தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

22 Sept 2026, 10:40 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

இட்லி பாட்டிக்கு மீண்டும் சிலிண்டர் விநியோகம்

கோவை, செப்.22-கோவை ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு வணிக சிலிண்டர்நிறுத்தப்பட்டது சம்பந்தமாக பெரும் சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து அவர் கோவை மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தார். சமூக வலைதளங்களிலும் கமலாத்தாள் பாட்டிக்கு ஆதரவாக குரல்கள் எழுந்த நிலையில், மீண்டும் வணிக சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டனகோவை மாவட்டம், வடிவேலம்பாளையத்தை சேர்ந்த மலாத்தாள் பாட்டி, கடந்த 50 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி பல்வேறு தரப்பினரும் தன்னார்வ நிறுவனங்களும் உதவி செய்து வருகின்றன. கடந்த 7 ஆண்டுகளாக இட்லி பாட்டிக்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம்செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பாட்டி, கடையை தொடர்ந்து நடத்த முடியாமல் சிரமப்பட்டுவந்தார். இந்நிலையில், திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த கமலாத்தாள் பாட்டி, தனக்கு மீண்டும் சிலிண்டர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்தார். இதுகுறித்து தீக்கதிர் உள்ளிட்ட நாளிதழ்களில் விரிவான செய்தி வெளியானது. மேலும், சமூக வலைதளங்களிலும் கமலாத்தாள்பாட்டிக்கு ஆதரவாக குரல்கள் எழுந்தன.இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சியிடம் மாவட்ட நிர்வாகம்சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை ஏற்று, செவ்வாயன்று முதல் கமலாத்தாள் பாட்டிக்கு மீண்டும் வணிக சிலிண்டர்கள் விநியோகம்செய்யப்பட்டன.

மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு

தருமபுரி, செப்.22-கடத்தூர் அருகே எலைட் மதுபானக்கடை அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தருமபுரி மாவட்டம், கடத்தூரை அடுத்த மணியம்பாடி ஊராட்சிக்குட்பட்ட மாரியம்மன் நகர் பகுதியில் டாஸ்மாக்நிறுவனத்தின் சார்பில், எலைட் மதுபானக்கடை அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஒடசல்பட்டி கூட்ரோட்டில் இருந்து கடத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ள இப்பகுதியில் எலைட் மதுபானக்கடைஅமைந்தால் கடும் சிரமத்திற்குள்ளாவோம் என தெரிவித்து, திங்களன்று அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில், எங்கள் பகுதியில் மதுபானக்கடை அமைந்தால், விவசாய பெருமக்கள், கூலி தொழிலாளர்கள் பெரும் பொருளாதார இழப்புக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும்.இது மட்டுமில்லாமல் அப்பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு வரும் பக்தர்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாவார்கள்.

மேலும், அந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. மதுபானக் கடை அமைந்தால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.இப்பகுதிக்கு அருகிலேயே முக்கிய கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. எனவே பள்ளி மாணவ மாணவிகள் பாதுகாப்பு கருதியும், பொதுமக்கள் நலன் கருதியும் கோவில்கள் பாதுகாப்பு கருதியும் இப்பகுதியில் எந்தவிதமான மதுபானக்கடையும் அமைக்கக்கூடாது. இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பணமோசடி: 3 ஆவது நாளாக மக்கள் போராட்டம்

சேலம், செப்.22-அம்மாபேட்டை பகுதியில் அன்னை தெரசா அறக்கட்டளை மூலம் பல கோடி ரூபாய் நிதி மோசடி செய்ததாக கூறப்படும்வழக்கில் தொடர்புடையவரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஜெபக்கூடத்தில் ஞாயிறன்று செந்தில்குமார் ஜெபக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார். இதையறிந்த அவரிடம் பணம் கொடுத்ததாக கூறப்படும் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு, தங்களது பணத்தை திருப்பித் தருமாறு கேள்வி எழுப்பினர். இதையடுத்து செந்தில்குமார்அங்கிருந்து தப்பியோடினார். அன்னை தெரசா அறக்கட்டளை மீது சுமார் ரூ.3,000 கோடி நிதி மோசடிசெய்ததாக பொருளாதார குற்றப்பிரிவில்வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில்குமார்சில மாதங்களுக்கு முன்பு ஜாமீன் பெற்றதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். ெசந்தில்குமார் தப்பியோடியதால் ஆவேசமடைந்த பொதுமக்கள், ஜெபக்கூடத்தில் இருந்த நாற்காலிகளை தூக்கி வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில்ஈடுபட்டனர். இந்

நிலையில், பாஸ்டர் செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்களின் போராட்டம் 3 ஆவது நாளான செவ்வாயன்றும் தொடர்ந்தது.

வெள்ளைப்பூண்டு வரத்து குறைவு

மேட்டுப்பாளையம், செப்.22-மேட்டுப்பாளையம் சந்தைக்கு வெள்ளைப் பூண்டு வரத்து குறைந்ததால், விலை உயர்ந்துள்ளது.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காய்கறி சந்தை நீலகிரி மாவட்ட விவசாய விளை பொருட்களின் முக்கிய வியாபார தலமாக விளங்கி வருகிறது. இங்குள்ள சந்தையில்வெள்ளைப் பூண்டு ஏல மண்டிகள் உள்ளன. கடந்த வாரம் வெள்ளைப்பூண்டு மண்டிகளுக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டும் 60 ஆயிரம் வெள்ளைப்பூண்டு மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தது. அதிக வரத்து காரணமாகவெள்ளைப்பூண்டு ஒரு கிலோ ரூபாய் 200 இல் இருந்து ரூபாய் 320 வரை விற்பனையானது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வெள்ளைப்பூண்டு வரத்து குறைந்ததின் காரணமாக தற்போது வெள்ளைப்பூண்டு 40 ஆயிரம் மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தது. ஏலத்தில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். ஏலத்தில் தரத்திற்கு ஏற்றார் போல் வெள்ளைப் பூண்டுஒரு கிலோ ரூபாய் 200 இல் இருந்து ரூபாய் 360 வரைவிற்பனையானது. வரத்து குறைந்ததால் வெள்ளைப்பூண்டுவிலை சற்று உயர்ந்துள்ளது.

டெங்கு தடுப்புப்பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தல்

உடுமலை, செப்.22– உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே டெங்குஉள்ளிட்டகொசுக்களால் பரவும் தொற்றுநோய்களை தடுப்பதற்கானநடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நோய் பரவிய பிறகு மருத்துவ முகாம்கள் நடத்துவதை விட, ‘வருமுன் காப்போம்’ அடிப்படையில் பருவமழைக்கு முன்பே தடுப்புப் பணிகளை மேற்கொள்வதே முறையான அணுகுமுறையாகும். எனவே, ஊராட்சி நிர்வாகங்களின் ஒத்துழைப்போடு, சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்களை கொண்டு வீடு வீடாக ஆய்வு செய்ய வேண்டும். வீடுகள் மற்றும் குடியிருப்புகளை சுற்றி தேங்கியுள்ள நீர், தேங்காய் மட்டைகள், பழைய

டயர்கள் ஆகியவற்றில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதை கண்டறிந்து உடனடியாக அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகமும்சுகாதாரத்துறையும் உடனடியாக தலையிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள்எதிர்பார்க்கின்றனர்.

உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

திருப்பூர், செப்.22– ஒன்றிய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பி.சி., எம்.பி.சி. மற்றும் சீர்மரபின வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள்2026–2027-ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் கற்பித்தல் கட்டணம், சிறப்பு கட்டணம்,தேர்வு கட்டணம் உள்ளிட்ட கட்டாயக் கட்டணங்கள் அல்லதுஆண்டிற்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். சென்னை - 05இல் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது www.bcw.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் தங்களின் கல்வி நிறுவனங்களில் சமர்ப்

பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் அதனை ’போனாஃபைட்’ சான்றிதழுடன் பரிந்துரை செய்து சம்பந்தப்பட்ட நலத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். புதுப்பித்தல் விண்ணப்பங்கள் 31.10.2026-க்குள்ளும், புதிய விண்ணப்பங்கள் 30.11.2026-க்குள்ளும், இரட்டைப் பருவ கட்டண ரசீதுகள்:15.01.2027-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி வசூலில் காட்டும் வேகம், குடிநீர் வழங்குவதில் இல்லை!

உடுமலை, செப்.22– உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராம ஊராட்சிகளில் கடந்தசில நாட்களாக குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீருக்காக மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை உருவாகியுள்ளதால், சீரானகுடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உடுமலை ஒன்றியப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளில்குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்முறையாக கிடைப்பதில்லை என பொதுமக்கள் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், அதிகாரிகளால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் அத்தியாவசிய தேவையான குடிநீரை பெற முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஊராட்சிகளில் சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறுவரிகளை வசூலிப்பதில் காட்டும் தீவிரத்தை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருவதில் ஊராட்சி நிர்வாகம் காட்டுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். வரி வசூலிப்பதற்கு இணையான முக்கியத்துவத்தை மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கும் வழங்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஆதங்கமாக உள்ளது.

தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், அரசு அதிகாரிகளின் நேரடி நிர்வாகமே நடைபெற்று வருகிறது. இதனால், தங்களின் அன்றாட பிரச்சனைகளை உடனடியாக எடுத்துரைத்து தீர்வு காண்பதில் சிக்கல் நீடிக்கிறது. மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத சூழலில், அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் குடிநீர் பிரச்சனை பூதாகரமாக உருவெடுத்து, பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு வந்துள்ளனர்.

உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் நிலவும்குடிநீர் தட்டுப்பாடு குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதிகள்இல்லாத நிலையை உணர்ந்து, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முதலிடம் அளித்து, அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி சீரான முறையில் குடிநீர் விநியோகிக்க தேவைப்படும் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எர்ணாகுளம் - பாட்னா இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

சேலம், செப். 22–வரவிருக்கும் பண்டிகை காலத்தையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், எர்ணாகுளம் - பாட்னா இடையே சேலம் கோட்டம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட மக்கள் தொடர்புஅலுவலர் ஜி. மரிய மைக்கேல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எர்ணாகுளம் சந்திப்பிலிருந்து புறப்படும் எர்ணாகுளம் - பாட்னா வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06085) அக்டோபர் 2 முதல்

அக்டோபர் 30 வரை அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு, திங்கள்கிழமைஅதிகாலை 3.30 மணிக்கு பாட்னா சந்திப்பை சென்றடையும். மறுமார்க்கத்தில், பாட்னாவிலிருந்து புறப்படும் பாட்னா - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06086) அக்டோபர் 6 முதல் நவம்பர் 3 வரை அனைத்து செவ்வாய்க்கிழமைகளிலும் நள்ளிரவு 12.10 மணிக்கு புறப்பட்டு, வியாழக்கிழமை காலை 10.45 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை வந்தடையும்.சேலம் ரயில்வேகோட்டத்துக்குள்பட்ட நிலையங்களில், எர்ணாகுளத்திலிருந்து புறப்படும் ரயில் (06085) சனிக்கிழமைகளில் அதிகாலை 2.18 மணிக்கு போத்தனூருக்கும், 3.00 மணிக்கு திருப்பூருக்கும், 3.55 மணிக்கு ஈரோட்டுக்கும், 5.05 மணிக்கு சேலத்துக்கும், காலை 7.03 மணிக்கு ஜோலார்பேட்டைக்கும் வந்து செல்லும்.

அதேபோல், பாட்னாவிலிருந்து புறப்படும் ரயில் (06086) புதன்கிழமைகளில் இரவு 9.40 மணிக்கு ஜோலார்பேட்டைக்கும், இரவு 11.08 மணிக்கு சேலத்துக்கும் வந்து செல்லும். தொடர்ந்து வியாழக்கிழமைகளில் நள்ளிரவு 12.15 மணிக்கு ஈரோட்டுக்கும், அதிகாலை 1.25 மணிக்கு திருப்பூருக்கும், அதிகாலை 4.58 மணிக்கு போத்தனூருக்கும் வந்து செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபாயகரமான மரங்களை அகற்றக்கோரி மறியல்

உதகை, செப்.22-உதகை – மஞ்சூர் சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், சாலையோரம்உள்ள அபாயகரமான மரங்களை உடனடியாக அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், உதகையில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள காந்திபேட்டை பகுதியில் செவ்வாயன்று மரம் ஒன்று சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், அந்த மரம் வீட்டின் மீதும் விழுந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் காலதாமதமாக வந்ததாக கூறி அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். தொடர்ந்து, அப்பகுதியில்அபாயகரமான நிலையில் உள்ள அனைத்து மரங்களையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வனத்துறை, காவல்துறை மற்றும்தீயணைப்புத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பொதுமக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் அபாயகரமான மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில் மறியல் கைவிடப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.