தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

10 Oct 2026, 11:27 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ஆபாச மேடை நடனங்களை கட்டுப்படுத்த கோரிக்கை

சேலம், அக்.10-ஆபாச மேடை நடனங்களை கட்டுப்படுத்த அரசு மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஒருங்கிணைந்த மேடை நடன சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சேலத்தில் அந்த கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், கடந்த 35 ஆண்டுகளாக மேடை நடனத்தொழிலை நம்பி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடனக்குழுக்கள் செயல்படுகின்றன. இத்தகைய கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், உரிய அங்கீகாரம் வழங்கவும், நலவாரியம் அமைத்து நலத்திட்டஉதவிகளை வழங்க வேண்டும். மேடை நடனக்கலைக்கு அங்கீகாரம் அளிப்பதுடன், நலவாரியத்தில் மூத்த கலைஞர் ஒருவரை இயக்குநராக நியமிக்க வேண்டும். மேலும், ஆபாச மேடை நடனங்களை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, தீர்மானங்களை முதல்வரிடம் வழங்க உள்ளதாகவும்,அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் மனு அனுப்பி நடவடிக்கை கோர உள்ளதாகவும் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

குட்கா வேட்டை: 40 பேர் கைது

கோவை, அக்.10–கோவையில், குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்ற 40 கடைகளுக்கு சீல் வைக்க உணவுப் பாதுகாப்புத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டு, 40 பேரை போலீசார் கைது செய்தனர்.கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையைத்தடுக்கும் வகையில், காவல்துறையினர் உணவுப் பாதுகாப்புத் துறையினருடன் இணைந்து வெள்ளியன்று கூட்டு சோதனையில் ஈடுபட்டனர். மொத்தம் 213 இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில்விதிமீறல்களில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்து 53.536 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகைபாதுகாப்புத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே சொத்துகளில் விளம்பரம்:வழக்குப்பதிவு; அபராதம் வசூல்

கோவை, அக்.10–ரயில்வே சொத்துகளை பாழ்படுத்தி. அனுமதியின்றி விளம்பரம் செய்த

வர்கள் மீது போத்தனூர் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) போலீசார் வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்தனர்.

கோவை மாவட்டத்தில் போத்தனூர் ரயில் நிலையம், நஞ்சுண்டாபுரம் சாலை, ரயில்வே குடியிருப்பு, போத்தனூர் யார்டு மற்றும் ரயில்வே பாலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் போத்தனூர் ஆர்பிஎப் உதவி ஆய்வாளர் பி.மணிகண்டன் தலைமையிலான போலீசார் கடந்த செப்.29 முதல் அக்.8 ஆம் தேதி வரை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரயில்வே சுற்றுச்சுவர்கள் மற்றும் கட்டமைப்புகளில் அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்டியது, விளம்பரங்கள் எழுதியது கண்டறியப்பட்டு, 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் செலவிலேயே அந்த விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, சுவர்களுக்கு மீண்டும் வெள்ளையடிக்கப்பட்டு ரயில்வே சொத்துகள் பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்டன.ரயில்வே சொத்துகளில் அத்துமீறி விளம்பரம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும், தூய்மையை பராமரிக்க பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும் என ரயில்வே பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.

இரவு நேர ரோந்தை தீவிரப்படுத்த கோரிக்கை

உடுமலை, அக்.10-உடுமலை பகுதியில் இரவு நேர ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அய்யலு மீனாட்சி நகர் (கந்தசாமி லே அவுட்) பகுதியில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், வீடுகளின் சுவர் ஏறிக்குதித்து, செருப்புகள் மற்றும் காயவைக்கப்பட்ட துணிகளை எடுத்துச் செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் அச்சத்தை போக்க காவல் துறையினர் இரவு நேர கூடுதல் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும். உடுமலை நகரில் அனைத்து குடியிருப்புப் பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை நகரக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

தனியார் ஆலையால் கடும் பாதிப்பு5 நாட்களாக பள்ளிக்கு செல்லாத மாணவர்கள்

ஈரோடு, அக்.10-அம்மாபேட்டை அருகே தனியார் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களது குழந்தைகளை 5 ஆவது நாளாக பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், பூனாச்சியில் செயல்படும் தனியாருக்கு சொந்தமான மரவள்ளிக்கிழங்கு மாவு மற்றும் எத்தனால் உற்பத்தி ஆலைகளிலிருந்து, சித்தாறு ஓடையில் வெளியேற்றப்பட்ட கழிவுநீரால், நிலத்தடி நீர் மாசடைந்ததோடு, சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டது. இரண்டு ஆலைகளையும் மூடக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஏமாற்றமடைந்த பூனாச்சி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணமான ஆலைகளை மூடக்கோரி நத்தமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு தங்களது குழந்தைகளை அனுப்ப மறுத்து, அக்.5 ஆம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வெள்ளியன்று 5 ஆவது நாளாக பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ராமச்சந்திராபுரம், செம்படாபாளையத்தில் உள்ள பள்ளிகளுக்கும் மாணவ, மாணவிகள் செல்லவில்லை. கல்வித் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படவில்லை.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.