தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

27 Sept 2026, 11:11 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லைபோக்சோவில் ஆசிரியர் கைது

தருமபுரி, செப்.27-பென்னாகரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த மாணவி, அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு, பாப்பாரப்பட்டி காவலர் காலனி பின்புறம் பகுதியில் வசித்து வரும் கணித ஆசிரியர் தங்கவேல் என்பவர் குறுஞ்செய்தி அனுப்பியதாக மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து மாணவியின் தந்தை, குழந்தைகள் நல மைய உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். அதன்பேரில் பாப்பாரப்பட்டி காவல் துறையினர், தங்கவேலை விசாரணைக்காக அழைத்துசென்றனர். தொடர்ந்து, பென்னாகரம் மகளிர் காவல் ஆய்வாளர் வளர்மதி விசாரணை நடத்தியதில், பள்ளியில்நடைபெற்ற சிறப்பு வகுப்பின் போது பாலியல் தொல்லை கொடுத்ததையும், மாணவியின் பெற்றோரின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பியதை தங்கவேல் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

மதுக்கடைக்கு எதிர்ப்பு: மனு போட்ட 4 மணி நேரத்தில் நிராகரிப்பு

ஈரோடு, செப்.27-ஈரோடு மாநகரில் அமையவிருக்கும் மதுபான விடுதிக்கு எதிர்ப்பு தெரிவித்த மனு. 4 மணி நேரத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சி, 8 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகள் முதலி தோட்டம் மற்றும் ரோஜாநகர். இங்கு

200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கிருந்து மெயின் ரோட்டிற்கு வரும் வழியில் சுமார் 15

ஆயிரம் ச.அடி காலியிடம் உள்ளது. இந்த இடத்தில் முற்பகல் 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் தனியார் மதுபான விடுதி அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்புற சாலையில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. 200 மீட்டருக்குள் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. எனவே பாதுகாப்பு அச்சம் கருதி ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் சனியன்று புகார் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் கருத்தையும் கேட்டறிந்து, விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய முடிவு எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கொடுத்த புகார் மனுவில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. இம்மனு மீதான நடவடிக்கைக்கு பதில், அடுத்த சில மணி நேரங்களில் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

நாளை குடிநீர் விநியோகம் ரத்து

திருப்பூர், செப்.27-திருப்பூர் மாநகராட்சியில் செவ்வாயன்று (நாளை) குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் எம்.பி.அமித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் மாநகராட்சிக்கு 2, 3, 4 ஆவது குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் சார்பில் மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாயன்று (நாளை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதால் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீரேற்று நிலையத்தில் 4 ஆவது குடிநீர் திட்டத்தில் நீர் இறைப்புப்பணிகள் மேற்கொள்ள இயலாது. இதனால், இந்த குடிநீர் திட்டத்தில் செவ்வாயன்று ஒருநாள் மட்டும் மாநகரில் குடிநீர் விநியோகம் செய்ய இயலாது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷோரனூர் – கோவை ரயில் ரத்து

சேலம், செப்.27–பாலக்காடு ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ஷோரனூர் அருகே உள்ள மன்னனூர் ரயில் நிலைய யார்டில்தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால் ஷோரனூரில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் செவ்வாயன்று (நாளை) முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஷோரனூர் சந்திப்பில் இருந்து காலை 08.20 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் எண்:56604 கொண்ட ‘ஷோரனூர் – கோவை பயணிகள் ரயில்’ (Shoranur – Coimbatore Passenger Train) செவ்வாயன்று (நாளை) ஒரு நாள் மட்டும் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறதென சேலம் கோட்ட தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர்ஜி.மரிய மைக்கேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தின் சக்கரம் கழன்றதால் பரபரப்பு

உதகை, செப்.27-கன்னியாகுமரியில் இருந்து 39 பயணிகளுடன் உதகை நோக்கி அரசுப் பேருந்து சனியன்று வந்து கொண்டிருந்தது. குன்னூர் அருகே பிளாக் பிரிட்ஜ் பகுதியில் வந்தபோது,பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று உருண்டோடியது. இதையடுத்து, பேருந்து பயங்கர சப்தத்துடன் சாலையில்சிறிது தொலைவு உரசி சென்று நின்றது. பயணிகள் அனைவரும் காயங்களின்றி உயிர் தப்பினர். இந்த விபத்தால் மலைப்பாதையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்துபாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்தியதுடன், அப்பேருந்தில் வந்த பயணிகளை மாற்றுப் பேருந்து மூலம் உதகைக்கு அனுப்பி வைத்தனர்.மலைப்பாதையில் இயக்கப்படும் அரசுப்பேருந்துகளை முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேம்பாலத்தில் பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க வலியுறுத்தல்

தருமபுரி, செப்.27-டி.அம்மாப்பேட்டை மேம்பாலத்தில் பழுதடைந்த நிலையில் காணப்படும் மின்விளக்குகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வேடகட்டமடுவு ஊராட்சிக்குட்பட்ட டி.அம்மாப்பேட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற சென்னம்மாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தருமபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட இரு மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு செல்லும் பிரதான வழியாக வேடகட்டமடுவு ஊராட்சிக்குட்பட்ட டி.அம்மாப்பேட்டை மேம்பாலம் அமைந்துள்ளது. தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை இணைக்கும் முக்கியப் பாலமாகவும் இது விளங்கி வருகிறது. இந்நிலையில், மேம்பாலத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்குகள் பல ஆண்டுகளாக பழுதடைந்து, எரியாமல் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் திருவிழாக்கள் நடைபெறும் காலங்களிலும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இருளில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் இரவு நேரங்களில் சிரமத்துடன் பாலத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது. மேம்பாலம் இருளில் மூழ்கிக்கிடப்பதால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும், இரவு நேரங்களில் பெண் பக்தர்களின் பாதுகாப்பு குறித்தும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வேடகட்டமடுவு ஊராட்சி நிர்வாகத்திடமும், அரூர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடமும் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பொதுமக்களின் நலன் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பழுதடைந்துள்ள அனைத்து மின்விளக்குகளையும் உடனடியாக சீரமைத்து, இரவு நேரங்களில் தொடர்ந்து எரியும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நவீன தொழில்நுட்பத்துடன் சுற்றுலாத்துறை மேம்பாடு: அமைச்சர் ராஜேஷ்குமார் தகவல்

கோவை, செப். 27–தமிழ்நாட்டில் சுற்றுலாத் துறையை உலக தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.ராஜேஷ்குமார் தெரிவித்தார்.உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கோவை- அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சிறப்பு கருத்தரங்கம் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ். ராஜேஷ்குமார் சிறப்புவிருந்தினராக பங்கேற்று, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தைத் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் பேசுகையில், சுற்றுலாத் துறைக்கான இணையதளம் தற்போதைய நவீன வளர்ச்சிக்கு ஏற்பசெயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து மேலும் விரிவுபடுத்தியுள்ளோம். பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா வர்த்தக மாநாட்டிற்கு (IFT) சென்றபோது, அங்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக தனியார் நிறுவனங்கள், டிராவல்ஸ் ஏஜென்சிகள்எவ்வாறு ஒன்றிணைந்து ஒருங்கிணைந்த பங்களிப்பை அளிக்கின்றன என்பதை நேரில் அறிய முடிந்தது. அதேபோல் தமிழகத்திலும் சுற்றுலாத்துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த நவீன மாற்றங்களை உள்வாங்க வேண்டியுள்ளது.கோவை மாவட்டம் இயற்கையாகவே மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களை கொண்ட பகுதியாகும். இதனைதொழில்நுட்ப வசதிகளுடன் மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இருந்து சுற்றுலா வளர்ச்சிக்கான பல்வேறு புதிய யோசனைகள் பெறப்பட்டு வருகின்றன. இதுகுறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்தபோது, இளைஞர்களின்பயனுள்ள யோசனைகளை ஏற்று ஊக்குவிக்குமாறு அறிவுறுத்தினார். சுற்றுலாப் பயணிகளின் வருகையில் தேசிய அளவில் தமிழ்நாடு தற்போது 7 ஆவது இடத்தில் உள்ளது. இதனை நாட்டிலேயே முதலிடத்திற்கு கொண்டு வருவதே அரசின் இலக்காகும். திருமூர்த்தி மலை சுற்றுலா மேம்பாட்டிற்கு ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; அங்கு ஏஐ (AI) அடிப்படையிலான தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. அதேபோல், மாமல்லபுரத்தில் ரூ.200 கோடி செலவில் பிரம்மாண்ட சுற்றுலா மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது, என்றார்.இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை இயக்குநர் ராஜ கோபால் சுன்காரா, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வழக்கறிஞர் எனக்கூறி மோசடி: தவெக நிர்வாகி மீது புகார்

திருப்பூர், செப்.27-திருப்பூரில் வழக்கறிஞர் எனக்கூறி பொதுமக்களிடம் ஆயிரக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக தமிழக வெற்றி கழக மகளிர் அணி பொறுப்பாளர் மீது வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

திருப்பூர் குமரன் சாலையில் கோட்டாட்சியர் அலுவலகம், வடக்கு வட்டாட்சியர் அலுவலகம், இ - சேவை மையம் மற்றும் சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பட்டா மாறுதல், கைதிகளை சந்திப்பதற்கு உள்ளிட்ட வேலைகளுக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், திருப்பூரில் தமிழக வெற்றி கழகத்தில் மகளிர் அணியில் பொறுப்பாளராக உள்ள சசிரேகா என்பவர், சிறைச்சாலையில் கைதிகளை சந்திக்க வரும் அவர்களின் உறவினர்களிடம், தன்னை வழக்கறிஞர்என்று கூறிக்கொண்டு மூன்று, நான்கு தினங்களில் கைதிகளை பிணையில்எடுத்து விடலாம் என்று ஆசை வார்த்தை கூறி ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை பணம் பறித்துக் கொண்டு மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்கறிஞர்கள் சிலர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் ஏற்கனவே இவர் மீது புகார் அளித்துள்ளனர். இதனிடையே, சனியன்று வழக்கறிஞர் துர்கா தேவி என்பவர் சிறைச்சாலையில் உள்ள கைதியை சந்திப்பதற்காக வந்தபோது, வாகனத்தில் வந்த சசிரேகா, வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து தன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறீர்களா? என்று கூறி தகாத வார்த்தைகளில் பேசி ரகளை செய்தார். மேலும், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த சில நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அவர்களையும் வரவழைத்தார்.

இந்த தகவல் திருப்பூரில் உள்ள பிற வழக்கறிஞர்களுக்கு தெரிந்தவுடன் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தமிழக வெற்றிகழகத்தின் மகளிர் அணியில் இருந்து கொண்டு தன்னை வழக்கறிஞர் என்று கூறி பொதுமக்களிடம் பண மோசடி ஈடுபட்ட சசிரேகா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்தனர். இதை அடுத்து போலீசார் சசிரேகாவை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

வெப்பம்: மின்விசிறிகளின்றி பயணிகள் கடும் அவதி

கோவை, செப்.27–கடுமையான வெப்பம் மற்றும் போதிய இருக்கை வசதிகள் இல்லாத காரணத்தால், கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு நாள்தோறும் வரும்ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தொழில் நகரான கோவையில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், தில்லி உள்ளிட்ட பல்வேறுமுக்கியநகரங்களுக்கு தினசரி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விமான நிலைய வளாகம் எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். கோவையில் கடந்த சிலநாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இச்சூழலில், விமான நிலையத்தின் உள்ளே பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதியஅளவில் இருக்கைகள் அமைக்கப்படவில்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கைகள் உள்ளதால், முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட பெரும்பாலான பயணிகள் நீண்ட நேரம் கால்கடுக்க நிற்கவேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், வளாகத்திற்குள் போதுமான காற்றோட்ட வசதிகள் மற்றும் குளிர்சாதன வசதிகள் முறையாக செயல்படாததால், உள்ளே நிலவும் அனல் காற்றில் பயணிகள் புழுங்கி தவிக்கின்றனர். குறிப்பாக, சமீபத்தில் விமான நிலையத்தில் நடைபெற்ற நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த மாணவிகள், கடுமையான உஷ்ணம் மற்றும் இடப்பற்றாக்குறை காரணமாக அமர்ந்து அமைதியாக உணவு அருந்தக்கூட முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் கோவை விமான நிலையத்தில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, உடனடியாக கூடுதல் இருக்கைகளை அமைக்க வேண்டும். வெப்பத்தை தணிக்கும் வகையில் கூடுதல் மின்விசிறிகள் மற்றும் குளிரூட்டும் வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்து தர வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க கோரிக்கை

உடுமலை, செப்.27-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை, போத்தனூரில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மாவட்டம், போத்தனூரில் இருந்து ராமேஸ்வரம், போடிநாயக்கனூர், தூத்துக்குடி, கொல்லம், தாம்பரம், காரைக்கால், திருவனந்தபுரம் மற்றும் புதுச்சேரி ஆகியஇடங்களுக்கு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என போத்தனூர் ரயில் பயணிகள் சங்கம் சேலம் கோட்ட ரயில்வே மேலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகளின் நலன் கருதியும், ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், மேற்கண்ட சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.