கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
8 Jun 2026, 12:58 am

மேகதாது விவகாரம்: சட்டப்படி தடுப்போம்!

அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி கோபி, ஜூன் 7- தமிழகத்தின் உரிமைகளை பாதிக்கும் வகையில் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எந்த காலகட்டத்திலும் அனுமதிக்க மாட்டோம் என்று வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் சனியன்று நடைபெற்ற தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின், செய்தி யாளர்களிடம் அவர் பேசுகையில், அண்மையில் நடை பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், அடுத்த ஐந்தாண்டு களில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் விரிவாக ஆராய்ந்து, பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளார். காவிரி நீருக்காக வும், மேகதாதுவில் புதிய அணை கட்டக் கூடாது என்பதற் காகவும் 1972 முதல் நாம் தொடர்ந்து போராடி வருகி றோம். காவிரியில் தமிழகத்திற்குரிய ஒரு சொட்டு நீரைக் கூட கர்நாடக அரசு தடுக்கக் கூடாது என்பதில் முதல மைச்சர் உறுதியாக உள்ளார். மேகதாது அணையை தடுக்க சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கின்றன. இதுகுறித்து பிரதமரிடமும் முதலமைச்சர் தெளிவாக வலியுறுத்தியுள்ளார். இதில் உச்ச நீதி மன்ற தீர்ப்பின்படி நாம் தெளிவாக இருக்கிறோம். அதேபோல் பவானிசாகர், பி.ஏ.பி., ஆழியாறு, தாமிர பரணி உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் தூய்மை யாகப் பராமரிக்கப்படும். சாக்கடை நீர் நேரடியாக கலப்பதை தடுத்து, சுத்திகரிக்கப்பட்ட நீர் மட்டுமே விடப்படும். பொதுமக்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலையை மாற்றி, குழாயை திறந்தாலே சுத்த மான குடிநீர் கிடைக்கச் செய்வதே அரசின் லட்சியம். சுற்றுச்சூழல் மாசுபடுவதால் புற்றுநோய் அபாயம் ஏற்படுவதை தடுக்க, விவசாயிகளின் ஒத்துழைப் போடு நாளொன்றுக்கு 40 லட்சம் லிட்டர் கழிவுநீரை வெளி யேற்றி வந்த சாயப்பட்டறைகளின் இயக்கம் நிறுத்தப் பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற சாயப் பட்டறைகளுக்கு அரசு அனுமதி அளிக்காது என்றார்.

பரம்பிக்குளம் அணை

நீர்மட்டம்:20.98/72 அடி நீர்வரத்து:295கனஅடி நீர்திறப்பு:730கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:36.53/160 அடி நீர்வரத்து:541.92கனஅடி நீர்திறப்பு:5.00கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:66.10/120அடி நீர்வரத்து:150கனஅடி நீர்திறப்பு:286கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:45.46/60அடி நீர்வரத்து:556கனஅடி நீர்திறப்பு:920கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:35.50/90அடி நீர்வரத்து:110கனஅடி நீர்திறப்பு:கனஅடி

ஷொரனூர் - கோவை பயணிகள் ரயில் ரத்து

சேலம், ஜூன் 7– ஷொரனூர் - பாலக்காடு ரயில்வே வழித்தடத்தில் தண்ட வாள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், ஷொர னூரில் இருந்து கோவை வரும் பயணிகள் ரயில் ஒரு நாள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே யின் சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஜி. மரியா மைக்கேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஷொரனூர் - பாலக்காடு பிரிவில் நடைபெறும் பொறியியல் மற்றும் தண்டவாள பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு, ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஷொரனூர் சந்திப்பிலிருந்து காலை 08:20 மணிக் குப் புறப்பட்டு கோவை வரும் ஷொரனூர் - கோயம்புத் தூர் பயணிகள் ரயில் (வண்டி எண்: 56604) வரும் ஜூன் 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுதாய நலக்கூடம் அமைக்க கோரிக்கை சிபிஎம் மனு

அவிநாசி, ஜூன். 7- அவிநாசி நகராட்சிக்குட்பட்ட 9 ஆவது வார்டு பகுதியில் சமுதாய நலக் கூடம் அமைத்து தரக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுமக்களி டம் திரட்டிய கையெழுத்துகளுடன் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்த னர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி நக ராட்சிக்குட்பட்ட 9ஆவது வார்டு செங் காடு பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களின் சுபநிகழ்ச்சிகளை நடத்துவ தற்கு சமுதாய நலக்கூடம் (கல்யாண மண்டபம்) இல்லாத சூழல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் சிர மத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், இப்பகுதியில் உள்ள பட்டிய லின மக்களுக்கான மயானத்தை தூய்மைப்படுத்தி, முறையான உள் கட்டமைப்பு வசதிகளுடன் பராமரிக்க வேண்டும் என்பதும் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்காடு கிளை சார்பில் அப்பகுதி பொதுமக்களிடம் தீவிர கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் திரட் டப்பட்ட நூற்றுக்கணக்கான பொது மக்களின் கையெழுத்து அடங்கிய கோரிக்கை மனுவை, அவிநாசி சட்ட மன்ற உறுப்பினரும், கால்நடை பரா மரிப்புத்துறை அமைச்சருமான கமலியி டம் சனியன்று நேரில் சந்தித்து வழங்கினர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், இக்கோரிக்கை கள் குறித்து உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார். இந்நிகழ்வின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். பழனிச் சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சி. பழனிச்சாமி, செங்காடு கிளைச் செயலா ளர் பன்னீர்செல்வம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன் றியச் செயலாளர் ஆர். வடிவேல் உள் ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் உடனிருந்தனர்.

டாஸ்மாக் தனியார்மயம் ஆகாது: அமைச்சர் விக்னேஷ் உறுதி

கோவை, ஜூன் 7- போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உரு வாக்குவதே அரசின் முதன்மை லட்சியம். டாஸ்மாக் நிறுவனம் தனியார் மயமாகாது என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல் லூரியில் சனியன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் விக்னேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்வின் நிறைவில் செய்தியாளர் களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழ்நாட்டை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றும் இலக்கை நோக்கி, எவ்வித தலையீடும் இன்றி சுதந்திரமாக செயல்படுமாறு முத லமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். சில மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதை உணர்ந்து, அந்த போதைப்பொருள் சங்கிலியை முற்றிலுமாக உடைக்க வேண்டியது அவசியமாகும். வெளி மாநிலங்களில் இருந்தோ அல்லது வேறு வழி களிலோ தமிழ்நாட்டிற்குள் போதைப்பொருள் நுழை வது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும். டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த காலங்களில் மாதம் ரூ.100 கோடி வீதம், ஆண்டுக்கு ரூ.3,600 கோடி அளவுக்குத் தனிநபர்களின் கணக்கிற்கு சென்ற மாபெரும் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது. மதுபான விற் பனையில் மட்டுமின்றி, கொள்முதலிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இத்துறையில் கடந்த காலத்தில் நடந்த தவறுகள் அனைத்தும் ஒவ்வொன் றாக வெளிக்கொண்டு வரப்படும். அதிகாரிகள் மற் றும் ஊழியர்களிடம் பணம் வசூல் செய்யும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஊழல் செய்த நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பார பட்சமின்றி கடும் நடவடிக்கை பாயும். இதற்கான முறையான அரசாணை கடந்த ஜூன் 5-ஆம் தேதி கொண்டுவரப்பட்டுள்ளது. முறையற்ற காரணங்களுக்காக கடந்த ஆண்டு களில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த 600 டாஸ் மாக் ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள் ளனர். இதுவரை தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் நிறுவ னத்தைத் தனியார்மயம் ஆக்கும் நோக்கம் எதுவும் இந்த அரசுக்கு இல்லை. வருகிற ஜூன் மாத இறுதிக்குள் அனைத்து டாஸ் மாக் கடைகளிலும் நிர்ணயிக்கப்பட்ட விலைப்பட்டி யலை தாண்டி மதுபானங்கள் விற்கப்படுவது முற்றி லுமாக தடுக்கப்படும். ஊழியர்கள் மதுபானங்க ளுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதை தவிர்க்க வேண்டும். மீறி பொதுமக்களிடம் கூடுதல் பணம் வசூலித்தால் அவர்கள் மீது மிகக் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மருத்துவமனையில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆய்வு

நாமக்கல், ஜூன் 7- கனமழை காரணமாக ஏற்பட்ட விபத்தில் காயம டைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வில்லை என தகவல் வெளியான நிலையில், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் கடந்த மாதம் 24 ஆம் தேதியன்று இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது, ராசிபுரம் நகர் நல்லப்பா தெரு வில் தனியாருக்கு சொந்தமான வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து சாலையில் சென்றவர்கள் மீது விழுந்தது. அதில், வள்ளலார் கோவில் தெருவை சேர்ந்த நாட்டுத்துரை என்பவரின் மனைவி சித்ராதேவி (48) உயிரிழந்தார். மேலும் அவரது மகள் தர்ஷினி (22), மற்றும் தயாள் பிரவீன் (20), பர்வேஷ்(14) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சம்பவத்தன்று விபத்தில் காயமடைந்தவர்க ளுக்கு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் முறை யான சிகிச்சை அளிக்கப்படவில்லை என காயம் அடைந்தவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சனியன்று இரவு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் வணிகவரி மற்றும் பத்திர பதி வுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 24-ந் தேதி, கனமழை காரணமாக ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்க ளுக்கு யார் சிகிச்சை அளித்தார்கள்? என விசாரணை நடத்தினார். அதோடு, சம்பவத்தன்று பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர்களிடம் காயம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்து விளக்கம் கேட்டு முதன்மை மருத்துவ அலுவலர் அறிக்கை தாக்கல் செய்ய உத் தரவிட்டார்.

கோவிலுக்குள் புகுந்த கரடி உதகை, ஜூன் 7- குன்னூர் அருகே கரிமரா ஹட்டி குடியிருப்பு பகு தியில் உள்ள கோவிலுக்குள் கரடி புகுந்து உணவு தேடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைர லாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டம் 55 சதவீதத்திற்கும் அதிகமான வனப்பகுதியை கொண்டுள்ளதால், யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குக ளின் வாழ்விடமாக விளங்கி வருகிறது. அண்மைக் காலமாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வரு கிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் கரடிகள், குடியிருப்பு பகுதிக ளுக்குள் நுழைவது தொடர்கதையாக மாறியுள்ளது. இந்நிலையில், கரிமரா ஹட்டி பகுதியில் உள்ள கோவிலுக்குள் கரடி புகுந்து சனியன்று உணவு தேடிய காட்சி அங்கிருந்தவர்களால் பதிவு செய்யப் பட்டு சமூக வலைதளங்களில் பரவியது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதி களில் தொடர்ந்து உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடித்து பாதுகாப்பான வனப்பகுதிக்கு மாற்ற வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியை தாக்கிய சிறுத்தை

உதகை, ஜூன். 7- உதகை அருகே நள்ளிரவில் வீட்டிற் குள் புகுந்த சிறுத்தை ஒன்று, உறங்கிக் கொண்டிருந்த 75 வயது மூதாட்டியை கொடூரமாக தாக்கிய சம்பவம் அப் பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தி யுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை நகராட் சிக்குட்பட்ட தலையாட்டிமந்து பகுதி யில் அண்மைக்காலமாக சிறுத்தைக ளின் நடமாட்டம் அதிகரித்து காணப் படுகிறது. குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளைச் சிறுத்தைகள் வேட்டையாடுவது இப்பகுதியில் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், வெள்ளியன்று நள் ளிரவு இப்பகுதியில் உள்ள குடிசை வீடு ஒன்றிற்குள் திடீரென ஒரு சிறுத்தை நுழைந்துள்ளது. அது அங்கிருந்த விசா லாட்சி (75) என்ற மூதாட்டியை அச்சுறுத் தும் வகையில் பாய்ந்து சென்று, உடல் மற்றும் கை, கழுத்து உள்ளிட்ட பகுதி களில் கடித்தது. மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சத்தமிட்டதைத் தொடர்ந்து சிறுத்தை அங்கிருந்து அடர்ந்த வனப் பகுதிக்குள் தப்பியோடியது. இதுகுறித்து உடனடியாக வனத் துறையினருக்கும், காவல் துறையின ருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம் பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத் துறையினர் மற்றும் பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த மூதாட்டி விசாலாட்சியை மீட்டு, சிகிச்சைக்காக உதகை அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நகரப் பகுதியை ஒட்டியுள்ள குடியி ருப்புக்குள்ளேயே நள்ளிரவில் சிறுத்தை புகுந்து மூதாட்டியை தாக்கி யுள்ள சம்பவம் தலையாட்டிமந்து பகுதி மக்களிடையே கடுமையான அச் சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில் உலா வரும் இந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் போர்க்கால அடிப்படையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனப் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

நாமக்கல், ஜூன் 7- சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவரை போலீ சார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா பகுதியை சேர்ந்த லாரி ஒட்டுநருக்கு 10 வயது மகள், 14 வயதில் மக னும் உள்ளனர். கடந்த மாதம் 6 ஆம் தேதியன்று 10 வயது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட அதேப்பகுதியை சேர்ந்த மாணிக்கம்(48) சிறுமியை வீட்டிற் குள் அழைத்துச் சென்று வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். உறவினர் வீட்டுக்கு சென்று இருந்த தனது தாய் வீட்டிற்கு வந்தவுடன் சிறுமி நடந்ததை கூறியுள்ளார். தனது மகளுக்கு நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், நல்லூர் காவல் நிலை யத்தில் புகார் செய்தார். புகாரியின் அடிப்படையில் நல்லூர் காவல்துறையினர் மாணிக்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டு இருந்த நிலையில், சனியன்று குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை சிறை யில் அடைத்தனர்.

விவசாய நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு: எம்.பி.யிடம் விவசாயிகள் மனு

நாமக்கல், ஜூன் 7- நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூத்தம்பூண்டி முதல் முசிறி வரையிலான பகுதிகளில் விவ சாய நிலங்கள் வழியாக உயர் மின் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டப் பணிக் காக அளவீடு செய்யப்பட்டு வருவதாக கூறப் படுகிறது. இந்த திட்டத்தை கைவிட்டு, விளை நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நாமக்கல் நாடாளு மன்ற உறுப்பினர் மாதேஸ்வரனிடம் சனி யன்று மனு அளித்தனர். அதில், விவசாய நிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படுவதுடன், நிலங்களின் மதிப்பும் குறையும். பல ஆண்டுகளாக விவ சாயத்தை நம்பி வாழும் குடும்பங்களின் வாழ் வாதாரம் பாதிக்கப்படும். எனவே, திட்டப் பணிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அள வீட்டு பணிகளை உடனடியாக நிறுத்தி, மாற்று வழித்தடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட எம்.பி. மாதேஸ்வரன், விவசாயிகளின் கோரிக்கை கள் குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதி காரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் ஆலோசித்து, திட்டத்தின் முழு விவரங்களை யும் கேட்டறிவதாக தெரிவித்தார். மேலும், விவசாயிகளின் நலன் பாதிக்கப்படாத வகை யில் உரிய நடவடிக்கை எடுக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் உறுதி யளித்தார்.

தேயிலைத் தோட்டத்தில் ஆண் சடலம் மீட்பு

உதகை, ஜூன் 7- நீலகிரி மாவட்டம் தும்மனட்டி அருகே தேயிலைத் தோட்டத்தில் முகம் சிதைந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் ஒரு வரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. வன விலங்கு தாக்குதலில் பலியானாரா என போலீ சார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். தும்மனட்டி அடுத்துள்ள குந்தசப்பை பகு தியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத் தில் சனியன்று தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த புதர்களுக்கு இடையே மனித உடல் ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சிய டைந்த தொழிலாளர்கள், இதுகுறித்து உடன டியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்த னர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீ சார் சடலத்தைக் கைப்பற்றி முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டனர். அதில், உயிரிழந்த நபரின் உடலின் ஒரு பகுதி வனவிலங்குகளால் கடித் துக் குதறப்பட்டு சேதமடைந்திருப்பது தெரிய வந்தது. இதனால் அவர் வனவிலங்கு தாக்கி உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவருக்கு சுமார் 45 வயது இருக்கலாம் எனத் தெரிகிறது. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவ ரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. இதை யடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோ தனை அறிக்கை வெளியான பின்னரே மர ணத்திற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பச்சை பாம்பு மீட்பு

நாமக்கல், ஜூன் 7- நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சுவாமி சிவானந்தா சாலை பகுதியில் வசித்து வருபவர் மஞ்சுளா. இவர் சனி யன்று வீட்டின் நுழைவு வாயில் சுமார் 5 அடி நீளம் கொண்ட பச்சை பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த் துள்ளார். உடனடியாக ராசி புரம் தீயணைப்புத் துறையி னருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத் திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அரிய வகை பச்சை பாம்பை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப் படைத்தனர். பின்னர் பாம்பை பாதுகாப்பாக காப்பு காட்டில் விடுவித்த னர்.