கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
2 Oct 2026, 12:48 am

அனுமதியின்றி ஒயிட் எம் - சாண்ட் கடத்தல்: லாரி பறிமுதல்

ஈரோடு, அக்.1-பெருந்துறை அருகே அனுமதியின்றி ஒயிட் எம்-சாண்ட் கடத்தி வரப்பட்ட லாரியை அதிகாரிகள்பறிமுதல் செய்து, ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் பகுதியில் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலக, தனி வருவாய் ஆய்வாளர் (கனிமங்கள்) ராம சந்திரமூர்த்தி தலைமையிலான குழுவினர் புதனன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்திசோதனை செய்ததில், அனுமதியின்றி 7 யூனிட்ஒயிட் எம்-சாண்ட் மணல் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக லாரி ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர், சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த செல்வராஜ் (74) என்பவரிடம் நடத்திய விசாரணையில், வேடசந்தூரில் இருந்து 7 ஏழு யூனிட் ஒயிட் எம்-சாண்ட் மணல் லோடு ஏற்றிக்கொண்டு, பெருந்துறை, சிப்காட்டிலுள்ள தொழிற்சாலைக்கு இறக்க வந்தாக கூறினார்.இதுகுறித்து ராம சந்திரமூா்த்தி அளித்த புகாரின்பேரில், பெருந்துறை காவல் துறையினர் வழக்குப்பதிந்து லாரி மற்றும் மணலை பறிமுதல் செய்தனர்.மேலும், லாரி ஓட்டுநர் செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பாலத்திலிருந்து விழுந்த கார்தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

தருமபுரி, அக்.1-பாலத்தில் இருந்து கார் கீழே விழுந்த விபத்தில்,காரில் பயணித்த தந்தை உயிரிழந்த நிலையில், மகன்படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ராமியம்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கரன் (65). இவர் புதனன்று சிகிச்சைக்காக காரில் மகனுடன் பெங்களூரு சென்றுவிட்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். காரை அவரது மகன் சக்திவேல் (35) ஓட்டிச் சென்றார். பாலக்கோடு அருகே உள்ள பொடுத்தம்பட்டி மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, காரின் டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இதில்பலத்த காயமடைந்த பாஸ்கரன் நிகழ்விடத்திலேயேஉயிரிழந்தார். அவரது மகன் சக்திவேல் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

மஞ்சூர் - சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

உதகை, அக்.1-மஞ்சூர் அருகே நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்கும் நிலையில், விலங்குகள் நடமாட்டம் உள்ளதால்பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம், மஞ்சூரை அடுத்த மேல்குந்தா பகுதிக்குட்பட்ட புலிச்சோலை, கிண்ணக்கொரை ஆகிய இடங்களில்தற்போது நீலக்குறிஞ்சி மலர்கள் அதிகளவில் பூத்துக் குலுங்குகின்றன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் பூக்கும் இந்த பூக்கள் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மொட்டுகளாக இருந்தன. தற்போது இவை மலர்ந்துள்ளதால், அப்பகுதியில் மலைச்சரிவுகள் முழுவதும் நீலப்போர்வை போர்த்தியதுபோல காணப்படுகிறது. இந்நிலையில் குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள தகவல் அறிந்து சுற்றுலாப் பயணிகள்மற்றும் பொதுமக்கள் இப்பகுதிக்கு வர வாய்ப்புள்ளது. ஆனால், இப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதாலும் வன விலங்குள் நடமாட்டம் உள்ளதாலும் பாதுகாப்பு கருதி யாரும் இங்கு வரவேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தற்போது குறிஞ்சி மலர்கள் பூத்துள்ள இடங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வருகிறது. இங்கு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. அதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிஆள்களுக்கு இங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அத்துமீறி யாரேனும் மலைப்பகுதிக்குள் நுழைந்தால்நடவடிக்கைஎடுக்கப்படும். இப்பகுதியில் வனத்துறையினர் கூடுதல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர், என்றனர்.

மதுபாட்டில்கள் பறிமுதல்

ஈரோடு, அக்.1-ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த மயிலம்பாடி, சடையகவுண்டனூர், அருவாபுலி கரட்டில் தமிழக அரசின் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், புதனன்று பவானி போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, காந்தி ஜெயந்தி நாளில் கூடு

தல் விலைக்கு விற்பனை செய்வதற்காக 864 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அன்னை தெரசா அறக்கட்டளை பெயரில் மோசடி: 11 ஆவது நாளாக போராட்டம்

சேலம், அக்.1-சேலம் மாவட்டம், அம்மாபேட்டையில் அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை ஒன்றை தொடங்கி இங்கு முதலீடு செய்யும் பணத்திற்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்தது. இந்த வழக்கில் சேலம் பொருளாதார குற்

றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட வேலூரை சேர்ந்த விஜயபானு உள்பட 6 பேர் அண்மையில் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தனர். இந்த வழக்கு கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மோசடிக்கு மூளையாக செயல்பட்ட மத போதகர் செந்தில்குமார் செவ்வாயன்று அம்மாபேட்டையில் உள்ள ஜெபக்கூடத்திற்கு வருகை தந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து அறக்கட்டளையில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டமக்கள் ஒன்று திரண்டு ஜெபக்கூடத்தை முற்றுகையிட்டனர். அப்போது செந்தில்குமார் அங்கிருந்து தப்பி ஓடியதால் ஆவேசமடைந்த பொதுமக்கள் அங்கிருந்த சேர்களை உடைத்தனர். பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இருந்தபோதிலும் ஜெபக்கூடத்தை விட்டு வெளியேறாமல் பொதுமக்கள் அங்கேயே முகாமிட்டுள்ளனர். செந்தில்குமார் நேரில் வந்து தங்களது பணத்தை திரும்பத் தரும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் எனக் கூறி தொடர்ந்து மூன்றாவது நாளாக ஜெபக்கூடத்திலேயே தங்கி உள்ளனர். மேற்கொண்டு அப்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக அம்மாபேட்டை காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி காணப்படுகிறது. அரசு அதிகாரிகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும் இல்லை என்றால் தங்களின் ஆதார் ரேஷன் மற்றும் தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை அனைத்தையும் திரும்ப ஒப்படைப்போம் எனவும் தொடர்ந்து இதே நிலைநீடித்தால் அனைவரும் தீக்குளிப்போம் என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர்.

ரயில்கள் சேவையில் மாற்றம்

சேலம், அக்.1-தெற்கு ரயில்வே பாலக்காடு கோட்டத்திற்குட்பட்ட ஷோரனூர் அருகே உள்ள மன்னாணூர் ரயில்வே யார்டில் தண்டவாளப் பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக அக்டோபர் 3-ஆம் தேதி (சனிக்கிழமை) இயக்கப்படும் இரண்டு ரயில்களின் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஜி. மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.

கோவை சந்திப்பிலிருந்து மாலை 4.25 மணிக்குப் புறப்பட வேண்டிய கோவை - ஷோரனூர் பயணிகள் ரயில் (வண்டி எண்: 56603), பாலக்காடு - ஷோரனூர் இடையே உள்ள லக்கிடி ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். அன்றைய தினம் இந்த ரயில் லக்கிடி முதல் ஷோரனூர் சந்திப்பு வரை இயக்கப்படாது. இதேபோல், மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட வேண்டிய மங்களூரு - கோவை விரைவு ரயில் (வண்டி எண்: 16324), ஷோரனூர் சந்திப்புடன் நிறுத்தப்படும். இந்த ரயில் மங்களூருவிலிருந்து ஷோரனூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும், ஷோரனூர் முதல் கோவை வரையிலான சேவை அன்றைய தினம் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக்கல்லூரிக்கு உடல் தானம்

திருப்பூர், அக்.1–திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த வெ.ஆறுமுகம் (73) புதனன்று இரவு மாரடைப்பால் காலமானார். இவரதுஉடல் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் பயிற்சிக்காக ஒப்படைக்கப்பட்டது.முன்னாள் மில் தொழிலாளியான ஆறுமுகம்,திருக்குறள் ஓதுவாராகவும், மார்க்சிய, பெரியாரிய ஆதரவாளராகவும் இருந்தார். இவரது மகன் ஆ.திருமுருகன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார்.

ஆறுமுகம், தனது மறைவுக்கு பிறகு தனது உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கல்விக்கு தானமாக வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தாரிடம் கேட்டுக்கொண்டிருந்தார். அதன்படி ஆறுமுகம் மறைவைத் தொடர்ந்து அவரது மகன் திருமுருகன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை தொடர்பு கொண்டுதிருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் தானம் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்தார். இதன்படி ஆறுமுகம்உடலை தானமாக வழங்குவதற்கு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டது.

திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உடற்கூராய்வு துறை மருத்துவர்களிடம் வியாழனன்று ஆறுமுகம் உடலை அவரது குடும்ப உறவினர்கள் ஒப்படைத்து சான்றிதழ் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வின்போது, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத்தலைவர் க.நிருபன் சக்கரவர்த்தி, மாவட்டப் பொருளாளர் க.சிந்தன் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகி அகிலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

யானை உயிரிழப்பு

கோவை, அக்.1-கோவை மாவட்டம்,பூண்டி வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்துபணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள 40 அடி ஆழ பள்ளத்தில் யானை ஒன்று இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், இறந்து கிடந்தது சுமார்40 வயது மதிக்கத்தக்க ஆண்யானை என்றும், அது இறந்து10 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்றும் தெரியவந்தது. மேலும், யானையின் உயிரிழப்பு இயற்கை மரணமாக இருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர்.