தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

25 May 2026, 1:33 am
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

தங்க சங்கிலி பறிப்பு: ஒருவர் கைது

சேலம், மே 24- பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், மல்லமூப்பம்பட்டி பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவரின் மனைவி தேவி (45). இவர் தனது இருசக்கர வாகனத்தில் அம்மாபாளை யம் புறாக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், தேவியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த தேவி காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினர். அதில், சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஜெக தீஷ் (30) என்பதும், அவர் சேலத்தில் உள்ள பிரபல ஓட்டலில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜெகதீஷை கைது செய்து, அவரிடமிருந்து 7 பவுன் நகையை பறிமுதல் செய்த னர்.

நாய்களால் உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை

ஈரோடு, மே 24- ஈரோடு மாவட்டத்தில் நாய்கடியால் உயிரிழந்த கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க, ரூ.35.63 லட்சம் நிதி வழங்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய் யப்பட்டுள்ளது. இதுகுறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறு கையில், நாய் கடியால் உயிரிழக்கும் கால்நடைக ளுக்கு கால்நடைத்துறை மூலமாக அரசு இழப்பீடு வழங்கி வருகிறது. மாட்டுக்கு ரூ.37,500, வெள்ளாடு, செம்மறியாட்டுக்கு ரூ.6,000, கோழிக்கு ரூ.200 என இழப்பீடு நிர்ணயித்து வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2024 செப்.1 முதல் 2025 ஜன.25 வரை நாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடை களுக்கு முதற்கட்டமாக ரூ.8.28 லட்சம் ஒதுக்கப் பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அதன்பின் 2025 ஜன26 முதல் ஆக.31 வரை உயிரிழந்த 1,057 கால்நடைகளுக்கு ரூ.32.05 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டது. அப்போது ரூ.12.4 லட்சம் ஒதுக்கப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட் டது. தொடர்ந்து கடந்த 2025 செப்டம்பர் முதல் 2026 பிப்ரவரி வரை உயிரிழந்த கால்நடைகளுக்கும், 2 ஆவது தவணையில் பரிந்துரைக்கப்பட்டு நிதி பெறப்படாத இனங்களுக்கும் சேர்த்து ரூ.35.63 லட் சத்தை விடுவிக்கக் கோரி அரசுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், அப்பணிகள் நிறுத்தி வைக் கப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் நடத்தை விதி முறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், நிதி ஒதுக்கீடு பெறப் பட்டதும் இழப்பீடு வழங்கப்படும், என்றனர்.

காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி, மே 24– காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, யானையை மீட்கும் முயற்சியில் வனத்துறை யினர் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், ஆனைமலை புலி கள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டம், சேத்துமடை கிழக்கு பிரிவிற்குட்பட்ட பச்சத் தண்ணீர் என்ற பகுதியில் சனியன்று மாலை காண்டூர் கால்வாயில் சிக்கிய ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. சுமார் 20 அடி ஆழ முள்ள கால்வாயில் யானை சிக்கியிருப்பதாக தகவல் கிடைத்ததும், வனத்துறை அதிகாரி கள் மற்றும் களப்பணியாளர்கள் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்றனர். கால்வாய் நீரின் வேகம் அதிகமாக இருந்ததுடன், யானைக்கு சுவாசிப்பதிலும் கடும் சிரமம் ஏற்பட்டிருந் தது தெரியவந்தது. இதையடுத்து ஆனை மலை புலிகள் காப்பக துணை இயக்குந ரின் அறிவுறுத்தலின்படி, காண்டூர் கால்வாய் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நீரின் ஓட்டத்தை நிறுத்தவும், நீர்மட்டத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், ஜேசிபி இயந்திரம் மூலம் யானையை மீட்கும் பணிகளும் மேற் கொள்ளப்பட்டன. ஆனால், யானையின் எடை மற்றும் நீரின் அழுத்தம் காரணமாக மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டதாக வனத் துறையினர் தெரிவித்தனர். மேலும், யானை யின் உடல் நீரோட்டத்துடன் திருமூர்த்தி அணை பகுதியை நோக்கி செல்லும் என கருதி, உடுமலை வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஞாயிறன்று யானையின் உடலை தீவிரமாக தேடி வருவ தாகவும், உடல் கிடைத்ததும் வன கால் நடை மருத்துவக்குழுவினர் உடற்கூறு பரி சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ள னர்.

இன்று மின்தடை

திருப்பூர், மே 24- திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே உள்ள ஓலப்பாளையம் துணை மின் நிலையத்தில் திங்களன்று (இன்று) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் ஓலப்பாளையம், கண்ணபுரம், பகவதிபாளையம், வீரணம் பாளையம், வீரசோழபுரம், காங்கயம்பாளையம், செட்டி பாளையம், முருக்கன்காட்டுவலசு, பா.பச்சாபாளையம் உள் ளிட்ட பகுதிகளில் திங்களன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காதென மின்வாரிய செயற்பொறியாளர் டி.ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

நூதன வழிப்பறி: சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

திருப்பூர், மே 24- பல்லடத்தில் பனியன் நிறுவன தொழிலாளியை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள் உட்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூரை சேர்ந்தவர் பரத் (22). பனியன் நிறுவனத் தொழிலாளியான இவரிடம், ‘டேட்டிங்’ செயலி மூலம் வியாழனன்று இரவு பேசிய அடையாளம் தெரியாத நபர், பல்லடம் அருகேயுள்ள வனப்பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். இதை நம்பி பரத்தும் அங்கு சென்றுள் ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள், பரத்தை வனத்துக்குள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மேலும் 2 பேர் நின்று கொண்டி ருந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் பரத்தை தாக்கி, அவரிடமிருந்த கைப்பேசி, ரூ.2 ஆயிரத்தை பறித்துள்ள னர். மேலும், கூடுதல் பணம் கேட்டு துன்புறுத்தியுள்ள னர். அவர் பணம் இல்லை எனக் கூறியதையடுத்து, அவர் பணியாற்றும் நிறுவன உரிமையாளரிடமிருந்து பணம் கேட்கும் படி கூறியுள்ளனர். இதையடுத்து, பரத் தும் நிறுவன உரிமையாளரை தொடர்பு கொண்டு பணம் கேட்டுள்ளார். பின்னர், அவர் கைப்பேசி மூலம் அனுப்பிய ரூ.5 ஆயிரத்தையும் அந்த நபர்கள் தங்களது வங்கி கணக்குக்கு மாற்றிக் கொண்டு தப்பியுள்ள னர். இதுகுறித்து பல்லடம் காவல் நிலையத்தில் பரத் புகாரளித்தார். அதன்பேரில் நடைபெற்ற விசாரணை யில், வழிப்பறியில் ஈடுபட்டது தென்காசியை சேர்ந்த ஷேக் உசேன் (21), முருகன் (22) மற்றும் 2 சிறுவர்கள் என்பதும், 4 பேரும் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருவ தும் தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த ரூ.7 ஆயிரம் ரொக்கம், 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த னர்.

அரசுப்பேருந்து மீது மோதி இருசக்கர வாகனம் விபத்து

உதகை, மே 24- கோத்தகிரி அருகே அரசுப்பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளா னதில், 3 பேர் காயமடைந்தனர். கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், ஏராளமான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத் திற்கு வருகை தருகின்றனர். இந்நிலையில், கட்ட பெட்டில் இருந்து வெஸ்ட்புரூக் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு வாகனத்தை முந்தும் போது, கோத்தகிரியிலிருந்து கக்குச்சி சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து மீது மோதினர். இவ் விபத்தில் லேசான காயங்களுடன் 3 பேரும் உயிர் தப்பி னர். இதன்பின் அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் நெடுஞ்சாலைத்துறையினர் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை நெடுஞ்சாலைத்துறையினர் இது சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ள னர். இதனிடையே, இந்த விபத்து தொடர்பான கண் காணிப்பு கேமரா காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மனைவியை கொலை செய்த கணவர் கைது

கோவை, மே 24- தம்பதியரிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், மனை வியை கொலை செய்த கணவனை போலீசார் செய்தனர். கோவை மாவட்டம், ராமநாதபுரம். 80 அடி சாலை சர்ச் வீதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (59). தனியார் நிறுவனத் தில் பணியாற்றிவிட்டு, விருப்ப ஓய்வு பெற்றார். மனைவி தமிழ்ச்செல்வி (51). இவர்களுக்கு மகள் மற்றும் மகன் ஆகி யோர் உள்ளனர். இதனிடையே, ஜெயச்சந்திரனுக்கு குடிப் பழக்கம் இருந்ததால், அடிக்கடி குடும்பத்தில் பிரச்சனை எழுந்தது. இந்நிலையில், சனியன்று மதியம் ஜெயச்சந்திரன் குடித்துவிட்டு வந்துள்ளார். மகன் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், தம்பதியருக்கு இடையே தகராறு எழுந்தது. இதில் ஆத்திரமடைந்த ஜெயச்சந்திரன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் வயிற்றில் குத்தியதில், ரத்தவெள்ளத் தில் அவர் கீழே சரிந்தார். இதுகுறித்து ஜெயச்சந்திரன் தனது மகன் ஸ்ரீராமுக்கு போன் செய்து வீட்டுக்கு வரவைத்தார். அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, தாய் உயிரிழந்து கிடந்தது தெரி யவந்தது. இதுதொடர்பாக ஸ்ரீராம் ராமநாதபுரம் போலீ ஸாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் தமிழ்ச்செல்வியின் சடலத்தை மீட்டு பிரதே பரி சோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ஜெயச்சந்திரனை கைது செய்தனர்.

யானையால் சுற்றுலாப் பயணிகள் அச்சம்

ஈரோடு, மே 24- ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான யானைகள் காணப்படுகின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள், வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைந்து பயிர் களை சேதப்படுத்துவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள பழைய ஆசனூர், அரேபாளையம் ஒங்கல்வாடி ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் ஊருக்குள் யானை நடமாடுவ தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், ஆச னூர் மலைப்பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான தங் கும் விடுதிக்குள் சனியன்று நுழைந்த யானை, சிறிது நேரம் விடுதி வளாகத்துக்குள் நடமாடியது. இதன்பின் நுழைவாயில் கேட்டை திறந்து வெளியே சென்றது. இச்சம்பவம் ஆசனூர் மலைப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது.

குன்னூரில் வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டம்

உதகை, மே 24- குன்னூர் மார்க்கெட்டில் 324 கடைகளை காலி செய்ய நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரி கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் மார்க்கெட் கடைகளை இடித்து, 41.50 கோடி ரூபாய் மதிப் பில், பார்க்கிங் வசதியுடன் புதிய கட்டிடங்கள் கட்ட நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஜூன் மாதத்தில் கடைகளை காலி செய்ய, 324 கடை களுக்கு முதற்கட்டமாக நோட்டீஸ் வழங்கப் பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைய டைப்பு நடத்தப்பட்டது. சில வியாபாரிகள், அவகாசம் கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். சில மாதங்களுக்கு முன்பு மார்க்கெட் பகுதியில் திடீரென பெரிய தீ விபத்து ஏற்பட்டதால் கடைகளை மீண்டும் வியாபாரிகள் கட்ட, நகராட்சி அனுமதித் தது. மேலும், எஸ்டேட் தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் அனைவரும் ஒரே இடத் தில் அனைத்து பொருட்களையும் வாங்கி செல்கின்றனர். இக்கடைகளை வேறு பகு திக்கு மாற்றினால் அனைவரும் பாதிக்கப்படு வார்கள் என வியாபாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின் படி ஒரு வாரத்தில் கடைகளை காலிசெய்யுமாறு நோட்டீஸ் வழங்கியதை கண்டித்து, ஞாயி றன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடு பட்டனர். இப்போராட்டத்திற்கு சாலையோர வியாபாரிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தெருநாய்கள் கடித்து மான் உயிரிழப்பு

திருப்பூர், மே 24- தண்ணீர் தேடி குடியிருப்புக்குள் புகுந்த மான், தெருநாய்கள் கடித்து உயிரிழந்தது. திருப்பூர் மாவட்டத்தில் கோடை வெயில் தீவிரமடைந்துள்ளதால், வனப்பகுதிகளிலி ருந்து வனவிலங்குகள் உணவு மற்றும் தண் ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழை யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதன்படி, அவிநாசி, தெக்கலூர் அருகே காமநாயக்கன்பாளையம் கிராமப்பகுதிக் குள் சனியன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புள்ளிமான் ஒன்று புகுந்தது. அப்போது அந்த மானை கண்ட நாய்கள் விரட்டி கடித்தன. இதைப் பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்து, நாய்களை விரட்டி யடித்து படுகாயமடைந்த மானை மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, காயமடைந்த மானை மீட்டு அருகிலுள்ள கால்நடை மருத் துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அந்த புள்ளிமான் உயிரிழந்தது. இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், நாய் கள் கடித்து குதறியதில் உயிரிழந்தது 3 வயதுடைய ஆண் புள்ளிமான் என்றும், பிரேத பரிசோதனைக்குப் பிறகு வனப்பகுதி யில் குழி தோண்டி புதைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். மேலும், இதேபோன்று வெள்ளியன்று நாய்கள் கடித்ததில் 2 மான்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.