கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
26 May 2026, 11:18 pm

ஆட்சியர் அலுவலகம் முன்பு கத்திக்குத்து

கோவை, மே 26- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்திய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இட்லி கடையில் திங்களன்று இரவு பலர் உணவு அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மது போதையில் வந்தவர்களிடையே, வாய்த்தகராறு ஏற் பட்டு, பின்னர் கடுமையான மோதலாக மாறியது. இந்த மோதலில் விஷ்வேஷ் என்ற இளைஞரை 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அவரது வலது கை மற்றும் வலது காலில் காயம் ஏற் பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இச்சம்பவத் தில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்ற பாதுகாப்பு முக்கியத்து வம் வாய்ந்த பகுதியில் இப்படியான சம்பவம் நடந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தை யும் ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

ஈரோடு, மே 26- தாளவாடி அருகே காட்டாற்று வெள்ளத் தில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் உடலை தீய ணைப்புத் துறையினர் மீட்டனர். ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த திகினாரை மலைப்பகுதியில் ஞாயிறன்று கன மழை பெய்தது. இதனால் வன ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திகி னாரை பகுதியிலுள்ள வன ஓடையிலும் வெள் ளம் கரைபுரண்டு ஓடியதால், கிராம மக்கள் வெள்ளத்தை பார்க்கச் சென்றனர். ஓடை அருகே உள்ள தோட்டத்தில் குடியிருக்கும் விவசாயி ரங்கராஜு மகன் மதன் கார்த்திக் (6) தனியாக வெள்ளத்தை பார்க்க ஞாயி றன்று மாலை சென்றதாக தெரிகிறது. இரவு நேரமாகியும் மதன் கார்த்திக் வீடு திரும்பாத தால், சந்தேகமடைந்த பெற்றோர் தாளவாடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த னர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் கிராம மக்களுடன் சேர்ந்து மாயமான மதன் கார்த்திக்கை வன ஓடையில் தேடினர். ஆனால், அவரின் நிலை குறித்து எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், திங்கள்கிழமை காலை மீண்டும் தேடும் பணி தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் திகி னாரை வன ஓடையில் தேடி வந்தபோது, வன ஓடையின் பக்கவாட்டு கரையில் சிறுவனின் கால்தடம் இருப்பதைக் கண்டு அப்பகுதியில் தேடியபோது சிறுவனின் உடல் மீட்கப்பட் டது. காட்டாற்று வெள்ளத்தை பார்ப்பதற்கு மதன்கார்த்திக் வந்தபோது சேறும் சகதியு மாக இருந்த கரையில் இருந்து கால்தவறி ஓடை நீரில் விழுந்து, நீரில் மூழ்கி இறந்திருக் கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

வாழை மரங்களை சேதப்படுத்திய யானை

உதகை, மே 26- பந்தலூர் அருகே செட்டிவயல் பகுதியில் விவசாயத் தோட்டத்ற்குள் புகுந்த யானைகள், அங்கிருந்த யானை மரங்களை சேதப்படுத்திச் சென்றதால் விவசாயிகள் கவ லையடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள செட்டிவ யல் கிராமம், தனியார் தேயிலை தோட்டங்களுக்கு மத்தி யில் அமைந்துள்ளது. இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் நேந்திரன் வாழைத்தோட்டங்கள் உள்ளன. அதிக அளவிலான விவசாயிகள் இந்த பகுதி யில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதிக்கு வந்த ஏழு யானைகள் கொண்ட கூட்டம், குளை தள்ளிய வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தி யது. மேலும், சாலையில் நிறுத்தியிருந்த இருசக்கர வாக னங்களையும், ஆட்டோவையும் சேதப்படுத்தின. இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், பாதிக்கப் பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இப்பகுதிக்கு யானைகள் வருவதை தடுக்கும் வகையில், வனத்துறையி னர் மாலை மற்றும் இரவு நேரத்தில் கண்காணிப்பு பணி யில் ஈடுபடுத்த வேண்டும். வாகன வசதி இல்லாத நிலை யில், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் மக்கள் நடந்து செல்லும்போது பாதிப்புகள் ஏற்படாமல் பாது காப்பு வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி மணிகண்டன் வலியுறுத்தியுள்ளார்.

சேறும், சகதியுமாக காட்சியளித்த மார்க்கெட்

ஈரோடு, மே 26- கனமழை காரணமாக, ஈரோடு வஉசி பூங்கா காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். ஈரோடு வஉசி பூங்கா காய்கறி மார்க்கெட்டில் 700க்கும் மேற்பட்ட காய்கறி மற்றும் பழக்கடைகள் செயல்பட்டு வரு கிறது. இங்கு இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை மொத்த வியாபாரமும், காலை 7 மணி முதல் காலை 9 மணி வரை சில்லறை வியாபாரமும் நடைபெற்று வருகிறது. இந் நிலையில், ஈரோடு மாநகர் பகுதியில் ஞாயிறன்று இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய பகுதி யில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதே போன்று, வஉசி பூங்காவில் செயல்பட்டு வரும் நேதாஜி மார்க்கெட்டிலும் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி யது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிக ளில் இருந்து காய்கறிகள் ஏற்றி வந்த சரக்கு வாகனங் கள் சகதியில் சிக்கிக்கொண்டன. கூலித்தொழிலாளர்கள் சரக்கு வாகனத்தில் இருந்த காய்கறிகளை இறக்கிவிட்டு, பின்னர் வாகனத்தை சகதியில் இருந்து மீட்டனர். வஉசி பூங்கா மைதானம் சேறும், சகதியுமாக காணப்பட்டதால் பொதுமக்கள் நடக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி மறியல்

திருப்பூர், மே 26- பல்லடம் அருகே சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறிய லில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சுக்கம் பாளையம் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் திங்க ளன்று, கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள சாமிகவுண்டம்பாளையம் பிரிவு பகுதியில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் காவல் துறையினர் மறிய லில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப் போது, சீரான குடிநீர் விநியோகம் செய்ய உடனடியாக நட வடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித் தனர். அதனையேற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தெருநாய்கள் நடமாட்டம்: ஆட்சியரிடம் மனு கோவை, மே 26- கோவை மாநகராட்சி, 95 மற்றும் 99 ஆவது வார்டுகளில் அதிகரித்து வரும் தெருநாய்கள் நடமாட்டத்தை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய சமூக ஜனநா யகக் கட்சி சார்பில் ஆட்சியரிடம் திங்களன்று மனு அளிக் கப்பட்டது. இதுகுறித்து அம்மனுவில், தெருநாய்கள் பிரச்சனை குறித்து பொதுமக்கள் ஏற்கனவே பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், தெருநாய் களை பிடிக்க வரும் ஊழியர்கள் பணியில் ஈடுபடாமல் மெத்தனப் போக்குடன் அலட்சியமாக செயல்படுகின்ற னர். சில பகுதிகளில் இருந்து நாய்களை பிடித்து சென்ற பின்னர், மீண்டும் அதிகமான நாய்களை அதே பகுதிகளில் கொண்டு வந்து விடுவதால் பொதுமக்களுக்கு மேலும் சிரமம் ஏற்படுகிறது. அதேபோல், பிடிக்கப்படும் நாய்க ளுக்கு முறையாக தடுப்பூசி செலுத்தப்படுகிறதா, கருத் தடை செய்யப்படுகிறதா என்பது குறித்து பொதுமக்க ளுக்கு தெளிவான தகவல் இல்லை. தெருநாய்கள் நட மாட்டத்தால் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தை கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் சிரமம் நிலவு கிறது. எனவே, தெருநாய்கள் தொல்லையை கட்டுப்ப டுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய மற்றும் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள் ளது.

தெருநாய்கள் நடமாட்டம்: ஆட்சியரிடம் மனு

கோவை, மே 26- கோவை மாநகராட்சி, 95 மற்றும் 99 ஆவது வார்டுகளில் அதிகரித்து வரும் தெருநாய்கள் நடமாட்டத்தை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய சமூக ஜனநா யகக் கட்சி சார்பில் ஆட்சியரிடம் திங்களன்று மனு அளிக் கப்பட்டது. இதுகுறித்து அம்மனுவில், தெருநாய்கள் பிரச்சனை குறித்து பொதுமக்கள் ஏற்கனவே பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், தெருநாய் களை பிடிக்க வரும் ஊழியர்கள் பணியில் ஈடுபடாமல் மெத்தனப் போக்குடன் அலட்சியமாக செயல்படுகின்ற னர். சில பகுதிகளில் இருந்து நாய்களை பிடித்து சென்ற பின்னர், மீண்டும் அதிகமான நாய்களை அதே பகுதிகளில் கொண்டு வந்து விடுவதால் பொதுமக்களுக்கு மேலும் சிரமம் ஏற்படுகிறது. அதேபோல், பிடிக்கப்படும் நாய்க ளுக்கு முறையாக தடுப்பூசி செலுத்தப்படுகிறதா, கருத் தடை செய்யப்படுகிறதா என்பது குறித்து பொதுமக்க ளுக்கு தெளிவான தகவல் இல்லை. தெருநாய்கள் நட மாட்டத்தால் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தை கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் சிரமம் நிலவு கிறது. எனவே, தெருநாய்கள் தொல்லையை கட்டுப்ப டுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய மற்றும் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள் ளது.

சாலையோர புதர்களை அகற்றக் கோரிக்கை

கோவை, மே 26– கவுண்டம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி களில் சாலையோரங்களில் வளர்ந்துள்ள புதர்களை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து அம்மனுவில், கோவை மாவட்டம், கூட லூர் அருகே உள்ள கவுண்டம்பாளையம் மற்றும் சுற்றுவட் டாரப் பகுதிகளில் சாலையோரங்களில் செடிகள் அதிக மாக வளர்ந்துள்ளதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற் குள்ளாகி வருகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது. மேலும், சாலையை ஆக்கிரமித்து கோவில் கட்டியிருப் பது மற்றும் சாலையை ஆக்கிரமித்து சிமெண்ட் சீட் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும், தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட அதிகாரிகள் உடனடி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் ஏற்காடு!

சேலம், மே 26- ஏற்காடு கோடை விழாயை முன்னிட்டு, மலர் கண்காட்சியை காணக்குவியும் சுற்று லாப் பயணிகளால் கடும் போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நடை பெற்று வரும் 49 ஆவது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. கடந்த மே 22 ஆம் தேதி தொடங்கிய இந்த கோடை விழா வையொட்டி, அண்ணா பூங்காவில் பல்வேறு வண்ண மலர்களால் அமைக்கப்பட்ட சிறப்பு அலங்காரங்கள் பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில், பல்வேறு வடிவங் கள் மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், இரட்டை இதயம் வடிவிலான செல்பி பாயிண்டுகளும் அமைக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் புகைப் படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். மலர் கண்காட்சி தொடங்கிய முதல் நாளில் 8,600 பேரும், அடுத்த நாளில் 14 ஆயிரம் பேரும் வருகை தந்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளம், ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் தினசரி ஆயிரக்கணக்கானோர் ஏற்காட்டிற்கு வருவ தால், மலைப்பாதை மற்றும் நகரப் பகுதிக ளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள் ளது. குறிப்பாக ஏற்காடு டவுன், ஏரிச்சாலை, அண்ணா பூங்கா சந்திப்பு, படகு இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவ திக்குள்ளாகினர்.

எபோலா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கோவை, மே 26- உலகளவில் எபோலா வைரஸ் பரவல் குறித்த அச்சம் நிலவி வரும் நிலையில், கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை மற்றும் சுகாதார கண் காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளன. கோவை விமான நிலையத்திலிருந்து, தேசிய மற்றும் சர்வதேச அளவில் நாள் தோறும் 32 விமானங்கள் இயக்கப்பட்டு வரு கின்றன. இதில் சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜா உள்ளிட்ட வெளிநாட்டு விமான சேவைகளும் இடம்பெற்றுள்ளன. தினசரி சுமார் 10 ஆயி ரம் பயணிகள் விமான நிலையத்தை பயன்ப டுத்தி வரும் நிலையில், அதில் ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் வெளிநாடுகளுக்கு சென்று வருபவர்கள் என தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்நிலையில், உலகளவில் பரவி வரும் எபோலா வைரஸை கட்டுப்படுத்தும் வகை யில் கடந்த இரண்டு நாட்களாக தீவிர சுகா தார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா காலத்தில் நிறுவப் பட்ட இரண்டு தானியங்கி வெப்பநிலை பரி சோதனை கருவிகள் மூலம் பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளி டம், சமீபத்தில் பயணம் செய்த நாடுகள் குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு வரு கின்றன. உலக சுகாதார அமைப்பின் வழி காட்டுதலின்படி, மாநில சுகாதாரத்துறைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப் படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள் ளதால், கோவை விமான நிலையத்திலும் கூடு தல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.

லாரி விபத்து: இடிபாடுகளில் சிக்கி ஓட்டுநர் பலி

ஈரோடு, மே 26- சித்தோடு அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதிய மற்றொரு லாரியின் ஓட்டுநர், இடிபாடுகளுக் குள் சிக்கி உயிரிழந்தார். திருச்சி மாவட்டம், மணப்பாறை, விளாவு ராணிப்பட்டியை சேர்ந்தவர் சபரீசன் (26). இவர் சேலத்திலிருந்து காய்கறிகள் பாரம் ஏற்றிக் கொண்டு, கோவைக்கு கன்டெய்னர் லாரியில் திங்களன்று சென்று கொண்டிருந் தார். சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை யில், சித்தோடு, சமத்துவபுரம் அருகே சென்ற போது, முன்னால் சென்ற லாரியின் பின்பகுதி யில், சபரீசன் ஓட்டிச் சென்ற லாரி மோதியது. இதில், இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்ட சபரீசன் அதே இடத்தில் உயிரிழந்தார். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு காவல் துறையினர், பவானி தீயணைப்புப் படையினர் உதவியுடன் சபரீ சன் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

மதுக்கடையை அகற்ற சிபிஎம் வலியுறுத்தல்

அவிநாசி, மே 26- திருமுருகன்பூண்டியில் உள்ள மது பானக் கடையை அகற்றவில்லையெனில் போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 717 மதுபானக் கடை களை மூட உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியி லுள்ள மதுபானக் கடை (எண்: 1513) அந்த பட்டியலில் இடம் பெறவில்லை. இக்கடைக்கு அருகில் ஆரம்பப்பள்ளி, வங்கி, கருப்பரா யன் கோவில், நாகாத்தம்மன் கோவில், ராகவேந்திரா கோவில் உள்ளிடவைகள் உள் ளன. மேலும், தேசிய நெடுஞ்சாலையில் இக் கடை உள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற் பட்டு, உயிரிழப்பு நிகழ்ந்து வருகிறது. எனவே, இந்த கடையை அகற்றி, வேறு இடத் திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அப் பகுதியில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அணைகள் நிலவரம்

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:25.68/72 அடி நீர்வரத்து:125கனஅடி நீர்திறப்பு:1025கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:24.65/160 அடி நீர்வரத்து:138.28கனஅடி நீர்திறப்பு:5.00கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:65.40/120அடி நீர்வரத்து:237கனஅடி நீர்திறப்பு:192ககஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:55.46/60அடி நீர்வரத்து:841கனஅடி நீர்திறப்பு:515கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:30.25/90அடி நீர்வரத்து:124கனஅடி நீர்திறப்பு:கனஅடி