கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
yesterday

இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு விரைவில் அரசாணை: அமைச்சர் தகவல்

ஈரோடு, ஜூன் 21- பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு விரைவில் அரசாணை வெளியிடப்படும் என கைத்தறித்துறை அமைச்சர் எம்.விஜய் பாலாஜி தெரிவித்தார். இதுதொடர்பாக சனியன்று ஈரோட்டில் நடை பெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சட்டப்பேரவையில் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம். எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை சொல்ல முடியாது. மேகதாது அணை விவகாரம் தொடர்பான தீர்மான திருத்தத்தை ஏற்க முடியாது என அரசியலுக்காக எடப்பாடி கே.பழனிசாமி பேசு வதை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அனைத்து எம்எல்ஏ-க்களும் மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். விலையில்லா வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் பணி எப்போதும் காலதாமதமாக இருக்கும். ஆனால், இந்த முறை விரைந்து உற்பத்தி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்படும். கடந்தாண்டு உற்பத்தி செய்த வேட்டி, சேலை எண்ணிக்கை குறித்து கணக்கீடு செய்ய இருக்கிறோம். அதை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியுமா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். விலை யில்லா வேட்டி, சேலைகள் உற்பத்திக்கான அர சாணை விரைவில் வெளியாகும். விசைத்தறித் தொழிலுக்கு இலவச மின்சாரம் வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடை பெற்று வருகிறது. அதுதொடர்பாக விரைந்து நட வடிக்கை எடுக்கப்படும், என்றார்.

தங்க நகையை பறித்த 2 பேர் கைது

சேலம், ஜூன் 21- எடப்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்திலிருந்த தங்க நகையை பறித்துச் சென்ற 2 பேரை காவல் துறையினர் கைது செய்த னர். சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சி, வெள் ளாண்டிவலசு பகுதியில் சீனிவாசன் - சரஸ்வதி தம் பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த ஜூன் 18 ஆம் தேதியன்று பகல் நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த சரஸ்வதியிடம், முகமூடி அணிந்து கொண்டு வந்த வாலிபர் ஒருவர், சரஸ்வதியின் கழுத்திலிருந்த 5 சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பி யோடிவிட்டார் இதுகுறித்து எடப்பாடி காவல் நிலை யத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலை யில், வீரப்பம்பாளையம் அருகே போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மௌனிஸ் (19) என்ற வாலி பரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது முன் னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், நகை பறிப் பில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து நடை பெற்ற விசாரணையில், வெள்ளாண்டிவலசு பகுதியை சேர்ந்த குரு விக்னேஷ் (21) என்ற வாலி பர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதை யடுத்து 2 பேரையும் காவல் துறையினர் கைது செய்து, திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாக னம் மற்றும் 5 சவரன் தங்க நகை ஆகியவற்றயும் பறி முதல் செய்தனர். இதன்பின் இருவரையும் எடப்பாடி நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

யானை நடமாட்டம்: வனத்துறை அறிவுறுத்தல்

அவிநாசி, ஜூன் 21- அவிநாசி அருகே விவசாயம் செய்யும் பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளதால், பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியம், சாவக் கட்டுப்பாளையம் பகுதியில் ஒற்றை யானை சுற்றித் திரிந்துள்ளது. இதனை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் பார்த்து, வனத்துறைக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் வனத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில், அப்பகுதியிலிருந்த விவ சாய நிலங்களில் யானை நடந்து செல்வது தெரிய வந்தது. இதன் காரணமாக வனத்துறையினர், காவி லிபாளையம் குளத்திற்குள் தற்போது யானையை விரட்டியுள்ளனர். வனப்பகுதிக்குள் யானையை விரட்டி விடும் பணிகளை மேற்கொண்டு வருகின்ற னர். இதன் காரணமாக பொதுமக்களை பாதுகாப் பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள் ளது.

திருப்பூரில் 7 மையங்களில் நீட் மறுதேர்வு

திருப்பூர், ஜூன் 21- திருப்பூரில் 7 மையங்களில் நடக்கும் நீட் மறுதேர் வில், 3672 தேர்வாளர்கள் பங்கேற்றனர். தேசிய தேர்வு முகமை சார்பில் நாடு முழுவ தும் இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 3 தேதி நடந்தது. அதில் சில வட மாநிலங்களில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் அந்த தேர்வு நாடு முழு வதும் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் தேதி மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டபடி ஞாயிறன்று நாடு முழு வதும் நீட் மறுதேர்வு நடந்தது. திருப்பூர் மாவட்டத் தில் கடந்த முறை அமைக்கப்பட்டது போல், தற் போதும் 7 மையங்களில் தேர்வுகள் நடந்தது. இதில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மற்றும் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதிகபட்சமாக 600 பேர் தேர்வு எழுதி னர். ஒட்டுமொத்தமாக திருப்பூர் மாவட்டத்தில் மட் டும் 3672 தேர்வாளர்கள் எழுதினர்.

குடிநீர் கேட்டு சாலை மறியல்

அவிநாசி, ஜூன் 21- அவிநாசி அருகே குடிநீர் கேட்டு பொது மக்கள் ஞாயிறன்று சாலை மறியலில் ஈடு பட்டனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றி யம், ஆலத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மொண்டி பாளையம், செட்டிபுதூர், வெங்கிட்டாபுரம், ஆலத்தூர், தொட்டிபாளையம், அருவங் காடு ஆதிதிராவிடர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும் பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 15 நாட் களுக்கும் மேலாக ஆற்றுக்குடிநீர், ஆழ் துளை கிணற்றுநீர் உள்ளிட்டவை சீராக விநி யோகிக்கப்படாததால், அப்பகுதி பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், ஆழ்துளை கிணறு அமைத்து 6 மாதங்களாகியும், மின்மோட்டார் பொருத் தப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வா கத்திடம் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரி வித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆவேசமடைந்த அப் பகுதி மக்கள், மொண்டிபாளையத்தில் ஞாயி றன்று காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த சேவூர் மற்றும் ஆலத்தூர் ஊராட்சி நிர்வா கத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன்பேரில், மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

சர்வதேச யோகா தின விழா

திருப்பூர், ஜூன் 21- சர்வதேச யோகா தினமான ஞாயிறன்று, யோகா பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தி யில் ஏற்படுத்தும் வகையில் மாபெரும் யோகா செய்முறை பயிற்சி நடைபெற்றது. திருப்பூர் மண்டலம், மனவளக்கலை மன்ற அறக்கட்டளைகள் இணைந்து இதை திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி கலையரங் கில் காலை 6 மணி முதல் 7.30 மணி வரை நடத் தியது. அக்கல்லூரியின் முதல்வர் டி.வசந்தி, 38 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆ. சாந்தாமணி முருகசாமி ஆகியோர் முன் னிலை வகித்தனர். தி சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குநர் பி.கே.ஆறுமுகம் யோகா பயிற்சியை துவக்கி வைத்தார். துணைத் தலைவர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். துணை மேயர் ஆர் பாலசுப்பிரமணியம், ராம் ராஜ் காட்டன் கே.ஆர்.நாகராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். திருப்பூர் தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.பாலமுருகன் சிறப்பு ரையாற்றினார். யோகா கை பயிற்சி, நரம்பு தசை நார் மூச்சுப்பயிற்சி, கண் பயிற்சி, சூரிய நமஸ்காரம், பல்வேறு ஆசனங்கள் ஆகிய வற்றை யோகா ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பயிற்சி செய்து காண்பித்த னர். திருப்பூர் மண்டலத் தலைவர் என்.கரு ணாநிதி நன்றி கூறினார்.

போதை மாத்திரை விற்பனை

சேலம், ஜூன் 21- சங்ககிரியில் சிறுவர்களை குறிவைத்து போதை மாத் திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த 2 பேரை காவல் துறையி னர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், சங்ககிரி - பவானி சாலையில், சிறு வர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவ தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி ஆய்வாளர் அழகுதுரை தலைமையிலான போலீசார் அப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சங்க கிரி, கோட்டத் தெருவை சேர்ந்த ரோஷன் (22), அப்பு (23), சாரதி ஆகியோர் போலீசாரை கண்டதும், தப்பியோட முயன்ற னர். போலீசார் சுற்றிவளைத்தபோது சாரதி தப்பியோடினார். ரோஷன் மற்றும் அப்புவை பிடித்து சோதனை செய்ததில், அவர்களிடமிருந்து 40 போதை மாத்திரைகள் மற்றும் 4 ஊசி கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், சிறுவர்கள் உள்ளிட்ட பலர் போதைக்காக இந்த மாத்திரைகளை பணம் கொடுத்து வாங்கி, தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இருவரை யும் கைது செய்த போலீசார், சங்ககிரி நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடிய சார தியை தேடி வருகின்றனர்.

அணைகள் நிலவரம் (ஞாயிற்றுக்கிழமை)

பவானிசாகர் அணை நீர்மட்டம்:55/105அடி நீர்வரத்து:109கனஅடி நீர்திறப்பு:520கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:17.40/72அடி நீர்வரத்து:30கனஅடி நீர்திறப்பு:600கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:64/160அடி நீர்வரத்து:151கனஅடி நீர்திறப்பு:5.00கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:61/120அடி நீர்வரத்து:179கனஅடி நீர்திறப்பு:356கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:35/60அடி நீர்வரத்து:565கனஅடி நீர்திறப்பு:419கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:39/90அடி நீர்வரத்து:208கனஅடி நீர்திறப்பு:600கனஅடி

700 கிலோ குட்காப் பொருட்கள் பறிமுதல்

நாமக்கல், ஜூன் 21- ரூ.7 லட்சம் மதிப்பிலான 700 கிலோ குட்காப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கர்நாடகா மாநிலத்திலிருந்து சரக்கு வாகனம் ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக பள்ளிபாளையம் துணை காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சனியன்று இரவு பள்ளி பாளையம் போலீசார் ஆலாம்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொ ழுது, வேகமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காப் பொருட்கள் சுமார் 700 கிலோ இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.7 லட்சம் மதிப்பிலான குட்காப் பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (35), சதீஷ் குமார் (27), ரஞ்சித் (27) ஆகிய மூவரை ஞாயிறன்று கைது செய்து, குமாரபாளையம் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

யானை உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

உதகை, ஜூன் 21- கூடலூர் அருகே ஆண் யானை உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள தொரப்பள்ளி மண்வயல், குனில்வயல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண் யானை ஒன்று சுற்றித்திரிந்தது. இந்நிலையில், குன்னு பகுதி யில் மத்தாய் என்பவருக்கு சொந்தமான காப்பி தோட்டத்திலுள்ள கிணற்றின் மீது விழுந்து அந்த யானை உயிரிழந்ததுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஞாயிறன்று வனத்துறையினருக்கு தகவல் அளித்தர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதா? அல்லது வேறு ஏதாவது காரணங்களா? என்பதை கண்டறிய அப்பகுயில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனி டையே, முதுமலை புலிகள் காப்பக உதவி வனக் கால்நடை மருத்துவர்கள் மூலம் உடலை பிரேத பரி சோதனை மேற்கொண்ட பின் கிடைக்கப்பெறும் தக வல்களின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவ டிக்கைகளை மேற்கொள்ளப்படும் என வனத்துறை யினர் தெரிவித்துள்ளனர்.

வாகனத்திலிருந்த பாம்பு மீட்பு

சேலம், ஜூன் 21- சேலம் மாவட்டம், சங்ககிரி டிபி சாலை பகுதியை சேர்ந்த மணி என்பவர், ஞாயிறன்று தனது இருசக்கர வாகனத்தை மாரியம்மன் கோவில் அருகே நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதன்பின் வாக னத்தை எடுக்க வந்தபோது, சுமார் 4 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு சாலையை கடந்து வந்து திடீரென இருசக்கர வாகனத்திற்குள் புகுந்து பதுங்கியது. இத னால் அதிர்ச்சியடைந்த மணி, சங்ககிரி தீயணைப் புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி சாரைப்பாம்பை உயிரு டன் மீட்டனர். இதன்பின் பிடிபட்ட பாம்பை பாது காப்பாக வனப்பகுதியில் விடுவித்தனர்.

மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 4 பேர்

மீது வழக்குப்பதிவு சேலம், ஜூன் 21- சேலம் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத் தில் ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம், கந்தம்பட்டியில் உள்ள சேலம் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த ஜூன் 18 ஆம் தேதியன்று லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் திடீர் சோத னையில் ஈடுபட்டனர். அப்போது இடைத்தரகர் ரஞ்சித் என் பவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.50,100யை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தியபோது, ஆர்டிஓ அலுவலகம் அருகிலுள்ள கணினி மைய ஊழி யர்களான சுதர்சன், வெங்கடேஷ் ஆகியோர், பொதுமக்களுக்கு தேவையான பணிகளை செய்து கொடுத்த தற்காக இடைத்தரகரான ரஞ்சித்திடம் பணத்தை கொடுத்து அனுப்பியதும், அந்த பணம் மோட்டார் வாகன ஆய்வாள ரான ஜெயந்தியிடம் கொடுக்க அவர் வைத்திருந்ததாகவும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மோட்டார் வாகன ஆய் வாளர் ஜெயந்தி, இடைத்தரகர் ரஞ்சித், கணினி மையம் நடத்தி வரும் சுதர்சன், வெங்கடேஷ் ஆகிய 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் சனியன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் ஜெயந்தி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயரதிகாரி கள் பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: 2 பேர் கைது

ஈரோடு, ஜூன் 20- பவானியில் தனது வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்த 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், பவானி பகுதியை சேர்ந்த 74 வயதான மூதாட்டி, தனித்து வசித்து வருகிறார். இந்நிலையில், வெள்ளி யன்று இரவு உறங்கிக் கொண்டிருந்த போது, இரு நபர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர். சத்தம் கேட்டு விழித்த மூதாட்டியை தாக்கி, பாலியல் தொல்லை கொடுத்தனர். இது குறித்து அவரது மகன் காவல் துறையில் புகாரளித்தார். இதை யடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட அதேபகுதியை சேர்ந்த ஹரி குமார், கிரி (எ) கண்ணன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.