கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
14 Jun 2026, 1:09 am

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

கோவை, ஜூன் 13– போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஜூன் 17 ஆம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளதாக கோவை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சம்மந்தப் பட்டு பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உரிய சட்ட நடவடிக் கைகளுக்குப்பின் அரசுடைமையாக்கப்பட்டன. இந்த வாக னங்கள் ஏலம் விடப்பட உள்ளன. கோவை - அவிநாசி சாலையிலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஜூன் 17 ஆம் தேதி (புதன்கிழமை) இந்த வாகனங்கள் எந்த நிலை யில் உள்ளதோ அதே நிலையில் பொது ஏலத்தில் விடப்படு கின்றன. ஏலத்தில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், இந்த வாகனங்களை முன்கூட்டியே நேரில் சென்று பார்வை யிடலாம். ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புவோர் 17 ஆம் தேதி காலை 8 மணிக்கு அசல் ஆதார் அட்டை மற்றும் அதன் நகல் ஒன்றுடன் ஆயுதப்படை மைதானத்திற்கு வர வேண் டும். அங்கு ரூ.1000 முன்பணம் செலுத்தி டோக்கன் பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக் கப்படுவார்கள். டோக்கன் பெறாதவர்களுக்கு அனுமதி கிடை யாது. வாகனங்களை ஏலம் எடுத்தவுடன், ஏலத்தொகை மற் றும் அதற்கான 18 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியை அன்றே முழுமையாக அரசுக்கு ரொக்கமாக செலுத்தி வாக னங்களை பெற்றுக்கொள்ளலாம் என காவல்துறை தரப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷிகெல்லா நோய் பரவல் எதிரொலி; அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு

கோவை, ஜூன் 13- கேரளத்தில் ஷிகெல்லா நோய் பரவுவதன் எதிரொலியாக கோவை அரசு மருத்துவமனையில் 11 படுக்கைகள் போடப் பட்டு சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது. கேரளம் மாநிலத்தில், ஷிகெல்லா நோய் தொற்று வேக மாக பரவி வருகிறது. இதனால் வயநாடு மற்றும் கோழிக் கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் 100 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக இந்த பாதிப்பு கோழிகோட்டை சேர்ந்த சிறுமி உயிரிழந்தார். தற்பொழுது தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளது. இந்நிலை யில் கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு தென்பட்டது. இத னால் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளத்தில் ஷிகெல்லா நோய் பரவல் எதிரொ லியாக தமிழகம் - கேரளா எல்லையில் சுகாதாரத் துறையினர் மருத்துவக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தீவிர சோதனைக்கு பின்னரே கேரளத்தில் இருந்து வாகனங் கள் அனுமதிக்கப்படுகின்றன. கேரளத்தில் ஷிகெல்லா நோய் பரவல் எதிரொலியாக கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இங்கு 11 படுக்கைகள் போடப்பட்டு உள்ளன. மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலை யில் உள்ளனர். இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் கூறும் போது, கோவை மாவட்டத்தில் தீவிர காய்ச்சல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பிரச்சனை இருந்தால் சுயமாக மருந்து உட்கொள்ளாமல். உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக வேண்டும், என்றனர்.

அடிப்படை வசதிகள் கோரி வாலிபர் சங்கம் மனு!

திருப்பூர், ஜூன் 13- திருப்பூர் மாநகராட்சி 1-வது வார்டுக்குட் பட்ட விஜயபுரி கார்டன் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும். செட்டிபா ளையத்திலிருந்து அன்னையம்பாளையம் வரை தெருவிளக்குகள் பொருத்த வேண் டும், அங்கன்வாடி அருகில் உள்ள குப்பை களை அகற்ற வேண்டும் மற்றும் தெருநாய் கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாநகராட்சி முதலாம் மண்டல அலுவலகத்தில் வெள்ளி யன்று மனு அளித்தனர். முன்னதாக இக் கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், வாலிபர் சங்க வடக்கு ஒன்றியச் செயலாளர் சந்தோஷ், தலைவர் நரேந்திர பிரசாத், முன்னாள் மாமன்ற உறுப் பினர் கே.மாரப்பன், முன்னாள் ஒன்றியப் பொருளாளர் ராஜாமணி, கிளைச் செயலா ளர் தௌபிக், தலைவர் ரபிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜமாபந்தி அறிவிப்பு

ஈரோடு, ஜூன் 13- ஈரோடு மாவட்டத்தில் ஜமாபந்தி ஜூன் 17ஆம் தேதி தொடங்குகிறது. தாளவாடி வட்டத்தில் ஜூன் 17 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரால் ஜமாபந்தி நடத் தப்பட உள்ளது. பவானி வட் டத்தில் மாவட்ட வருவாய் அலுவலரால் ஜூன் 19 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. மொடக்குறிச்சி, கொடுமுடி, நம்பியூர் வட்டங்களில் ஜூன் 19 ஆம் தேதி வரையிலும், ஈரோடு மற்றும் அந்தியூர் வட்டங்களில் ஜூன் 23 ஆம் தேதி வரையிலும், பெருந் துறை, கோபி மற்றும் சத்திய மங்கலம் வட்டங்களில் ஜூன் 24ஆம் தேதி வரையிலும் நடைபெறும். சனி, ஞாயிறு மற்றும் திங்கள் நீங்கலாக நடைபெறும் 1435 ஆம் பச லிக்கான வருவாய் தீர்வா யத்தில் பொதுமக்கள் தங் கள் கோரிக்கை மனுக்களை சமர்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய தனியார் பள்ளி ஆசிரியர் கைது கோவை, ஜூன் 13- கோவையில் பள்ளி மாணவர்களுக்கு சமூக வலைத்த ளம் மூலம் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப் பிய தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பாபு (34). இவர் கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். கோடை விடுமுறையில், மாணவர்களை குறிவைத்து, டியூ ஷன் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக அவர்களு டன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இந்த சூழலைப் பயன் படுத்தி, பாபு தனது பொறுப்பில் இருந்த பள்ளி மாணவர் களின் வாட்ஸ்-அப் எண்களுக்கு தொடர்ந்து ஆபாசப் படங் கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி வந்ததாகக் கூறப்படு கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் தங்க ளது பெற்றோரிடம் விபரத்தை கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத் தரப்பில் இருந்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணை யில் ஆசிரியர் பாபு மாணவர்களுக்கு ஆபாசப் பதிவுகளை அனுப்பியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

மாணவர்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய தனியார் பள்ளி ஆசிரியர் கைது

கோவை, ஜூன் 13- கோவையில் பள்ளி மாணவர்களுக்கு சமூக வலைத்த ளம் மூலம் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப் பிய தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பாபு (34). இவர் கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். கோடை விடுமுறையில், மாணவர்களை குறிவைத்து, டியூ ஷன் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக அவர்களு டன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இந்த சூழலைப் பயன் படுத்தி, பாபு தனது பொறுப்பில் இருந்த பள்ளி மாணவர் களின் வாட்ஸ்-அப் எண்களுக்கு தொடர்ந்து ஆபாசப் படங் கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி வந்ததாகக் கூறப்படு கிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் தங்க ளது பெற்றோரிடம் விபரத்தை கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத் தரப்பில் இருந்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணை யில் ஆசிரியர் பாபு மாணவர்களுக்கு ஆபாசப் பதிவுகளை அனுப்பியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

மலக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

ஈரோடு, ஜூன் 13- அம்மாபேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மலக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை பேரூராட்சி மன்ற கூட்டம், தலைவர் வெங்கடாசலம் தலைமையில் வெள்ளி யன்று நடைபெற்றது. செயல் அலுவலர் ஜனாநந்தன் முன் னிலை வகித்தார். இக்கூட்டத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யம் மற்றும் மலக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.8.16 கோடியில் அமைக்க, கடந்த 30.1.2026-ல் பணியாணை வழங் கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு, ஒன்றிய அரசு 50 சதவிகி தமும், 33 சதவிகிதம் மாநில அரசின் மானியமாகவும், 17 சதவிகிததம் பேரூராட்சி மானியமாக நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.8.16 கோடியில், பேரூராட்சியின் பங்களிப்பாக ரூ.1.04 கோடி வழங்குவது திட்ட பணியாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை அம்மாபேட்டை பேரூராட்சியில் செயல்படுத்துவது தொடர் பான சாத்திய கூறுகள், கருத்துக்கேட்பு கூட்டம், முன் அனு மதி, திட்ட செயலாக்கம் குறித்து எவ்வித கருத்துகளும் கேட் கப்படவில்லை. இத்திட்டக்கான மாதாந்திர பராமரிப்பு, பணி யாளர் சம்பளம், போதிய நிதி ஆதாரம் உள்ளது குறித்து பேரூ ராட்சி மன்ற கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படவில்லை. எனவே, இத்திட்டத்தை செயல்படுத்தும் முடிவைக் கைவிட வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அணைகள் நிலவரம்

பவானிசாகர் அணை நீர்மட்டம்: 55.30/105அடி நீர்வரத்து: 941கனஅடி நீர்திறப்பு: 350கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:20.18/72 அடி நீர்வரத்து:35கனஅடி நீர்திறப்பு:410கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:58.04/160 அடி நீர்வரத்து:481.04கனஅடி நீர்திறப்பு:5.00கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:64.50/120அடி நீர்வரத்து:167கனஅடி நீர்திறப்பு:286கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:37.58/60அடி நீர்வரத்து:265கனஅடி நீர்திறப்பு:920கனஅடி

தப்பி ஓடிய கைதி சிக்கினார்

கோவை, ஜூன் 13- கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது தப்பியோடிய ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கைதியை, சேலம் போலீசார் சனியன்று கைது செய்தனர். ஆந்திராவை சேர்ந்த பிம்முடு அஜித்குமார், ‘ஓஎல்எக்ஸ்’ செயலியில் போலி விளம்பரம் செய்து கார் விற் பனையில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 30-க்கும் மேற்பட்ட வழக்கு கள் உள்ளன. ஏற்கனவே ஆந்திராவில் கைதியாக இருந்தபோது தப்பிய இவர், திருப்பூரில் மோசடியில் ஈடுபட்ட போது திருப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நலக் குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவ மனை கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த அஜித் குமார், வெள்ளியன்று மாலை போலீசாரின் பாதுகாப்பை மீறி தப்பியோடினார். இதுகுறித்து பந்தயசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர். அவர் ஆட்டோ மூலம் நீலம்பூர் வரை சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது. இந்நிலையில், சனியன்று சேலம் பகுதியில் சந்தேகத்திற் கிடமான முறையில் சுற்றித் திரிந்த அவரை, ரோந்துப் பணி யில் இருந்த சேலம் போலீசார் பிடித்து விசாரித்ததில் தப்பி யோடிய கைதி என்பது உறுதியானது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.