கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
8 Oct 2026, 1:57 am

ரயில் சேவைகளில் மாற்றம்

சேலம், அக்.7-கோவை சந்திப்பு ரயில் நிலைய யார்டில் தண்டவாளப் பராமரிப்புப்பணிகள் நடைபெற உள்ளதால், கோவை வழியாக இயக்கப்படும் சில பயணிகள் மற்றும் மெமு (MEMU) ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 08:20 மணிக்கு போத்தனூர் புறப்படும் மெமு ரயில் (எண்: 66611), வரும் அக்.9,10 ஆகிய தேதிகளில் கோவை சந்திப்பு வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், ஷோரனூரில் இருந்து காலை 08:20 மணிக்கு புறப்படும் ஷோரனூர் – கோவை பயணிகள் ரயில் (எண்: 56604), வரும் அக்.10,11 ஆகிய தேதிகளில் போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து மதியம் 01:05 மணிக்கு புறப்படும் மெமு ரயில் (எண்: 66615), அக்.11 ஆம் தேதியன்று வடகோவையில் நிறுத்தப்படும். மறுமார்க்கமாக, போத்தனூரில் இருந்து காலை 09:40 மணிக்கு புறப்பட வேண்டிய போத்தனூர் – மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66612), அக்.9,10 ஆகிய தேதிகளில் போத்தனூருக்கு பதிலாக கோவை சந்திப்பில் இருந்து காலை 09:55 மணிக்குப் புறப்பட்டு, மேட்டுப்பாளையம் செல்லும். கோவையில் இருந்து மாலை 04:25 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை – ஷோரனூர் பயணிகள் ரயில் (எண்: 56603), அக்.10,11 ஆகிய தேதிகளில் போத்தனூர் சந்திப்பிலிருந்து மாலை 04:38 மணிக்கு புறப்பட்டு ஷோரனூர் செல்லும். அதேபோன்று, போத்தனூரில் இருந்து பிற்பகல் 03:30 மணிக்கு புறப்பட வேண்டிய போத்தனூர் – மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண்: 66616), அக்.11 ஆம் தேதியன்று கோவை வடக்கு ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 03:52 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை சிக்கியது!

சேலம், அக்.7-மேட்டூர் அருகே கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை, வனத்துதுறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கண்ணாமூச்சி பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கண்ணாமூச்சி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, விவசாயிகளின் கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்தனர். இதுவரை சிறுத்தை தாக்குதலில் சுமார் 20 ஆடுகள், 2 மாட்டுக்கன்றுகள், 3 வளர்ப்பு நாய்கள் மற்றும் 15 கோழிகள் உயிரிழந்துள்ளன. இதனால், இரவு 7 மணிக்கு மேல் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேவரவே அச்சப்படும் நிலை ஏற்பட்டது. இதனிடையே சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கையில் மேட்டூர் வனச்சரகஅலுவலர் செங்கோட்டையன் தலைமையிலான வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்ட வன அலுவலர் அம்பல்கர் யஸ்வந்த் ஜெக்தீஷ் தலைமையிலான வனத்துறையினர், மிளகாய் பொதை, காவலாண்டியூர் நஞ்சுண்டபுரம், செட்டியூர், நெடுஞ்செழியன் நகர் மற்றும் மூலக்கடை மஞ்சமெத்தை ஆகிய 5 இடங்களில் சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமரா அமைத்திருந்தனர். மேலும், ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட மசக்கவுண்டனூரிலும் ஒரு கூண்டு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், செவ்வாயன்று இரவு மிளகாய் பொதை வனப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதுகுறித்து மேட்டூர் வனச்சரக அலுவலகம் மற்றும் மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவஇடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தை வாகனத்தில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்க எடுத்துச்சென்றனர். சிறுத்தை பிடிபட்டதால் கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.

இன்று மின்தடை அறிவிப்பு

ஈரோடு, அக்.7-ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை சிப்காட் மற்றும் அரச்சலூர் துணை மின் நிலையங்களில் வியாழனன்று(இன்று) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் சிப்காட் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பெருந்துறை வடக்குப் பகுதி, சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டலம்

வளாகம், சின்னவேட்டுபாளையம், பெரியவேட்டுபாளையம், ராஜவீதி, மேக்கூர், கோட்டைமேடு, பெருந்துறை மேற்கு பகுதி, கோவை சாலை, சின்னமடத்துபாளையம், பெரியமடத்துபாளையம, லட்சுமி நகர், கருக்கங்காட்டூர், கள்ளியம்புதூர், துடுப்பதி, பள்ளக்காட்டூர், சிலேட்டர்புரம், சுள்ளிபாளையம் பிரிவு, ஐய்யப்பா நகர், அண்ணா நகர், சக்தி நகர், கூட்டுறவு நகர் மற்றும் அரச்சலூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட கன்னிகாபுரம், மேட்டூர், கந்தகொடிக்காடு, வெங்கட்ராயன்வலசு, சத்தியபுரி, கோபாலிபாறை, வீரப்பம்பாளையம், மீனாட்சிவலசு, மீனாட்சிபுரம், சுனைப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வியாழனன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை: கரடி தாக்கி ஒருவர் படுகாயம்

கோவை, அக்.7-வால்பாறை வனச்சரகத்திற்குட்பட்ட அப்பர் பாரலை எஸ்டேட் பகுதியில் கரடி தாக்கியதில் எஸ்டேட் மேற்பார்வையாளர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பச்சைமலை எஸ்டேட்டில் மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் மோசஸ் (52), செவ்வாயன்று இரவு ரொட்டிக்கடை பகுதிக்கு சென்று விட்டு, அப்பர் பாரலை எஸ்டேட்டில் உள்ள ஓடைஅருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கரடி அவரை தாக்கியுள்ளது. இதில், அவரது தலை மற்றும் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.தகவலறிந்த வனத்துறையின் மனித – வனவிலங்கு மோதல் தடுப்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மோசஸை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

வால்பாறை தேயிலை மற்றும் காபி தோட்டப் பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்டவனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், மாலை மற்றும் இரவு நேரங்களில் எஸ்டேட் பகுதிகள், ஓடைகள் மற்றும் புதர்களுக்குள் செல்வதை பொதுமக்கள், தோட்டத் தொழிலாளர்கள்தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அவசிய தேவைக்காக இரவில் வெளியே செல்லும்போது குழுவாகவும், கையில் விளக்குடனும் செல்ல வேண்டும். மது போதையில் தோட்டப் பகுதிகளுக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும். வனவிலங்குகளைக் கண்டால், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் கரடியின் நடமாட்டத்தை கண்காணிக்க தடுப்புக் குழுவினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்,வனவிலங்குகள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும் ‘தடம்’ வாட்ஸ் அப் குழுவை பயன்படுத்துமாறு வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்சனை: துணை ஆணையரிடம் மனு

திருப்பூர், அக்.7-குடிநீர் பிரச்சனையை சரி செய்யக்கோரி, திருப்பூர் மாநகராட்சி துணை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.திருப்பூர் மாநகராட்சி, 43 ஆவது வார்டு, கருவம்பாளையம் பகுதிக்குட்பட்ட வெடத்தலாங்காடு 4 ஆவது வீதி மற்றும் எல்.ஆர்.ஜி. லே அவுட் 5 ஆவது வீதிகளில் குடிநீர் விநியோகத்தை சரி செய்யக்கோரி அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் உதவி ஆணையரிடம் புகார் மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஜெயபால், அடிமனை பயனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.கோபால், பூபதி, சிஐடியு ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் சிவராமன், சிபிஎம் 4 ஆவது மண்டலக்குழு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

இடுவாய், பழங்கரையில் இன்று மின்தடை

திருப்பூர், அக்.7-பல்லடம் அருகே உள்ள பூமலூர் துணை மின் நிலையத்தில் வியாழனன்று (இன்று) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் மங்கலம், பூமலூர், மலைக்கோவில், அக்ரஹாரபுதூர், பள்ளிப்பாளையம், இடுவாய், பாரதிபுரம், சீராணம்பாளையம், கிடாத்துரைபுதூர், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழனன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காதென செயற்பொறியாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, பெருமாநல்லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளிப்பாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டியன் நகர், எம்.தொட்டிப்பாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிப்பாளையம், நெருப்பரிசல், செட்டிப்பாளையம், வாவிபாளையம், தொரவலூர் உள்ளிட்ட பகுதிகளில் வியாழனன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோன்று, பழங்கரை துணை மின் நிலையத்திற்குட்பட்ட அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், விஸ்வ பாரதி பார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீராம் நகர், நல்லி கவுண்டம்பாளையம், கைகாட்டி புதூர் (ஒரு பகுதி), ரங்கா நகர் (ஒரு பகுதி), ராஜன் நகர், ஆர்டிஓ அலுவலகம், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகர், துரைசாமி நகர், பெரியாயிபாளையம் (ஒரு பகுதி), பள்ளிபாளையம், விஜிவி நகர், திருநீலகண்டர் வீதி, நெசவாளர் காலனி, எம்ஜிஆர் நகர், மகாலட்சுமி நகர், முல்லை நகர், தன்வா்ஷினி அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் வியாழனன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காதென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐடிஐ துவங்க விண்ணப்பிக்கலாம்!

திருப்பூர், அக்.7-புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்குவதற்கும், ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழிற்பிரிவுகள் துவங்குவதற்கும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொழிற்பயிற்சி நிலையங்களின் (ITI) உட்கட்டமைப்பு வசதிகளை மேம்

படுத்துதல் மற்றும் தொழிற்பயிற்சியின் தரத்தை உயர்த்தும் நோக்கில், புதிய தொழிற்பயிற்சி நிலையங்களை (ITI / MSTI) தொடங்குவதற்கும், ஏற்கனவே செயல்பட்டு வரும் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழிற்பிரிவுகள்/அலகுகளை (New Trades / Units) தொடங்குவதற்கும், இடமாற்றம், ஐடிஐ மூடுதல் ஆகியவற்றிற்கான இணைய வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

என்ற இணையதளத்தின் வாயிலாக இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 2026 ஆம் ஆண்டிற்கான இணைப்பு அங்கீகாரம் (Affiliation) பெறுவதற்கான விண்ணப்பங்களை அக்.1முதல் அக்.31 ஆம் தேதி வரை இணையவழியில் சமர்ப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு, திருப்பூர் மாவட்ட திறன்பயிற்சி அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மின்தடை

உடுமலை, அக்.7-உடுமலை அருகே உள்ள பூலாங்கிணர் துணை மின் நிலையத்தில் வெள்ளியன்று (நாளை) பராமரிப்புப்பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பூலாங்கிணர், அந்தியூர், சடையபாளையம், பாப்பனூத்து, சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல்பாவி, தளி, மெடக்குபட்டி, ஆர்.வேலூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், பொன்னாலம்மன் சோலை, விளாமரத்துபட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம் மற்றும் தென் குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் வெள்ளியன் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் இருக்கதென செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

பேருந்து வசதி கேட்டு மாணவர்கள் போராட்டம்

ஈரோடு, அக்.7-கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எல்லமடை பகுதிக்கு பேருந்து வசதி செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட

னர்.ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எல்லமடை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்

தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, கோபிசெட்டிபாளையத்தில் இருந்து அரசுப்பேருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில், அந்த சேவை தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே நிறுத்தப்பட்டது. இதனால், எல்லமடை பகுதியை சோ்ந்த பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்வோர் சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள புதுக்கரைப்புதூர், பொலவக்காளிபாளையத்துக்கு நடந்து சென்று, அங்கிருந்து பேருந்துகள் மூலம் சென்று வருகின்றனர். பேருந்து சேவையை மீண்டும் தொடங்கக்கோரி, கிராமசபைக் கூட்டங்களிலும், போக்குவரத்து அதிகாரிகளிடமும் அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆவேசமடைந்த மக்கள் அக்.2 ஆம் தேதியன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சம்பவ இடத்துக்கு வந்த வருவாய், போக்குவரத்துத்துறையினர் 2 நாட்களில் பேருந்து இயக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால், உறுதியளித்தபடி பேருந்து இயக்கப்படாததால், பள்ளி மாணவர்கள்,பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் செவ்வாயன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

வாடகை செலுத்தாத 8 கடைகளுக்கு ‘சீல்’

திருப்பூர், அக்.7-வாடகை செலுத்ததால், பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான 8 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் பேருந்து நிலையம், தினசரி மாா்க்கெட், அண்ணா வணிக வளாகம்உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமாக 228 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளை நடத்தும் வாடகைதாரர்கள் ஒவ்வொரு மாதம் 5 ஆம் தேதிக்குள் வாடகை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பல கடைக்காரர்கள் கடந்த பல மாதங்களாக வாடகை செலுத்தவில்லை.அவர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பியும், வாடகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து திருப்பூர் மண்டல நகராட்சிகளின் இயக்குநரின் அறிவுறுத்தலின்பேரில், வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்குமாறு பல்லடம் நகராட்சி ஆணையர் அருள் உத்தரவிட்டார். அதன்பேரில் நகராட்சி வருவாய் உதவி அலுவலர் முருகன், வருவாய் ஆய்வாளர் கொங்குராஜ் உள்ளிட்டோர், அண்ணா வணிக வளாகத்தில் ரூ.9 லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்த 6 கடைகளுக்கும், பல்லடம் பேருந்து நிலையத்தில் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் வாடகை பாக்கி வைத்திருந்த ஆவின் பூத் கடைக்கும், பச்சாபாளையத்தில் ரூ.80 ஆயிரம் வாடகை பாக்கி வைத்திருந்த ஆட்டு இறைச்சிக் கடைக்கும் என மொத்தம் 8 கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனர்.

உரிய நேரத்திற்கு இயக்குவதில்லை பேருந்துகளை சிறைபிடித்த மக்கள்!

கோவை, அக்.7-வாளையார் - காந்திபுரம் வழித்தடத்தில் அரசுப்பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்கப்படாததை கண்டித்து,நவக்கரை அருகே பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அரசுப்பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், நவக்கரை வழியாக இயக்கப்படும் பேருந்துகளை ஆயிரக்கணக்கான மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக பேருந்துகள் நீண்ட நேர இடைவெளியில் இயக்கப்படுவதாகவும், பின்னர் 3 முதல் 4 பேருந்துகள் ஒரே நேரத்தில் வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்வோர் பாதிக்கப்பட்டனர். பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லாததால், செவ்வாயன்று நந்திகோவில் பேருந்து நிறுத்தம் அருகே வந்த அரசுப்பேருந்துகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். காலை,மாலை வேளைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் பேருந்துகளை சீராக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.