தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

14 Jul 2026, 10:27 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சாலையில் வீசப்பட்ட குழந்தை மீட்பு

கோவை, ஜூலை. 14- அரிசிபாளையம் அருகே சாலையில் வீசப்பட்ட, பிறந்து ஒரு மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், அரிசிபாளையம் மூலக்கடை வீதியை சேர்ந்த ஜோதிமணி என்பவர், செவ்வாயன்று அப்பகுதியில் உள்ள வி.கே.சி நிறுவனம் அருகே தனது வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு எதிர்பாராதவிதமாக குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. உடனடியாக அவர் சத்தம் வந்த திசையை நோக்கி சென்று பார்த்தபோது, அங்கு ஆண் குழந்தை ஒன்று கேட்பாரற்று கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், குழந்தையை உயிருடன் மீட்டு, பரிசோதித்த தில் பிறந்து ஒரு மணி நேரமே ஆன குழந்தை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அரிசிபாளையம் மருத்துவ மனை மருத்துவ அதிகாரி டாக்டர் பிரதீபா சம்பவ இடத் திற்கு நேரில் சென்று குழந்தைக்கு தேவையான முதலு தவி சிகிச்சைகளை அளித்தார். குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த பச்சிளம் குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போத்தனூர் காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏர்ஹாரன்கள் பொருத்திய 15 பேருந்துகளுக்கு அபராதம்

ஈரோடு, ஜூலை 14- பெருந்துறையில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பொருத் திய 15 பேருந்துகளுக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப் பட்டது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வழியாக பல்வேறு நக ரங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான தனியார் பேருந்து கள் மற்றும் சிப்காட் தொழிற்சாலைக்கும் பேருந்துகள் சென்று வருகின்றன. இதில் பல பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன் பொருத்தப்பட்டு, பொதுமக்க ளுக்கு இடையூறாக ஒலி எழுப்பிய படி சென்று வந்தன. இத னால், இந்த பேருந்துகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த னர். இந்நிலையில், திங்களன்று மாலை பெருந்துறை பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரேம்குமார், மோட்டார் ஆய்வாளர் முத்துசாமி ஆகியோர் மேற்பார்வையில், திடீர் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து மற்றும் சிப்காட்டிற்கு தொழிலாளர்களை ஏற்றி செல்லும் பேருந்து என 15 பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த ஒவ்வொரு பேருந்துகளுக்கும் ரூ.10 ஆயிரம் வீதம் 15 பேருந்துகளுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதமாக விதிக்கப் பட்டது.

மதுக்கடையை இடம் மாற்றக் கோரிக்கை

திருப்பூர், ஜூலை 14 - திருமுருகன் பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் மதுபானக் கடை (எண் 1513) பொது மக்கள் நெருக்கம் அதிகமுள்ள இடத்தில் இருப்பதால் இட மாற்றம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. திங்களன்று மார்க்சிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.பாலசுப்பிரமணியம் மாவட்ட ஆட்சிய ருக்கு கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்த மதுபா னக் கடை அருகில் அரசு ஆரம்பப்பள்ளி, கருப்பராயன் கோவில், நாகாத்தம்மன் கோயில், ராகவேந்திரா கோவில், வங்கி மற்றும் திருமுருகநாதர் கோயில் ஆகியன உள்ளன. மக்கள் அதிகம் பயன்படுத்தும் தேசிய நெடுஞ்சாலையில் இந்த கடை அமைந்துள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற் பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே இந்த கடையை இடம் மாற்றம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ வழக்குப்பதிவு

தருமபுரி, ஜூலை 14- பென்னாகரம் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து, கர்ப்பமாக்கிய நபர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு திங்களன்று 17 வயதுடைய சிறுமி பிரசவத்திற்காக வந்தார். அவரை பரிசோதித்த பணி யில் இருந்த மருத்துவர் நடத்திய விசாரணையில், இளம் வயது திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவர் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அந்த சிறுமி யிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த 2025 ஆம் ஆண்டு ஏரியூர் அருகே ஏர்கோல்பட்டி பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (29) என்பவர், சிறுமியை இளம்வயது திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. அந்த சிறுமி அளித்த புகாரின் பேரில், ராமமூர்த்தி மீது பென்னாகரம் மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், தப்பியோடிய அவரை தேடி வரு கின்றனர்.

போட்டித்தேர்வுக்கு தயாராகி வந்த பெண் தற்கொலை

கோபி, ஜூலை 14- நம்பியூர் அருகே அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி வந்த இளம்பெண் தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யத்தை அடுத்த நம்பியூர் அருகே உள்ள பழனிகவுண்டன்புதூரை சேர்ந்தவர் மோகன சுந்தரம் (53). இவரது மனைவி வசந்தாமணி. இவர்களது மகள் செளமியா (23), மகன் பிரவீன். இதில், செளமியா பிஏ படித்துவிட்டு, சென்னையிலுள்ள தனியார் பயிற்சி மையத் தில் அரசு போட்டித்தேர்வுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த ஒரு மாதமாக சௌமியா வீட்டிலிருந்தே படித்து வந்துள்ளார். இந்நி லையில், திங்களன்று சௌமியா வீட்டில் தனது அறையில் வழக்கம்போல படித்து கொண்டிருந்தார். அவரது தந்தை மோகன சுந்தரம், தாய் வசந்தாமணி ஆகியோர் தோட்டத்தில் விவசாயப் பணிகளை மேற் கொள்ள சென்றனர். பின்னர் பணிகளை முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து பார்த்த போது, சௌமியாவின் அறை உட்புறமாக தாழிடப்பட்டிருந்தது. கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து சென்று பார்த்தபோது, சௌமியா மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சௌமியாவை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற னர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வரப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்விக்கடனுக்காக இழுத்தடிப்பு: குடும்பத்துடன் போராட்டம்

உதகை, ஜூலை 14- பந்தலூரில் கல்விக்கடன் வழங்கா மல் இழுத்தடிப்பு செய்த வங்கி கிளை முன்பு, பாதிக்கப்பட்ட மாணவன் குடும் பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் காலனி சாலை பகுதியை சேர்ந்தவர் அபுதா ஹிர். இவரது மகன் ஆசிக் தாஹிர், சென் னையிலுள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு முதலா மாண்டு படித்து வருகிறார். இந்நிலை யில், ஆசிக் தாஹிருக்கு பந்தலூரில் செயல்பட்டு வரும் தேசியமயமாக்கப் பட்ட வங்கி கிளையில் (இந்தியன் வங்கி) கல்விக்கடன் கேட்டு அபுதாஹிர் விண்ணப்பித்துள்ளார். அப்போது, கடன் தருவதாக கூறிய வங்கி கிளை அவருக்கு கடன் கொடுக்காமல் இழுத் தடிப்பு செய்து வந்தது. இதனால், குறித்த நேரத்தில் கல்விக்கட்டணம் செழுத்த முடியாமல் சிரமப்பட்டு வந் துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலை யில் ஆசிக் தாஹிர் குடும்பத்துடன் திங்க ளன்று காலை வங்கி கிளை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டார். தகுதி இருந் தும் கல்விக்கடன் வழங்காத வங்கி நிர் வாகத்தை கண்டிப்பதாகவும், மாணவர் களை மன உளைச்சலுக்கு ஆளாக் காதே என பதாகைகளை ஏந்தி போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட் டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவாலா காவல் ஆய் வாளர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து வங்கி கிளை மேலா ளர் ஹர்ஷவர்த்தன், உதவி மேலாளர் வினித்குமார் ஆகியோருடன் பேசி, உடனடியாக ரூ.4.77 லட்சம் கல்விக் கடன் வழங்குவதற்கான உத்தரவு கடி தத்தை வழங்கினர்.

சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் இன்று மண்டல அளவிலான உண்ணாநிலை

கோவை, ஜூலை 14 – டாஸ்மாக் நிறுவனத்தில் 23 ஆண்டுகாலம் அத்துக்கூலியாக உழைத்திட்ட ஊழியர்க ளின் நியாமான கோரிக்கைகளை உடனடி யாக நிறைவேற்ற வலியுறுத்தி, சிஐடியு டாஸ் மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டத்தின் ஒரு பகுதி யாக, கோவையில் இன்று (ஜூலை 15, புதன்கிழமை) மாபெரும் மண்டல அளவி லான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. டாஸ்மாக் ஊழியர்களின் பணியை வரன் முறைப்படுத்துவது, கால முறை ஊதியம் வழங்குவது, இஎஸ்ஐ மருத்துவக் காப்பீட்டு வசதியை உறுதி செய்வது மற்றும் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது போன்ற வாழ்வாதாரக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மதுவிலக்கு அமைச்சரின் கால அவகாசம் முடிவடைந்த நிலையிலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதது, காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத் திற்கு பதிலாக மாற்றுத் திட்டத்தை அமல் படுத்த கோருவது உள்ளிட்ட முக்கியப் பிரச் சினைகள் இந்த போராட்டத்தில் முன்வைக் கப்படுகின்றன. கோயம்புத்தூர் மாவட்ட டாஸ்மாக் ஊழி யர் சங்கம் (சிஐடியு) முன்னெடுக்கும் இப் போராட்டம், கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகில் நடைபெறுகிறது. மண்டல அளவி லான உண்ணாநிலைப் போராட்டத்தில் கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங் களைச் சேர்ந்த திரளான டாஸ்மாக் ஊழி யர்களும், சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி களும் பங்கேற்க உள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.