கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
14 May 2026, 11:29 pm

மாணவர் சேர்க்கை அறிவிப்பு

அவிநாசி, மே 14- அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2026-27ஆம் கல்வியாண்டு இளநிலை பட்டப் படிப்புகளில் சேர இணையவழியில் விண்ணப்பிக்க வரும் மே 29-ஆம் தேதி கடைசி நாளாகும். இக்கல்லூரியில் ஆங்கிலம், பொருளியல், கணினி அறி வியல், கணினி பயன்பாட்டியல் (BCA), வேதியியல், வணிக வியல், வணிக நிர்வாகவியல் மற்றும் பன்னாட்டு வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. பிளஸ்-2 முடித்த கிராமப்புற மாணவர்கள் மற்றும் முதன்முறை பட்டதாரிகளாக விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில், கல்லூரியில் பிரத்யேக ’உதவி மையம்’செயல்பட்டு வருகிறது. அங்குள்ள துறை சார்ந்த பேராசிரியர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து நேரடி ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். தகுதியுள்ள மாணவர்கள் வரும் 29-ஆம் தேதிக்குள் இணையவழியில் விண்ணப்பித்து இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் தெரி வித்துள்ளது.

நில அபகரிப்பு புகார் தாய், மகன் தீக்குளிக்க முயற்சி

சேலம், மே 14- நிலத்தை அபகரிக்க முயலும் நபர் மீது நடவடிக்கை கோரி, சேலம் ஆட்சியர் அலுவலக வாயிலில் தாய் மற்றும் மகன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. சேலம் மாவட்டம், ஓமலூர் கருப்பண்ணம்பட்டி காட்டு வளவு பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு (52). இவரது மகன் சேதுபதி (22). இவர்கள் இருவரும் வியாழனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு, மறைத்து வைத்தி ருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற னர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர் களை தடுத்து நிறுத்தி, தண்ணீரை ஊற்றி மீட்டனர். இதன்பின் போலீசாரிடம் அலமேலு கண்ணீருடன் கூறு கையில், எங்களுக்குச் சொந்தமான 75 சென்ட் விவசாய நிலத்தை, திமிர் கோட்டை பகுதியைச் சேர்ந்த நபர் ஒரு வர் போலி ஆவணம் தயாரித்து அபகரிக்க முயல்கிறார். அடி யாட்களை அனுப்பி கொலை மிரட்டல் விடுப்பதோடு, ஆபாச மாக பேசுகின்றனர். இதுகுறித்து ஓமலூர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. வேறு வழியின்றி தற் கொலை முடிவை எடுத்தோம், என்றார். போலி ஆவணம் தயாரித்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து டவுன் போலீசார் இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அணைப்பாளையம் மேம்பாலத்தை உடனே திறக்க சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூர், மே 14- சுமார் 20 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் கட்டி முடிக்கப்பட்டுள்ள அணைப்பாளை யம் ரயில்வே மேம்பாலத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக திறக்க வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தியுள்ளது. இது தொடர்பாக சிபிஎம் 15 வேலம்பாளை யம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறி யாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியி ருப்பதாவது: கடந்த 2006-ஆம் ஆண்டு ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் தொடங்கப் பட்ட இப்பாலப் பணி, நிலம் கையகப்படுத்து வதில் ஏற்பட்ட சட்ட சிக்கல்களால் 11 ஆண்டு கள் முடங்கியது. பின்னர் 2017-ல் பணி மீண்டும் தொடங்கியபோது திட்ட மதிப்பீடு ரூ.19.79 கோடியாக உயர்ந்தது. காலதாம தம் மற்றும் திட்ட மாற்றங்களால் கூடுதல் நிதி செலவிடப்பட்டு, தற்போது நொய்யல் ஆறு மற்றும் ரயில்வே வழித்தடத்தின் மேலே உயர் மட்டப் பாலம் முழுமையாக கட்டி முடிக்கப் பட்டுள்ளது. இப்பாலப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக்கள் அளிக் கப்பட்டதோடு, பல்வேறு போராட்டங்க ளும் நடத்தப்பட்டன. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்பகுதி யில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிச லுக்கு தீர்வு காண இப்பாலத்தை உடனடி யாக திறக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்துள்ள சூழலில், மக்களின் 20 ஆண்டுகால எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

இளம்பெண்ணை ஏமாற்றி கருவுறச்செய்த காவலர் கைது

கோவை, மே 14- கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம் பெண்ணை காதலித்து ஏமாற்றி கருவுறச்செய்த, பின்னர் மிரட் டல் விடுத்ததாக காவலர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை தெற்கு தெரு பகு தியை சேர்ந்த உதயகுமார், பில்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணி யாற்றி வந்தார். இவர் பேரூர் அருகே வசிக்கும் 27 வயது இளம்பெண்ணிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பழகியதாக கூறப்படுகிறது. இதை யடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், அந்த பெண் கர்ப்ப மானார். இந்த தகவல் தெரியவந்ததும் அதிர்ச் சியடைந்த காவலர் உதயகுமார், வட வள்ளி மற்றும் அவிநாசி அருகே உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று, பெண்ணை கட்டா யப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்ததாக வும் கூறப்படுகிறது. இதற்கிடையில், உதயகுமாருக்கு ஏற்கனவே திருமண மாகி குழந்தைகள் இருப்பது அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. இதுகு றித்து கேள்வி எழுப்பியபோது, இதை வெளியே கூறினால் இருவரும் இருக் கும் வீடியோக்களை சமூக வலைதளங் களில் வெளியிடுவேன், கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக வும் பெண் புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், பெண்ணை ஏமாற்றி கருவுறச்செய்து மிரட்டல் விடுத்ததும் உறுதியானதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பேரூர் அனைத்து மகளிர் காவல் துறை யினர் காவலர் உதயகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி புத னன்று சிறையில் அடைத்தனர்.

அதிமுக-விலிருந்து தங்கமணி நீக்கம் - தொண்டர்கள் அதிர்ச்சி

நாமக்கல், மே 14- அதிமுகவில் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ள நிலையில், நாமக்கல் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவ ருக்கு பதிலாக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கர் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தவெக ஆட்சி மீதான நம்பிக்கை தீர்மான விவகாரத் தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆதரவா ளர்கள் மீது இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நாமக்கல் அதிமுக அலுவலகத்தில் இருந்த தங்கமணியின் படங்கள் மறைக்கப்பட்டன. கே.பி. பி.பாஸ்கர் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டா டிய நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க தங்கமணி வீட் டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செல் வாக்குமிக்க நிர்வாகி நீக்கப்பட்டிருப்பது கட்சி வட்டாரத் தில் ஈபிஎஸ் தரப்பு மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முழுமையான மதுவிலக்கு ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி

கோவை, மே 14- மதுபான கடைகளை மூடுவதால் மட்டுமே மது பழக்கம் குறையாது, மாநிலத்தில் முழுமையான மதுவிலக்கே நிரந்தர தீர்வாக இருக்கும் என கோவையில் ஈஸ்வரன் பேட்டி யளித்தார். கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களி டம் பேசுகையில், தேர்தல் தோல்வியால் அதிமுகவில் சிலர் கட்சியை பிரிக்க முயல்வது தேவையற்றது. தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜமானது. அதிமுகவினர் அனை வரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கோவை விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம், அவி நாசி சாலை மேம்பால நீட்டிப்பு உள்ளிட்ட பணிகளை விரைவு படுத்த வேண்டும். மேற்கு மண்டல வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். மதுபானக் கடைகள் மூடுவது வரவேற் கத்தக்கது என்றாலும், அதனால் மட்டும் மது பழக்கம் குறை யாது. மாநிலத்தில் முழுமையான மதுவிலக்கே நிரந்தர தீர்வு, என்றார்.

பயணிகளை பேருந்து நிலையத்தில் இறக்கி விட வலியுறுத்தல்

உதகை, மே 14- பயணிகளை சாலையில் இறக்கி விடாமல், பேருந்து நிலையத்தில் இறக்கி விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகர் பகுதியில் உள்ள மார்க்கெட் பகுதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், சமவெளிப்பகுதிகளில் இருந் தும் வரும் பொதுமக்கள் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளால் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்படா மல், பிரதான சாலையில் நிறுத்தி இறக்கி விடப்படுகின்ற னர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் ஏற்படுகிறது. எனவே, அரசு மற்றும் தனியார் மினி பேருந்துகள் பேருந்து நிலையத்தில் நிறுத்தி பொதுமக் களை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

சிறைக்குள் கஞ்சா: 4 பேர் மீது வழக்கு

கோவை, மே 14- கோவை சின்னத் தடாகத்தை சேர்ந்த நவீன், இவர் கோவை மத்திய சிறையில் உள்ள தனது நண்பர் மகேஷ் (26) மற்றும் கைதிகள் சுரேந்திரன் (22), அபிவிஷ்ணு (27) ஆகி யோரை சிறை வளாகத்திலுள்ள பகுதியில் சந்திக்க சென்றார். அப்போது, நவீன் கொண்டு வந்திருந்த சிற்றுண்டி மற்றும் தின் பண்டங்கள் அடங்கிய பார்சலை சிறைக் காவலர்களிடம் ஒப்ப டைத்தார். அதனை வழக்கமான சோதனைக்காகக் காவலர் கள் பிரித்துப் பார்த்தபோது, தின்பண்டங்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த 6.24 கிராம் கஞ்சாவை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நவீன் மற்றும் சிறையிலுள்ள மற்ற 3 கைதிகள் என மொத்தம் 4 பேர் மீது பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மண் திருட்டு: போராட்ட அறிவிப்பு

அவிநாசி, மே 14- அவிநாசி அருகே தத்தனூர் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் சட்டவிரோத மண் திருட்டை தடுக்கத் தவ றிய வருவாய்த்துறையை கண்டித்து, வரும் 24-ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர். அவிநாசி ஒன்றியம், தத்தனூர் ஊராட்சிக்குட்பட்ட ஆனைக்கல்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்க ளாகத் தொடர்ந்து சட்டவிரோத மண் திருட்டு நடை பெற்று வருகிறது. இதற்காகப் பயன்படுத்தப்படும் கன ரக வாகனங்கள், ஊர் சாலைகளில் அசுர வேகத்தில் 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அச்சத் திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த் துறையிடம் பலமுறை மனு அளித்தும், பதாகைகள் வைத்து எதிர்ப்புத் தெரிவித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதையடுத்து, அதிகாரிகள் உடனடியாக நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் மே 24-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் புஞ்சை தாமரைக்குளம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட் டுள்ளது. இப்போராட்டத்தில் தத்தனூர், புஞ்சை தாம ரைக்குளம், நஞ்சை தாமரைக்குளம் ஆகிய ஊராட்சி களைச் சேர்ந்த பொதுமக்கள், அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்க உள்ள தாகத் தெரிவித்துள்ளனர்.

சிறுபூலுவபட்டியில் குவித்து வைக்கப்பட்டுள்ள மாநகராட்சி குப்பையை அகற்ற உத்தரவு

திருப்பூர், மே 14 – திருப்பூர் மாநகராட்சி 25ஆவது வார்டுக்குட்பட்ட சிறுபூலுவபட்டி அம்மன் திருமண மண்டபத்திற்கு அருகே குவித்து வைக்கப்பட்டுள்ள மாநகராட்சி குப்பையை அகற்ற மாநகராட்சி ஆணையர் எம்.பி. அமித் உத்தரவிட்டார். திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பையை கடந்த காலத்தில் அருகில் உள்ள பாறைக் குழிகளில் கொட்டி வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து குப்பை அகற்றும் பணி யில் நெருக்கடி ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, நக ராட்சி நிர்வாக இயக்குநர் நேரில் வந்து இப்பிரச் சனையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டார். அப்போதைய மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் தலைமையிலான மாநகராட்சி நிர்வாகம் திடக் கழிவு மேலாண்மை பூங்கா அமைப்பது போன்ற பணி களை மேற்கொண்டனர். இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளில் சேகரமாகும் குப்பையை முதல் நிலை மையங்களில் சேமித்து வைத்து அடுத்து இரண்டாம் நிலை சேமிப்பு பகுதிகளாக சில இடங்களைத் தேர்வு செய்து மொத்தமாக அங்கு குப்பையைக் கொட்டி வைத்தனர். பின்னர் அங்கிருந்து குப்பை மேலாண்மை செய்யும் பகுதிகளுக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்தனர்.

அதன்படி 25ஆவது வார்டு சிறுபூலுவபட்டி அம்மன் திருமண மண்டபம் அருகில் இருந்த காலி இடத்தில் குப்பை சேகரித்து வைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இங்கு குப்பை கொட்டி தேக்கி வைக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், கொட்டி வைக்கப்பட்ட குப்பையால் துர்நாற்றம், பூச்சித் தொல்லை ஏற்பட்டு வந்தது. இது இந்த வட்டார மக்களுக்கு சுகாதார சீர் கேடும், நோய் தாக்கக்கூடிய அபாயமும் இருந்த தால் இங்குள்ள குப்பையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்த னர். இந்நிலையில் வியாழனன்று மாநகராட்சி ஆணை யர் எம்.பி.அமித் இந்த இடத்தை நேரில் பார்வை யிட்டு, மாநகராட்சி அதிகாரிகளிடம், இங்குள்ள குப் பையை உடனடியாக அகற்றி தூய்மைப்பணி மேற் கொள்ளுமாறு உத்தரவிட்டார். சுகாதார ஆய்வாளர் கோகுல் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடனி ருந்தனர்.

பச்சிளம் குழந்தை உயிரிழப்பு: போலீசார் விசாரணை

தருமபுரி, மே 14- தருமபுரியில் பிறந்து 38 நாட்களே ஆன நிலையில், பெண் குழந்தை உயிரிழந்த சம்ப வம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜிட்டாண்ட அள்ளி அருகே உள்ள சென்னம் பட்டி பகுதியை சேர்ந்த சித்தராஜி - தீபா தம்பதிக்கு, 4 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஏப்.2 ஆம் தேதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், அதில் ஒரு குழந்தைக்கு செவ்வாயன்று பால் கொடுத்து கொண்டிருந்தபோது, திடீ ரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே குழந்தையை அருகிலிருந்த ஜக்கசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு செவிலியர் இல்லாததால், பாலக்கோடு அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோ தித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்ட தாக தெரிவித்தனர். இதுகுறித்து மகேந் திரமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

அணைகள் நிலவரம் (வியாழக்கிழமை)

பவானிசாகர் அணை நீர்மட்டம்:59.79 அடி நீர்வரத்து:357 கனஅடி நீர்திறப்பு:200 கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:31.44/72 அடி நீர்வரத்து:50கனஅடி நீர்திறப்பு:1110கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:12.84/160அடி நீர்வரத்து:30.23கனஅடி நீர்திறப்பு:5.00கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:61.70/120அடி நீர்வரத்து:396கனஅடி நீர்திறப்பு:81கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:44.35/60அடி நீர்வரத்து:800கனஅடி நீர்திறப்பு:234கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:25.00/90அடி நீர்வரத்து:89கனஅடி நீர்திறப்பு:கனஅடி