கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
7 Jun 2026, 12:52 am

சிறுமி பாலியல் வன்கொலை வழக்கு: போலீஸ் காவல் நிறைவு

கோவை, ஜூன் 6- சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை யும் காவலில் எடுத்து விசாரித்த போலீசார், விசார ணைக்கு பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர். சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந் நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்ட னர். விசாரணைக்கு பின்னர் இருவரையும் சனியன்று போக்சோ நீதிமன்றத்தில் போலீசார் நேர்நிறுத்தினர். நீதிமன்றத்தின் கதவுகள் மூடப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில், நீதிபதி பகவதி அம்மாள் இரு வரையும் வரும் 12 ஆம் தேதி வரை கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

நியாய விலை கடை ஊழியர்களின் கோரிக்கை சிஐடியு வலியுறுத்தல்

கோவை, ஜூன் 6- நியாய விலை கடை ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோவை மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் (சிஐ டியு) வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அச்சங்க மாவட்டச் செயலாளர் எம். ஏழுமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டுறவுத் துறை அமைச்சர், உணவுத்துறை அமைச்சர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் ஆகியோர் நியாய விலை கடை ஊழியர்களின் நியாயமான கோரிக் கைகளில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண் டும். அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்த புதிய ஊதி யம் கோவை மாவட்டத்தில் இதுவரை அமல்படுத்தப் படவில்லை என்றும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி யதற்கான ஊக்கத்தொகையும் ஊழியர்களுக்கு வழங் கப்படாமல் நிலுவையில் உள்ளது. அரசு அறிவித்த அக விலைப்படியை முன்தேதியிட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பருவமழையை எதிர்கொள்ள தயார்: கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி!

கோவை, ஜூன் 6- தமிழகத்தில் இயற்கைச் சீற்றங்களால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில், முதலமைச்சர் உத்தரவின் பேரில் 24 மணி நேரமும் தீவிர முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்மேற்குப் பருவமழையை எதிர்கொள்ள நீல கிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இப்போதே ஆயத்தப் பணிகள் தொடங்கி கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் தேடி வந்து கேட்காத அளவுக்கு உடனுக்குடன் நிவாரணப் பணிகளை ஆற்ற வேண் டும் என்பதே முதலமைச்சரின் ஆணை, என்றார்.

அமைச்சர் கமலியிடம் விசைத்தறியாளர்கள் மனு!

அவிநாசி, ஜூன் 6- கோவை - திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர், சனியன்று அவிநாசியில், கால் நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கமலியிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர். அம்மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் இரண்டு லட்சம் சாதா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. வழக்கமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய முத்தரப்பு பேச்சு வார்த்தை மூலம் கூலி உயர்வு ஒப்பந்தம் அமல்ப டுத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 2014 முதல் 12 ஆண்டுகளாக ஜவுளி உற்பத்தியாளர்கள் புதிய ஒப்பந்தக் கூலியை முழுமையாக வழங்காமல், மனி தாபிமானமற்ற முறையில் கூலியை குறைத்து வழங்கி வருகின்றனர். எனவே இதில் தலையிட்டு கூலி உயர்வை உறுதி செய்ய வேண்டும். நெசவுக் கூலியை குறைத்து வழங்கும் ஜவுளி உற்பத்தியா ளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, 2025-ஆம் ஆண்டிற்கான புதிய நெசவுக் கூலி உயர்வு ஒப்பந் தத்தை உடனடியாக போர்க்கால அடிப்படையில் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனுவினை அளித்தனர்.

பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு

நாமக்கல், ஜூன் 6- பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்கொடு மைகளை தடுப்பது குறித்து கூடுதல் மாவட்ட துணை கண்காணிப்பாளர் தலைமையில் மக்கள் கூடும் இடங்களில் போலீசார் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தினர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதி யில் அண்மையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் கள் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜய ராகவன் தலைமையில் வெள்ளியன்று போலீசார் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தினர். பேருந்து நிலையம், தினசரி சந்தை மற்றும் காவிரி நகர் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நடை பெற்ற நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு செல்போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துதல், நல்ல மற்றும் தவறான தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து தல், தெரியாத நபர்களிடமிருந்து மிட்டாய் அல்லது பொருட்கள் வாங்கக்கூடாது உள்ளிட்ட பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

ஒயர் திருட்டு முயற்சி: 3 பேர் கைது

அவிநாசி, ஜூன் 6- சேவூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்து மின் மோட்டார் ஒயர்களை திருடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவிநாசி ஒன்றியம், சேவூர் அருகே உள்ள மங்க ரசுவலையபாளையம் பள்ளத் தோட்டம் பகுதியில் வெள்ளியன்று சிலர் அத்துமீறிப் புகுந்துள்ளனர். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், உடனடி யாக தோட்டத்தின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, தோட்ட உரிமையாளர் மற்றும் பொதுமக்கள் விரைந்துள்ளனர். இவர்கள் வருவதை கண்ட அந்த மூவர், அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். எனினும், பொதுமக்கள் விரட்டி பிடித்து, சேவூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த னர். முதற்கட்டமாக போலீசார் நடத்திய தீவிர விசார ணையில், அவர்கள் முதலிபாளையத்தை சேர்ந்த செல்வகுமார் (23), நடராஜ் (24) மற்றும் கவின் (எ) கார்த்திக் (23) என்பது தெரியவந்தது. இவர்கள் தோட் டத்திற்குள் புகுந்து மின் மோட்டார் ஒயர்களை திருட முயன்றதும் தெரியவந்தது. தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், மூவரையும் கைது செய்தனர்.