தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

12 Aug 2026, 10:44 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சுமைப்பணி தொழிலாளர்கள் கூலி உயர்வுமுத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

ஈரோடு, ஆக.12-ஈரோடு சுமைப்பணி தொழிலாளர்களின் கூலி உயர்வுகோரிக்கையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது.

ஈரோடு மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில்சுமார் 2000 சுமைப்பணி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நூல் மற்றும் பீஸ் கட்டுகள், பேல், கெமிக்கல்ஸ் ஏற்றி இறக்கும் பணியில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் காலாவதியாகி 16 மாதங்களை கடந்து விட்டது. இப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தொழிலாளர் துறை, வருவாய்த்துறையினரிடம் முறையிடப்படடது. ஆயினும் உரிமையாளர்கள் தரப்பில் சுமைப்பணியாளர்களின் கூலி உயர்வுகோரிக்கை கண்டு கொள்ளப்படவில்லை. இதனால் சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தம் நடைபெற்றது.

காவல் துறை தலையிட்டு, வர்த்தக நிறுவன சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள்பங்கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், வர்த்தக நிறுவன சங்கத்தினர் ஆக.6 ஆம் தேதியன்று கூலிபேச்சுவார்த்தை இறுதி படுத்துவோம் என்று தெரிவித்தனர் ஆகையால், வேலைநிறுத்தம் தற்காலிகமாக திரும்பப்பெறப்பட்டது. தொடர்ந்து, நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தெரு நாய்கள் கடித்து 11 ஆடுகள் பலி!

திருப்பூர், ஆக.12–திருப்பூர் மாவட்டத்தில் தெரு நாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழக்கும் துயரம் தொடர்கிறது.காங்கேயம் அருகேயுள்ள பரஞ்சேர்வழி கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி என்பவரது பட்டியில் செவ்வாயன்று இரவுபுகுந்த தெரு நாய்கள், அங்கிருந்த 11 செம்மறிஆடுகளை கடித்துக் கொன்றன.

மேலும் 2 ஆடுகள் உயிருக்குப் போராடி வரும் நிலையில், 13 ஆடுகள் படுகாயமடைந்தன. முன்னதாக, கடந்த ஞாயிறன்று பாப்பினி கிராமத்தில் சின்னச்சாமி என்பவரது 2 ஆடுகள் மற்றும் 6 ஆட்டுக்குட்டிகளை தெரு நாய்கள் கடித்துக் கொன்றன. விவசாயம் பொய்த்துள்ள நிலையில், கால்நடை வளர்ப்பையே நம்பியுள்ள காங்கேயம், ஊத்துக்குளி வட்டார விவசாயிகளுக்கு இச்சம்பவங்கள் கடும்பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளன.

அரசு அறிவித்துள்ள இழப்பீடும் முழுமையாக வந்து சேரவில்லை. இந்நிலையில் தெரு நாய்களால் கால்நடைகளை இழப்பதற்கு முழுமையான சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரி வருகின்றனர். விவசாயிகள்குறைதீர் கூட்டத்திலும் விவசாயிகள் கோரி வருகின்றனர்.

மாநில அமைச்சர்களிடமும் நேரில் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். தற்போது சட்டமன்றக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இதற்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். தெரு நாய்களால் இழப்புகள் தொடரும்பட்சத்தில் அரசு இழப்பீடு வழங்காவிட்டால் போராடும் நிலைக்குத் தள்ளப்படுவோம் என்றும் விவசாயிகள்தெரிவித்தனர்.

கால்நடைகள் உயிரிழப்பு: மக்கள் அச்சம்

உதகை, ஆக.12-தேவாலா பகுதியில் கால்நடைகள் உயிரிழந்து வரும் சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளது.நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தேவாலா, நெல்லிக்கண்டி கிராமப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மாடு, ஆடு வளர்ப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக சந்தேகத்திற்கிடமான முறையில் கால்நடைகள் உயிரிழந்து வருவது கிராம மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 30 ஆடுகள், 5 மாடுகள் உயிரிழந்துள்ளன. நோய் தாக்கம் காரணமாக கால்நடைகள் இறந்து வருகிறதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என தெரியாமல் மக்கள் குழம்பியுள்ளனர். எனவே, உடனடியாக கால்நடைத்துறை சார்பாக ஆய்வுகளை மேற்கொண்டு, உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரூ.23 லட்சம் மதிப்புள்ள குட்கா அழிப்பு

நாமக்கல், ஆக.12-நாமக்கல் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.23லட்சம் மதிப்புள்ள 4,126 கிலோ குட்கா மற்றும் புகையிலைப்பொருட்கள் தீ வைத்து அழிக்கப்பட்டன.நாமக்கல்லை போதைப்பொருட்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்கும் வகையில் போலீசார் வாகன சோதனை மற்றும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி நாமக்கல் உட்கோட்டத்தில் 1,206 கிலோ, பள்ளிபாளையத்தில் 1,806 கிலோ, திருச்செங்கோட்டில் 620 கிலோ, ராசிபுரத்தில் 493 கிலோ என மொத்தம் 4,126 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. நாமக்கல் மாநகராட்சி நாகராஜபுரம் குப்பைக்கிடங்கு வளாகத்தில்நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் முன்னிலையில் அவை தீ வைத்து அழிக்கப்பட்டன. மேலும், வழக்குகளில் பறிமுதல்செய்யப்பட்ட 115 கிலோ கஞ்சாவும் நீதிமன்ற உத்தரவின்படி கோவையில் அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.57 லட்சம்என போலீசார் தெரிவித்தனர். மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக இதுவரை 270 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

தெருநாய்கள் புள்ளிவிபரம்: பிரச்சனையை தீர்க்குமா?

திருப்பூர், ஆக. 12 -திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 15,327 வீடில்லா நாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் எம்.பி.அமித் தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 3058 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2021 ஆம்ஆண்டு முதல் 2025 வரை 2547 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 9722 வீடில்லா நாய்களுக்கும் வரும் நாட்களில் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.வீடில்லா நாய்களுக்கு வெறி நாய்கடி தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது. இதுவரை 5 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 679 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தெரு நாய்கள் குறித்துபொதுமக்கள் புகார் தெரிவிக்க மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்அப் எண் 7305712225 மற்றும் இலவச அழைப்பு எண் 155304 ல் தெரிவிக்கலாம் என திருப்பூர் மாநகராட்சி ஆணையர் எம்.பி.அமித் கூறியுள்ளார்.

தெரு நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தாலும், திருப்பூர் மாநகரில் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமப்புறங்களிலும் தெரு நாய்கள் பெருக்கம் அதிகமாகவே உள்ளது. இறைச்சிக் கழிவுகளை முறையாக திடக்கழிவு மேலாண்மை திட்டப்படி அப்புறப்படுத்தாமலும், உணவுக் கழிவுகளை நகரெங்கும் பரவலாக குப்பை கொட்டி வைப்பதும் தெரு நாய்கள் பெருக்கத்துக்குக் காரணமாக உள்ளன. எனவே திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை திருப்பூர் மாநகரில் மக்கள் பங்கேற்புடன் தீவிரமாக செயல்படுத்துவதன் மூலம் தான் தெரு நாய் பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே தெரு நாய்கள் பற்றிய மாநகராட்சிப் புள்ளி விபரம் பிரச்சனையை தீர்க்க உதவாது. ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

ஓணம் பண்டிகை: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

சேலம், ஆக. 12-ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், கர்நாடக மாநிலம் உப்பள்ளியிலிருந்து கோட்டயத்திற்கும், சென்னை சென்ட்ரலில் இருந்து கொல்லத்திற்கும் சேலம் கோட்டம் வழியாகச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதன்படி, வண்டி எண் 07351: உப்பள்ளியிலிருந்து ஆகஸ்ட் 25 அன்று மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 4.40 மணிக்கு கோட்டயம் சென்றடையும். வண்டி எண் 07352: மறுமார்க்கத்தில் கோட்டயத்திலிருந்து ஆகஸ்ட் 26 அன்று இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 8.00 மணிக்கு உப்பள்ளி சென்றடையும். இந்த ரயில் ஆகஸ்ட் 26 அன்று காலை சேலம் (7.40), ஈரோடு (8.40), திருப்பூர் (9.30), போத்தனூர் (10.48) நிலையங்களுக்கும், மறுமார்க்கத்தில் ஆகஸ்ட் 27 அன்று அதிகாலை போத்தனூர் (4.30), திருப்பூர் (5.20), ஈரோடு (6.10), சேலம் (7.10) நிலையங்களுக்கும் வந்தடையும்.

வாராந்திர சிறப்பு ரயில்:

வண்டி எண் 06119: ஆகஸ்ட் 12 முதல் செப்டம்பர் 2 வரை புதன்கிழமைகளில் சென்னையில் பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு கொல்லம் சென்றடையும். வண்டி எண் 06120: ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 3 வரை வியாழக்கிழமைகளில் கொல்லத்தில் காலை 10.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வந்தடையும். இச்சிறப்பு ரயில்கள் முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என சேலம் கோட்ட ரயில்வே செய்தித் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

தாகம் தீர்க்க வரும் யானைகளை தொந்தரவு செய்யும் இளைஞர்கள்

மேட்டுப்பாளையம், ஆக. 12-வனப்பகுதியில் போதிய மழை இல்லாததால் சித்தன்குட்டை நீர்தேக்க பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் காட்டு யானை கூட்டங்களை தொந்தரவு செய்து விரட்டிய இளைஞர்கள் மீது வனத்துறையினர் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை வனச்சரக பகுதிகளில் இவ்வாண்டு போதிய மழை இல்லாத காரணத்தால் காட்டினுள் உள்ளஇயற்கையான நீராதாரங்கள் வறண்டு வருகின்றன. இதனால் வன உயிரினங்கள் தாகம் தீர்க்க தண்ணீர் தேடி அலையும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாகஉயிர் வாழ நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 150 முதல் 200 லிட்டர் வரை நீர் அருந்தியாக வேண்டிய பேரூயிரான யானைகள் பெரிதும் தவித்து வருகின்றன. இதனால் இவை சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதியான சித்தன்குட்டை என்னுமிடத்திற்கு கூட்டம் கூட்டமாக வரத்துவங்கியுள்ளளன.

பவானி ஆற்றங்கரையோரங்களில் இவை ஒன்று கூடி தாகம் தீர்த்து வருகின்றன. இதனை வனத்துறையினர் கண்காணித்து வரும் நிலையில் யானைகளை வேடிக்கை பார்ப்பதாக கூறி கொண்டு இரு சக்கர வாகனங்களில் அத்துமீறி வனத்தினுள் நுழையும் இளைஞர்கள் சிலர் தாகம் தீர்கும் யானைகளின் அருகே சென்று அவற்றை அச்சுறுத்தி விரட்டியடிக்கும் வகையில் செயல்படுகின்றனர். திடீர் வாகன சத்தம் மற்றும் கூச்சலால்அதிர்ந்து போகும் நீர்அருந்த வரும் யானைகள் அங்கிருந்து ஓடுகின்றன.

இதுகுறித்து வன உயிரின ஆர்வலர்கள் வேதனை தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் சித்தன்குட்டைபகுதியில் விதிகளுக்கு புறம்பாக வனப்பகுதிக்குள் புகுந்து யானைகளை தொந்தரவு செய்த ஐந்து இளைஞர்களை பிடித்த வனத்துறையினர் அவர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் வீதம் இருபத்தைந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து அடுத்த முறை வனச்சட்டப்படி வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

கடும் வறட்சியால் தென்னை விவசாயம் பாதிப்பு கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க கோரிக்கை!

திருப்பூர், ஆக.12 – திருப்பூர் மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி மற்றும் பருவமழை பொய்த்ததன் காரணமாக தென்னை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், காய்ந்த தென்னை மரங்களை கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பரம்பிக்குளம் - ஆழியாறு (பிஏபி) பாசனத் திட்டத்தில் இரண்டாம் மண்டல பாசனத்திற்கு ஆகஸ்ட் 15-க்குள் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால், தொகுப்பு அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை. நிலத்தடி நீர்மட்டம்சரிந்து கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் வறண்டுவிட்டதால், குடிநீருக்கும் கால்நடைகளுக்கும் தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதியுறுகின்றனர். காயும் நிலையிலுள்ள தென்னைகளை காப்பாற்ற லாரிகள் மூலம் விலைக்கு தண்ணீர் வாங்கும்அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தென்னை விவசாயத்தைச் சார்ந்து மரம் ஏறுவோர், காய் உரிப்போர், மட்டை மில் தொழிலாளர்கள் என லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழக்கும் அபாயம் உருவெடுத்துள்ளது. ஏற்கெனவே வெள்ளை சுருள் ஈ, ஈரியோபைட் சிலந்தி மற்றும் வாடல் நோய்களால் காய்ப்புத்திறன் குறைந்திருந்த சூழலில், தற்போதைய வறட்சி தென்னை மரங்களை முற்றிலும் காய வைத்துள்ளது. ஒரு தென்னை மரம் வளர்ந்து பலன் தர 3 முதல் 4 ஆண்டுகள் வரை ஆகும் என்பதால் விவசாயிகளுக்கு மீள முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க செயலாளர் பரமசிவம் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்

போதைய வறட்சி சூழ்நிலையில் கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்குவது அவசியம். அதேசமயம் நல்லாறுஅணை கட்டப்பட்டிருந்தால் நான்காவது மண்டல பாசனத்தின் போது வீணாகப் போன தண்ணீரை தேக்கி வைத்து முதல் மற்றும் மூன்றாவது மண்டலத்திற்கு கொடுத்திருக்க முடியும். எனவே ஆனைமலை ஆறு அணை திட்டத்தையும், நல்லாறு அணை திட்டத்தையும் நிறைவேற்றி பிஏபி பாசன திட்டத்தை வலுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.