தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

13 May 2026, 1:46 am
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

தேநீர் கடைக்கு ரூ.6,000 அபராதம்

அவிநாசி, மே 12- அவிநாசி அருகே தரமற்ற உணவுப் பொருள் விற்பனை செய்த தேநீர் கடைக்கு, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கள் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த னர். அவிநாசி ஒன்றியம், கருமாபாளையம் ஊராட்சிக்குட் பட்ட ஒரு தனியார் பள்ளி அருகே தேநீர் கடை ஒன்று செயல் பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு, இந்தத் தேநீர் கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் ’தேங்காய் பன்’ வாங்கிச் சாப்பிட்டுள்ளார். அப்போது அந்தப் பன்னிற் குள் இருந்த தேங்காய் ஓடு தட்டுப்பட்டதில், எதிர்பாராதவித மாக வாடிக்கையாளரின் பல் உடைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வாடிக்கையாளர், இது குறித்து உணவு பாதுகாப்புத் துறையினருக்கு உடனடி யாகப் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாயன்று, சம் பந்தப்பட்ட தேநீர் கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட னர். இந்த ஆய்வின்போது, கடையில் பாதுகாப்பற்ற முறை யில் உணவுப் பொருட்களை விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தரமற்ற உணவு விற்பனைக் காக 1,000 ரூபாயும், கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை வைத்திருந்ததற்காக 5,000 ரூபாயும் என மொத் தம் 6,000 ரூபாய் அபராதத்தை அதிகாரிகள் விதித்தனர். மேலும், இனிவரும் காலங்களில் தரமான மற்றும் பாது காப்பான உணவுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண் டும் என கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் கடும் எச்ச ரிக்கை விடுத்தனர்.

வீட்டை அபகரித்து கொலை மிரட்டல் சேலம் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்

சேலம், மே 12- தமது வீட்டை ஆக்கிரமித்துக்கொண்டு தம்பி கொலை மிரட்டல் விடுப்பதாக ஓய்வுபெற்ற எஸ்.ஐ. மாவட்ட எஸ்பி-யி டம் புகார் அளித்துள்ளார். தாரமங்கலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பார்த்திபன், செவ்வாயன்று எஸ்பி கௌதம் கோயலிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது: தனக்குச் சொந்தமான புதிய வீட்டில், தம்பி சிவசங்கரன் 2015-ல் வாடகைக்குக் குடியேறினார். ஆனால், இதுவரை வாடகை தராமலும், வீட்டை காலி செய்யாமலும் அவர் அச்சுறுத்தி வருகிறார். தம்பி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, அதிமுகவில் இருக்கும் நான் உங்களுக்கு வீடு இல்லாமல் செய்து விடுவேன் என, அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுப்பதோடு, மின் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளையும் தடுத்து வருகின்றனர். பல ஆண்டுகளாகப் போராடியும் பலனில்லை எனப் பார்த்திபன் கண்ணீர் மல்கத் தெரிவித்தார். இதுகுறித்து உரிய நடவ டிக்கை எடுத்து வீட்டை மீட்டுத் தருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அடிப்படை வசதிகளை மேம்படுத்த சிபிஎம் மனு

கோவை, மே 12- கோவை மாநகராட்சி 19, 20, 22 மற்றும் 25 ஆகிய வார்டுகளில் நிலவும் அடிப்படைப் பிரச்சனைகளை தீர்க்கக் கோரி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்செவ்வாயன்று மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், கணபதி மாநகர் பகுதிக ளில் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் சாலைகளில் தேங்கிக் கிடப்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தினமும் காலை 8 மணிக்குள் குப்பைகளை சேகரிக்க வேண்டும். 20-வது வார்டு வெற்றி விநாயகர் தெருவில் பாதாள சாக்கடைப் பணி களுக்காகத் தோண்டப்பட்ட சாலைகள் குண் டும் குழியுமாக உள்ளதால், அங்கு விபத்து களை தவிர்க்க உடனடியாக தரமான தார் சாலைகள் அமைக்கப்பட வேண்டும். 19-வது வார்டு ஜி.கே. புரம் பகுதியில் சாக்கடையில் இருந்து எடுக்கப்பட்ட கழிவுகள் அப்புறப்ப டுத்தப்படாமல் வீடுகளின் வாசலிலேயே கிடக்கின்றன. மேலும், சட்டமன்ற உறுப்பினர் நிதியில் 20-வது வார்டில் நடைபெறும் பூங்கா சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்நிகழ்வில் சிஐடியு ஊரக வளர்ச்சி உள் ளாட்சி துறை சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ரத்தினகுமார், சிபிஎம் கோவை வடக்கு நகரக் குழு உறுப்பினர் எம்.ஏழுமலை, கிளைச் செயலாளர் எம்.கணேசன், சமூக நல சங்கச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காட்டுயானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

உதகை, மே 12- நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே காட்டுயானை தாக்கியதில் கோயில் பூசாரி பரிதாபமாக உயிரி ழந்தார். மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்ப வம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மசினகுடி கல் குவாரி பின்புறம் உள்ள சித்தப்பா ஜி கோயில் பூசா ரியாகப் பணியாற்றி வந்தவர் ராஜப் பன் (40). இவர் செவ்வாயன்று வழக் கம் போல கோயிலில் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண் டிருந்தார். அப்போது, அங்கு புதர் மறைவில் நின்றிருந்த காட்டுயானை ஒன்று திடீரென ராஜப்பனை துரத் தித் தாக்கியது. இதில் பலத்த காயம டைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த வனத்துறையி னர், ராஜப்பனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் சமீபகால மாக மனித - வனவிலங்கு மோதல் என்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த மே 8-ஆம் தேதி அய்யங் கொல்லி பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், தற் போது மசினகுடியில் இந்த அசம்பா விதம் நிகழ்ந்துள்ளது. வனப்பகு தியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் காட்டுயானைகள் உணவு மற்றும் தண்ணீருக்காக அடிக்கடி ஊடுருவு வதால், விளைநிலங்கள் சேதமடைவ துடன் மனித உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. நான்கு நாட்களில் இரு வர் உயிரிழந்துள்ளதால், மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ள னர். வனத்துறையினர் இப்பகுதிக ளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், ஊருக்குள் யானைகள் நுழைவதை தடுக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரோஜா பூங்கா கண்காட்சி மே 14 ஆம் தேதி

துவக்கம் உதகை, மே 12- நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை முன்னிட்டு உதகை ரோஜா பூங்காவில் 14 ஆம் தேதி முதல் 18 வரை கண்காட்சி நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நீலகிரியில் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் கோடை சீசன் ஆகும். அப்பொழுது வரும் சுற்றுலாப் பயணிகளின் பொழுது போக்கிற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தேர்தல் இருந்ததால் காய்கறி கண் காட்சி, வாசனை திரவிய கண்காட்சி ஆகிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப் பட்டிருந்தது. இந்நிலையில் உதகையில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் கோடை விழாவில் முதல் நிகழ்ச்சியாக ரோஜா கண்காட்சி 14 ஆம் தேதி துவங்குகிறது. இந்த கண் காட்சி ஆனது 18 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடை பெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இருதரப்பினர் மோதல் - மூன்று பேர் காயம்

திருப்பூர், மே 12 - திருப்பூர் மாநகராட்சி இந்திரா நகர் பகுதியில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், உள்ளூரைச் சேர்ந்த திமுகவினர் உள்ளிட்ட வாலிபர்கள் மோதிக் கொண்டனர். இருதரப்பு மோதலில் திமுக பிரமுகர் படுகாயம் அடைந்தார். புலம் பெயர்ந்த தொழிலாளர் தரப்பில் இருவர் காயம் அடைந்த னர். திருப்பூர் மாநகராட்சி 1ஆவது வார்டு செட்டிபாளை யத்தை அடுத்த இந்திரா நகர் பகுதியில் திங்களன்று மாலை வட மாநிலத் தொழிலாளர்கள் சிலர் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதைப் போல சத்தமாக பேசிக் கொண்டனர். இதைப் பார்த்த தி.மு.க. 15 வேலம்பாளையம் பகுதி நெசவாளர் அணி அமைப்பாளர் ஜெகதீஷ், 1ஆவது வார்டு செயற்குழு உறுப்பி னர் ராமமூர்த்தி ஆகியோர் அவர்களை அமைதியாக செல்லு மாறு கண்டித்துள்ளனர். அப்போது அந்த தொழிலாளர்க ளுக்கும், தி.மு.க. நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள் ளது. இதில் ஆத்திரமடைந்த ஜெகதீஷ், ராமமூர்த்தி ஆகி யோர் அந்த தொழிலாளர்கள் இருவரை தள்ளி விட்டதாகத் தெரிகிறது. சிறிது நேரம் கழித்து அந்த தொழிலாளர்கள் தங்கள் கூட்டா ளிகளிடம் தகவல் தெரிவித்து கூட்டமாக சேர்ந்து திரும்பி வந்து ஜெகதீஷ், ராமமூர்த்தி இருவரையும் மரக்கட்டை யால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதைக் கண்ட அப்பகுதி யைச் சேர்ந்த ஒரு பகுதியினர் தாக்குதல் நடத்தியவர்களை தடுக்கச் சென்றனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. மேலும் ஒருவரை ஒருவர் சாலையில் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த 15 வேலம்பாளையம் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்ட தும் இருப்பு தரப்பினரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். இந்நிலை யில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கியதில் ஜெக தீசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடத்தியவர்கள் தரப்பிலும் இருவருக்கு காயம் ஏற் பட்டதாகத் தெரிகிறது. புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர் களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டு காவ லர்கள் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் செவ்வாயன்று இந்திரா நகர் பகுதி மக்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தாக்குதல் நடத்தி யவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மக்களுக்குப் பாது காப்பு வழங்கவும் கோரி மனுக் கொடுத்தனர்.

பஞ்சு இறக்குமதி வரியை நீக்கிடுக - சைமா

திருப்பூர், மே 12 - தற்போது நிலவி வரும் அபரிமித மான நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடைத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், அதற்கு பஞ்சு இறக்குமதி வரி 11 சதவிகித்தை உடனடியாக நீக்கவும் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சைமா தலைவர் பி. சண்முகசுந்தரம் விடுத்துள்ள அறிக்கை யில், அபரிமிதமான நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடைத் தொழில் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன் றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஞ்சு மீதான 11 சதவிகித இறக்குமதி வரியை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசுக்கு சைமா கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வரி நீக்கம் மூலப்பொருள் தட்டுப்பாட் டைப் போக்கி தொழிலைப் பாதுகாக்க உதவி செய்யும் என்றும் சைமா செயற் குழுவில் வலியுறுத்தப்பட்டதாக தெரி வித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.