தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

20 Jul 2026, 11:33 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ரேசன் கார்டுகளில் கைரேகை பதிவு செய்ய ஜூலை 31 வரை காலக்கெடு

திருப்பூர், ஜூலை 20 - திருப்பூர் மாவட்டத்தில் ஏஏஒய் மற்றும் பிஎச்எச் குடும்ப அட்டைதாரர்கள் தங்களின் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப் பினர்களில் தற்போது வரை கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்கள் அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் கைவிரல் ரேகையை வரும் 31ஆம் தேதிக்குள் கட்டா யம் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே கூறியுள்ளார். மேலும், கைவிரல் ரேகையை பதிவு செய்யாமல் வேறு பகுதியில் வசிப்பவர்கள், தற்போது வசிக்கும் பகுதியின் அருகிலுள்ள நியாய விலைக் கடையில் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். இறந்த உறுப்பி னர்களின் பெயர்களை வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி உரிய ஆவணங் களை சமர்ப்பித்து நீக்கம் செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அருகில் உள்ள நியாய விலைக் கடை விற்பனையாளரிடம் இறந்த உறுப்பினர்களின் குடும்ப அட்டை எண்ணுடன் ஆதார் அட்டை நகலை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் நல மையத்திற்கு நிலம் ஒதுக்க வலியுறுத்தல்

ஈரோடு, ஜூலை 20- நசியனூர் பேரூராட்சியில் அங்கன்வாடி மையத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்யக் கோரி ஈரோடு ஆட்சியரிடம் சிபிஎம் கவுன்சிலர் திங்க ளன்று மனு அளித்தார். நசியனூர் பேரூராட்சிக்குட்பட்ட சிந்தன் குட்டை மற்றும் நெசவாளர் காலனியில், சுமார் 250 குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். இப்பகுதியில் தனியார் வீட்டில் அங்கன் வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இப் பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான காலி இடம் சுமார் 1 ஏக்கர் உள்ளது. இதன் ஒரு பகுதி யில் அங்கன்வாடி மையம் அமைக்க நிலம் ஒதுக்கித் தர வேண்டும் என சிபிஎம் பேரூராட்சி கவுன்சிலர் சி.பி.தங்கவேல் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளார்.

அணைகள் நிலவரம்

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:21.00/72 அடி நீர்வரத்து:1037கனஅடி நீர்திறப்பு:502கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:78.92/160 அடி நீர்வரத்து:410.95கனஅடி நீர்திறப்பு:1372கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:55.60/120அடி நீர்வரத்து:223கனஅடி நீர்திறப்பு:256க.அடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:33.94/60அடி நீர்வரத்து:461கனஅடி நீர்திறப்பு:71கனஅடி

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க சேலம் கோட்ட மாநாடு

சேலம், ஜூலை 20- காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சேலம் கோட்ட 36 ஆவது மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சேலம் கோட்டத்தின் 36 ஆவது பொது மாநாடு சேலம் நகரின் சிவில் இன்ஜினியர் அசோசியேஷன் ஹாலில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் வி. சுரேஷ், இணைச் செயலாளர் சி.செல்வராணி, பொருளாளர் வி.ஜானகிராமன் ஆகியோர் இரண்டு நாட்க ளும் முழுமையாக கலந்து கொண்டு சிறப்பித் தனர். இதனை தொடர்ந்து இம்மாநாட்டில் கோட்ட தலைவராக ஆர்.நரசிம்மன், பொதுச் செயலாளராக ஆர்.ஆனந், பொருளாளராக ஞானவேல், துணைத் தலைவர்களாக எஸ். ஜெய கோபி, என்.மணிகண்டன், பி.பிரதீபா, இணைச் செயலாளர்களாக எம்.கே.கலைச் செல்வி, எம்.கணேச பாண்டியன், பி.சந்திர மெளலி, உதவிப்பொருளாளராக ஆர்.அரவிந் தன், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஆர்.ஆனந், தென் மண்டல செயற்குழு உறுப்பினர் எம்.கே. கலைச் செல்வி, கோட்ட செயற்குழு உறுப்பினர்களாக 16 பேரும், மகளிர் துணைக் குழு இணை அமைப்பா ளர்களாக எஸ்.பி.பிரதீபா, எஸ்.அகிலா உள் ளிட்ட ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

விடுதி வசதி கோரிக்கை - மாணவர் சங்கம் மனு

நாமக்கல், ஜூலை 20- ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் விடுதி வசதி கிடைக்காமல் உள்ள மாணவர்களுக்கு உடனடியாக விடுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியு றுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் திரு வள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தை தவிர வெளி மாவட்டங் களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்களும் இக்கல்லூரியில் படித்து வருகின்றனர். இந் நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்க ளுக்கு கல்லூரி தொடங்கி ஒரு மாதம் கடந் தும், சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவர்க ளுக்கு விடுதி வசதி கிடைக்காமல் இருக் கின்றனர். விடுதி வசதி இல்லாததால், பல மாணவர்கள் தற்போது வரை கல்லூரிக்கு வராமல் வீட்டிலேயே உள்ளனர். இதைய டுத்து, விடுதிக்கு பதிவு செய்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் உடனடியாக விடுதி வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வா கம் தலையிட வேண்டும் என்று வலியு றுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் திங்க ளன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர். இதில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தங்கராஜ், மாவட்ட துணைத் தலைவர் யாழினி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.