

29 Oct 2026, 11:57 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சுமைப்பணி தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க சிஐடியு கோரிக்கை

திருப்பூர், அக்.29–அங்கேரிபாளையம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் பணியாற்றும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டிற்கான போனஸ் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் சுமைப்பணிதொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம், அங்கேரிபாளையம் கிடங்கிற்கு வரும் உணவுப் பொருட்களை இறக்கி ஏற்றும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுவதில்லை. அரசு அறிவித்த நுகர்பொருள் வாணிபக்கழக கருணைத்தொகை கூட அவர்களுக்கு வழங்குவதில்லை. அத்தியாவசிய பணியாற்றும் இவர்களுக்கு நடப்பு ஆண்டுக்கான போனஸ் தொகையை தீபாவளி பண்டிகைக்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கோவை, அக்.29-கோவையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.திமுக முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வியாழனன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்ற அனுமதியுடன், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாக கூறப்படும் ரூ.634 கோடி மதிப்பிலான பணி நியமன மற்றும் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறும் நிலையில், கோவையிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக, திருச்சி சாலையில் உள்ள டிவிஎச் அடுக்குமாடி குடியிருப்பு வீடு மற்றும் ஜி.வி.ரெசிடென்சியில் இயங்கி வரும் அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இந்த இரண்டு இடங்களும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருக்கு சொந்தமானவை ஆகும்.

தில்லிக்கு சிறப்பு ரயில் இயக்கம்

சேலம், அக்.29–பண்டிகைக்கால கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக திருவனந்தபுரம் - தில்லி நிஜாமுதீன் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டநிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் (எண்: 06073) வரும் நவ.2, 9, 16 ஆகிய திங்கட்கிழமைகளில் மதியம் 2:00 மணிக்கு புறப்பட்டு, புதனன்று இரவு 11:50 மணிக்கு ஹஸ்ரத் நிஜாமுதீனை சென்றடையும். மறுமார்க்கத்தில், ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் (எண்: 06074) வரும் நவ.5, 12, 19 ஆகிய வியாழக்கிழமைகளில் காலை 5:45 மணிக்கு புறப்பட்டு, சனியன்று மாலை 4:30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையம் வந்தடையும். இந்த ரயில்களில் மூன்றாம் வகுப்பு ஏசி மற்றும் எகானமி ஏசி பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில்கள் தமிழ்நாட்டில் போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடமாடும் மண் பரிசோதனை முகாம்!

உடுமலை, அக்.29-திருப்பூர் மாவட்டம், பல்லடம் மண் பரிசோதனை நிலையத்தின் சார்பில், வெள்ளியன்று (இன்று) காலை 10.30 மணியளவில் உடுமலைப்பேட்டை தாலுகா, உடுக்கம்பாளையத்தில் நடமாடும் மண் பரிசோதனை வாகனம் மூலம் மண் மற்றும் நீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

உடுக்கம்பாளையம் விநாயகர் கோவில் அருகில் நடைபெறும் இம்முகாமில், உடுக்கம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களின் மண் மாதிரிகள் மற்றும் பாசன நீர் மாதிரிகளை கொண்டு வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம். மண் மாதிரி ஒன்றைப் பரிசோதனை செய்ய ரூ.30ம், நீர் மாதிரி ஒன்றைப் பரிசோதனை செய்ய ரூ.30ம் கட்டணமாக வசூலிக்கப்படும். இம்முகாம், விவசாயிகள் தங்களது மண் மற்றும் நீரின் தன்மையை அறிந்து, பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உரிய வேளாண் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்

கொள்ள உதவியாக இருக்கும். எனவே, உடுக்கம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாய பெருமக்கள் அனைவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது மண் மற்றும் நீர் மாதிரிகளை வழங்கி பரிசோதனை முடிவுகளை விரைவாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு

சேலம், அக்.29-சேலம் மாநகரம் செவ்வாய்ப்பேட்டை அர்த்தநாரி தெருவை சேர்ந்த அம்சவள்ளி (70), செவ்வாயன்று இரவு உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் அருகே ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர், அவரதுகழுத்தில் இருந்த 3 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார். வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியில் நடைபெற்ற இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வைரலாகி, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் பயணியிடம் திருட்டு: ஒருவர் கைது

தருமபுரி, அக்.29-ரயில் பயணியிடம் கைப்பேசி, பணம் திருடிய கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இளைஞரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், ஒண்டிப்புதூர், காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகஜோதி (39). இவர் கடந்த அக்.24 ஆம் தேதி கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள உறவினர் இல்ல நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, அக்.25 ஆம் தேதியன்று இரவு கோவைக்கு மும்பை – கோவை விரைவு ரயிலில் பயணம் செய்தார். இரவு உறங்கிய அவர் அதிகாலை எழுந்து பார்த்தபோது, அவரது கைப்பேசி, 20 கிராம் வெள்ளி சங்கிலி, ரூ.1,200 ரொக்கம் ஆகியவை திருடுபோயின. இதுதொடர்பாக, அவர் தருமபுரி ரயில்வே காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தருமபுரி ரயில் நிலையத்தில் ரோந்து மேற்கொண்டபோது, முதலாவது நடைமேடையில் நின்றிருந்த இளைஞரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அதில், அவர் கர்நாடகா மாநிலம், நெலமங்களா அருகேயுள்ள தேவரஹொச அள்ளி பகுதியை சேர்ந்த வந்தன்குமார் (25) என்பதும், நாகஜோதியிடம் கைப்பேசி, நகை, பணம் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து திருடப்பட்ட பொருட்களை அவரிடம் இருந்துபறிமுதல் செய்த போலீசார், அவரை தருமபுரி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

நிலப் பிரச்சினையில் விரக்தி!முதியவர் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல், அக்.29-நிலப் பிரச்சினை தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் செவ்வாயன்று தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து உடலில் தண்ணீர் ஊற்றி முதலுதவி அளித்தனர்.

இதுகுறித்து விசாரிக்கையில், நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே அரசநத்தத்தைச் சேர்ந்த 88 வயது விவசாயி மொட்டைய கவுண்டர், இவருக்குச் சொந்தமான 9 சென்ட் நிலத்தில் நடப்பட்டிருந்த தடுப்பு கற்களைச் சிலர் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், நிலத்தை அபகரிக்க முயற்சி நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக மோகனூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்எண்ணெயை உடலில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. முன்னதாக, முதியவரை மீட்ட போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல்

ஈரோடு, அக்.29-பணம் கேட்டு தறிப்பட்டறை தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.ஈரோடு மாநகரம், வீரப்பன்சத்திரம் பெரியவலசு, சுப்பிரமணியசிவா வீதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் மனோஜ் (21). தறிப்பட்டறை தொழிலாளியான இவர், கடந்த அக்.26 ஆம் தேதி இரவு நண்பர் ராஜூவுடன் தேநீர் கடைக்கு செல்ல நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இருவர் மனோஜிடம் மது அருந்த பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் இல்லை எனக்கூறியதால் ஆத்திரமடைந்த இருவரும், தகாத வாா்த்தைகளால் பேசியதுடன், மனோஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து மனோஜ் அளித்த புகாரின்பேரில், ஈரோடு வடக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், மனோஜை தாக்கியது ஈரோடு, வீரப்பன்சத்திரம், பெரிய சேமூர், எஸ்ஜிவலசு பகுதியை சேர்ந்த அரவிந்த் (22) மற்றும் அசோகபுரம், நேரு வீதியை சேர்ந்த சந்திரபிரகாஷ் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிந்து இருவரையும் புதனன்று போலீசார் கைது செய்தனர்.

தேயிலை தோட்டத்தில் சிறுத்தை உலா

உதகை, அக்.29-குன்னூர் அருகே குடியிருப்புப் பகுதியை ஒட்டிய தேயிலை தோட்டத்தில் உலாவிய சிறுத்தையால், பொதுமக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளில் வன விலங்குகள் சுற்றி வருவது வாடிக்கையாகிவிட்டது. குடியிருப்புப் பகுதிக்குள் வன விலங்குகள் புகுந்து வீட்டில் வளா்க்கப்படும் செல்லப் பிராணிகளான பூனை, நாய்களை வேட்டையாடிச் செல்வதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள பந்துமை குடியிருப்புப் பகுதிக்குள் செவ்வாயன்று பகல் நேரத்தில் வளா்ப்புப் பிராணிகளை வேட்டையாட சிறுத்தை உலா வந்த, கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த சிறுத்தையை பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டுமென வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘தி இந்து’ குழுமத்தின் சட்டவிரோதமாக பணிநீக்கம் பாதிக்கப்பட்ட பணியாளருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

கோவை, அக்.29–‘தி இந்து’ குழுமத்தில் பணியாற்றிய பத்திரிகையாளரை சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்த வழக்கில், பாதிக்கப்பட்ட ஊழியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க கோவை தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் மூத்த உதவி ஆசிரியராக ச.மணிகண்டன் என்பவர் பணியாற்றி வந்தார். சுமார் 13 ஆண்டுகள் பணியாற்றிய அவரை, கடந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி நிர்வாகம் திடீரென பணியிலிருந்து நீக்கியது.

பணிக்கு வர வேண்டாம் என்பதை வெறும் 5 நாட்களுக்கு முன்புதான் (மார்ச் 5) அவரிடம் நிர்வாகம் தெரிவித்தது. முறையான முன்னறிவிப்பு இன்றி மேற்கொள்ளப்பட்ட இந்த பணிநீக்கத்தை எதிர்த்து, தொழில் தகராறு சட்டம் பிரிவு 2(A)-ன் கீழ் கோவை மண்டல தொழிலாளர் நல அலுவலகத்தில் மணிகண்டன் முறையீடு செய்தார். இரு தரப்பையும் விசாரித்த தொழிலாளர் நல அலுவலகம், இந்த பணிநீக்கம் சட்ட விதிகளின்படி அமையவில்லை என தெரிவித்தது. எனினும் நிறுவன நிர்வாகம் இதற்கு உடன்பட மறுத்ததால், உரிய இழப்பீடு கோரி கோவை தொழிலாளர் நீதிமன்றத்தில் மணிகண்டன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த கோவை தொழிலாளர் நீதிமன்றம்புதனன்று

அதிரடி தீர்ப்பளித்தது. அதில், மணிகண்டன் பணிநீக்கம் செய்யப்பட்டது. முற்றிலும் சட்டவிரோதமானது என உறுதி செய்ததுடன், கடந்த 10 மாதங்களாக வேலையின்றி அவர் சந்தித்த பொருளாதார இன்னல்களுக்கு இழப்பீடாக ரூ.6 லட்சத்தை மூன்று மாதங்களுக்குள் நிர்வாகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க தவறினால், 7 சதவீத வட்டியுடன் சேர்த்து அந்தத் தொகையை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பத்திரிகையாளருக்கு ஆதரவாக ‘மாற்றத்துக்கான ஊடகவியலாளர் அமைப்பு’ சட்டரீதியான வழிகாட்டுதல்களை வழங்கி துணை நின்றது. தொழிலாளர் நலனுக்கு ஆதரவாக வெளியாகியுள்ள இத்தீர்ப்பு சக பத்திரிகையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.