தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

3 Oct 2026, 1:27 am
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

விபத்து: கடும் போக்குவரத்து நெரிசல்

நாமக்கல், அக்.2-நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே டயர் வெடித்து தேசிய நெடுஞ்சாலையில், 32 டன் இரும்பு கம்பங்கள் ஏற்றிவந்த லாரி ஒன்று குறுக்கே நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் பகுதியில் இருந்து கரூர் பகுதிக்கு 32 டன் இரும்புக் கம்பங்களை ஏற்றிக்கொண்டு டாரஸ்லாரி, ராசிபுரம் அருகே சேலம்–நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டகலூர் கேட் பகுதியில் சென்றபோது, திடீரென முன்புற டயர் வெடித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டைஇழந்த லாரி, சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்புகம்பங்களை உடைத்துக் கொண்டு, தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே சாய்ந்த நிலையில் நின்றது. இந்த விபத்தில்நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.ஆனால், தேசிய நெடுஞ்சாலையில் லாரி குறுக்கே நின்றதால்ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் போலீசார், நெடுஞ்சாலைத்துறைரோந்து காவல் பணியாளர்கள் லாரியை அப்புறப்படுத்திபோக்குவரத்தை சீரமைத்தனர்.

பூட்டிக்கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் கழிவறை

உடுமலை, அக்.2– கணியூர் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட கழிவறைதிறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால், பயணிகள் கடும் சிரமத்திற்குள் ளாகி வருகின்றனர்.பேருந்துகள் நிற்குமிடத்தில் இருந்து இக்கழிவறை தொலைவில் உள்ளதால், அங்கு சென்று வருவதே மாற்றுத்திறனாளிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், அது திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டிருப்பதுஅதன் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. அரசு சார்பில் செய்யப்படும் அடிப்படை வசதிகள் முறையாக பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது உள்ளாட்சி நிர்வாகத்தின் கடமையாகும். ஆனால், இதுபூட்டிக்கிடப்பதுமாற்றுத்திறனாளிகளிடையே அதிருப்தியையும், அவதியையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, கணியூர் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இக்கழிவறையை திறந்து, மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில்முறையான வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வழக்கு ரத்து: சிஐடியு வரவேற்பு!

மேட்டுப்பாளையம், அக்.2– மேட்டுப்பாளையம் மக்களின் அடிப்படை குடிநீர் தேவை மற்றும் விளாமரத்தூர் குடிநீர் திட்டத்திற்காக கடந்த 2020ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் குடிநீர் பாதுகாப்புக்குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது.அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் பாட்ஷா உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றநீதிபதி ஜி.கே.இளந்திரையன், 22 பேர் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதனை சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கம் வரவேற்றுள்ளது.

குண்டும், குழியுமான சாலைகள்வாலிபர் சங்கம் எச்சரிக்கை!

உடுமலை, அக்.2– மடத்துக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட பழனியம்மாள் லேஅவுட்டில் தார்ச் சாலைகள் முழுவதும் சிதிலமடைந்து,ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் பயணிக்கவும் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.பல மாதங்களாக சீரமைக்கப்படாத இச்சாலையை சரி செய்ய பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, சேதமடைந்துள்ள இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மடத்துக்குளம் தாலுகா குழு வலியுறுத்தியுள்ளது. காலம் தாழ்த்தினால், பழுதான சாலையில் மரம் நடும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேனீக்கள் கொட்டியதில் குழந்தைகள் காயம்

உதகை, அக்.2-நீலகிரி மாவட்டம், குன்னூரில் சிம்ஸ் பூங்கா உள்ளது. இப்பூங்காவில் நூற்றாண்டு பழமையானமரங்கள் உள்ளன. மரங்களில் அதிகளவில் தேனீக்கள் கூடு கட்டியுள்ளன. இந்நிலையில், தொடர் விடுமுறை காரணமாக, வெள்ளியன்று குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. அப்போது, திடீரெனதேன் கூடு கலைந்து தேனீக்கள் சுற்றுலாப் பயணிகளை கொட்டியதால், அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தேனீக்கள் கொட்டியதில் குழந்தைகள்உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தால் பூங்காவில் பரபரப்பு ஏற்பட்டது.

பிஏபி கால்வாய்கள் தூர்வார நிதி ஒதுக்கீடு!

கோவை, அக்.2– பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத் திட்டத்திற்குட்பட்ட (பிஏபி) கால்வாய்களை தூர்வாரக்கோரி, தமிழ்நாடுதென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்தசெப்டம்பர் 25 அன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதன் விளைவாக, தூர்வாரும் பணிகளுக்காக ரூ.14 கோடியே 97 லட்சத்து 74 ஆயிரம் நிதிஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 229 பணிகள் வாயிலாக 1,801.27 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய்கள் தூர்வாரப்படவுள்ளன. இதில் திருமூர்த்தி கோட்டத்தில் 718.30 கி.மீ (91 பணிகள்), ஆழியாறு வடிநில கோட்டத்தில் 828.70 கி.மீ (107 பணிகள்) மற்றும் பரம்பிக்குளம் கோட்டத்தில் 254.27 கி.மீ (31 பணிகள்) நீளமுள்ள கால்வாய்கள் சீரமைக்கப்பட உள்ளன.இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, வரவிருக்கும்2 மற்றும் 3-ஆம் மண்டல பாசனங்களில் கடைமடைபகுதி வரை தண்ணீர் தடையின்றி சென்றடையும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் உரிய விதிகளின்படியும், தாராபுரம் இடைத்தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டும் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான அரசாணையை நீர்வளத்துறை செயலாளர் பிரசாந்த் வெளியிட்டுள்ளார். நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்குதமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

தேயிலை தோட்டத்தில் யானைகள் உலா

உதகை, அக்.2-கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு, சுண்டட்டி கிராமத்திலுள்ள தேயிலை தோட்டத்தில் உலா வந்த யானைகளால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.சமவெளிப்பகுதிகளில் நிலவும் கடும் வெயில் மற்றும் உணவு தட்டுப்பாடு காரணமாக, நீலகிரியைநோக்கி யானைகள் வலசை செய்து வருகின்றன. குறிப்பாக, குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில்சமீப நாட்களாக யானைகள், தேயிலை தோட்டங்களில் உலா வருகின்றன. பலாப்பழங்களை தேடி யானைகள் கிராமப் பகுதிகளில் முகாமிடுவதால் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில், கொடநாடு அருகே உள்ள சுண்டட்டி கிராமத்தில் பகல் நேரத்தில் தேயிலை தோட்டத்தில் இரண்டு யானைகள் உலா வந்தன. இதனால் தேயிலை பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். நீண்ட நேரமாக குடியிருப்புகள் அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் சுற்றி திரிந்த யானைகளால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அச்சமடைந்தனர். எனவே, உடனடியாக வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரிய வகை கனிமங்களை எடுக்க எதிர்ப்பு

திருப்பூர், அக்.2-தாராபுரம் வட்டாரத்தில் பிளாட்டினம் ஆய்வை மேற்கொண்டு அரியவகை கனிமங்களை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ் நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சண்முகம், தமிழக விவசாயிகள் பாதுகாப்புசங்க சட்ட விழிப்புணர்வு அணி மாநிலச் செயலர் சதீஷ்குமார் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்தபிரதிநிதிகள், கனிம வளம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்.டி.ஓ.விடம் மனு அளித்தனர்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் இதுகுறித்து கூறுகையில், தாராபுரம், உப்பாறு அணைப் பகுதியை உள்ளடக்கிய, 35 ஆயிரத்து 842 ஏக்கர் பரப்பளவில், பிளாட்டினம் தொகுதி கனிமங்களை வெட்டி எடுத்து, சுத்திகரிப்பதற்கான ஆய்வுகளை ஒன்றிய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. பிளாட்டினம் கனிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டு, 20 ஆண்டுகளாகவே, இந்திய புவியியல் ஆய்வு மையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கடந்த, 3 ஆண்டுகளாக ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.கடந்த, 2024 நவ., மாதம் சமர்ப்பிக்கப்பட்ட புவியியல் துறை அறிக்கையின்படி, 37 இடங்களில், ஆய்வுகள் நடத்தப்பட்டதில், 15 இடங்களில் பிளாட்டினம் தொகுதி கனிமங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உப்பாறு அணையில் தொடங்கி தாளக்கரை, அமராவதி ஆறு வரையிலான, 50க்கும் மேற்பட்ட ஊர்களை உள்ளடக்கி, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தகைய கனிம எடுப்பு திட்டங்களுக்கு பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படாது;தமிழக அரசின் அனுமதியும் தேவையில்லை என,ஒன்றிய அரசு தெரிவித்து விட்டது. இதனால், தாராபுரம் சுற்றியுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நிலம், நீர்நிலைகள் மற்றும் இயற்கை வளங்கள் பாதிக்கப்படும், என்றார்.

அடிப்படை வசதிகள் கேட்டு மனு

நாமக்கல், அக்.2-அடிப்படை வசதிகள் கோரி, வெள்ளியன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மனுஅளித்தனர்.நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், எலந்த குட்டை ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற ஈக்காட்டூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற அலுவலரிடம் அளித்த மனுவில்,ஈக்காட்டூர் செல்வ கணபதி திருக்கோவில் எதிர்புறம் ஆழ்துளை அடிபைப் பழுது நீக்கப்பட்டு, குடிநீர் வழங்க வேண்டும். போயர் காலனியில் பழுதடைந்துள்ள இரண்டு ஆழ்துளை குழாய்களை சரிசெய்ய வேண்டும். பழுதடைந்த தார் சாலைகளை சரி செய்து கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

போக்குவரத்து நெரிசல்

கோவை, அக்.2-கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்த நிலையில், ஆழியார்வனத்துறை சோதனைச் சாவடியில் ஏராளமான வாகனங்கள் நெரிசலில் சிக்கியது.108 அவசர ஊர்திகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆழியார் சோதனைச் சாவடி முதல் ஆழியார் மின்சார வாரிய குடியிருப்பு வரையில் இந்த நெரிசல் ஏற்பட்டது. இ-பாஸ் நடைமுறை பெயரளவிற்கே இருப்பதால் கூட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

தருமபுரி, அக்.2-ஏரியூர் அருகே அனுமதியின்றி காட்டுப்பன்றிகளுக்காக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே கூர்க்காம்பட்டி பகுதியில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக வியாழனன்று ஏரியூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற போலீசார் இளைஞரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின்நடைபெற்ற விசாரணையில், உயிரிழந்தவர் கூர்க்காம்பட்டி பகுதியை சேர்ந்த வெள்ளையன் என்பவரின் மகன் ஸ்ரீதர் (24) என்பதும், கடந்த செப்.29 ஆம் தேதி காணாமல் போன நிலையில், வீட்டின் அருகே உள்ள நிலக்கடலை தோட்டத்தில் காட்டுப்பன்றிகளுக்காக அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததும் தெரியவந்தது. இதுகுறித்துபோலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மின்வேலிஅமைத்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கொப்பரையை கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

உடுமலை, அக்.2-தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், தேங்காய் எண்ணெய் மீதான வரியை ஒன்றியஅரசுஉடனடியாக குறைக்கவேண்டும் என தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தென்னை சாகுபடியில் ஈடுபட்டு வரும்விவசாயிகள், அதிகரித்து வரும் உற்பத்தி செலவு, போதிய மழையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேங்காய் மற்றும் கொப்பரைக்கு உரிய விலை கிடைக்காததால் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் மீதான வரி அதிகமாகஇருப்பதால்,இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்களுடன் போட்டியிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் உள்நாட்டுதேங்காய் மற்றும் கொப்பரைக்கு உரிய விலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, தேங்காய்எண்ணெய் மீதான வரியை ஒன்றிய அரசுஉடனடியாக குறைக்க வேண்டும். அதேபோல், கொப்பரைக்கு உரிய ஆதாரவிலையை அறிவித்து, அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என தென்னை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சாலையில் தேங்கும் மழைநீர்: வாகன ஓட்டிகள் அவதி

தருமபுரி, அக்.2-தருமபுரி மாவட்டத்தில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தருமபுரி நகராட்சி, அன்னசாரகத்தில் இருந்து எர்ரங்காட்டு கொட்டாய், எட்டிமரத்துப்பட்டி, ரெட்டியூர் வழியாக வத்தல்மலைக்கு செல்லும் சாலை வழியாக 50க்கும் மேற்பட்டகிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள், ஆட்டோக்கள், விவசாய டிராக்டர்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன. கடந்த சில மாதங்களாக நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக, சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இந்த பள்ளங்களில் சமீபத்தில் பெய்த கனமழைக்கு, தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. பள்ளத்தை தண்ணீர் முழுமையாக மூடிய நிலையில் உள்ளதால், வாகன போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் சாலை உள்ளது. புதிதாக இந்த சாலையில் வருபவர்கள் தண்ணீர் தேங்கிய பள்ளத்தில் சிக்கி, காயமடைந்து வருகின்றனர். எனவே, பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.