தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

10 Aug 2026, 1:05 am
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

எஸ்.எம்.சி. மூலம் நியமித்த ஆசிரியர்களுக்கு

எஸ்.எம்.சி. மூலம் நியமித்த ஆசிரியர்களுக்குஎனவே இந்த 2 மாத ஊதியத்தைஉடனடியாக வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரியுள்ளனர்.தமிழ்நாடு விடியல் ஆசிரியர் முன்னேற்ற சங்க நிறுவனரும், மாநிலத் தலைவருமான ஒ.சுந்தரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசுப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு திட்டம் மூலமாக தற்காலிகமாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு, 2026 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான மாத ஊதியம், ஆகஸ்ட் 10 ஆம் தேதியாகியும் இதுவரை வழங்கப்படவில்லை. இவர்களுக்கு அரசு வழங்கும் ஊதிய முறையின்படி, முதுகலை ஆசிரியருக்கு ரூ.17,000, பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15,000, இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12,000 மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த சொற்ப ஊதியத்தை நம்பியிருக்கும் ஆசிரியர்களின் வாழ்வாதாரம், ஊதியக்கால தாமதத்தால் முற்றிலும் முடங்கியுள்ளது.

தமிழக முதல்வர் இதை பரிசீலித்து, நிலுவை ஊதியத்திற்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும். இனிமேலும் இது போன்ற காலதாமதம் ஏற்படாமல் மாதந்தோறும் ஊதியம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இதேபோல், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ’டாப்ஸ்’ ஓய்வூதிய முறை பெரும் பயத்தையும், மன நடுக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் புதிய முறை ஆசிரியர்களின் எதிர்கால பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் கால பரப்புரையின் போதும், தேர்தல் அறிக்கையிலும் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு ’பழைய ஓய்வூதியத் திட்டம்’ மீண்டும் வழங்கப்படும் என்று தற்போதைய முதல்வர் அளித்த வாக்குறுதியைக் காலதாமதமின்றி நிறைவேற்றி அரசாணை பிறப்பிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பழங்குடி தினம் கொண்டாட்டம்

நீலகிரி, ஆக.9- சர்வதேச பழங்குடி தினம் ஞாயிறன்று உறுதிமொழி ஏற்று கொண்டாடப்பட்டது.பழங்குடி மக்களின் உரிமை, கலாச்சாரம், மொழி, நிலம், வன உரிமை, சுய நிர்ணயம் ஆகியவற்றை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் ஆக.9 ஆம் தேதி சர்வதேச பழங்குடி தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள 6 பழங்குடி கிராமங்களில் உறுதிமொழி ஏற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில், சிபிஐ ஒன்றியச் செயலாளர் ஏ.முகமது கனி, பழங்குடி மக்கள் சங்க மூத்த தலைவர் வி.பி.குணசேகரன், செயலாளர் கமலாட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருப்பூர், ஆக.9-திருப்பூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் ஞாயிறன்று அகற்றப்பட்டன.திருப்பூரில் தென்னம்பாளையம் முதல் மத்திய பேருந்து நிலையம் வரை சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.இவற்றில் பெரும்பாலான கடைகள், தங்களின் விற்பனை பொருட்களை வீதி வரை நீட்டித்து வைத்து சாலையை ஆக்கிரமித்திருந்தன.

இதனால் போக்குவரத்து பாதை குறுகி, அப்பகுதியில் தொடர் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் நிலவி வந்தது. அதேபோல, தென்னம்பாளையம் உழவர் சந்தை அருகாமையில் அதிகாலை நேரங்களில் சாலையை மறைத்து அமைக்கப்படும் காய்கறிக் கடைகளால், சந்தைக்கு வரும்விவசாயிகளின் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து, உழவர் சந்தையிலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் சாலையோர கடைகள் அமைக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்ததுடன்,வணிக நிறுவனங்களுக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன் அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஞாயிறன்று காலை நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று, மத்திய பேருந்து நிலையம் முதல் தென்னம்பாளையம் வரை சாலையின் இருபுறங்களிலும்இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் மூன்று ஆட்டோக்கள் சாலையோரம் இருந்த தள்ளுவண்டி கடைகள் உட்பட அனைத்தையும் அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

தரமான வேட்டி, சேலைகள் வழங்க நடவடிக்கை

நாமக்கல், ஆக.9-வரும் பொங்கல் பண்டிகைக்கு தரமான வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே தோக்கவாடியில் உள்ள கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனத்தில் 12 ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியல் துறை மாணவிகள் சார்பில் நோபல் உலக சாதனை நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று, 5 மணி நேரத்தில் கைத்தறி நெசவாளர் ஒருவர் நெசவு தொழிலில் ஈடுபடும் காட்சியை மையமாகக் கொண்டு ஆயிரம் ஓவியங்களை வரைந்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றதமிழ்நாடு கைத்தறி, ஜவுளி மற்றும் காதித்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி, கைத்தறி கண்காட்சியை பார்வையிட்டார்.

இதன்பின் அவர் பேசுகையில், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்செங்கோடு சரகத்தில் சுமார் 4,500 கைத்தறி மற்றும் 1,300 பெடல் தறி நெசவாளர்கள் உள்ளதாகவும், இங்கு துண்டு, பட்டு சேலை உள்ளிட்ட கைத்தறி ஜவுளிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும், வரவுள்ள பொங்கல் பண்டிகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான வேட்டி, சேலைகள் வழங்கப்படும். புதிய ரக ஜவுளிகள் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படும், என்றார்.

காசநோய் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

உதகை, ஆக.9-நீலகிரி மாவட்டத்தில் தற்காலிகமாக பணிபுரியும் காசநோய் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது, 1,900 காசநோய் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக காசநோய் துறையில் சேவையை தொடர்ந்து வழங்கி வரும் மூத்த பணியாளர்களும் அடங்குவர். இந்த துறையில் அனைவரும் ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களை பணி நிரந்தரம் செய்ய, 25 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இதுவரை நடவடிக்கை இல்லை. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில்பணிபுரியும் காசநோய் பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி முதலமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, காசநோய் பிரிவில் இத்தனை ஆண்டு காலம் 100 சதவீதம் உழைப்பை கொடுத்தும், எங்களுக்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. காசநோய் துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, 3 அல்லது 5 ஆண்டுக்கு ஒரு முறை கூடுதல் ஊதிய உயர்வாக, 30 சதவீதம் வழங்கப்பட்டு வந்தது. நடப்பாண்டு மே மாதம் வழங்கபட்ட ஊதிய உயர்வில், 30 சதவீதம் வழங்கப்படவில்லை.

எனவே, மீண்டும் அனைவருக்கும், 30 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். தற்போது பணியாற்றி வரும் அனைத்து காசநோய் பணியாளர்களையும் பணி நிரந்தரம்செய்து, எங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தித் தர வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விளம்பர பேனர்கள், சுவரொட்டிகள் அகற்றம்

நாமக்கல், ஆக.9-நாமக்கல்லில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் மற்றும் சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.

நாமக்கல் மாநகராட்சியின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், “என் குப்பை, எனது பொறுப்பு” என்ற விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது. மணிக்கூண்டு அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்குமாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமை வகித்தார். மாநகராட்சி சுகாதார அலுவலர் கஸ்தூரிபாய் முன்னிலை வகித்தார். மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு, நகரை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பது தொடர்பான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, மாநகராட்சி பணியாளர்கள் நாமக்கல் பழைய பேருந்து நிலையம், பூங்கா சாலை, மணிக்கூண்டு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, நகரின் அழகை பாதிக்கும் வகையிலும், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள்மற்றும் சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.

பில்லூர் அணையை தூர் வார நடவடிக்கை

மேட்டுப்பாளையம்ஆக.9-சேறும், சகதியுமாக காணப்படும் மூன்று மாவட்ட மக்களின் குடிநீர்ஆதாரமாக உள்ள பில்லூர் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் தெரிவித்தார்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை கோவை, ஈரோடு, திருப்பூர் என மூன்று மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. அணையில் இருந்து கோவை மாநகராட்சி பகுதி மற்றும் பல்லடம் வரையிலான வழியோர கிராமங்களுக்கு பில்லூர் முதலாம் மற்றும் இரண்டாம்

குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், தொலைநோக்கு பார்வையுடன் 2048 ஆம் ஆண்டு கோவையின் மக்கள் தொகையினை கணக்கிட்டு பில்லூர் மூன்றாம் குடிநீர் திட்டம் எனமூன்று குடிநீர் திட்டங்களுக்கும் சேர்த்து நாள் ஒன்றுக்கு 42 கோடியே 85 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பில்லூர் அணை தூர்வாராத காரணத்தால் மொத்த கொள்ளளவான 100 அடியில் 65 சதவீதம்சேறும், சகதியுமாக உள்ளதாகவும், இதனை உடனடியாக தூர்வார வேண்டும் என மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினரிடம் பொதுமக்கள் மனு அளித்திருந்தனர். இதனையடுத்து மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த், அணைக்கு சனியன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், “பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் 65 சதவிகிதம் சேறும், சகதியும் அடைத்து கொண்டிருப்பதால் அணையின் நீர் சேமிப்பு மிகவும் குறைந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக தமிழக முதலமைச்சர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பில்லூர் அணையை தூர்வாரி, மூன்று மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்க நடவடிக்கைஎடுக்கப்படும், என்றார்.

வனவிலங்கு தாக்கி ஒருவர் உயிரிழப்பு

நீலகிரி, ஆக.9-கூடலூர் அருகே வனவிலங்கு தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், வனத்துறையை கண்டித்து அப்பகுதிபொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர், ஓவேலி 4 ஆம் கேட் பகுதியை சேர்ந்த பாலு என்கிற பாலகிருஷ்ணன் (65). இவர் சனியன்று மாலை 3 மணிக்கு ஊருக்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக சென்றுள்ளார். ஆனால், இரவு முழுவதும் பாலகிருஷ்ணன் வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் ஞாயிறன்று காலைவனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் தேடும் பணியின்போது, அவரது உடல் பாகங்கள் வனவிலங்கு தாக்கி சிதறி கிடப்பதை கண்டறிந்து,உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது, இறந்தவரின் உடலை உறவினர்களுக்கு காட்டாமல், உடற்கூராய்வுக்காக அனுப்பியதை கண்டித்து வனத்துறை மற்றும் காவல் துறையினரிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பல்லுயிர் சூழ் மண்டலமான நீலகிரியில் இதுபோன்ற மனித – வனவிலங்கு மோதல்களை தடுத்து, உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வனத்துறையினர் தவறி விடுவதாகக்கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறந்தவரின் உடற்பாகங்களை வைத்து புலி தாக்கி இறந்திருக்கலாம் எனசந்தேகிக்கப்படும் நிலையில், உடற்கூராய்வுக்கு பிறகே இறப்பிற்கான காரணங்கள் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போதை விழிப்புணர்வு மாரத்தான்

உடுமலை, ஆக.9-‘போதையில்லா திருப்பூர்’ என்ற தமிழ்நாடு காவல்துறையின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 5 கிலோ மீட்டர் மினி மாரத்தான் ஓட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீராம் பிரணவ் ஆர்த்தோ கேர் மருத்துவமனை மற்றும் உடுமலை உட்கோட்ட காவல்துறை இணைந்து இந்த மாரத்தான் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. இந்த ஓட்டமானது உடுமலை - பழனிபிரதான சாலையில் தொடங்கி, மத்திய பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம் மற்றும் தளி சாலை வழியாக சென்று மீண்டும் தொடங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும், காவலர்களும் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.