கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
27 Oct 2026, 11:34 pm

கடும் மூடுபனி: வாகன ஓட்டிகள் அவதி

கோவை, அக்.27-சூலூர் அடுத்த பட்டணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாயன்று அதிகாலை நிலவிய கடும் மூடுபனி காரணமாக வாகன ஓட்டிகள்பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

கோவை புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்த நிலையில், சூலூர், பட்டணம், பீடம்பள்ளி,பள்ளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாயன்று அதிகாலை முதலே கடும் மூடுபனி நிலவியது. குறிப்பாக அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக புகை மண்டலம் போல அடர்ந்த பனிப்பொழிவு காணப்பட்டது. இதன் காரணமாக எதிரே வரும்வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் எளிதில் புலப்படாத சூழல் உருவானது. குறிப்பாக, கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமான எல்&டி பைபாஸ்சாலையில்கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.வாகனங்களின் கண்ணாடிகளில் பனித்துளிகள் படர்ந்து பார்வைத் திறன் குறைந்ததால், விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு கனரக வாகனங்கள் உள்ளிட்டு அனைத்து வாகனங்களும், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மிகக் குறைந்த வேகத்திலேயே ஊர்ந்து சென்றனர். காலை 7 மணிக்கு மேல் பனியின் தாக்கம் படிப்படியாக குறைந்து இயல்புநிலை திரும்பியது. அதிகாலை வேளையில் நிலவியஇந்த கடும் பனிப்பொழிவால் அப்பகுதியில் குளிர்ந்தகாற்று வீசியதுடன், காலை நேர குளிர் பொதுமக்களின் அன்றாடப் பணிகளையும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களையும் சற்று முடக்கியது.

வேனில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்தல்

தருமபுரி, அக்.27-மினி வேனில் ரகசிய அறை அமைத்து, சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான 225 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த இருவரைகாவல் துறையினர் கைது செய்தனர்.

பெங்களூருவில் இருந்து தருமபுரி வழியாக குட்கா பொருட்கள் கடத்தப்படவுள்ளதாக, துணை காவல் கண்காணிப்பாளர் சிவராமனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சார்பு ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான காவல் துறையினர், செவ்வாயன்று காலை தருமபுரி அருகே பழைய தருமபுரி பகுதியில், பெங்களூரு – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக திருச்சி நோக்கிச்சென்ற மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், காவல்துறையினரின் சோதனையில் சிக்காமல் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்துவதற்காக, மினி வேனில் ரகசிய அறை அமைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த அறையில், தடை செய்யப்பட்டகுட்கா பொருட்கள் சுமார் 225 கிலோ எடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் என கூறப்படுகிறது. இதையடுத்து, மினி வேனை ஓட்டி வந்த சென்னை, குரோம்பேட்டையை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த மற்றொரு நபர் என இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி வேன் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பணமோசடி: நிதி நிறுவன உரிமையாளர் கைது

தருமபுரி, அக்.27-சீட்டுப்பணத்தின் முதிர்வு தொகையை திருப்பி வழங்காதது தொடர்பான புகாரில், தனியார் நிதி நிறுவன உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்தனர்.தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிதி நிறுவனத்தை, நார்த்தம்பட்டியை சேர்ந்த ஆ.ஹரிகிருஷ்ணன் என்பவர் நடத்தி வருகிறார். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இந்நிறுவனத்துக்கு ஒன்பது கிளைகள்உள்ளன. இதில் சீட்டுப்பணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு, முதிர்வுதொகை திருப்பி வழங்கப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், நல்லம்பள்ளியில் உள்ள நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில்ஈடுபட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த பொருளாதார குற்றத்தடுப்புப்பிரிவு காவல் துறையினர், ஆ.ஹரிகிருஷ்ணனை கைது செய்தனர்.

ஜிஎஸ்டியில் திருத்தம் செய்ய வலியுறுத்தல்

ஈரோடு, அக்.27-ஜிஎஸ்டி சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும் என ஈடிசியா வலியுறுத்தியுள்ளது.ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (EEDISSIA - ஈடிசியா) 14 ஆவது செயற்குழு கூட்டம்,

திங்களன்று மாலை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சங்கத்தின் தலைவர் ப.கந்தசாமி, முன்னாள் தலைவர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக ஸ்வாமி அசோசியேட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எஸ்.ஜெயக்குமார் கலந்து கொண்டு, 57 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்த தகவல்களை தெரிவித்தார். சமீபத்தில் நடைபெற்ற ஈடிசியா ஐ டெக் வர்த்தகக்கண்காட்சி 2026 சிறப்பாக அமைய அயராது உழைத்த அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்்பட்டது. மேலும், வழங்குநரின் வரி செலுத்த தவறியதற்காக, முறையான ஆவணங்களுடன் உண்மையான வணிகம் செய்த நேர்மையான வாங்குபவரின்ஐடிசி மறுக்கப்படக்கூடாது. நேர்மையான வாங்குபவர்களின் உரிமைகளை பாதுகாக்க ஜிஎஸ்டி சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும் எனதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொசு ஒழிப்பு ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்

கோவை, அக்.27-முறையாக சம்பளம் வழங்கப்படாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கொசுஒழிப்பு ஒப்பந்த பணியாளர்கள் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 60-க்கும் மேற்பட்ட கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாகவே முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், அதிகாரிகள் பணியாளர்களை ஒருமையில் பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, தொழிலாளர்கள் திங்களன்று தர்ணாவில் ஈடுபட்ட நிலையில், பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்மாலைக்குள் ஊதியம் வந்துவிடும் என உறுதியளித்ததால் கலைந்து சென்றனர். ஆனால், ஊதியம் வரவில்லை. எனவே செவ்வாயன்று ஊதியம் கிடைக்கும் வரையில் போராட்டத்தை தொடர்வது என செவ்வாயன்று மீண்டும் போராட்டத்தை துவக்கி நடத்தி வருகின்றனர்.

வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி மீட்பு

ஈரோடு, அக்.27-அந்தியூர் அருகே வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமியை காவல் துறையினர் 3 மணிநேரத்தில் மீட்டு, பெற்றோரிடம்ஒப்படைத்தனர்.

கர்நாடகா மாநிலம், சென்னப்பட்டணாவை சேர்ந்தவர், இவர் ஈரோடு மாவட்டம் பருவாச்சியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தங்கி, விடுதியில்சமையலராக பணியாற்றி வருகிறார். இவரது, 13 வயதான மகள் அதேபள்ளியில் 8 ஆம்வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், பள்ளிக்கு மாணவி திங்களன்று வரவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து, அந்தியூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சீருடையில் வீட்டில் இருந்து பள்ளிக்குச்சென்ற மாணவி, நுழைவாயில் வரை சென்றவர் அதன்பின் பள்ளிக்கு செல்லாததும், மாணவியை ஒழுங்காக படிக்குமாறு பெற்றோர் திட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்தியூர் காவல்ஆய்வாளர் செந்தில்வேலு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மாணவியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.இந்நிலையில், சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் மைசூருசெல்லும் பேருந்தில் அந்த மாணவி அமர்ந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார், மாணவியை மீட்டு அவரதுபெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மழையால் வீடுகள் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குக

உடுமலை, அக்.27–உடுமலை தாலுகாவில் கனமழையால் வீடுகள்சேதமடைந்து தவிக்கும் மலைவாழ் மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கி, பாதுகாப்பான கான்கிரீட் வீடுகள்கட்டித்தர வேண்டும் என மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.உடுமலை தாலுகா வனப்பகுதிகளில்மாவடாப்பு, குழிப்பட்டி, குருமலை, பூச்சிக்கொட்டாம்பாறை, திருமூர்த்திமலை, தளிஞ்சி உள்ளிட்ட 18மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக பெய்தகனமழையால்பெரும்பாலான குடிசைகளும், தகரகொட்டகைகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன. குறிப்பாக திருமூர்த்திமலை அடிவாரக் குடியிருப்பில் மழைநீர் வெளியேற வழியின்றி, பழுதடைந்த வீடுகளில் மக்களும் குழந்தைகளும் அச்சத்துடன் வாழும் சூழல் நிலவுகிறது.

இதுகுறித்து மலைவாழ் மக்கள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கி, அனைத்து குடியிருப்புகளிலும் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும். மருத்துவம், கல்வி மற்றும்வனப்பொருட்களை கொண்டு செல்ல சாலை வசதிகளை ஏற்படுத்தவேண்டும். ரேஷன் மூலம் கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும். நோய்த்தொற்று பரவாமல் தடுக்க மலைக்கிராமங்களில் சிறப்பு மருத்துவமுகாம்களை நடத்த வேண்டும். மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில்தெரிவித்துள்ளனர்.

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்!

உடுமலை, அக்.27–உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில் உள்ள நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.உடுமலை வருவாய் கோட்டாட்சியர் குமார் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை முன்வைத்தனர்.இதில் குறிப்பாக, பி.ஏ.பி.கால்வாய்க்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். கால்வாய்க்கரையில் குப்பைகளைகொட்டும் ஊராட்சி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிஏபி திட்டத்தின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு சேர்க்கும் அரணி வாய்க்கால் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதை உடனடியாக சீரமைக்க வேண்டும். தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மீது சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு அவதூறு பரப்புவோர் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர் சந்தை பகுதி ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போராட்டத்தின்போது, விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டல்விடுத்த உடுமலை நகர காவல் ஆய்வாளர் ராம்பிரபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

இக்கூட்டத்தில் உடுமலை வட்டாட்சியர் அருணாஉள்ளிட்ட அரசு அதிகாரிகளும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பாலதண்டபாணி, அருண்பிரகாஷ், ராஜகோபால், வீரப்பன், செல்வராஜ் உள்ளிட்ட திரளான விவசாயிகளும் கலந்துகொண்டனர்.

குழந்தைகள் பாதுகாப்பு

உடுமலை, அக்.27-குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க, பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என உடுமலை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு ’நல்ல தொடுதல், தவறான தொடுதல்’ குறித்து கற்பிக்க வேண்டும்.சந்தேகமான நிகழ்வுகள் குறித்து குழந்தைகள் கூறும்போது அலட்சியப்படுத்தாமல், 1098 (குழந்தைகள் உதவி எண்) அல்லது 112(அவசர எண்) ஆகிய எண்களையோ தொடர்புகொள்ள வேண்டும் என காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

செய்தித்துறையா? ரீல்ஸ் துறையா?ரீல்ஸ் வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்

திருப்பூர், அக்.27-திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுச்சூழல்மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் ராஜீவ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், செய்தியாளர்கள் வீடியோ எடுக்க அனுமதிக்கப்படாத நிலையில், திருப்பூர் மாவட்ட செய்தி துறை சார்பில் ஆய்வுக்கூட்டம் மற்றும் அமைச்சர் நேரடி ஆய்வு தொடர்பான வீடியோ வழங்குவதாக தெரிவித்தனர்.

ஆனால், மாலை 4 மணிக்கு மேல் மாவட்ட செய்தித் துறை சார்பில் செய்தியாளர்களுக்கு வீடியோ வழங்கப்பட்டது. அதிலும் அமைச்சர் நேரடி ஆய்வு தொடர்பான வீடியோக்கள் இல்லாமல், ஆய்வுக்கூட்டம் தொடர்பான வீடியோக்கள் மட்டுமே இருந்தது. அதுவும், செய்தி நிறுவனங்கள் பயன்படுத்தும் வகையில் இல்லாமல், தமிழக வெற்றி கழகத்தினர் ரீல்ஸ் போடும் வகையில் ரீல்ஸ் வீடியோவாக அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாவட்டசெய்தித்துறை, ரீல்ஸ் துறையாக மாறி விட்டதோ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

கைத்தறி நெசவாளர்களுக்கு போனஸ்: சிஐடியு கோரிக்கை

திருப்பூர், அக்.27-திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக போனஸ் வழங்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர்சங்கம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம், மாவட்டத் தலைவர் கே.திருவேங்கடசாமி தலைமையில் செவ்வாயன்று சங்கஅலுவலகத்தில் நடைபெற்றது. இம்மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் தனியார் கைத்தறி உற்பத்தியாளர்களிடம் நூல் வாங்கி சேலை நெசவு செய்து கொடுத்துகூலி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் போனஸ் வழங்கும் வழக்கம் உள்ளது. அதன்படி இந்தஆண்டு நெசவாளர்கள் பெற்ற கூலியில்ஒரு மாத ஊதியம் போனஸாக வழங்கவேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் கைத்தறி நெசவாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நேரிடையாக பேசி கைத்தறி துணி நூல் இயக்குநர் போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று சிஐடியு கேட்டுக் கொண்டுள்ளது. போனஸ் கோரிக்கையை பெறுவதற்கு நெசவாளர்கள் போராட முன்வரமாறு திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்கம் கேட்டுக் கொள்வதாக மாவட்டச் செயலாளர் என்.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

ராஜவாய்க்காலில் தென்னைநார் கழிவுகள் கலந்து நீர் மாசு!

உடுமலை, அக்.27- திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, கடத்தூர் அமராவதி பழைய ஆயக்கட்டு ராஜவாய்க்காலில் தென்னை நார்க்கழிவுகள் கலந்து பாசன நீர் மாசடைந்துள்ளது.

சுமார் 1,500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் இந்த வாய்க்கால், கடத்தூர் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் கனமழையால் வாய்க்காலில் காபி நிறத்தில் தண்ணீர்செல்வதுடன், அதிக அளவில் தென்னைநார் கழிவுகளும் கலந்து வருகின்றன. இதனால் விவசாய நிலங்கள்பாதிக்கப்படுவதோடு, பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், மடத்துக்குளம் வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் செவ்வாயன்று வாய்க்காலை பார்வையிட்டனர். அப்போது சங்கத்தின் நிர்வாகிகள் வெள்ளியங்கிரி, கலைச்செல்வன், தர்மராஜ், அரசப்பன் உள்ளிட்ட விவசாயிகள் பாதிப்புகளை எடுத்துரைத்தனர்.பாசன நீர் மற்றும் குடிநீர் மாசுபடுவதை தடுக்கவும், விவசாய நிலங்களையும் கால்நடைகளையும் பாதுகாக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மடத்துக்குளம் தாலுகாக்குழு வலியுறுத்தியுள்ளது.

கட்டுபடியான மீட்டர் கட்டணம்: ஆட்டோ தொழிற்சங்கம் மனு

திருப்பூர், அக்.27 -திருப்பூர் மாவட்டத்தில் இயங்கக்கூடிய ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கடந்த 13 ஆண்டுகளாக உயர்த்தப்படாத மீட்டர் கட்டணத்தை கட்டுபடியான முறையில் உயர்த்தி வழங்க வேண்டும் என சிஐடியு திருப்பூர் மாவட்டஆட்டோ தொழிலாளர் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம்கோரிக்கை மனு அளித்துள்ளது.திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாயன்று, ஆட்டோ சங்கத் தலைவர் டி.வி.சுகுமாரன், மாவட்டச் செயலாளர் சிவராமன் ஆகியோர் சிஐடியு நிர்வாகி என்.சுப்பிரமணியன் மற்றும் ஆட்டோ சங்க நிர்வாகிகள் பெருமாள்,செல்லமுத்து ஆகியோர் கோரிக்கை மனுஅளித்தனர்.இதில், ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்கவும், எப்.சி. கட்டணத்தை தமிழ்நாடு அரசே ஏற்றிடவும், ஓலா, உபர், ராபிடோ போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து ஆட்டோ தொழிலாளர்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசுஆன்லைன் செயலியை உருவாக்கிடவும், தொழிலாளர் நல வாரியம் மூலம் அனைத்து ஆட்டோ தொழிலாளர்களுக்கும் தீபாவளி போனசாக நலவாரியத்தில் இருந்து ரூ.5000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் அளித்தனர்.