கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
26 Sept 2026, 12:17 am

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்சர்வேயர், உதவியாளர் கைது!

சேலம், செப்.25-சேலம் அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம் பெற்ற நகர சர்வேயர் மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் கதிரவன். இவர் தனது வீட்டிற்கு பட்டா மாறுதல் கோரிஇணையதளம் வாயிலாக விண்ணப்பித்திருந்தார். இதன்பேரில், அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் இயங்கி வரும்நகர சர்வேயர் முருகேசன், பட்டா மாறுதல் செய்து தர ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்கவிரும்பாத கதிரவன், சேலம் வின்சென்ட் பகுதியில் அமைந்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினரின் வழிகாட்டுதலின்படி, இரசாயனம் தடவிய ரூ.5,000 பணத்தை வெள்ளியன்று கதிரவன் சர்வேயரிடம் கொடுக்கச் சென்றுள்ளார்.அப்போது, சர்வேயர் முருகேசன் தனது உதவியாளர் பூவரசன் மூலமாக ரூ.5,000 லஞ்ச பணத்தை பெற்றபோது, அங்குமறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான காவல்துறையினர் அவர்கள்இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். தொடர்ந்து, அவர்களிடம் இருந்து லஞ்ச பணத்தை பறிமுதல் செய்தகாவல்துறையினர், இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை 9 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு

தருமபுரி, செப்.25-நல்லம்பள்ளி அருகே சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 9 பேர் மீது காவல் துறையினர் போக்சோசட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே 16 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். இவரதுதாய் உயிரிழந்த நிலையில், தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். தந்தை அடிக்கடி வெளியூருக்கு வேலைக்கு செல்வதால், பாட்டி வீட்டில் சிறுமி தங்கியிருந்தபோது, அவரது உறவினர் சிறுமியைகட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில், சிறுமி கருவுற்ற நிலையில், கடந்த ஜூன் மாதம் வேறு ஒருவருடன்உறவினர்கள் திருமணம் செய்து வைத்னர்.

இந்நிலையில், சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரது கணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்ததில், அவர் 3 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஏமாற்றி திருமணம் செய்து வைத்ததாக கணவர் குடும்பத்தினர் சிறுமியை அவரது உறவினர் வீட்டுக்கு திருப்பி அனுப்பினர். இதைத்தொடர்ந்து, சேலம் மாவட்்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு கருக்கலைப்புசெய்யப்பட்டுள்ளது.

இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது, அதை மறைத்துதிருமணம் செய்து வைத்த உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தருமபுரி அனைத்துமகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.அதன்பேரில், காவல் துறையினர் சிறுமியைமிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சங்கர், அதனை மறைத்து திருமணம் செய்துவைத்த சித்தப்பா சுரேஷ், சித்தி நதினா, கணவர் திருப்பதி, உறவினர்கள் சதீஷ், ஜானகி, அய்யனார், பாட்டி தனகோடி,மற்றும்சிறுமியின் அத்தை என 9 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் உறவினர்கள் முற்றுகை போராட்டம்!

ஈரோடு, செப்.25-பவானியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சக மாணவனால் தாக்கப்பட்டு கோமா நிலையில் உள்ள மாணவனுக்கு, மருத்துவ சிகிச்சையை அரசே ஏற்க வேண்டும் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஈரோடு மாவட்டம், பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவர் யஸ்வந்த். இவர், சக மாணவரால் வியாழனன்று கழிவறையில் தாக்கப்பட்டார். தலையை சுவரோடு கடுமையாக மோத செய்ததில் யஸ்வந்த் மயக்கமானார். தகவலறிந்து மயங்கிய மாணவரை மீட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து மேல் மேல்சிகிச்சைக்குபெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து மாணவரை மீட்ட பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து கோவை ராயல் கேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். ஆயினும் மயக்கம் தெளியாமல் கோமாவிலேயேஇருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு ஆதரவாக அவரது உறவினர்கள் உள்ளிட்டோர் பள்ளியின் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள்தரப்பில் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. காவல்துறையினர், பள்ளி மேலாண்மை குழுவினர், ஈரோடு மாவட்ட கல்வி அதிகாரிகள் அங்கு சென்றனர். இறுதியாக மருத்துவ செலவுரூ.7 லட்சம் வரை ஆகும் என்று கூறப்படட நிலையில்,அத்தொகையினைகாவல் துறை ஏற்பாடு செய்வது என்றும், தாக்கியமாணவர் கைது செய்யப்படுவார் என்று உறுதியளிக்கப்பட்ட நிலையில் முற்றுகை கைவிடப்பட்டது.இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் பி.பி.பழனிசாமி, விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகி எஸ்.மாணிக்கம், சிபிஎம் நிர்வாகிஆர்.பிரகாஷ், செபாஸ்டியன், ஜெகநாதன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக களத்தில் இருந்தனர்.

குப்பைகளை அகற்றாத ஓட்டலுக்கு அபராதம்

உதகை, செப்.25-உதகை படகு இல்லம் வளாகத்தில் வெகுநாட்களாக குப்பைகளை அகற்றாமல் வைத்திருந்த தனியார் ஓட்டலுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.உதகை நகராட்சிக்குட்பட்ட படகு இல்லத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் கடைகள் மற்றும் ஓட்டல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு மிஞ்சும் கழிவுகள் அப்பகுதியிலுள்ள ஒரு கன்டெயனரில் அந்த நிறுவ

னம் சேமித்து வைப்பது வழக்கம். அதனைநாள்தோறும் நகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வாங்குவதற்கு குத்தகை எடுத்துள்ள தனியார் நிறுவனம் வந்து வாங்கிச் செல்வது வாடிக்கை. இந்நிலையில், இந்த நிறுவனம் கடந்த சில நாட்களாக வராத நிலையில், அந்த குப்பைகளை கன்டெய்னரில் குவிந்து கிடந்துள்ளது.

இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது மட்டுமின்றி, சுமார் ஒரு டன்னுக்கும் மேற்பட்ட குப்பைகள் மற்றும் கழிவுகள் அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளுக்கும் நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நகராட்சி சுகாதார அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது. அதன்பேரில் சுகாதார ஆய்வாளர் வைரம் தலைமையில், மேற்பார்வையாளர் நாதன் மற்றும் ஊழியர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, ஒரு கன்டெய்னரில் ஒரு டன்னுக்கும் மேற்பட்ட குப்பைகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அகற்றிய நகராட்சி நிர்வாகம், சம்பந்தப்பட்ட தனியார் ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது.

நீலகிரி: 4 மையங்களில் குரூப்-1 தேர்வு

உதகை, செப்.25-நீலகிரி மாவட்டத்தில் 4 மையங்களில் நடைபெறும் குரூப்-1 தேர்வை 1079 பேர் எழுதவுள்ளனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (குரூப்-1 மற்றும் குரூப் 1ஏ.,) பதவிகளுக்கான தேர்வு ஞாயிறன்று (நாளை) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் பெத்தலகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிரீக்ஸ் நினைவு ஆங்கிலோஇந்தியன் பள்ளி, குன்னூர் சாந்தி விஜய் பெண்கள் பள்ளி மற்றும் குன்னூர் அரசு கலை கல்லூரி ஆகிய 4 தேர்வு மையங்களில் 1079 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர். தேர்வு நாளன்றுகாலை 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதனை கண்காணிக்க காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுத வரும் எவரேனும் ஆள்மாறாட்டம் செய்யப்படுவது கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

இலவச மனைப்பட்டா வழங்க வலியுறுத்தல்

உடுமலை, செப்.25–உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் வட்டாரப் பகுதிகளில் சொந்த வீடின்றி ஏழை, எளிய மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஒரே சிறிய வீட்டில் பத்துக்கும்மேற்பட்டோர் நெருக்கடியாக வசிப்பதால், சுகாதாரம் மற்றும் தனியுரிமை இன்றி மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இலவச வீட்டுமனைப்பட்டா கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, வீடற்ற குடும்பங்களை முறையாக கணக்கெடுத்து, தகுதியுள்ள ஏழை மக்களுக்கு உடனடியாக இலவச வீட்டுமனைப் பட்டாவும், வீடு கட்ட அரசு உதவியும் வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு: உறவினர்கள் மறியல்

திருப்பூர், செப்.25–திருப்பூர் ஆதார் மருத்துவமனையில் தலைக்காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குணமடைந்து வந்த நோயாளி, ஆக்சிஜன் தீர்ந்ததால் திடீரென உயிரிழந்தார். மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் எனக் கூறி, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்த விக்னேஷ் (38), பெருமாநல்லூரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் மேலாளராகபணியாற்றி வந்தார். இவருக்கு மனைவியும், 4 வயதில்மகனும் உள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில்சென்றபோது மான் குறுக்கே பாய்ந்ததில் பலத்த தலைக்காயமடைந்தார். உடனடியாக அவர் அவிநாசி சாலையில் உள்ள ஆதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் ரத்தக்கசிவுஇருந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்தது. உடல்நிலை தேறி வந்தநிலையில், வியாழனன்று மதியம் வரை குடும்பத்தினருடன் இயல்பாக பேசிக்கொண்டிருந்தார். மாலை 4 மணியளவில் ஸ்கேன் பரிசோதனைக்காக மேல் தளத்திலிருந்து கீழ் தளத்திற்கு ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லப்பட்டபோது, அவருக்கு பொருத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் உருளை திடீரென தீர்ந்துள்ளது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். உடனடியாக, செவிலியர் அவரை தீவிர சிகிச்சை பிரிவு (ஐ.சி.யு) வார்டுக்கு அழைத்து செல்ல முயன்றபோது விக்னேஷ் உயிரிழந்ததாக தெரிகிறது.

மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது எனக் கூறி, அவரதுஉறவினர்களும் பணிபுரியும் ஊழியர்களும் அவிநாசி சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலிசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தவெக எம்எல்ஏ மீது கல்வீச்சு

கோவை, செப்.25-கோவை சூலூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது பொதுமக்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கோவை மாவட்டம், சூலூர் அடுத்து நாகம்ம நாயக்கன்பாளையம் பகுதியில் குட்டையை தூர்வாரி சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில், தூர்வாரும் பணியை துவக்கி வைக்க வந்த சூலூர் தவெக எம்எல்ஏ எம்.என்.சுகுமாரைபொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தும் எம்எல்ஏ உடன் வந்த கட்சிக்காரர்கள் முன்னிலையில் எம்எல்ஏ தூர்வாரும் பணிக்கு பூமி பூஜை போட்டார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் எம்எல்ஏ மீது கூட்டத்தில் இருந்து கல் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிறுமிக்கு பாலியல் தொல்லைமுதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

தருமபுரி, செப்.25-சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனைவிதிக்கப்பட்டது.தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த காரிக்குட்டி (61) என்பவர், கடந்த 2019ஆம் ஆண்டு தனியாக இருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். சோகமாக இருந்தசிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது, நடந்த சம்பவம் குறித்து தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில், காவல் துறையினர் காரிக்குட்டியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தருமபுரி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வியாழனன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில்,காரிக்குட்டிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி அசின்பானு தீர்ப்பளித்தார்.

ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

ஈரோடு, செப்.25– ஓய்வூதியர்களின் மனுக்களுக்கு உரிய பதிலளிக்காமல் நீண்டகாலமாக நிலுவையில் வைத்துள்ள அதிகாரிகள் தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி கடுமையாக அறிவுறுத்தினார்.ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ச.கந்தசாமி தலைமையில் ஓய்வூதியர் குறைதீர்கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஓய்வூதியர்கள் வழங்கிய மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை மூலம் பதில்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில், ”ஓய்வூதியர்களின் கோரிக்கை மனுக்களுக்கு முறையாக பதிலளிக்காமல் காலம் தாழ்த்தும் ஒருசில துறை அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். மனுக்களை முழுமையாக விசாரிக்காமல் அலட்சியமாக பதில் அனுப்புவதை தவிர்க்கவேண்டும். மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடைமுறைநடவடிக்கைகளை தெளிவுபடுத்தி, விரைவாக மனுதாரர்களுக்கு பதில் அனுப்புவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்” எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தொடர்ந்து, இக்கூட்டத்தில் ஓய்வூதியர்கள் எழுப்பிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும், ஐயங்களுக்கும்காப்பீட்டுத் துறை அதிகாரிகள் விரிவான விளக்கமளித்தனர். நிகழ்வில் மாவட்ட கருவூல அலுவலர் சிவசரவணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ்,தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் வ.பன்னீர்செல்வம், மணிபாரதி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு துறைசார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதிவேகமாக இயக்கப்பட்ட லாரிகள் சிறைபிடிப்பு

ஈரோடு, செப்.25-சத்தியமங்கலம் அருகே விபத்து ஏற்படுத்தும் வகையில் வண்டல் மண் பாரம் ஏற்றிக்கொண்டு அதிவேகமாகஇயக்கப்பட்ட லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் இருந்து வண்டல் மண் எடுத்து செல்லும் லாரிகள், பவானிசாகர் - பண்ணாரி சாலையில் செல்லும்போது அதிவேகமாகவும் விபத்தைஏற்படுத்தும் வகையிலும் செல்வதாக குற்றச்சாட்டுஎழுந்துள்ளது. கடந்த சில தினங்களாக மக்களைஅச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக சென்ற வண்டல் மண் லாரிகளில் அடிபட்டு 2 ஆடுகள் உயிரிழந்தன. இதுகுறித்து லாரிகளை ஓட்டிச்செல்லும் ஓட்டு

நர்கள் குறித்து போலீசாரிடம் பொதுமக்கள் புகாரளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் பண்ணாரி - பவானிசாகர் சாலையில் வண்டல் மண் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக சென்ற 50க்கும் மேற்பட்ட லாரிகளை தடுத்து நிறுத்தி சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது லாரி ஓட்டுநர்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன்காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இனி வரும் காலங்களில் விபத்து ஏற்படாதபடி வாகனங்கள் இயக்குவதாகஉறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

20% தையல் கூலி உயர்வு வழங்கக் கோரிக்கை

திருப்பூர், செப்.25-தையல் நூல் விலை உயர்வு மற்றும் மின்சார கட்டண உயர்வு ஆகியவற்றின் காரணமாக 20% கூலி உயர்வு பனியன் உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும் என்று பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூர் பவர் டேபிள் உரிமையாளர்கள்சங்க 47 ஆம் ஆண்டுப்பேரவை வியாழனன்றுலட்சுமி நகர் குலாலர் திருமண மண்டபத்தில்நடைபெற்றது. பவர் டேபிள் உரிமையாளர் சங்கத் தலைவர் ஆர்.நந்தகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த பேரவையில் சங்க செயலாளர் கே.எஸ்.முருகேசன், பொருளாளர் எஸ்.சுந்தரம் ஆகியோர் அறிக்கையை முன் வைத்தனர். இதில், அபரிமிதமாக உயர்ந்து வரும் நூல் விலையை ஒன்றிய,மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும். பனியன் உற்பத்தியாளர் சங்கங்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட சம்பள ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், தையல் நூல் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றின் காரணமாகவும் பனியன் உற்பத்தியாளர்கள் தையல் கூலி 20 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். 10 கிலோ வாட் அளவிற்கு கீழ் உள்ள தையல் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தில் மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு இழப்பீடு கேட்டு உறவினர்கள் போராட்டம்

தருமபுரி, செப்.25-பாலக்கோடு அருகே விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி, சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் குழந்தை கவுண்டர் (60). இவர் செவ்வாயன்று தனது இருசக்கர வாகனத்தில் பாலக்கோட்டில் இருந்து காரிமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வெள்ளிச்சந்தை அருகேமுன்னால் மின்கம்பங்களை ஏற்றிச்சென்ற டிராக்டர் திடீரென துணை மின் நிலையத்திற்குள் திரும்பியதால், குழந்தை கவுண்டர்ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் டிராக்டரில் ஏற்றப்பட்டிருந்த மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர்

நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, பிரேதப்பரிசோதனைநடைபெற்றது.

இந்நிலையில், விபத்துக்கு காரணமாககூறப்படும் ஒப்பந்ததாரர் மற்றும் மின்வாரியத்திடம் இருந்து உரிய இழப்பீடு பெற்றுத்தரவேண்டும் எனக்கோரி, உயிரிழந்தவரின் உடலை பெற்றுக்கொள்ள மறுத்து அவர்களது உறவினர்கள் பாலக்கோடு தக்காளி சந்தை முன்பு புதனன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த, பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் மாலதி, காவல் ஆய்வாளர் மணிவண்ணன், வட்டாட்சியர் ஜெகதீசன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், விபத்து தொடர்பாக விசாரணைமேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதால், போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

ஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி!

தருமபுரி, செப்.25-கர்நாடகா அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் வரத்து குறைந்ததால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள்இயக்க வெள்ளியன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழக காவிரி கரையோர பகுதியான அஞ்செட்டி, நாற்றபாளையம், கேரட்டி, கெம்பாக்கரை, ராசி மணல், மொசல் மடுவுர பிலிகுண்டுலு மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் பெய்து வந்த கனமழை குறைந்தது. இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீர்வரத்து சரிய தொடங்கியது. மேலும், கர்நாடகா அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் வரத்து குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வெள்ளியன்று நிலவரப்படிவிநாடிக்கு5 ஆயிரம் கன அடியாக சரிந்தது. காவிரிஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக கடந்த 13 நாட்களாக பரிசல்கள் இயக்கவதற்கு தடை விதிக்கப்பட்டு வந்ததை அடுத்து, வெள்ளியன்று முதல் பரிசல்கள் இயக்க மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் அனுமதி அளித்துள்ளார். இதனால் மாமரத்துக்கடவு பரிசல் துறை திறக்கப்பட்டு ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பரிசல் துறையிலிருந்து தொம்பச்சிக்கல் வழியாக மணல்மேடு வரை உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனர்.

பேக்கரியில் சோதனை

நாமக்கல், செப்.25-நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள பேக்கரியில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வாடிக்கையாளர் தரப்பிலிருந்து புகார் எழுந்தது. அதன்பேரில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள்புதனன்று இரவு திடீர் சோதனை மேற்கொண்டனர். அதில், காலாவதி தேதி குறிப்பிடப்படாத உணவுப்பொருட்கள் மற்றும் கெட்டுப்போன பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.