தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

30 May 2026, 11:31 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

அடிப்படை உரிமைகள் உறுதி செய்ய வானவில் கூட்டமைப்பு கோரிக்கை

கோவை, மே 30- கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கோவை வானவில் கூட்டமைப்பு பால் புதுமையினர் சமூகத்தினரின் உரிமைகள் மற்றும் பாது காப்பு தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யது. இதுகுறித்து பேசிய அமைப்பின் நிர்வாகிகள், தமிழக அரசு 2024 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய பால் புதுமை யினர் (LGBTQIA+) கொள்கை வரவேற்கத்தக்கது. அதில் இடம்பெற்றுள்ள திட்டங்களை முழுமையாக நடைமுறைப் படுத்த வேண்டும். திருநங்கைகள், லெஸ்பியன், கே, பைசெக் சுவல், க்வியர் மற்றும் இடைபால் நபர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவ சேவைகள் உள்ளிட்ட அடிப்படை உரிமை கள் உறுதி செய்யப்பட வேண்டும். மேலும், பாலின அடையா ளம் மற்றும் பாலியல் ஈர்ப்பு அடிப்படையிலான பாகுபாடு களை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் அதிகரிக்க வேண்டும். பாலின உறுதிப்படுத்தல் மருத்துவ சேவைகள் தர மான முறையில் வழங்கப்பட வேண்டும். மாவட்ட அளவில் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். திருநங்கைகள் மற்றும் இடைபால் நபர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குதல், பாலின-நடு நிலை கழிப்பறைகள் அமைத்தல், மாற்றுச் சிகிச்சையை தடை செய்தல் மற்றும் சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி; இழப்பீடு வழங்க சிஐடியு கோரிக்கை

சேலம், மே 30- சேலம் உருக்கு ஆலையில் அப்ரண்டீஸ் தொழிலாளியாக பணியாற்றி வந்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், தாரமங்கலத்தைச் சேர்ந்த மாணிக்கத்தின் மகன் மதன்குமார் (25), சேலம் உருக்கு ஆலையின் மின்பிரிவில் அப்ரண்டீஸ் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். வெள்ளியன்று இரவு பணியில் இருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உடனடியாக சக தொழிலாளர்கள் அவரை சிகிச்சைக்காக உருக்காலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், மதன்குமாரின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறிய உறவினர்கள் சேலம்–இரும்பாலை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து செல்லச் செய்தனர். இந்நிலையில், சிஐடியு தொழிற்சங்க பொதுச் செயலாளர் நிர்வாக இயக்குநரிடம் மனு அளித்து, உயிரிழந்த மதன்குமாரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

போக்குவரத்து நெரிசலை குறைக்க அமைச்சர் ஆய்வு

நாமக்கல், மே 30- ராசிபுரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் காவல்துறை யினருடன் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகர் பகுதியில் திருமண நாட்கள், திருவிழா காலம் உள்ளிட பல்வேறு நாட்களில் கடும் போக்கு வரத்து நெரிசலானது ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். இதுகுறித்து தற்போது பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச் செல்வனுக்கு புகார் செல்ல, அவர் பழைய பேருந்து நிலையத்தில் வெள்ளியன்று காவல்துறையினருடன் சாலையில் ஆய்வு மேற்கோண்டு ஆலோசனையில் ஈடுபட் டார். அப்போது, பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் போக்குவரத்து மாற்றம் குறித்து பொது மக்களிடையே கருத் துக்களை கேட்டறிந்தார். ஆட்டோ ஓட்டு நர்கள் மற்றும் பலர் பழைய முறைப்படி போக்குவரத்து மாற்றம் செய்ய வேண்டும் என கூறிய நிலையில் புதிய பேருந்து நிலை யத்திலிருந்து வெளியே செல்லும் வாகனங் கள் காஞ்சிசூப்பர் மார்க்கெட், சேலம் சாலை உள்ளிட்ட வழியாக வாகனங்கள் வெளியே செல்வதற்கும், மேலும் நகர்பகுதியில் உள்ளே வருவதற்கு வாகனங்கள் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இடதுபுறமாக சென்று புதுப்பாளையம் சாலை, பட்டணம் சாலை, டிவிஎஸ் சாலை உள்ளிட்ட வழியாக சென்று புதிய பேருந்து நிலையம் சென்றடை யும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்ய அதிகாரிகளுடன் முடிவு செய்தனர்.

ரிதன்யா வழக்கை முறையாக விசாரிக்க அமைச்சரிடம் முறையீடு

திருப்பூர், மே 30- வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா வழக்கில், தமிழ்நாடு அரசு தலை யிட்டு, வழக்கை முறையாக விசாரிக்க வலியுறுத்தி அவ ரது குடும்பத்தார் கால்நடை பராமரிப்புத்துறை அமைச் சர் கமலியிடம் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை - ஜெயசுதா தம்பதிய ரின் மகள் ரிதன்யா. இவர் கடந்தாண்டு ஜூன் மாதம், திரு மணமான 78 நாட்களில் காருக்குள் விஷம் அருந்தி தற் கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவிநாசி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசா ரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரிதன்யா வின் பெற்றோர், அவிநாசி பயணியர் மாளிகையில் தங்கியிருந்த, அவிநாசி சட்டமன்றத் தொகுதி உறுப்பின ரும், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரு மான கமலியை நேரில் சந்தித்து முறையிட்டனர். கடந்த ஆட்சியில் தங்களது மகள் தற்கொலை குறித்து, அவி நாசி துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் வரு வாய் கோட்டாட்சியர் ஆகியோர் அரசியல் அழுத்தம் கார ணமாகவும், லஞ்சம் பெற்றுக் கொண்டும் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை எனக்கூறி மனு அளித்த னர். அந்த மனுவில், தன் மகள் ரிதன்யாவின் தற் கொலைக்கு காரணமான ரிதன்யாவின் கணவர் கவின், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி மற்றும் தாய் சித்ரா தேவி ஆகியோர் அரசியல் செல்வாக்கும் பணபலம் கொண்டவர்கள். அப்போது பணியில் இருந்த காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம் ஆகியோர் முறையாக விசாரிக்காமல் ஒருதலை பட்சமாக நடந்து கொண்டனர். அவர்கள் மீது துறைரீதியாகவும் மற்றும் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இந்த வழக்கை எஸ்பி அந்தஸ்துள்ள நேர்மையான அதி காரியை நியமித்து, மீண்டும் மேல் விசாரனை செய்து கூடுதல் குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும். குற்றவாளிகளால் மறைத்து வைக்கப்பட்டுள்ள வரதட்சனையாக கொடுக்கப்பட்ட தங்க நகைகள் மற்றும் சொகுசு காரை உடனடியாக மீட்டு நீதிமன்ற காவலில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்க ளது மனுவை பெற்று விளக்கங்களை கேட்டறிந்த அமைச்சர் கமலி, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

சிறுமி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர் மீது கடும் தாக்குதல்

கோவை, மே 30- கோவை, சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப் பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப் பட்ட கார்த்திக், சக கைதிகளால் தாக்கப் பட்டதைத் தொடர்ந்து பலத்த காயங்க ளுடன் மீண்டும் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, இந்த வழக்கில் கார்த்திக்-கை கைது செய்யும் போது ஏற்பட்ட விபத்தால், கை, கால்கள் உடைந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிவடைந்ததைத் தொடர்ந்து, வியாழனன்று அவர் பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், சிறையில் அடைக் கப்பட்ட கார்த்திக் மீது அங்குள்ள சக கைதிகள் திடீரென பயங்கர தாக்குத லில் ஈடுபட்டனர். சிறை உணவுக் கூடத் தில் இருந்த தட்டுகள், ஸ்பூன்கள் மற்றும் கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு கைதிகள் கார்த்திக்கை சர மாரியாக தாக்கியதாகக் கூறப்படு கிறது. சக கைதிகளின் இந்த திடீர் தாக்கு தலில் கார்த்திக்கிற்கு உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறைக்காவலர்கள் உடனடியாக அவரை மீட்டு, பலத்த பாதுகாப்புடன் மீண்டும் கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித் துள்ளனர். இதுகுறித்து சிறைத்துறை வட்டாரங்கள் கூறுகையில், குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்றதைய றிந்த சிறைவாசிகள் ஆவேசமடைந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தெரி கிறது. சிறுமி கொலை வழக்கில் கைதான நபர் சிறையிலேயே சக கைதிகளால் தாக்கப்பட்ட சம்பவம் கோவை மத்திய சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

மூளைச்சாவு ஏற்பட்டவரின் உடலுறுப்புகள் தானம்

திருப்பூர், மே 30- விபத்தில் காயமடைந்து, மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞரின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டன. திருப்பூர் மாவட்டம், மங்கலம் பகுதியை சேர்ந்த சாந்தமூர்த்தி – தமிழரசி தம்பதியினரின் மகன் ரித்தீஷ் குமார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, மங்கலம் நெடுஞ் சாலையில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் கோவையில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வியாழனன்று மாலை சுமார் 5 மணி அள வில் ரித்தீஷ் குமாருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து, மனித நேய முடிவெடுத்த அவரது பெற்றோர், ரித்தீஷ் குமாரின் உடலுறுப்புகளை தானமாக வழங்க ஒப்புதல் அளித்த னர். அதன்படி, அவரது கல்லீரல் கோவை ராயல் கேர் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் கோவை கேஎம்சிஎச் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் வேலூரில் உள்ள நாராயணி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. அதேபோல் நுரையீரல் சென்னை குளோபல் கிளினிக் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இளம் வயதிலேயே உயிரிழந்த ரித்தீஷ் குமாரின் உறுப்பு தானம் மூலம் பல்வேறு நபர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கவுள்ளதாக மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர்.

பரம்பிக்குளம் அணை

நீர்மட்டம்:23.78/72அடி நீர்வரத்து:40கனஅடி நீர்திறப்பு:960கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:27.08/160 அடி நீர்வரத்து:47.13கனஅடி நீர்திறப்பு:5.00கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:66.20/120அடி நீர்வரத்து:199கனஅடி நீர்திறப்பு:131கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:53.00/60அடி நீர்வரத்து:812கனஅடி நீர்திறப்பு:1188கனஅடி

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.