கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
28 May 2026, 10:49 pm

அடகு கடை முற்றுகை

அவிநாசி, மே 28- சேவூரில் பணத்தை செலுத்தியும், நகையை திருப்பித் தராததால், தனியார் அடகு கடையை பொதுமக்கள் புதனன்று முற்றுகையிட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. அவிநாசி, சேவூர் கைகாட்டி - குன்னத்தூர் சாலை யில் சிவா, அமிர்தம், எம்.எஸ்.ரதீஷ் என்ற மூன்று பெயர் கொண்ட நகை அடகுகடை செயல்பட்டு வருகிறது. இந்த அடகு கடையில், சுற்றுவட்டார கூலித்தொழிலாளர்கள் சுமார் 150 பவுன் நகை களை அடகு வைத்திருந்தனர். உரிய அசல் மற்றும் வட்டியை செலுத்தியும் கடையின் உரிமையாளர் மோகன்ராஜ் நகைகளைத் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த பொதுமக் கள் கடையை முற்றுகையிட்டுப் போராடினர். சேவூர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில், நகை களை தனியார் வங்கியில் வைத்துள்ளதாகவும், விரைவில் மீட்டுத் தருவதாகவும் உரிமையாளர் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்த னர்.

தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு

கோவை, மே 28- கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபா கரன், தூய்மைப் பணியின்போது நேர்மையாக செயல்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர் சக்தி வேலை பாராட்டி கெளரவித்தார். கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண் 69-க்குட்பட்ட பாரதி பார்க், அழகேசன் சாலை, 4 ஆவது வீதியில் பணிபுரிந்து வரும் சக்திவேல், வழக்கம்போல வீடுகள்தோறும் குப்பைகளைச் சேக ரித்து தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, குப்பையில் தவறுதலாக கிடந்த சுமார் 3 பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலியைக் கண்டெ டுத்த அவர், எவ்வித தயக்கமுமின்றி அதனை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து, அந்த நகை அதன் உரிமையாளரிடம் பத்திரமாக சேர்க்கப்பட்டது. தூய்மைப் பணியாளரின் இந்த உயரிய நேர் மையை பாராட்டும் வகையில், புதனன்று மாநக ராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், சக்தி வேலுக்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு களை வழங்கி ஊக்கப்படுத்தினார். மேலும், இந்த நற்பணியை செய்த தூய்மைப் பணியாளரு டன் இணைந்து பணியாற்றும் சுகாதாரத் துறையின ரையும் அவர் வெகுவாக பாராட்டினார். இந்நிகழ்வின்போது, மாநகராட்சி தலைமைப் பொறியாளர் விஜயகுமார், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி செயற்பொறியா ளர்கள் கனகராஜ் மற்றும் சத்தியமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் சரவணக்குமார், சுகாதார மேற்பார்வை யாளர் கோபிநாத் உள்ளிட்ட மாநகராட்சி அலு வலர்கள் உடனிருந்தனர்.

ரயில் போக்குவரத்து மாற்றம்

சேலம், மே 28– சேலம் கோட்டத்தில் ரயில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன்காரணமாக, மே 30இல் இரண்டு ரயில்கள் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் கோட்டத்திற்குட்பட்ட ஈரோடு – திருப் பூர் ரயில்வே மார்க்கத்தில் உள்ள பெருந்துறை ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்புப் பணி கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரண மாக, வரும் மே 30, 2026 அன்று இரண்டு ரயில் சேவை கள் குறிப்பிட்ட நேரம் வரை வழியில் நிறுத்தி வைக்கப்பட்டு முறைப்படுத்தப்பட உள்ளன. அதன் படி, மே 30 அன்று எர்ணாகுளத்தில் இருந்து டாடா நகர் செல்லும் ரயில் எண் 18190, திருப்பூர் அருகே உள்ள வஞ்சிப்பாளையம் ரயில் நிலையத்தில் 50 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். அதேபோல், ஆலப்புழையில் இருந்து தன்பாத் செல்லும் ரயில் எண் 13352, திருப்பூர் ரயில் நிலையத்தில் 30 நிமி டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு முறைப்படுத்தப்படும் என்று சேலம் கோட்டத்தின் மக்கள் தொடர்பு அதி காரி ஜி. மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.

அணைகள் நிலவரம்

பவானிசாகர் அணை நீர்மட்டம்:57.21/105அடி நீர்வரத்து:89கனஅடி நீர்திறப்பு:900கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:24.70/72அடி நீர்வரத்து:51கனஅடி நீர்திறப்பு:1020கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:26.22/160அடி நீர்வரத்து:158.36கனஅடி நீர்திறப்பு:5கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:65.90/120அடி நீர்வரத்து:328கனஅடி நீர்திறப்பு:192கனஅடி

எஸ்டேட் உரிமையாளர் கடத்தல்?

தொழிலாளர்கள் முற்றுகை உதகை, மே 28- காணாமல் போன எஸ்டேட் உரிமையாளரை மீட்டுத்தர வலியுறுத்தி அங்கு பணியாற்றும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆட்சியர் அலுலகத்தை முற்றுகையிட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்த பொன்.சிவ குமாருக்கு, எஸ்டேட் உள்ளது. இவரை கடந்த மூன்று மாதங்க ளுக்கு முன்பு கோவை மாவட்டம், அன்னூர் அருகே சிலர் தாக்கியதாகக் கூறி கோவை மருத்துவமனையில் அனும திக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்றிலிருந்து அவர் தற்போது வரை கோத்தகிரி எஸ்டேட்டுக்கு திரும்ப வர வில்லை என கூறப்படுகிறது. இவர் ஆண்டுதோறும் பள்ளி திறக்கும் காலங்களில் தொழிலாளர்களின் குழந்தைகளுக் கான கல்வி உதவித்தொகை வழங்குவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் காணாமல் போனதால் எஸ்டேட்டில் பணிபுரியும் பணியாளர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தொழிலாளர்க ளுக்கு முறையாக சம்பளம் உள்ளிட்ட சலுகைகள் கிடைப்ப தில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியாமல் தவித்து வந்த தொழிலாளர் கள் ஐநூறுக்கும் மேற்பட்டோர், தங்கள் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை புதனன்று முற்றுகையிட்டு மனு அளிக்க வந்தனர். அப்போது, எஸ்டேட் உரிமையாளரை கந்துவட்டி கும்பல் சொத்துக்காக கடத்தி சென்றுள்ளனரா? அல்லது வேறு கார ணங்களா? என்பது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தொழிலாளர்கள் மனுவில் கேட்டுக் கொண்ட னர். இதைத்தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத் திய காவல் துணைக் கண்காணிப்பாளர், இதுகுறித்து சம் பந்தப்பட்ட கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கு மாறும், அங்கு உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து எஸ்டேட் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

மின்வாரியத்தின் அலட்சியம்: ஜூன் 2 இல் முற்றுகை

உடுமலை, மே 28- மடத்துக்குளம் தாலுகா பகுதியில் நிலவும் கடும் மின்விநியோக குளறுபடி மற்றும் மின்வாரிய ஊழியர்களின் கட் டாய வசூலை கண்டித்து, வரும் ஜூன் 2 ஆம் தேதி உதவிப் பொறியாளர் அலுவ லக முற்றுகை போராட்டம் நடத்த தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள் ளது. இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், தற்போதைய கோடைக் காலத்தில் விவசாய பம்ப்செட் மோட் டார்கள் தடையின்றி இயங்க மின்சாரம் இன்றியமையாததாக உள்ளது. ஆனால், மின்மாற்றிகளில் (டிரான்ஸ்பார் மர்) ஒரே நாளில் 3 முறை வரை ஃபியூஸ் போகும் அவல நிலை நீடிக்கிறது. மாதாந் திர மின்நிறுத்தத்தின் போது மெயின் லைன்களில் மட்டுமே மரக்கிளைகள் வெட்டப்படுகின்றன; விவசாயத் தோட் டங்களுக்கு வரும் சப்-லைன்கள் புறக் கணிக்கப்படுகின்றன. மேலும், சப்-லைன்களில் கிளை களை வெட்ட ஆட்களை அனுப்ப ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாயும், டிரான்ஸ் பார்மர் பழுதானால் வண்டி வாடகை, ஆள்கூலி என ரூ.7,000 வரையும் விவ சாயிகளிடம் கட்டாய வசூல் செய்யப் படுகிறது. மின்கம்பி கருகினால் மாற்ற ரூ.5,000-மும், ஃபியூஸ் போடுவதற்கு ஒவ் வொரு முறையும் ரூ.200-மும் லஞ்ச மாக கேட்கப்படுகிறது. இதனால், கிணறுகளில் தண்ணீர் இருந்தும் மின் தடையால் தென்னை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் காய்ந்து கருகுகின்றன; கால்நடைகளுக்குக் குடி நீர் கூட வழங்க முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், மின்வாரியத்தின் லஞ்ச ஊழல் மற்றும் அலட்சியப் போக்கை கண்டித்து வரும் ஜூன் 2 ஆம் தேதி, தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில், மடத்துக்குளம் உதவிப் பொறியாளர் அலுவலகம் முன்பு குடும்பங்களுடன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு

கோவை, மே 28– கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் வியாழனன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மருத்துவமனையின் கட்டமைப்பு வசதிகள், மருந்து கையிருப்பு மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மருத்து வமனையில் உள்ள குறைகளை கண்டறிந்து, அவற்றை சரிசெய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான திட்டங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், செவிலியர்கள் தங்கு வதற்கு போதிய இடவசதி இல்லாதது போன்ற குறைகளை சுட்டிக்காட்டிய அமைச்சர், அடுத்த 15 முதல் 20 நாட்களுக் குள் அடிப்படை தேவைகள் அனைத்தும் சீர் செய்யப்படும் என உறுதியளித்தார். தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ள பராமரிப்புப் பணிகள் முறையாக நடைபெறு கிறதா என்பதை தனது துறை சார்ந்த அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். பணியில் சுணக்கம் காட்டும் ஊழியர் கள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது துறை ரீதி யான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். எபோலா அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகை யில், தமிழகத்திலேயே முதல்முறையாக கோவையில் 10 படுக்கை வசதிகள் கொண்ட பிரத்யேக தடுப்புப்பிரிவு தயார் செய்யப்பட்டுள்ளது, என்றார்.

கடனை கேட்டு நெருக்கடி: ஒருவர் தற்கொலை; 3 பேர் கைது!

நாமக்கல், மே 28- நாமக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி மற்றும் நுண் நிதி நிறுவனங்களின் கடன் வலையில் சிக்கி விசைத்தறி தொழிலாளர்கள் தங்களின் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் துயரம் தொடர்கதையாகி வருகிறது. விசைத்தறி தொழிலை பிரதானமாகக் கொண்ட பள்ளிபாளையம் பகுதியில் நூல் விலை ஏற்றம், ஒன்றிய - மாநில அரசுகளின் கவனிப்பின்மை, ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் விசைத்தறி தொழில் நலிவடைந்துள்ளது. இதனால் குடும்ப பொருளாதார தேவைகளுக்காக தொழிலாளர்கள் கந்துவட்டி மற்றும் நுண் நிதி நிறுவனங்களின் பிடியில் சிக்கி, வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். தமிழக அரசு கந்துவட்டி ஒழிப்புச் சட்டத்தை அமல்படுத்தி இருந்தாலும், கடன் வசூலிப்பில் அரசு விதிகள் மீறப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதற்காக தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், பள்ளிபாளையம் தேவாங்கபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற கூலித் தொழிலாளி, கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் சுமார் ரூ.30 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார். கடனை திருப்பி தரக்கோரி நிதி நிறுவன உரிமையாளர்கள் சிலர் கடந்த செவ்வாய்க்கிழமை மணிகண்டனை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, கடுமையாக தாக்கி மிரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பள்ளிபாளையம் போலீசார் கண்ணன், மாரிமுத்து, சீனிவாசன் ஆகிய மூவரை கைது செய்து, தப்பியோடிய சிலரை தேடி வருகின்றனர். கடன் வலையில் சிக்கி, எரியும் தீயில் விழும் விட்டில் பூச்சிகளாய் தொழிலாளர் குடும்பங்கள் அழியும் அவலத்தைத் தடுக்க, நிதி நிறுவனங்களின் அடாவடிப் போக்கை கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.