கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
25 Jun 2026, 1:12 am

புதிய கட்டிடம் 6 மாதங்களிலேயே பழுதடைந்த அவலம்

அவிநாசி, ஜூன் 24- திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலக கட்டிடம், திறக்கப்பட்ட 6 மாதங்களிலேயே பழுதடைந்து காணப்படுவதால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் ரூ.350 லட்சம் மதிப்பீட்டில் புதி தாக நகராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட் டது. இந்நிலையில், திறக்கப்பட்டு 6 மாதங் களே ஆன நிலையில், பல்வேறு குறைபாடு கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. கட்டி டத்தின் சுவர்களில் பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகின்றன. மக்களின் வரிப்பணத் தில் கட்டப்பட்ட இந்த கட்டிடம், திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே சேதமடைந்து வரு வது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, தரமற்ற கட்டுமானப் பணிகளுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ.5433.64 கோடி கடன் வழங்க இலக்கு

உதகை, ஜூன் 24- நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயி களுக்கு, ரூ.5433.64 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையிலுள்ள ஆட்சியர் அலுவல கத்தில், முன்னோடி வங்கியின் சார்பில் வங்கியாளர்கள் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட் சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்து, 2026 – 27 ஆம் ஆண்டிற்குரிய கடன் திட்ட அறிக்கையை வெளியிட் டார். இதன்பின் அவர் பேசுகையில், நீலகிரி மாவட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.5433.64 கோடி கடன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வங்கிகள் மூலம் பொது மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கப்படு கிறது. அதேபோல் மகளிர் குழுக்களுக்கு பல்வேறு கடன் களும், வணிக ரீதியான கடன்களும் வழங்கப்படுகின்றன. இதற்காக நடப்பாண்டில் (2026-27) நீலகிரி மாவட்டத்திற்கு மாவட்ட முன்னாடி வங்கி மூலம் ரூ.5433.64 கோடி கடன் திட்ட இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் விவசா யம் சார்ந்த தொழில்கள் துவங்க ரூ.4580.57 கோடியும், குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மேம்பாட்டுக்கு ரூ.558.67 கோடியும், பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.294.40 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கினை அடையும் வகையில் வங்கியாளர்கள் பணியாற்ற வேண்டும், என் றார்.

உழவர் வயல் விழா

கோபி, ஜூன் 24- ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் அருகே உள்ள காலேஜ் பிரிவு பகு தியில் வேளாண்மைதுறை சார்பில், உழவர் வயல் விழா செவ்வாயன்று நடைபெற் றது. பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தின் பூச்சியில் மற்றும் நோயி யல் தடுப்புத்துறை பேராசி ரியர்கள் சத்தியசீலன், மரு தாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டு, குறுவை நெல் சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் மேற்கொள் வது குறித்து விளக்கமளித் தனர்.

புதிய கட்டிடம் 6 மாதங்களிலேயே பழுதடைந்த அவலம்

அவிநாசி, ஜூன் 24- திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலக கட்டிடம், திறக்கப்பட்ட 6 மாதங்களிலேயே பழுதடைந்து காணப்படுவதால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியில் ரூ.350 லட்சம் மதிப்பீட்டில் புதி தாக நகராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட் டது. இந்நிலையில், திறக்கப்பட்டு 6 மாதங் களே ஆன நிலையில், பல்வேறு குறைபாடு கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. கட்டி டத்தின் சுவர்களில் பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகின்றன. மக்களின் வரிப்பணத் தில் கட்டப்பட்ட இந்த கட்டிடம், திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே சேதமடைந்து வரு வது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, தரமற்ற கட்டுமானப் பணிகளுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்து ஏற்படுத்தும் வகையிலுள்ள கடையை அகற்ற வலியுறுத்தல்

தருமபுரி, ஜூன் 24- தேசிய நெடுஞ்சாலையோரத்தில் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள ஆக்கிரமிப்பு கடையை அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தருமபுரி - கிருஷ்ணகிரி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்:44, தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்கள், கேரளம் மாநில பகுதிகளிலிருந்து பெங்க ளூரு உள்ளிட்ட நகரங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லும் பயணி கள் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்துக்கு முக்கியமான நெடுஞ்சாலையாகும். இச்சாலையில் அதிகப்படியாக வாக னங்கள் செல்வதால், போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நெடுஞ்சாலையோரம் உள்ள சிறு நகரங்களில் புறவழிச்சாலை அமைக்கப்பட் டுள்ளது. இதில் உள்ள சர்வீஸ் சாலைகளில் உள்ளூர் போக்கு வரத்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு தேசிய நெடுஞ்சா லையில், 122/5 கி.மீ என்ற இடத்தில் சர்வீஸ் சாலையில் வலது புறம் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து, அருகிலுள்ள நிலத் தின் உரிமையாளர் கடைகள் கட்டி, வாடகைக்கு விட்டுள் ளார். இத்தகைய ஆக்கிரமிப்பு காரணமாகவும், இருசக்கர வாக னங்கள் கடை முன்பு நிறுத்தப்படுவதாலும் ஏற்படும் வாகன நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும், இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டி கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டக் குழு உறுப்பினரும், பெரியாம்பட்டி முன்னாள் ஒன்றிய கவுன் சிலருமான வி.உதயகுமார் தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்தின் சேலம் மண்டல திட்ட இயக்குநருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.