கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
10 May 2026, 12:29 am

பிளஸ் 2 பொதுத்தேர்வு 97.03% தேர்ச்சியுடன் திருப்பூர்

திருப்பூர், மே 9- நடப்பு கல்வி ஆண்டிற்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தொழிலாளர் நகரமான திருப்பூர் மாவட்டம் 97.03 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் 11-வது இடத்தை பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 218 பள்ளிகளைச் சேர்ந்த 14,478 மாணவிகளும், 11,930 மாணவர்க ளும் தேர்வு எழுதினர். இதில் 14,081 மாணவிகளும் (98%), 11,307 மாணவர்களும் (95.85%) தேர்ச்சி பெற்றுள்ளனர். வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமாக இருப்பதால், இங்குள்ள அரசுப் பள்ளிகளில் மாண வர் எண்ணிக்கை மற்ற மாவட்டங்களை விடக் கூடு தல் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் உள்ள 77 அரசுப் பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய 12,119 மாணவர்களில், 11,496 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 94.86 சதவீதமாக உள்ளது. இது மாநில அளவில் அரசுப் பள்ளிகளுக்கான தரவரிசையில் 12-வது இடமாகும். தேர்ச்சி விவரம் வெளியானதும், திருப் பூர் மாவட்டம் முழுவதும் மாணவர்கள் உற்சாக மாகக் கொண்டாடினர். வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மாணவிகள் கேக் வெட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

சிறுவனிடம் பாலியல் அத்துமீறல் மாணவன் மீது வழக்குப்பதிவு

சேலம், மே 9- சிறுவனுக்கு குட்கா உள்ளிட்ட போதைப் பொருட் களை கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மாணவன் மீது வாழப்பாடியில் போலீசார் வழக்குப் பதிந்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவன், அங்குள்ள பள்ளியில் படித்து வரு கிறார். வியாழனன்று மதியம் வீட்டில் இருந்த சிறுவன் திடீரென காணாமல் போனதால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், சிறுவனை பல் வேறு இடங்களில் தேடினர். அப்போது வீட்டின் அருகே மற்றொரு வீட்டில் சந்தேகத்தின் பேரில் தேடியுள்ளனர். இதில், சிறுவனை அந்த வீட்டை சேர்ந்த பிளஸ் 1 மாணவன், அறையில் அடைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சிறுவன் மயங்கிய நிலையில் கிடந் துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவனை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவம னைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது, குட்கா உள்ளிட்ட போதை புகையிலையை சிறுவனுக்கு கொடுத்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனுக்கு முதலு தவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து புகாரின்படி வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரித்தனர். அதில், சிறுவனின் பக்கத்து வீட்டை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவன், சிறுவனை தங்களது வீட்டுக்கு அழைத்து சென்று, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பிளஸ் 1 மாணவன் மீது வழக்குப்பதிந்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழைப்பொழிவு

ஈரோடு, மே 9- கத்தரி வெயில் தொடங்கியுள்ள நிலை யில், ஈரோடு மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலை யில், ஈரோடு மாவட்டத்தில் அனல் தகிக்கும் வகையில் வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சாதாரணமாக 100 டிகிரி பாரன்ஹீட்டை கடக்கிறது. இதனி டையே, வெப்பச்சலனம் காரணமாக கடந்த 4 நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, வெள்ளி யன்று ஈரோட்டில் 16.6 மிமி மழை பெய் தது. மொடக்குறிச்சியில் 7.2 மிமி, கொடு முடியில் 15.8 மிமி, பெருந்துறையில் 11 மிமி, கோபியில் 3.4 மிமி, எலந்தக்குட்டை மேடு பகுதியில் 31 மிமி மழையும் பதிவானது. இவ் வாறு மாவட்டம் பெய்து வரும் மழை கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து சற்று விடு பட செய்துள்ளது மக்களிடையே மகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

நாய்கள் கண்காட்சி: 500 நாய்கள் பங்கேற்பு

உதகை, மே 9- கோடை சீசனையொட்டி உதகையில் துவங்கிய தேசிய அளவிலான 137 மற்றும் 138 ஆவது நாய்கள் கண்காட்சியில், 55 வகை களில் 500க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற் றன. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களால் கோடை சீசன் கால மாகும். அப்போது இங்கு நிலவும் இதமான காலநிலையில் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற் றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். அவ் வாறு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு கண்காட்சிகளுடன் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதி யாக தென்னிந்திய கெனல் கிளப் சார்பில், ஆண்டுதோறும் தேசிய அளவிலான நாய் கள் கண்காட்சி நடத்தபட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டிற்கான தேசிய அளவி லான நாய்கள் கண்காட்சி வெள்ளியன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் 104 ஆம் ஆண்டு பீகில் மற்றும் இந்திய வகை நாய்களுக்கான கீழ்படிதல், ஸ்பெசாலிட்டி ஷோ ஆகியவை நடைபெற்று வருகிறது. 55 வகையான 500க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றுள்ளன. போட்டிகளை கண்கா ணிக்க ஆஸ்திரேலியா, கஜகஸ்தான் நாடு களை சேர்ந்த 2 நடுவர்கள் வந்து போட்டி களை நடத்தி வருகின்றனர்.

தேயிலை தோட்டங்களில் யானைகள் நடமாட்டம்

உதகை, மே 9- குன்னூர் அருகே தேயிலை தோட்டங்களில் யானைகள் நடமாட்டம் காணப்படுவதால், தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள காட்டேரி கிராமம் மற்றும் கோலணிமட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக 2 யானைகள் நடமாடி வருகின்றன. வனத்துறை யினர் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்ற னர். யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து மலைக்காய் கறி பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும், தேயிலை தோட்டங்களில் உலா வருகின்றன. இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். யானை கள் நடமாடும் பகுதிக்கு பொதுமக்கள், தொழிலாளர்கள் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி யுள்ளனர். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் கைது

நாமக்கல், மே 9- வீட்டில் தனியாக இருந்த இரண்டு சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஜவுளிக்கடை ஊழியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த 50 வயதுடைய ரவி என்கின்ற நபர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் தனியார் ஜவுளி கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். ரவிக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குடும்பத்தார் உள்ள நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளிபாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்து ரவி தங்கி உள்ளார். அப்பொழுது அருகே உள்ள வீட்டில் ஏழு வயது மற்றும் 13 வயது உடைய இரு சிறுமிகள் (அக்காள் தங்கை உறவு முறை) தனியே இருப்பதும், அவர்களுடைய பெற்றோர் வெளியூர் சென்று இருப்பதையும் அறிந்த ரவி, மது போதையில் சிறுமிகள் இருவருக்கும் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் அங்கிருந்து இரவோடு இரவாக அவர் தப்பி ஓடிய நிலையில், சிறுமிகள் இருவரும் வீட்டிற்கு வந்த தங்களது பெற்றோரிடம் ரவி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்த நிலையில், பள்ளிபாளையம் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக ரவியை தேடி வந்த நிலையில், பரமத்தி வேலூரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த அவரை போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தேர்வில் தோல்வி: மாணவர் தற்கொலை

உதகை, மே 9- கூடலூர் அருகே பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த சனிவயல் பகுதியை சேர்ந்த ஜெயபால் - பாக்கியலட்சுமி தம்பதியின் மகன் ஜித்தன் (17). இவர் கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில், வெள்ளியன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், ஜித்தன் தேர்வில் தோல்வியடைந்துள்ளார். இதனால் மனமு டைந்த அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடலூர் காவல் துறையினர் ஜித்தனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக் காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலையோரம் விற்பனை செய்யப்பட்ட தேன் ஆர்வமுடன் வாங்கிச் சென்ற பொதுமக்கள்

நாமக்கல், மே 9- பள்ளிபாளையம் – திருச்செங்கோடு சாலையில் அமைக்கப்பட்டடுள்ள மேம் பாலப் பகுதி தேனீ கூட்டிலிருந்து சேகரிக் கப்பட்ட இயற்கை தேன், சாலையோரத்தில் விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத் தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக 400- கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிமுக ஆட்சி காலத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவங்கியது. கடந்த திமுக ஆட்சி காலத்தில் பணிகள் நிறைவு பெற்று பாலம் திறக்கப் பட்டு வாகனங்கள் சென்றுவரும் நிலையில், ஜீவா செட் என்ற பகுதி அருகே பாலத்தின் இடது புறப்பகுதியில் தேனீக்கள் அதிகளவு கூடு கட்டி இருந்தது. இது அவ்வப்போது கூட்டாக பறந்து வாகன ஓட்டிகளுக்கு அவதி ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தரப்பில் புகார் எழுந்து நிலையில், தேன் கூட்டினை கலைத்து அதில் உள்ள தேனை மட்டும் எடுத்து விற்பனை செய் யும் வியாபாரிகள் வெள்ளியன்று அதிகாலை நேரத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருந்த இடத் தில் புகை வைத்து தேனீக்களை விரட்டி விட்ட னர். இதனையடுத்து அங்கு சேகரிக்கப்பட்ட தேன்களை சாலையோரம் விற்பனை செய்த னர். இயற்கையான முறையில் தேன் விற் பனை செய்யப்படுவதாக பரவிய தகவலை யடுத்து சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு அங்கு விற்பனை செய்யப்பட்ட தேனை வாங்கிச் சென்றனர். ஒரு லிட்டர் 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையிலும் விலை வைத்து விற்பனை செய்யப்பட்டது. கலப்படமற்ற முறையில் நேரடியாக இதுபோல விற்பனை செய்யப்படுவதால் தேன் தரமான முறையில் இருக்கும் என்பதால் ஆர்வமுடன் வாங்கி செல்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஆமை வேகத்தில் புதிய குடிநீர் திட்டப் பணிகள்

பொள்ளாச்சி, மே 9- ஆமை வேகத்தில் புதிய குடிநீர் திட்டப் பணிகள் நடைபெறுவதால், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு மற்றும் கிணத்துக்கடவு ஒன்றி யங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அம்பராம்பாளையம் ஆற்றில் இருந்து செயல்படுத்தப்படும் கூட்டு குடிநீர் திட்டத்திற் காக, 20 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட சிமெண்ட் குழாய்களே இன்னும் பயன்படுத் தப்படுகின்றன. இவை அடிக்கடி உடைந்து பழுதாவதுடன், தற்போது 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வாக, குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ. 51 கோடி மதிப்பீட்டில் புதிய குழாய்கள் பதிக்கும் பணி கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், அதி காரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் அலட்சி யத்தால் இப்பணிகள் ஆமை வேகத்தில் நடை பெறுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டால் அன்றாட வாழ் வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், இப் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மழையால் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

ஈரோடு, மே 9- மொடக்குறிச்சி அருகே மழையால் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந் ததில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச் சியை அடுத்த குளூர் ஊராட்சி, கொம ராயிவலசு பகுதியை சேர்ந்தவர் மனோ கரன். இவரது மனைவி கலைவாணி (32), மக்களைத் தேடி மருத்துவ ஊழிய ராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு மகள் மோகனா (11), மகன் லலித் (6) ஆகியோர் உள்ளனர். இவர்கள் குடும் பத்துடன் கொமராயிவலசு காலனி பகுதியில் வசித்து வருகின்றனர். இந் நிலையில், இவரது வீட்டின் முன்புறம் உள்ள சுற்றுச்சுவர் அருகே கலைவாணி வெள்ளியன்று மாலை பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தார். அப்போது, காற்றுடன் கனமழை பெய்தது. இதில் சுற்றுச்சுவர் இடிந்து கலைவாணி மீது விழுந்ததில் அவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவ லறிந்து வந்த மொடக்குறிச்சி காவல் துறையினர் மற்றும் மொடக்குறிச்சி வட் டாட்சியர் சிவசங்கர், வருவாய் ஆய்வா ளர் தங்கமணி உள்ளிட்டோர் இடிபாடு களை அகற்றி கலைவாணியின் சட லத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மொடக்குறிச்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.