தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

5 Jul 2026, 1:25 am
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

உடைந்த முட்டைகள் பறிமுதல்

நாமக்கல், ஜூலை 4- நாமக்கல் மாவட்ட ஆட்சியர் லி.மதுபாலன் அறிவுறுத்த லின்படி, நாமகிரிப்பேட்டை பகுதிகளில் உள்ள பேக்கரி, ஹோட்டல்கள் உள்ளிட்ட 14 உணவு நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளியன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், மனித நுகர்விற்கு தகுதியற்ற 290 உடைந்த முட்டைகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. மேலும், அந்த நிறுவனங்கள் தற்காலிக மாக மூடப்பட்டன. உரிய லேபிள் இன்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 18 கிலோ பேக்கரி பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், சமையலறையைச் சுகாதாரமின்றியும், செயற்கை நிறமிகளைப் பயன்படுத்தியும் உணவு தயாரித்த 3 ஹோட்டல்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக் கப்பட்டு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

பெங்களூரு - திருவனந்தபுரம் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

கோவை, ஜூலை 4– பயணிகளின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ள தாக தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் அறிவித்துள் ளது. பெங்களூரு எஸ்எம்விடி - திருவனந்தபுரம் நார்த் வாராந் திர சிறப்பு ரயில் (எண்: 06555) ஜூலை 10 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 2 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும். இந்த ரயில் சனிக்கிழமைகளில் அதிகாலை 2.15 மணிக்கு சேலத்திற்கும், 3.15 மணிக்கு ஈரோட்டிற்கும், 4.03 மணிக்கு திருப்பூருக்கும், 4.58 மணிக்கு போத்தனூருக்கும் வந்து சேரும். இந்த ரயில் மொத்தம் 8 சேவைகளாக இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கத்தில், திருவனந்தபுரம் நார்த் - பெங்க ளூரு எஸ்எம்விடி வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06556) ஜூலை 12ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை ஞாயிற்றுக் கிழமைகளில் மதியம் 2.15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8.15 மணிக்கு பெங்களூ ருவை சென்றடையும். இந்த ரயில்கள் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட் டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கன்னூர், மாவேலிக் கரை, காயங்குளம், கொல்லம் மற்றும் வர்கலா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலைகள் கடத்தல்: 3 பேர் கைது

ஈரோடு, ஜூலை 4- பர்கூர் மலைப்பகுதிபில் வெண்கல சிலைகள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு - கர்நாடகா எல்லையான ஈரோடு மாவட்டத்தி லுள்ள கர்கேகண்டி, பாலாறு பள்ளத்தின் வழியாக சென்ற 3 பேர் சந்தேகத்துக்குரிய வகையில் கையில் பையுடன் தட்ட கரை வனப்பகுதிக்குட்பட்ட வேலாம்பட்டி பிரிவில் வெள்ளி யன்று நின்று கொண்டிருந்தனர். அப்போது, ரோந்து சென்ற தட்டகரை ரேஞ்சர் ராமலிங்கம், வனக்காப்பாளர் உமாநாத் மற் றும் ஊழியர்கள், 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (32), அந்தியூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தேவராஜ் (23), கேரளம் மாநிலத்தை சேர்ந்த ரிஸ்வான் (19) என்பது தெரியவந்தது. இவர்கள் மூவரும் வனப்பகுதியிலுள்ள சிவன் கோவிலிலுள்ள சுமார் 2 அடி நீளமுள்ள 2 வெண்கல நந்தி சிலைகளை திருடியதை ஒப்புக் கொண்டனர். இதைய டுத்து சிலைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், 3 பேரையும் பர்கூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, மூவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை

கோவை, ஜூலை 4- சூலூரில் இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன் கொடுமை செய்த ஒருவர் கைது செய்யப்பட்ட நிலை யில், மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம், சூலூரில், கணவரைப் பிரிந்து வாழும் 33 வயது இளம்பெண்ணுக்கு திருமண ஆசை காட்டிப் பழ கிய அந்தோணி மரிய ராபின் என்பவர், தனது நண்பர் கிரிஷ் சாமல் குமாருடன் இணைந்து அப்பெண்ணுக்கு குளிர்பானத் தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, வெளியே சொன்னாலோ அல்லது தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினாலோ வீடியோவை இணையத்தில் பரப்பி கொலை செய்து விடுவதாகவும் அவர்கள் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல்துறையினர், அந்தோணி மரிய ராபினை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய கிரிஷ் சாமல் குமார் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைக்கும் பணி

தருமபுரி, ஜூலை 4- பென்னாகரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் மேற்கூரை அமைக்கும் பணி குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேருந்து நிலைய நுழைவாயில், மேற்கூரை அமைக்க சட்டப்பேரவை உறுப் பினரின் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.26 லட்சம் ஒதுக்கப் பட்டு, பேருந்து நிலையத்தின் இருபுறங்களிலும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், மேற்கூரை அமைக்க பயன் படுத்தப்பட்ட தடுப்பு கம்பிகள் பேருந்து நிறுத்தும் இடத்தில் நடப்பட்டதால் பேருந்துகள் நிறுத்த முடியாத நிலை ஏற் பட்டது. பணிகளும் முழுமை பெறாமல் தாமதமாகின. இந் நிலையில், பேருந்து நிலைய மேற்கூரை அமைக்க இரும்பு தக டுகள் கொண்டுவரப்பட்டு, வெள்ளியன்று முதல் தகடுகள் பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பென்னாக ரம் பேருந்து நிலைய மேற்கூரை அமைக்கும் பணி நிறைவ டைந்த நுழைவாயில், பென்னாகரம் அருகே கிருஷ்ணாபு ரம் பகுதியில் நடைபெறும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை பொறியாளர் மோகன் ஆய்வு செய்தார். இதில், உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

20 கிலோ கஞ்சா பறிமுதல், 10 பேர் கைது

கோவை, ஜூலை 4- கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில், கருமத்தம்பட்டி மற்றும் பேரூர் உட்கோட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறை யினர் நடத்திய அதிரடி சோதனையில் 20 கிலோவுக்கும் அதிக மான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 10 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர். சனியன்று இந்த சிறப்பு போதைப்பொருள் தடுப்பு சோதனையானது, கல்வி நிறுவனங்கள், மாணவர் விடுதிகள் மற்றும் மாணவர்கள் அதிகம் கூடும் பகுதிகள் என மொத்தம் 24 இடங்களில் நடத்தப்பட்டது. இந்த அதிரடி சோதனையில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 4 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 18 காவல் ஆய்வாளர் கள், 54 உதவி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 256 காவலர்கள் மற்றும் 14 தனிப்பிரிவு காவலர்கள் என மொத் தம் 334 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த அதிரடி நடவடிக்கையின் விளைவாக, விற்பனைக் காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 கிலோ 40 கிராம் கஞ்சா, 3 எல்.எஸ்.டி (LSD) ஸ்டாம்புகள், 110 மில்லி கஞ்சா ஆயில் மற்றும் 2 கிராம் மெத்தம்பேட்டமைன் ஆகிய போதைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், உரிய ஆவணங்களின்றி பயன்படுத்தப்பட்ட 11 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த குற்றச் சம்பவங்கள் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள் ளதுடன், அவர்கள் மீது கிரிமினல் வழக்குகளும் பதிவு செய் யப்பட்டுள்ளன.

அணைகள் நிலவரம்

பவானிசாகர் அணை நீர்மட்டம்: 52.91/105அடி நீர்வரத்து: 212 கனஅடி நீர்திறப்பு: 555 கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:80.94/160 அடி நீர்வரத்து:2474 கனஅடி நீர்திறப்பு:955.48கனஅடி மழையளவு:59 மி.மீ பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:15.82/72 அடி நீர்வரத்து:1103கனஅடி நீர்திறப்பு:460கனஅடி மழையளவு:22 மி.மீ ஆழியார் அணை நீர்மட்டம்:53.80/120அடி நீர்வரத்து:165கனஅடி நீர்திறப்பு:279கனஅடி மழையளவு:12.4மி.மீ திருமூர்த்தி அணை நீர்மட்டம்:39.81/60அடி நீர்வரத்து:375கனஅடி நீர்திறப்பு:611கனஅடி மழையளவு:4 மி.மீ அமராவதி அணை நீர்மட்டம்:39.81/90அடி நீர்வரத்து:375கனஅடி நீர்திறப்பு:611கனஅடி மழையளவு:4 மி.மீ

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.