கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
17 Jun 2026, 12:24 am

காவலர் பணியிடை நீக்கம்

கோவை, ஜூன் 16- கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டிருந்த கைதி தப்பிய விவகாரத்தில், மேலும் ஒரு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கார் மோசடி வழக்கில் திருப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் பிம்மிடு அஜித் குமார் (26), கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். உடல் நிலை சரியில்லை என்பதால் கோவை அரசு மருத்துவமனை யில் சிகிச்சையில் இருந்தார். கடந்த 12 ஆம் தேதி இரவு கழிப்ப றைக்கு செல்வதாகக்கூறி அவர் அங்கிருந்து தப்பினார். இது குறித்த புகாரின்பேரில், பந்தய சாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, சேலம் மாவட்டம், ஓமலூரில் பதுங்கியிருந்த பிம்மிடு அஜித்குமாரை கைது செய்தனர். விசாரணையில் அவர் தப்பிச் செல்ல ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் ஷேக் முகமது ரோஷன் (42) உதவியது தெரியவந்தது. இதற் காக ஷேக் முகமது ரோஷன் ரூ. 20 ஆயிரம் முன்பணமாக பெற்றதும், பின்னர், கணிசமான தொகை தரவேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததும் தெரியவந்தது. இந்த வழக்கில் ஷேக் முகமது ரோஷன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை மாநகர காவல் ஆணையர் கண்ணன் பணி யிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். பணியின்போது அஜாக் கிரதையாக செயல்பட்டதாக சிறப்பு காவல் உதவியாளர் பெரியசாமி, காவலர்கள் பாரதிதாசன், அசோக்குமார் ஆகிய மூவர் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிர் உரங்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி

உதகை, ஜூன் 16- உதகை வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், சோலூர் கிராம விவசாயிகளுக்கு மண்வள பாதுகாப்பு, உயிர் உரங் கள் தயாரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில் இயங்கி வரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ், உள் மாவட்ட பயிற்சி வகுப்பு சோலூர் கிராமத்தில் செவ்வா யன்று நடைபெற்றது. ஆவின் நிறுவனத்தின் விற்பனை துறை யில் பணியாற்றிய ராஜன் என்பவர், மதிப்பு கூட்டப்பட்ட பால் மற்றும் பால் உபபொருள் என்ற தலைப்பில் பேசினார். மாடு வளர்ப்பின் முக்கியத்துவங்கள் குறித்தும் அரசு வழங்கும் தொழில் முனைவோர் திட்டங்கள் குறித்தும் விளக்கினார். அரசு ரோஜா பூங்கா தோட்டக்கலை உதவி இயக்குநர் பைசல், மண்ணியல் துறையின் இணை பேராசிரியர் தேன்மொழி, உதகை மண் பரிசோதனை கூடத்தின் வேளாண் அலுவலர் சாய்நாத் ஆகியோர் விவசாயிகளுக்கு வகுப்பெடுத்தனர்.

நகை கொள்ளை'

ஈரோடு, ஜூன் 16- ஈரோடு, ரங்கம்பாளை யம், கந்தன் நகரை சேர்ந்த வர் சாமியப்பன் (62). ஓய்வு பெற்ற ரயில்வே அலுவல ரான இவர், வீட்டை பூட்டி விட்டு, திங்களன்று சென்றுள் ளார். வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப் பட்டு பீரோவிலிருந்த 55 பவுன் நகைகள், ரூ.20 ஆயி ரம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந் தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாகனங்கள் திருட்டு: 4 பேர் கைது

உதகை, ஜூன் 16- இருசக்கர வாகனங்களை திருடிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்த கேத்தி பாலாடா திருவள்ளுவர் நகர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் கடந்த ஜூன் 11 ஆம் தேதி திருடுபோனது. இது குறித்து கேத்தி காவல் நிலையத்தில் வாகனத்தின் உரிமை யாளர் புகாரளித்தார். இதேபோல, எல்லநள்ளி அரசுப்பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் கடந்த ஜூன் 12 ஆம் தேதியன்று திருடுபோனது. இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு களை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில், வாகன திருட்டில் ஈடுபட்டது கேத்தி பகுதியை சேர்ந்த 17 வயதான கல்லூரி மாணவர்கள் 3 பேர் மற்றும் பள்ளி மாணவர் ஒரு வர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்களை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளி யில் அடைத்தனர்.

நீலகிரி நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

உதகை, ஜூன் 16- நீலகிரி மாவட்ட நீதிமன்றத்திற்கு மின் னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக் கப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் சமீப நாட்களாக அரசு அலுவலகங்கள், நட்சத்திர விடுதிகள் மற்றும் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரு வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், செவ்வாயன்று உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள் ளது. இதுகுறித்து உடனடியாக போலீசா ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீ சார், நீதிமன்ற வளாகம், கழிவறை, வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டு எது வும் சிக்கவில்லை. இந்த மிரட்டல் புரளி என தெரியவந்தது.

இலக்கியம்பட்டி ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

தருமபுரி, ஜூன் 16- இலக்கியம்பட்டி ஏரி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கோடை மழை யினால் ஏரி நிரம்பியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தருமபுரி - சேலம் சாலையில், இலக்கி யம்பட்டி ஏரி, 4.5 ஏக்கர் பரப்பளவில் அமைந் துள்ளது. இந்த ஏரிக்கு வத்தல்மலை அடிவா ரம் நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது. ஆண்டு முழுவதும் ஏரியில் தண்ணீர் இருந்து கொண்டே இருக்கும். கடந்த சில ஆண்டுக ளாக வத்தல்மலையில் இருந்து வரும் மழை நீர் தடைப்பட்டது. மேலும், நீர் வரும் கால் வாய் ஆங்காங்கே ஆக்கிரமிப்பு செய்யப் பட்டதால், மழைநீர் சீராக ஏரிக்கு வருவ தில்லை. குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேவரும் கழிவுநீர் மற்றும் மழைநீர் மட்டுமே இலக்கியம்பட்டி ஏரிக்கு நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது. தற்போது கழிவுநீர் ஏரி யில் கலப்பதால், இந்த ஏரியில் எப்போதும் தண்ணீர் இருந்துக்கொண்டே இருக்கும். கோடைக்காலம் என்பதால் கடும் வெயிலால் ஏரியில் தண்ணீர் குட்டை போல் காணப்பட் டது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இலக்கியம்பட்டி ஏரியை சுற்றுவட்டார பகுதி யில் கன மழை பெய்ததால், தற்போது ஏரி நிரம்பியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவ சாயிகள் கூறுகையில், இந்த ஏரியை சுற்றி மரங்கள் நடப்பட்டுள்ளன. ஏரியின் நடுவில் தீவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொக்குகள், நீர் பறவைகள், வெளிநாட்டு பறவைகள் வந்து வசிக்கும் வகையில் இந்த ஏரி உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதொடர்ந்து பெய்த மழையினால், இந்த ஏரி நிரம்பியுள் ளதால், விவசாயப் பணிகள் நடக்கும் என தெரிவித்தனர்.

அமைச்சர் அருண்ராஜ் திடீர் ஆய்வு

நாமக்கல், ஜூன் 16- நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள சமுதாய சுகாதார நிலையத்தில் சிகிச்சை சேவைகள் முறை யாக வழங்கப்படவில்லை என்ற பொதுமக்களின் புகாரைய டுத்து, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் திங்களன்று ஆய்வு மேற் கொண்டார். புறநோயாளிகள் பிரிவு, பிரசவ வார்டு, கழிப்பறை வசதி கள் மற்றும் மருத்துவமனை வளாகத்தை அமைச்சர் ஆய்வு செய்தார். மருத்துவமனை சுற்றுவட்டாரத்தில் புதர்கள் மண்டி காணப்பட்டதை கண்ட அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிக ளிடம் தூய்மைப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள உத் தரவிட்டார். பிரசவ வார்டில் அனைத்து படுக்கைகளும் காலியாக இருந்ததைக் கண்டு, இந்த மாதத்தில் எத்தனை பிரச வங்கள் நடைபெற்றன என கேட்டறிந்தார். அதற்கு, இந்த மாதத்தில் ஒரு பிரசவமும் நடைபெறவில்லை என மருத்து வர்கள் தெரிவித்தனர். இதற்கான காரணங்களையும் அமைச் சர் கேட்டறிந்தார். அமைச்சரின் வருகையின்போது பொதுமக்கள் மருத்து வமனை நிர்வாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். மருத்துவ ஊழியர்கள் நோயாளிகளிடம் முறை யாக நடந்து கொள்வதில்லை என்றும், சிகிச்சைக்காக வரும் மக்களை வெளியூர் மருத்துவமனைகளுக்கு அனுப்புவதாக வும் புகார் தெரிவித்தனர். மேலும், மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கான நுழைவாயில் செயல்படாத நிலையிலும், மருத்துவமனை பராமரிப்பு குறைபாடுகளிலும் அதிருப்தி தெரிவித்த அமைச்சர், உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிக ளுக்கு உத்தரவிட்டார்.

100 நாள் வேலை திட்டத்தில் கருவிழி பதிவு சிக்கல்

அவிநாசி, ஜூன் 16- அவிநாசி சுற்றுவட்டார கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளிகளுக்கு கரு விழி பதிவு செய்வதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அவிநாசி ஒன்றியத்தில், 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு, அவர் களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக இந்த திட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் கருவிழி மற்றும் கைரேகை பதிவாகாததால் தொழிலாளிகளுக்கு வேலை மறுக்கப்பட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இப்பிரச்சனையை தீர்க்கும் வகையில் தொழிலாளர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலமாக சிறப்பு முகாம்கள் நடத்தி ஆதார் விவரங்களை புதுப் பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் பதிவு சிக்கலால் வேலை மறுக்கப்படாமல் மாற்று வருகைப் பதிவு முறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், தொழில்நுட்ப குறைபாடுகளை காரணம் காட்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல், அனை வருக்கும் தடையின்றி வேலை வழங்க அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பல்நோக்கு மைய கட்டிடத்தை பொது நூலகமாக மாற்ற வாலிபர் சங்கம் கோரிக்கை!

உடுமலை, ஜூன் 16- உடுமலை அருகே இடிந்து விழும் நிலை யில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான பல் நோக்கு மைய கட்டிடத்தை புதுப்பித்து, இணைய வசதியுடன் கூடிய பொது நூலக மாக மாற்றக் கோரி செவ்வாயன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஊராட்சி செயலாளரிடம் மனு அளித்தனர். ஆண்டியகவுண்டனூர் ஊராட்சிக்குட் பட்ட உரல்பட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்ற னர். இப்பகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல் லூரிகளுக்கு சென்று படிக்கின்றனர். இவர் கள் தங்களது பொது அறிவை வளர்த்து கொள்ளவும், போட்டித் தேர்வுகளுக்கு தயா ராவதற்கும் ஏதுவாக பொது நூலகம் அமைத் துத் தர வேண்டும் என்று நீண்ட நாட்க ளாக பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், கிராமத்தில் தற்போது பயன்பாடின்றி சேதமடைந்துள்ள பல் நோக்கு மைய கட்டிடத்தை மாணவர்களின் நலன் கருதி புதுப்பிக்க வேண்டும் என்றும், அதனை அதிவேக இணைய வசதியுடன் கூடிய நவீன பொது நூலகமாக மாற்றிய மைக்க வேண்டும் என்றும் வாலிபர் சங்கத் தின் ஒன்றிய செயலாளர் கருப்புசாமி ஊராட்சி நிர்வாகத்திடம் செவ்வாயன்று மனு அளித் தார். மேலும், கிராம மக்கள் அனைவருக்கும் தங்கு தடையின்றிச் சீரான குடிநீர் விநியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத் தப்பட்டுள்ளது.

அணைகள் நிலவரம்

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:19.12/72 அடி நீர்வரத்து:30கனஅடி நீர்திறப்பு:730கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:60.54/160 அடி நீர்வரத்து:318.46கனஅடி நீர்திறப்பு:5.00கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:63.50/120அடி நீர்வரத்து:168கனஅடி நீர்திறப்பு:286கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:36.22/60அடி நீர்வரத்து:719கனஅடி நீர்திறப்பு:927கனஅடி

லாரி வாடகை 25% உயர்வு: அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கவலை!

நாமக்கல், ஜூன் 16- டீசல் விலை உயர்வு, சுங்கச்சா வடி கட்டண அதிகரிப்பு மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு காரணமாக, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம் மேளனம் அறிவித்தபடி ஜூன் 15 முதல் மாநிலம் முழுவதும் 25 சதவீத லாரி வாடகை கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, டிப்பர் லாரிகள்: ரூ.10 - 25லிருந்து ரூ.12 - 30 ஆக உயர்வு. இல குரக வாகனங்கள்: ரூ.20 - 50லிருந்து ரூ.23 - 60 ஆக உயர்வு. கனரக கன்டெய் னர்கள்: ரூ.35 - 85லிருந்து ரூ.50 - 110 ஆக உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. (உதார ணமாக, சேலம் - சென்னைக்கு ஒரு டன் சரக்கு வாடகை ரூ.1,000-லிருந்து ரூ.1,250 ஆக உயர்ந்துள்ளது). தமிழகம் முழுவதும் நாள்தோறும் மளிகை, காய்கறிகள், பால், கோழித்தீவ னம், சிமெண்ட், இரும்பு உள்ளிட்ட அத் தியாவசியப் பொருட்கள் லாரிகள் மூலமே கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ளதால், சந்தைகளுக்கு வரும் காய்கறிகள் மற்றும் இதர பொருட்களின் இறுதி விற்பனை விலை அடுத்த சில நாட்களில் கணிசமாக உய ரும் என வணிகர்கள் கவலை தெரிவித் துள்ளனர். இது ஏழை, நடுத்தரக் குடும் பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் கூடு தல் சுமையை ஏற்படுத்தும் என பொது மக்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்மேளன மாநிலத் தலைவர் தனராஜ் கூறுகையில், தமி ழகத்தில் 6.50 லட்சம் லாரிகளும், 20 லட்சம் இலகுரக வாகனங்களும் இயங் குகின்றன. காப்பீடு, டயர், உதிரி பாகங்கள் விலை உயர்வால் தொழில் முடங்கும் சூழலில், தவிர்க்க முடியாமல் இக்கட்டண உயர்வை அமல்படுத்தியுள் ளோம். இதற்கு பொதுமக்கள், வியா பாரிகள் ஒத்துழைக்க வேண்டும். ஒன் றிய அரசு டீசல் விலையைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றார். அரசுகள் சுங்கக் கட்டணம் மற்றும் டீசல் விலைக்கு மாற்றுத் தீர்வு கண்டு, போக்குவரத்துத் துறைக்கு சலுகை கள் வழங்கினால் மட்டுமே எதிர்காலத் தில் கூடுதல் கட்டண உயர்வை தவிர்க்க முடியும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது.