கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
4 Oct 2026, 2:10 am

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

சேலம், அக்.3–கோவை, அக். 3– கோயம்புத்தூர் ரயில் நிலையயார்டு பகுதியில் அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் குறிப்பிட்ட ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ரத்து மற்றும் பகுதி ரத்து: ஷோரனூர் – கோவை பயணிகள் ரயில் (எண்: 56604) போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்பட்டு, போத்தனூர் - கோவை இடையே ரத்து செய்யப்படும். மேட்டுப்பாளையம் – போத்தனூர் மெமு ரயில் (எண்: 66615)கோவை வரை மட்டுமே இயங்கும். கோவை – ஜபல்பூர் சிறப்பு ரயில் (எண்: 02197) அக்டோபர் 5 அன்று போத்தனூரில் இருந்து மாலை 3.30 மணிக்கும்,கோவை – ஷோரனூர் பயணிகள் ரயில் (எண்: 56603) அக்டோபர் 5, 6-ல் போத்தனூரில் இருந்து மாலை4.38 மணிக்கும் புறப்படும். போத்தனூர் – மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66616) கோவையில் இருந்து மாலை 3.45 மணிக்குப் புறப்படும். அக்டோபர் 5 அன்று புறப்படும் பிலாஸ்பூர் – எர்ணாகுளம் விரைவு ரயில் (எண்: 22815), அக்டோபர் 6-ல் கோவை செல்லாமல் இருகூர் – போத்தனூர் வழியாக திருப்பிவிடப்பட்டு, போத்தனூரில் (பிற்பகல் 3.42) நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்கக்கோரி மறியல்

ஈரோடு, அக்.3-கோபி அருகே நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்கக்கோரி பள்ளி குழந்தைகளுடன் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நஞ்சை கோபி பகுதிக்குட்பட்ட எல்ல

மடை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் தினசரி வேலைக்கு செல்லவும், வெளியூர் செல்லவும்பேருந்து வசதி இன்றி, பல ஆண்டுகளாக புதுக்கரைப்புதூர் மற்றும் பொலவக்காளிபாளையம் என 4 கிலோ மீட்டர் நடந்து சென்றும், இருசக்கர வாகனத்திலும் சென்று வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோபி பேருந்து நிலையத்தில் இருந்து பொலவக்காளிபாளையம் வழியாக எல்லமடைபுதுக்கரைப்புதூர் கிராமத்துக்கு இயக்கப்பட்டபேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என எல்லமடை கிராம மக்கள் பலமுறை கோரிக்கை மனு அளித்து வந்தனர். எல்லமடை கிராமத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பொலவக்காளிபாளையம்அரசுப்பள்ளியில் படிக்கின்றனர். தினமும் புத்தக பையுடன் சுமார் 4 கிலோ மீட்டர் நடந்துசென்று வருவதால், வாரத்தில் இரண்டு நாட்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.தற்போது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெள்ளியன்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், பள்ளி குழந்தைகள் நலன் கருதி நிறுத்தப்பட்ட பேருந்துசேவையை மீண்டும் இயக்க வேண்டும் என எல்லமடை கிராம மக்கள் மனு அளித்தனர். ஆனால் இதுவரைஎல்லமடை பகுதிக்கு பேருந்து வசதி வேண்டி எந்த மனுவும் வழங்கப்படவில்லை என அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த மக்கள் ஈரோடு - சத்தி இடையே பொலவக்காளிபாளையம் நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், போக்குவரத்துக்கழக அதிகரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேருந்து வசதி ஏற்படுத்தும் வரை மறியலை கைவிடமாட்டோம் என பொதுமக்கள் கூறினர். இதையடுத்து, மூன்று நாட்களில் எல்லமடை வழியாக பேருந்து வசதி ஏற்படுத்தி தருவதாக அதிகாரிகள் உறுதியளித்த பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர்.

மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு: ஒருவர் கைது

தருமபுரி, அக்.3-ஏரியூர் அருகே மின்வேலியில் சிக்கி இளைஞர்உயிரிழந்த சம்பவத்தில் ஒருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே கூர்க்காம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (24). இவர் வியாழனன்று அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து ஏரியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கூர்க்காம்பட்டியில் நள்ளிரவில்இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த ஸ்ரீதரை, அதேபகுதியை சேர்ந்த பவுன்ராஜ் என்பவர் துரத்தியுள்ளார். இதனால் அங்கிருந்து ஓடிய ஸ்ரீதர் அப்பகுதியில் இருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்து தெரியவந்தது. இதையடுத்து, பவுன்ராஜை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அனுமதியின்றி அப்பகுதியில் மின்வேலி அமைத்த ரவியை போலீசார் தேடி வருகின்றனர்.

உறவினர்கள் மறியல்

இந்நிலையில், இளைஞரின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், தொடர்புடைய நபர்களைவிசாரிக்காமல் வேறு நபர்களை விசாரிப்பதாகவும், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்

டும் என வலியுறுத்தி ஏரியூர் காவல் நிலையம் முன்பு இளைஞரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல், காவல் ஆய்வாளர்சுரேஷ், வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மதுராந்தகம் தவெக வேட்பாளர் மீது புகார்!

கோவை, அக்.3– மதுராந்தகம் சட்டமன்றத் (தனி) தொகுதிஇடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேல், தனது வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில் உண்மை தகவல்களை மறைத்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் கோவையை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் டி.பிரபு புகார் அளித்துள்ளார். மதுராந்தகம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அவர் அனுப்பியுள்ளமனு

வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் எம்.எல்.ஏபதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள மரகதம், வரும் அக். 6 இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். ஆனால், அவர் தாக்கல் செய்த படிவம் 26 பிரமாணப் பத்திரத்தில் அப்பட்டமான முரண்பாடுகள் உள்ளன.

கடந்த தேர்தலில் வயது 44 என குறிப்பிட்டுவிட்டு, இப்போது 43 என குறைத்து காட்டியுள்ளார். மேலும், தம்பதியரின் வருமான வரி விவரங்களில் பல லட்ச ரூபாய் முரண்பாடு உள்ளது. கணவருக்கு கரூர் வைஸ்யா வங்கியில் இருந்த ரூ.19லட்சம்கடன் விவரத்தை மறைத்தது, 2025–26 நிதியாண்டு வருமானத்தை சுட்டிக்காட்டாதது உட்பட 11 வகையான விதிமீறல்கள் ஆதாரங்களுடன் பட்டியலிடப்பட்டுள்ளன.

எனவே, தேர்தல் அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, தகவல்களை மறைத்ததற்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 125A-இன் கீழ் வேட்பாளர் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.