தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

1 hour before
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

அடிப்படை வசதிக்கோரிஆட்சியரிடம் மலைவாழ் மக்கள் மனு

சேலம், அக்.13-சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறைகிராங்காடு பகுதியில் பேருந்து, பள்ளிக்கூடம் மற்றும் ரேசன்கடை வசதிகள் செய்து தரக்கோரி, மலைவாழ் மக்கள் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று மனு அளித்தனர்.இதுகுறித்து அம்மனுவில், கருமந்துறையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் கிராங்காடு கிராமம்உள்ளது. இங்கு பேருந்து வசதியும் பள்ளிக்கூடமும் இல்லை.பேருந்தில் செல்லவும், பள்ளிக்கு செல்லவும் 5 கிலோமீட்டர்தொலைவில் உள்ள அடியனூருக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது. அங்கிருந்துதான் மற்ற ஊர்களுக்கு பேருந்தில்செல்ல முடிகிறது. மேலும், கிராமத்தில் ரேஷன் கடை இல்லாததால், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும் அடியனூருக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, தங்கள் கிராமத்தில் பேருந்து, பள்ளிக்கூடம், ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் எனகோரிக்கை விடுத்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீர் தேக்கத்தால் பெண்கள் சாலை மறியல்

திருப்பூர், அக்.13–திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே புக்குளம்பகுதியில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட 320 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் கழிவுநீர் முறையாக வெளியேறாமல் பல மாதங்களாகதேங்கியுள்ளது. இதனால் நோய்த் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாகக்கூறி, 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உடுமலை பிரதான சாலையில் செவ்வாயன்று மறியலில் ஈடுபட்டனர். குழந்தைகள் உள்ளிட்டோர் உடல்நலப் பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாகவும், பலமுறை புகார் தெரிவித்தும்நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

குழந்தையுடன் தந்தை தற்கொலை

ஈரோடு, அக்.13-ஈரோடு ரயில்வே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒன்றரை வயது குழந்தையுடன் ரயில் முன்விழுந்து தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம்குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டி, பிள்ளையார் கோவில் வீதியை சோ்ந்த தம்பதி விஜயகுமார் (27) – வித்யா

தம்பதியின் ஒன்றரை வயது மகன் சாய் ரித்விக். மதுப்பழக்கத்துக்கு அடிமையான விஜயகுமார், தினமும் மது அருந்திவிட்டு வித்யாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால்கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மகன் சாய் ரித்விக்குடன் வித்யா தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வித்யாவுடன் தகராறில் ஈடுபட்டு, சாய் ரித்விக்கைஅழைத்து வந்து, ஆட்டையாம்பட்டியில் உள்ள தந்தை மற்றும் சகோதரிகளின் பொறுப்பில் விஜயகுமார் ஒப்படைத்திருந்தார். இந்நிலையில், சகோதரி ரூபாஸ்ரீயிடம் இருந்து ஞாயிறன்று இரவு குழந்தையை பெற்றுச்சென்ற விஜயகுமார், மனைவியுடன் சோ்ந்து வாழ முடியாததால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக சகோதரிக்கு வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதைத்தொடர்ந்து ஈரோடுஎல்லைக்குட்பட்ட மகுடஞ்சாவடி- வீரபாண்டி ரயில் நிலையம் இடையே அப்லைன் என்ற இடத்தில் நள்ளிரவு 12.05 மணிக்கு ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த சரக்கு ரயிலின் குறுக்கே சாய் ரித்விக்குடன் விழுந்து விஜயகுமார்தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து ஈரோடுரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரூராட்சி செயல் அலுவலர் கைது

உதகை, அக்.13-ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக இத்தலார் பேரூராட்சியின் பொறுப்பு செயல் அலுவலரை காவல் துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம், முள்ளிகூர் பேரூராட்சியின் செயல் அலுவலர் கார்த்திக், இத்தலார் பேரூராட்சியின் பொறுப்பு செயல் அலுவலராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இத்தலார் பேரூராட்சிக்குட்பட்ட ஒசட்டிகிராமத்தில் தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி அமைப்பதற்காக ரூ.7 லட்சத்து 55ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கடந்த செப்.30 ஆம் தேதி தரைமட்டநீர்த்தேக்கத்தொட்டி அமைப்பதற்காக ரூ.6 லட்சத்து 90 ஆயிரத்து 55-க்கானவங்கிக்காசோலை வழங்கப்பட்டுள்ளது. அப்போது, ஒப்பந்ததாரர் ராஜாவிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என செயல் அலுவலர் கார்த்திக் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், ஒப்பந்ததாரரிடமிருந்து ரூ.20 ஆயிரம் லஞ்சப்பணத்தை திங்களன்று கார்த்திக் பெற்றபோது, லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சண்முகவடிவு தலைமையிலான போலீசார் கார்த்திக்கை கையும் களவுமாக பிடித்து,கைது செய்தனர்.

அச்சுறுத்தும் தனியார் பேருந்துகள்!

கோவை, அக்.13-கோவை மாவட்டம், சூலூர் இந்திய விமானப்படை தள

வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி அருகே,அதிவேகமாகவும் தடை செய்யப்பட்ட ஏர்ஹாரன்ஒலித்தவாறும் செல்லும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என காங்கேயம்பாளையம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி இயங்கும் காலை நேரங்களில் ஏராளமான மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் சென்று வருகின்றனர். அப்போது பல்லடம்வழியாககோவைநோக்கிச் செல்லும் தனியார் பேருந்துகள், போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகத்தில் செல்கின்றனர். மேலும், அதிகஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பயன்படுத்தி அச்சுறுத்துகின்றனர். இதனால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதுடன், விபத்துகள் நிகழும் அபாயமும்உள்ளது. எனவே, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் உரிய ஆய்வு மேற்கொண்டு, விதிமீறும் தனியார் பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தில்லியில் செய்தியாளர்கள் மீது காவல்துறை அடக்குமுறைக்கு கண்டனம்

திருப்பூர், அக்.13-தில்லியில் நடைபெறும் போராட்டங்களை களத்தில் இருந்து செய்தி சேகரித்த நியூஸ் லாண்டரி நிறுவன நிருபர்கள் அஷ்வினி குமார் சிங், ஆஸ்தா சவ்யாசாச்சி, அன்மோல் பிரீதம் மற்றும் ஸ்க்ரோல் இணையதள நிருபர் ஆயுஷ் திவாரிஆகியோரை காவல்துறையினர் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்தி, அவர்களின் செல்போன்கள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பிசினஸ்ஸ்டாண்டர்ட், நவபாரத் டைம்ஸ், ரிப்போர்டர் டிவிசெய்தியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு கைது செய்யப்பட்

டுள்ளனர். பெண் பத்திரிகையாளர்கள் மீதான பாலியல் அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் பேரதிர்ச்சியை அளிக்கின்றன. ஜனநாயகத்தின் குரலான ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை முடக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது. எனவே, இச்சம்பவம் குறித்து தில்லி காவல்துறை உரிய விளக்கமளிக்க வேண்டும். பெண் பத்திரிகையாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் குறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட அதிகாரி

கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகவியலாளர்கள் அச்சமின்றி பணிபுரிவதை ஒன்றிய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என திருப்பூர் மாவட்டசெய்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ரூ.1,000 செலுத்தியவர்களுக்கு ரூ.10,000 கட்டணம்

சேலம், அக்.13-ரூ.1,000 கட்டணம் செலுத்தியவர்களுக்கு ரூ.10,000 மின் கட்டணம் வந்துள்ளதால்,பொதுமக்கள்அதிர்ச்சியடைந்தனர்.

சேலம் சின்ன திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் மின் கட்டணம் வழக்கத்தைவிட பல மடங்கு உயர்ந்து வந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வழக்கமாக ரூ.1,000வரை மின் கட்டணம்செலுத்தி வந்த வீடுகளுக்கு தற்போது ரூ.10,000 வரை கட்டணம்வந்துள்ளதாகவும், ரூ.5,000 வரை கட்டணம் செலுத்தி வந்தவர்களுக்கு ரூ.25,000க்கும்அதிகமாக மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின் கட்டண பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், சேலம் உடையாபட்டி பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நுகர்வோரின் புகார்களை விசாரித்து, கட்டண நிர்ணயத்தில் தவறு இருந்தால் உடனடியாக சரிசெய்ய வேண்டும், என்றனர்.

காலை உணவுத் திட்டத்தில் தரமில்லாதஉணவு வழங்குவதாக புகார்

திருப்பூர், அக். 13 –தமிழக அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் ’பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தில்’ வழங்கப்படும் உணவு தரமின்றி இருப்பதாக குற்றச்சாட்டுஎழுந்துள்ளது.

முந்தைய ஆட்சியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வந்த இத்திட்டம், தற்போதைய தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வாரத்தின் ஐந்து நாட்களும் வெண்பொங்கல், ரவை கிச்சடி, கோதுமை உப்புமா மற்றும் சேமியா உப்புமா ஆகியவை சாம்பாருடன் சுழற்சிமுறையில் வழங்கப்பட்டு வருகின்றன. முன்பு சுவையாகவும் நன்றாக வெந்தும் வழங்கப்பட்ட உணவானது, தற்போது சரியாக வேகாமலும், உப்பு மற்றும் சுவையின்றியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள் உணவை சாப்பிட முடியாமல் வீணாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில பள்ளிகளில் ஆசிரியர்கள் நலத்திட்ட உதவிகளை சுட்டிக்காட்டி குழந்தைகளை வற்புறுத்தி சாப்பிட வைப்பதாகவும் வேதனை தெரிவிக்கப்படுகிறது. குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்தத் தரமான உணவு மிகவும் அவசியமாகும். எனவே, சமைத்து அனுப்பப்படும் உணவு

களை தொடர்புடைய அதிகாரிகள் உடனுக்குடன் ஆய்வு செய்து, குழந்தைகளுக்குத் தரமான மற்றும் சுவையான காலை உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசுப் பள்ளி வளர்ச்சிக் குழு தலைவர் நா.விஸ்வநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

புகையைக் கக்கும் அரசுப் பேருந்தால் மூச்சுத் திணறல்

திருப்பூர், அக். 13 -உடுமலை - கள்ளப்பாளையம் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்து (வழித்தட எண்:

8பி) அதிக அளவில் புகையை வெளியேற்றியபடி சென்று கொண்டிருக்கிறது. இதனால் அப்புகையை கடந்து செல்லும் அல்லது பின்னே பயணிக்கும் மற்ற இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கும், அவதிக்கும் உள்ளாகி வருகின்றனர். அரசுப் போக்குவரத்து நிர்வாகம் பேருந்தில் குறைபாட்டை சரி செய்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகனஓட்டிகள் கூறினர். இது குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியுள்ளது.

குடிநீர் வழங்கக் கோரி மறியல்

கோவை, அக்.13-கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே பில் சின்னம்பாளையம் கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்காததைக்கண்டித்து, 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் பொள்ளாச்சி–வால்பாறை பிரதான சாலையில் செவ்வாயன்று திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இக்கிராமத்தில் 5,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கம்பாலபட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 15 நாட்களாகக் குடிநீர் வழங்கப்படவில்லை. விநியோகிக்கப்படும் தண்ணீரில் உப்புநீர் கலந்து வருகிறது. முறையான குடிநீர் வழங்கக் கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கோட்டூர் காவல் நிலைய போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்து போராட்டத்தை கலைத்தனர்.

உதகை படகு இல்லத்தில் சவாரி நிறுத்தம்

உதகை, அக்.13-உதகை படகு இல்லத்தில், படகு ஓட்டுநர்களுக்கு வழக்கமாக ஒரு சவாரிக்கு ரூ.85 கையில் சுற்றுலா கழகம் வழங்கி வந்த நிலையில், வங்கி கணக்கில் செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் செய்து வருவதால் படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கிய இடமாக விளங்கும் படகு இல்லத்திற்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். படகு சவாரி செய்ய படகு இல்லத்தில் 35 மோட்டார் படகுகளும், 15 துடுப்பு படகுகளும் இயங்கி

வருகின்றன. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட மிதி படகுகள் இயக்கபட்டு வருகிறது. இதில், மிதி படகுகளை சுற்றுலாப்பயணிகளே ஓட்டி செல்லும் நிலையில், மோட்டார் படகு மற்றும் துடுப்பு படகுகளை 30-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் இயக்கிவருகின்றனர். அதற்காக ஓட்டுநர்கள் தற்காலிகமாக பணியமர்த்தபட்டு, ஒரு சவாரிக்கு 85 ரூபாய் வீதம் பணமாக சுற்றுலாக்கழகம் வழங்கி வருகிறது.

ஆனால், செவ்வாயன்று முதல் அவர்களுக்கான தொகை வங்கிக்கணக்கில் செலுத்தபடும் என படகு இல்ல நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து படகு ஓட்டுநர்கள் செவ்வாயன்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மோட்டார் மற்றும் துடுப்பு படகு சவாரி பாதிக்கபட்டுள்ளது.

மாணவர் சங்கத்தினர் தர்ணா

நாமக்கல், அக்.13-நாமக்கல் கிங் கல்லூரியில் படித்து முடித்து பல ஆண்டுகள் ஆகியும் மாணவர்களுக்கு அசல் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை எனக் கூறி, இந்திய மாணவர் சங்கத்தினர் திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (டி.சி.), 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பல்கலைக்கழக மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை வழங்கவில்லை. இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து, மாணவர்களின் சான்றிதழ்களைப் பெற்றுத் தரவும், கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி தர்ணா நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் நிசார், செயலாளர் தங்கராஜ் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர், நாமக்கல் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில், வரும் வியாழக்கிழமை சான்றிதழ்களை பெற்றுத் தருவதாக உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் தற்காலிகமாகத் திரும்பப் பெறப்பட்டது.

குடிநீர் வழங்கக் கோரி மறியல்

கோவை, அக்.13-கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே பில் சின்னம்பாளையம் கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்காததைக்கண்டித்து, 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் பொள்ளாச்சி–வால்பாறை பிரதான சாலையில் செவ்வாயன்று திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இக்கிராமத்தில் 5,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கம்பாலபட்டி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 15 நாட்களாகக் குடிநீர் வழங்கப்படவில்லை. விநியோகிக்கப்படும் தண்ணீரில் உப்புநீர் கலந்து வருகிறது.முறையான குடிநீர் வழங்கக் கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கோட்டூர் காவல் நிலைய போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்து போராட்டத்தை கலைத்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.